11.03.2007

சேவிக்க மாட்டேன் சிறீரங்கப் பெருமானே!



முகட்டு வளைக் காப்பாய்
மூலைக்குள் சரசரப்பாய்
வாளியின் பின்புறத்தில்
வழுவழுத்துக் கிடப்பாய்

மரணத்தின் நதி வடிவாய்
நெளிந்துலவும் விதியுருவாய்
படைத்தவனைப் பழித்தபடி
படுத்திருப்பாய் தீங்கில்லை

தன்னினத்தைத் தூற்றி
புண்ணிலே எரி மூட்டும்
பொய்மையாளர் மை
போலில்லை விடம் நீயும்

சிறீரங்கப் பெருமானே!-உனை
சேவித்த கையிறக்கி
வசைபாட வைத்தானோர் பாவி!
வாழட்டும் அவனுடைய நீதி!

பிற்குறிப்பு: 'உள்குத்து' இல்லை... உள் 'கொத்து'தான்.

6 comments:

நளாயினி said...

ஆத்திரமும் அறிவும் பெண்ணிற்கு அழகு. இது எனது புதுமொழி.

தமிழ்நதி said...

வாங்க நளாயினி! ஆத்திரம் இருக்கு... அடுத்தது இருக்கா நீங்கள்தான் சொல்லவேண்டும் :)

உண்மையில் புதுமொழி நன்றாக இருக்கிறது.

LakshmanaRaja said...

//மரணத்தின் நதி வடிவாய்நெளிந்துலவும் விதியுருவாய்படைத்தவனைப் பழித்தபடிபடுத்திருப்பாய் //

:-)..ரசித்தேன்

///'உள்குத்து' இல்லை... //

பாவி ன்னு ஒரு தொடுப்பு கொடுத்துட்டு... :-)))))))))))

ரசிகன் said...

// உள்குத்து' இல்லை... உள் 'கொத்து'தான்.//
ஹா...ஹா...நல்லாயிருக்கு..
தமிழ்நதி அக்கா..
உங்களுக்கும் ,குடும்பத்தாருக்கும். எனது அன்பு கலந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
என்றும் அன்புடன் உங்கள் ரசிகன்.

Indran said...

தமிழ் நதிக்கு மரபுவழி வந்த கவியுணர்வு!
நன்றாகவிருக்கிறது!!

"வெறும் குரோதத்தில்புலம்புபவர்களை யாரும் பொருட்டாக எடுப்பதில்லை"

தேவ அபிரா

cheena (சீனா) said...

கவிதை நன்று - கருத்தும் புரிகிறது - உள் கொத்து தான் புரியவில்லை.