விரித்த சடைகளும்
அவை மறைத்த பூக்களும்
புடவையும் சுரிதாரும்
அகன்ற தோளும் மீசையும்
இடிபட விரும்பாத என் குணமும்
சாமி முகம் மறைக்கும்.
இருந்துமென்ன…
பிரகாரத் தூண் பொழிவில் இருக்கிறது
வகை வகையாய்
கருணையும் காவலும்.
திடீர்க்கணமொன்றில் விழிப்புற்று
ஊர்வம்பு நிறுத்தி
அடித்து விலக்கி வழிசெய்து
நெற்றி நிலமிடிக்கக் கும்பிடுவர்
பக்தி பெருக்கெடுக்கும்-அதில்
நனைவதில்லை ஒருபோதும்.
என்றாலும் கோவிலுக்குப்
போகாமல் இருப்பதில்லை.
புராதனத்துள் இழுத்தமிழ்த்தும் தூண்கள்
சடசடக்கும் வெளவால்கள்
அதிசயமாய் மூக்கு முழி பாதம்
நேர்த்தியாய் அமைந்த படம்
காலத்தைப் பின்னோக்கிச் செலுத்தும்
சந்தனம் ஊதுபத்தி வாசனைகள்
இவை தவிர…
பட்டுச் சரசரக்க
தூண்மறைவினின்று எட்டிச் சிரிக்கும்
குழந்தை கண்ணில் இருக்கிறது தெய்வம்!
~0~
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
நன்றாக இருக்கின்றது இதுவும் மற்ற பிற ஆக்கங்களும்.
.....
இயலுமாயின் எழுதப்பட்ட காலங்களையும் குறிப்பிடலாமே.
உங்கள் பதிவுக்கு நன்றி டி.சே.
நீங்கள் மிக நன்றாக எழுதுகிறீர்கள். அனுபவங்களை விட கவிதைகள் நன்றாக இருக்கின்றன. உங்களது பரந்த வாசிப்பு மகிழ்வூட்டுகிறது. உங்களைப் போன்றவர்கள்தான் இப்போது தேவை. எத்தனை நாட்களுக்குத்தான் அவர் இவருக்குப் பொன்னாடை போர்த்துவதையும் இவர் அவரை பாரதி என்பதையும் போட்டோக்களுக்கு நெருக்கியடித்துக்கொண்டு புன்னகைப்பதையும் சகித்துக்கொண்டிருக்க முடியும்…? உங்களைப் போன்ற புதியவர்கள், இளையவர்கள் உற்சாக ஊற்றாக வாருங்கள். பார்த்துப் பழகிய முகங்களைக் குறித்த சலிப்பை எவ்வளவு முயன்றும் விலக்கமுடியவில்லை
//திடீர்க்கணமொன்றில் விழிப்புற்று
ஊர்வம்பு நிறுத்தி
அடித்து விலக்கி வழிசெய்து
நெற்றி நிலமிடிக்கக் கும்பிடுவர்//
நல்ல கவிதை.
இதுவும் பிற படைப்புகளின் தரமும் consistent ஆக இருக்கிறது
//திடீர்க்கணமொன்றில் விழிப்புற்று
ஊர்வம்பு நிறுத்தி
அடித்து விலக்கி வழிசெய்து
நெற்றி நிலமிடிக்கக் கும்பிடுவர்//
நல்ல கவிதை.
இதுவும் பிற படைப்புகளின் தரமும் consistent ஆக இருக்கிறது
நல்ல கவிதை. கடைசி வரி மிக நன்று.
/புராதனத்துள் இழுத்தமிழ்த்தும் தூண்கள்
சடசடக்கும் வெளவால்கள்/
/காலத்தைப் பின்னோக்கிச் செலுத்தும்
சந்தனம் ஊதுபத்தி வாசனைகள்/
எளிமையான வார்த்தைகள்..நேரடியாய் தொடுகிறது..அத்துடன் எல்லோராலும் உணரப்படுகிற உண்ர்வுகள் என்பதால் இது நானும்தான் என கொண்டாடிக் கொள்ள முடிகிறது..
//பட்டுச் சரசரக்க
தூண்மறைவினின்று எட்டிச் சிரிக்கும்
குழந்தை கண்ணில் இருக்கிறது தெய்வம்//
ஆமாம். குழந்தையின் கண்களிலும், அதன் கள்ளமிலாச் சிரிப்பிலும்தானே இறைவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
கவிதை மிக நன்று தமிழ்நதி!
பெரும்பாலும் கோவில் சார்ந்த எனது அனுபவங்கள் இவ்வகையினதே..உங்கள் பெயர்க்காரணம் சரிதான்...மெல்லிய இசையோடு நகரும் நதியைப் போல்தான் இருக்கிறது உங்கள் எழுத்து... வெகு அரிதாகவே காணக்கிடைக்கிறது சில நல்ல பதிவுகள்..உங்களுக்கொரு புதிய வாசகன்...
தமிழ்நதி!
இன்றைக்குத்தான் பார்த்தேன். நல்லதோர் அனுபவம் தந்தது. நன்றி
mmmm...nice...
//பட்டுச் சரசரக்க
தூண்மறைவினின்று எட்டிச் சிரிக்கும்
குழந்தை கண்ணில் இருக்கிறது தெய்வம்!//
டாப் க்ளாஸ்..!!!
Good.
Its all in the mind - how do you want to define the God.
People always leave the core of the issue and gets fascinated by the materials around the core.
Gives a Good reading
Thanks
anbudan
Nanban
என்னவாயிற்று நண்பர்களே! திடீரென்று இந்தக் கவிதை கவனிக்கப்படுகிறது. என்னமோ நடக்கட்டும்... இதுவும் நல்லாத்தானிருக்கு.
//தமிழ்நதி said...
என்னவாயிற்று நண்பர்களே! திடீரென்று இந்தக் கவிதை கவனிக்கப்படுகிறது.//
உங்கள் வரிகளிலே இருக்கிறதோ? (திடீர்க்கணமொன்றில் விழிப்புற்று
ஊர்வம்பு நிறுத்தி அடித்து விலக்கி வழிசெய்து நெற்றி நிலமிடிக்கக் கும்பிடுவர்)
மிக அருமையாக, அன்றாடம் நடக்கும் செயலை எளிமையாகக் கூறியுள்ளீர்கள். பாராட்டுக்கள்!
//பட்டுச் சரசரக்க
தூண்மறைவினின்று எட்டிச் சிரிக்கும்
குழந்தை கண்ணில் இருக்கிறது தெய்வம்/
நன்றாக இருக்கின்றது'
//பட்டுச் சரசரக்க
தூண்மறைவினின்று எட்டிச் சிரிக்கும்
குழந்தை கண்ணில் இருக்கிறது தெய்வம்//.
நன்றி
Post a Comment