முற்குறிப்பு: கடவு இலக்கிய அமைப்பால் மதுரையில் நடத்தப்பட்ட இரண்டுநாள் ‘கூடல் சங்கமம்’நிகழ்வுக்கு நானும் தோழி உமா ஷக்தியும் சென்றிருந்தோம். அனைவரின் ஒத்துழைப்புடனும் இறுக்கமான நேரக் கட்டுப்பாட்டுடனும் பயனுள்ளதாகவும் அந்தக் கூட்டம் சிறப்பாக நடந்துமுடிந்தது. இந்தப் பதிவு, கூட்டத்தின் முடிவில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பற்றியது. இரண்டுநாள் நிகழ்ச்சிகளையும் பற்றி விரிவாக நிதானமாக ஆற அமர்ந்து எழுத எண்ணியிருக்கிறேன். அதற்குள், அக்குறிப்பிட்ட சம்பவம் பற்றி எனக்குள் பொங்கும் ஆற்றாமையைப் பதிவாக்கியிருக்கிறேன். இதைச் சாட்டாக வைத்துக்கொண்டு, ‘அந்தக் கூட்டமும் சொதப்பிட்டாம்ல’என்று கதைபரப்பிவிட வேண்டாமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன். கூட்டம் நன்றாகவே நடந்தது.
‘நான் மநுவிரோதன்’என்ற நேர்காணல் தொகுப்பு வெளியீட்டின்போது முதன்முதலில் ஆதவன் தீட்சண்யாவைப் பார்த்தேன். பரிச்சயம் செய்துகொள்ள வாய்ப்பு ஏற்படவில்லை. பின்னர் ‘மணல்வீடு’ ஹரிகிருஷ்ணனால் சேலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘களரி’நிகழ்ச்சியில் அவரைச் சந்தித்தபோது பேசக்கூடியதாக இருந்தது. சேலம் நிகழ்ச்சி முடிந்ததும், திருச்சி ‘யுகமாயினி’ கூட்டத்தில் கலந்துகொள்ளவெனப் புறப்பட்ட எழுத்தாளர் பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா இருவருடனும் நானும் கவிஞர் குட்டி ரேவதியும் இணைந்துகொண்டோம்.(சித்தனின் அழைப்பின்பேரில்) திருச்சி சென்ற வழி ஆரோக்கியமான உரையாடலில் கழிந்தது. ஆதவன் தீட்சண்யாவின் கவிதைகளிலுள்ள அரசியல் எனக்குப் பிடிக்கும்.(புலியெதிர்ப்பு அரசியலை இங்கு நான் குறிப்பிடவில்லை) ஆதவன் தீட்சண்யா ஆசிரியராக இருக்கும்‘புது விசை’குறிப்பிடத்தக்க அளவில் அதிகார மையங்களின் மீது விமர்சனங்களை முன்வைப்பது, சாதி-மதம் போன்ற புனிதங்களின் மீது கேள்விகளை எழுப்புவதும் கண்டிப்பதுமான போக்கினால் அவர்மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தேன். மதமும் சாதியும் மக்களை எவ்விதம் அடிமைப்படுத்துகின்றன என்று குட்டி ரேவதியும் ஆதவனும் பிரபஞ்சன் அவர்களும் பேசிக்கொண்டிருந்ததை கேட்டுக்கொண்டிருந்த அன்றைக்கு எனக்குள் ஆதவன் மீதான மதிப்பின் 'மீட்டர்' மேலும் எகிறியதைச் சொல்லியாக வேண்டும்.
ஆளுமைகள் என்று நாம் நினைத்துக்கொண்டிருப்பவர்களின் அடிமனங்களில் சிறுமைகள் புற்றெடுத்துக் குடிகொண்டிருப்பதைக் காணநேரும் காலமோ இது என்று தோன்றுகிறது.
நேற்றைய நிகழ்ச்சி முடிவில் ஒழுங்கமைக்கப்பட்ட கலந்துரையாடலில், சில எழுத்தாளர்களை அவர்களது படைப்பு மனோநிலை குறித்து வந்திருந்த ஏனைய எழுத்தாளர்களோடும் பார்வையாளர்களோடும் பகிர்ந்துகொள்ளும்படி கேட்கப்பட்டது. கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், சுரேஷ்குமார இந்திரஜித், உதயசங்கர், ஆதவன் தீட்சண்யா, நாஞ்சில் நாடன் இவர்களோடு எனது பெயரும் திடுமுட்டாக அறிவிக்கப்பட்டபோது, தயக்கத்தோடும் கொஞ்சம் பதட்டத்தோடும் முன்னால் சென்று அமர்ந்தேன். “இந்த ஜாம்பவான்களோடு என்னை ஏன் அழைத்தார்கள். இலக்கியத்தைப் பற்றி நான் என்னதான் பேசுவது?”என்று அருகிலிருந்த பிரபஞ்சன் அவர்களிடம் கேட்டேன். அவருக்கும் எனக்கும் இடையில் மதிப்பும் அன்பும் கலந்த ஒரு நல்லுறவு இருக்கிறது. தோழனைப்போலவும் தந்தையைப் போலவும் ஒரேசமயத்தில் இருக்கக்கூடிய எளிமையான மனிதர் அவர். “ஏதாவது பேசுங்கள்… இது கலந்துரையாடல்தானே… ஒன்றும் பேசமுடியாவிட்டால் ஆம் இல்லை என்று சமாளியுங்கள்”என்றார்.
எனது முறை வந்தபோது நான் என்ன பேசுவதென்று தீர்மானித்திருந்தேன்.
“பெரிய எழுத்தாளர்களெல்லாம் எழுதுவதைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார்கள். எனது ஒரு சிறுகதைத் தொகுப்பும் கவிதைத் தொகுப்பும் மட்டுமே வெளியாகியிருக்கின்றன. அவற்றை, எழுத்துப் பயணத்தில் சிறு முயற்சிகள் என்றே சொல்வேன். எனவே அவர்களிலிருந்து வித்தியாசப்பட்டு ‘எழுதிய விடயங்களைத் தவிர்த்து, ஏன் எழுதப்படவில்லை?’என்பதைக் குறித்துப் பேசலாமென்று நினைக்கிறேன்.
சில மைல்கள் அருகில் இருக்கும் இலங்கையில் இத்தனை இனப்படுகொலைகள் நடந்தும் உங்களில் யாரும் அதைப் பற்றி ஒன்றும் பேசாமல், எழுதாமல் இருந்ததன் காரணந்தான் என்ன? நான் வாசித்தவரையில் நாஞ்சில் நாடன் எழுதிய கட்டுரைகள் சிலவற்றில் ஈழப்பிரச்சனை பற்றி எழுதியிருக்கிறார். எழுத்தாளர்கள் என்பவர்களுக்கு சமூக அக்கறை, பொறுப்புணர்வு இருக்கவேண்டும். எனக்குத் தாங்கவியலாத வியப்பாக இருந்தது. இவர்களால் எப்படி இப்படி மௌனம் சாதிக்க முடிகிறது என்பது நெஞ்சை அறுக்கும் கேள்வியாக இருந்தது. ஈழப்பிரச்சனையைப் பற்றி எழுத அதைப்பற்றி எங்களுக்கு முழுவதுமாகத் தெரியாது என்று சொல்லி நீங்கள் ஒதுங்கிக்கொண்டுவிட முடியாது. பெண்களின் மனவுலகம் பற்றி எழுதுகிறீர்கள். அதற்கு நீங்கள் பெண்களாயிருக்க வேண்டியதில்லை. எங்கோ குஜராத்தில் நடக்கும் மதக்கலவரம் பற்றி அங்கு பிரசன்னமாக இருக்காமலே எழுதுகிறீர்கள். இங்கே பக்கத்தில் இருக்கும் இலங்கையில் நடக்கும் மனிதப்பேரழிவை, படுகொலையைப் பற்றி மட்டும் முழு அரசியலும் தெரிந்துகொண்டுதான் எழுதுவோம் என்று எப்படிச் சொல்லமுடியும்?
இங்கே இந்தக் கூட்டத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் நாங்கள் பெண்கள் இருக்கிறோம். இவ்வளவு பெரிய கூட்டத்தில் இப்படி மிகச்சில பேராக இருப்பது எங்களுக்கு சங்கடமாக இருக்கிறது. இட ஒதுக்கீடு, இட ஒதுக்கீடு என்றெல்லாம் பேசுகிறீர்கள். ஆனால், இங்கே இந்தக் கூட்டத்தில் பெண்களின் விகிதாசாரம் எவ்வளவு? அவர்கள் ஏதோவொரு பிரச்சனையால் வரவில்லை என்றால், அதை நிவர்த்தி செய்ய, சமரசம் செய்ய, நீங்கள் ஏன் முயற்சிக்கவில்லை? பேசித் தீர்க்க முடியாத பிரச்சனைகள் என்று இலக்கியச் சூழலில் இருக்கிறதா என்ன?
இங்கே கூடியிருக்கும் எழுத்தாளர்களில் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் எனக்கு மிகப்பிடிக்கும். பிரபஞ்சன் அவர்களைப் பிடிக்கும். நாஞ்சில் நாடன் அவர்களது எழுத்தும் அப்படியே. ஜெயமோகனுடைய சில தடாலடியான கருத்துக்களில்- எல்லோருக்கும் சரியென்று தோன்றுவதைத் தவறெனும் நிலைப்பாடுகளில், அரசியல் அதிரடிக் கருத்துக்களில் எனக்கு மாறுபாடுகள் இருந்தாலும், அவருடைய புனைவுலகம் அழகியது. நாம் அவருடைய புனைவுகளை விரும்பிப் படிக்கிறேன். உங்களிடமெல்லாம் நான் கேட்பது ஒன்றுதான். ஈழத்தமிழர்கள் விடயத்தில் இப்படி மௌனமாக, பாராமுகமாக, மனச்சாட்சியில்லாமல் நீங்கள் நடந்துகொண்டதற்குக் காரணந்தான் என்ன? நீங்கள் அதிகாரங்களுக்கு அஞ்சுகிறீர்களா? அசிரத்தையா? தயவுசெய்து எனக்குப் பதில் சொல்லுங்கள்”
கோணங்கியும் எஸ்.ராமகிருஷ்ணனும் அதற்குப் பதிலளித்தார்கள். அவர்களது பதில் திருப்திகரமாக இருக்கவில்லை. “எங்களுக்குள் அந்த நெருப்பு எரிந்துகொண்டுதான் இருக்கிறது. அது இனிக் கொழுந்து விட்டெரியும்” என்பது மாதிரியான பதில் ஏறத்தாழ முற்றுமுழுதாக எரிந்துமுடிந்து சாம்பலில் புகை அடங்காத ஒரு சமூகத்தைப் பார்த்துச் சொல்லக்கூடிய பதிலாக எனக்குத் தோன்றவில்லை.
அதையடுத்து ஆதவன் தீட்சண்யா ஒலிபெருக்கியை கையில் வாங்கிப் பேசத் தொடங்கினார்.
“நாங்கள் ஈழத்தமிழர்களுக்காகப் பேசவேண்டுமென்று, குரல்கொடுக்கவேண்டுமென்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? என்று ஆரம்பித்தார்.
‘அம்பாளா பேசுவது?’என்ற திக்பிரமை படர, அவருடைய அறிவார்த்தமான பேச்சை உன்னிப்பாகக் கவனிக்கவாரம்பித்தேன்.
“இலங்கையின் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக, வெள்ளைக்காரர்களால் இந்தியாவிலிருந்து இலட்சக்கணக்கான தமிழர்கள் கொண்டுசெல்லப்பட்டார்கள். அவர்கள், ஏற்கெனவே அங்கே இருந்த பூர்வீகத் தமிழர்களால், சாதித்தமிழர்களால் கீழ்த்தரமாக நடத்தப்பட்டார்கள். ‘கள்ளத்தோணி’என்று அழைக்கப்பட்டார்கள். மலையகத் தமிழர்களது வாக்குரிமை பறிக்கப்பட்டபோது, இலங்கைப் பாராளுமன்றத்தில் இருந்த தமிழ் எம்.பிக்களில் சிலர்கூட ஆதரவாக வாக்களித்தார்கள். எங்கள் மக்கள் சாதித்தமிழர்களால் அலட்சியப்படுத்தப்பட்டார்கள்.
முஸ்லிம் மக்கள் வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளால் இரவிரவாக விரட்டியடிக்கப்பட்டார்கள். நீங்கள் அதைக் கேட்டீர்களா? திண்ணியத்தில் எங்களது தலித் மக்களின் வாயில் மலம் திணிக்கப்பட்டது. ஈழத்தமிழர்கள் அதற்கெதிராகக் குரல் கொடுத்தீர்களா? சாதிக்கலவரங்களில் அவர்கள் கொல்லப்பட்டபோது நீங்கள் குரல் கொடுத்தீர்களா? வெண்மணியில் எரிக்கப்பட்டபோது பேசினீர்களா?
எங்களுக்கே ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன. நாங்கள் ஏன் உங்களுக்காகப் பேசவேண்டும்? எழுதவேண்டும்?”
ஒலிவாங்கியை என்னிடம் தரும்படி கேட்டு வாங்கினேன். அப்போது எனக்கு ஆதவன் தீட்சண்யா இதே சாயலுடைய கேள்வியை ஆனந்த விகடன் நேர்காணலில் கேட்டிருந்தது நினைவில் வந்தது.
“எழுத்தாளர்கள் என்பவர்கள் சாதாரண மக்களிலிருந்து சற்றே வித்தியாசப்பட்டுச் சிந்திக்கிறவர்கள். பெருந்தன்மையானவர்கள், சமூகப் பொறுப்புணர்வுடன் இயங்க வேண்டிய கடப்பாடு அவர்களுக்கு இருக்கிறது இல்லையா? ஆக, மலையகத் தமிழர்களை நாங்கள் கேவலமாக நடத்தினோம் என்பதற்காக இப்போது நீங்கள் எங்களைப் பழிவாங்குகிறீர்களா ஆதவன்?”என்று கேட்டேன்.
ரி.கண்ணன் என்பவரும், ‘யாதுமாகி’யின் ஆசிரியர் லேனா குமாரும் எழுந்து வந்து “தமிழ்நதி! ஆதவன் தீட்சண்யா அப்படித்தான் பேசுவான். நீங்கள் அதை ஒட்டுமொத்தத் தமிழகத்தின் குரலாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. அது ஆதவன் தீட்சண்யா என்ற தனியொருவனின் குரல் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்”என்றார்கள். கூட்டத்திலிருந்து அதற்கு ஆதரவாகப் பல குரல்கள் எழுந்தன.
இதற்குள் பேராசிரியர் வீ.அரசு எழுந்து வந்து ஒலிவாங்கியை வாங்கினார்.
“தமிழ்நதி எழுப்பிய கேள்வி மிகச்சரியானது. அதற்கு ஆதவன் நீங்கள் பதிலளித்த விதம் சரியல்ல. இலங்கைத் தமிழர்களுக்குள் யாழ்ப்பாணத் தமிழன், வன்னித் தமிழன், மட்டக்களப்புத் தமிழன் என்ற வேறுபாடுகள் எல்லாம் இருக்கத்தான் செய்கின்றன. மட்டக்களப்புத் தமிழனை வவுனியாத் தமிழன் ஏற்றுக்கொள்ள மாட்டான். வவுனியாத் தமிழனை யாழ்ப்பாணத் தமிழன் ஏற்றுக்கொள்ள மாட்டான். இவர்கள் எல்லோரும் சேர்ந்து மலையகத் தமிழர்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இவையெல்லாம் உண்மைதான். ஆனால், இந்தச் சமயத்தில் ஆதவன் இப்படிப் பேசுவது தவறு. ஈழத்தமிழினம் பிணக்காடாகி எரிந்துகொண்டிருக்கிறது. பிணங்கள் குவிக்கப்பட்டிருக்கும் மேட்டிலே ஏறிநின்றுகொண்டு நீங்கள் இப்படிப் பேசுவது மனிதாபிமானமுடையதல்ல. எந்த நேரத்தில் என்ன பேச்சுப் பேசுகிறீர்கள்? தவறான புரிதலோடு இருக்கிறீர்கள். மன்னிக்கவேண்டும் ஆதவன்”என்றார்.
அப்போது ஆதவன் எழுந்திருந்து, “நான் உங்கள் மன்னிப்பை ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால், நீங்கள் தவறாகப் பேசியிருக்கிறீர்கள்”என்றார்.
பேராசிரியர் அரசு போனவேகத்தில் கோபத்தோடு திரும்பிவந்தார்.
“நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கவில்லை. நீ இந்த விசயத்தில் தவறான புரிதலோடு இருக்கிறாய் என்பதை அப்படி வெளிப்படுத்தினேன். நானே தமிழாசிரியன். இந்த வார்த்தை விளையாட்டுக்களெல்லாம் என்னோடு வைத்துக்கொள்ளாதே. எனக்கு எத்தனையோ ஆண்டுகளாக ஈழத்தமிழர்களோடு பரிச்சயம் இருக்கிறது. அவர்களின் வரலாற்றை நான் நன்கு அறிந்தவன். நீ புதிதாக ஒன்றும் சொல்லவராதே” என்றார் கடுமையாக.
இருவரும் ‘வாய்யா…போய்யா…’என்ற அளவுக்கு இறங்கினார்கள். ‘புதையல் எடுக்கப் போனால் பூதம் வருகிறதே’என்று நான் திகைப்போடு அமர்ந்திருந்தேன்.
இதற்குள் கவிஞர் விக்கிரமாதித்யன் வேட்டியைப் பிடித்துக்கொண்டு தடக்கித் தடக்கி எழுந்து வந்து ‘ஐம்பதினாயிரம் தமிழர்கள் செத்துப்போனாங்கய்யா… என்னய்யா பேச்சுப் பேசுற’என்றார். கவிஞர் தேவேந்திர பூபதி அவரைக் கொண்டுபோய் மறுபடியும் இருத்திவிட்டு வந்தார். கவிஞர் விக்கிரமாதித்யனோ ‘ஸ்பிரிங் பந்து’போல மீண்டும் மீண்டும் எழுந்து வந்துகொண்டேயிருந்தார். அவர் முன்னே வரும் ஒவ்வொரு தடவையும் இறந்துபோன ஈழத்தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போனது.
அருமையான ஒரு கூட்டத்தை ஆரவாரமாக முடித்துவைத்த பெருமை என்னைச் சேர்ந்தது.
இப்போது ஆதவன் தீட்சண்யாவிடம் கேட்பதற்கு என்னிடம் சில கேள்விகள் இருக்கின்றன. அவரிடமிருந்து அவற்றுக்கான பதிலை நான் எதிர்பார்த்துக் கேட்கவில்லை. கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்த ‘அறிவில்’நான் ஏற்கெனவே ஆடிப்போயிருக்கிறேன்.
என்னால் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்த விதத்தை நான் எப்படிப் பார்த்தேனென்றால், “நீ அன்னிக்கு என் கோலிக்குண்டைக் கிணத்துல தூக்கிப் போட்டுட்டயில்ல… அதான் இன்னிக்கு உன் பொம்மை கால உடைச்சுப்புட்டேன்”என்ற குழந்தைக் கோபமாக அது இருந்தது. பெரியவர்களிடம் அன்றேல் நாங்கள் பெரியவர்களாக நினைத்துக்கொண்டிருப்பவர்களிடமிருந்து இப்படியான பதில்கள் வருவது அயர்ச்சியையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
யோசித்துப் பாருங்கள் ஆதவன் (முன்னிலைக்கே வருகிறேன்) நாங்கள் மலையகத் தமிழர்களை அந்நாளில் மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவர்களை எங்கள் வீடுகளிலும் தோட்டங்களிலும் வேலைக்காக வைத்திருந்தபோது அவர்களைச் சகமனிதர்களாகக் கருதாமல் நடந்துகொண்டோம் என்பதை ஒத்துக்கொள்கிறேன். “அன்று எங்களை நீங்கள் மதிக்கவில்லை. கள்ளத்தோணி என்றீர்கள். ஆகவே நீங்கள் கொல்லப்படுவதை எதிர்த்துக் கேள்வி கேட்காமல் இருந்தோம்; இது உங்களுக்கு வேண்டியதுதானே…” என்று நீங்கள் சொல்வது எந்தவகையில் நியாயம்?
சமூகத்திலுள்ள சாதி, மதச் சதிகளை எதிர்ப்பேன். ஆனால், சகமனிதன் கொல்லப்படுவதை ரசிப்பேன் என்றவகையில் இருக்கிறது உங்கள் விவாதம்.
எழுத்தாளன் என்பவன் சாதாரணர்களிலும் அல்லது வாசகர்களிலும் பெருந்தன்மையோடும் மனிதாபிமானத்தோடும் பரந்த மனப்பாங்கோடும் சமூகப் பொறுப்புணர்வோடும் சிந்திக்கக்கூடியவன் அன்றேல் சிந்திக்க வேண்டியவன் என்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
விடுதலைப் புலிகள் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகளே அல்ல என்பதே உங்கள் நிலைப்பாடாக இருக்கிறது. அப்படிச் சொல்லும் நீங்கள், விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை விரட்டியடித்தார்கள் என்பதையும் உங்கள் வாதத்திற்கு வலுச்சேர்க்க நேற்று உள்ளடக்கிப் பேசினீர்கள். ஆக, முஸ்லிம்களை விரட்டியடித்த விடுதலைப் புலிகளைத் தலைமையாகக் கொண்ட மக்களை நீங்கள் காப்பாற்ற விரும்பவில்லை என்றாகிறது அல்லவா? விடுதலைப் புலிகள் ஈழத்தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லையென்றால், மிகுதித் தமிழர்களுக்காக நீங்கள் ஏன் பேசவில்லை?
ஈழத்தின் தலித்துகளையும் மலையகத் தமிழரையும் மதிக்காத சாதித்தமிழர்கள் என்ற தொனியை நேற்றுக் கேட்க முடிந்தது. அப்படியானால் குண்டடிபட்டுச் செத்துப்போனவர்களும் இன்று அகதி முகாம்களில் இருப்பவர்களும் யாவரும் வெள்ளாளப் ‘பெருங்குடி’மக்களா? நீங்கள் தலித்துகளுக்காகவாவது பேசியிருக்கலாமே?
ஆக, உங்களது புரட்சிகர பரந்த அறிவு உங்கள் நாட்டிலுள்ள தலித்துகளின் முன்னேற்றத்துக்காக மட்டுமே பேசும். சகோதரத்துவம், சமத்துவம், எல்லைகளற்ற அன்பு என்பதெல்லாம் சும்மா! ‘நியாயமாகப் பார்த்தால் கொல்லப்பட வேண்டியவர்களே’என்ற தொனி சமூக மாற்றத்திற்கான சஞ்சிகையை நடத்துகிற ஒருவரிடமிருந்து வந்திருப்பது வியப்பளிக்கிறது.
படைப்பாளி என்பவன் நாடு, மதம், மொழி, நிறம், எல்லைகள், முன்விரோதங்கள், பின்குரோதங்கள் எல்லாவற்றையும் கடந்தவன் என்ற எண்ணங்களெல்லாம் தவிடுபொடியாகச் செய்தீர்கள் நண்பரே! நன்றி.
பார்த்துப் பழகிய ஆதவன் தீட்சண்யாவை இனிப் பார்க்க முடியாது. ‘எங்களை வருத்தினாய். நன்றாக அனுபவித்தாய் போ’என்ற முகத்தைப் பார்த்து பொய்யாகவேனும் ஒரு புன்னகையைக்கூட உதிர்க்க முடியாது.
இந்தக் கூத்தெல்லாம் முடிந்து வெளியே வரும்போது, “அவன் ஷோபா சக்தியின் குரலால் பேசுகிறான். பிரான்சிலிருந்தல்லவா அவன் குரல் ஒலிக்கிறது”என்றார் ஒருவர். அவரும் எழுத்தாளரே.
சத்தியக்கடதாசியில் ‘அமரந்தாவின் கடிதம்’என்ற பதிவில் ஷோபா சக்தி என்னைச் சாடியிருப்பதாக ஒரு நண்பர் சொன்னார். தேடினேன். கிடைக்கவில்லை. ‘தமிழ்நதி போன்ற புலிச்சார்புப் பொய்மையாளர்கள்’என்று எழுதியிருப்பதாகக் கேள்வி. மேலும், ஈழத்தமிழருக்காக அழுகிறார். அதேசமயம், வால்பாறைக் கூட்டத்துக்கும் போகிறார் என்றும் எழுதியிருப்பதாகத் தகவல்.
நன்றாக இருக்கிறது உங்கள் ‘கட்டுடைப்பு’! தன் இனத்திற்காக அழுகிறவள் இலக்கியக் கூட்டத்திற்குப் போகக்கூடாது என்ற ஒற்றைச்சாயலுள் நீங்கள் என்னை எப்படிப் பொருத்தலாம்? அங்கே கொத்துக்குண்டுகள் வீசப்பட்டபோதும் நாங்கள் மூன்று வேளை சாப்பிட்டுக்கொண்டுதான் இருந்தோம். காலையில் எழுந்ததும் கக்கூசுக்குப் போகவும் தவறவில்லை. என்ன அனர்த்தம் ஆனாலும் எல்லாம் நடக்கிறபடி நடந்துகொண்டுதானிருக்கும். அங்கே பிணங்கள் விழுகிறதே என்ற துக்கம் இருக்கும். ஆனால், கூடலும் ஊடலும் தேடலும் எல்லாமும் நிகழ்ந்துகொண்டுதானிருக்கும். “அப்படி இல்லை. நான் நாள் முழுவதும் அழுதுகொண்டே அமர்ந்திருந்தேன்”என்று யாராகிலும் சொல்வார்களேயாகில், அது பொய்!
மேலும், நான் புலிகளை நேசிக்கிறேன்தான். அதற்காக நான் எழுதும் எல்லாவற்றுக்கும் நீங்கள் மஞ்சளும் கறுப்பும் கலந்து புலிச்சாயம் பூசவேண்டியதில்லை. என்னால் முன்வைக்கப்படும் கேள்விகளையெல்லாம் ‘நீ புலிக்குச் சார்பானவள். அப்படித்தான் பேசுவாய்’என்பதாக ஏன் அணுகுகிறீர்கள்? கேள்விகளிலுள்ள நியாயங்களைப் புரிந்துகொள்ளுங்கள். என்னையொரு சட்டகத்துள் அடைத்துப் பதில்சொல்ல விளையாதீர்கள்.
ஆதவன் தீட்சண்யாவும் ஷோபா சக்தியும் நண்பர்களா என்னவென்பது எனக்கு நிச்சயமாகத் தெரியாது. இருவரும் நண்பர்கள் என்று சிலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
ஷோபா சக்தி! உங்கள் நண்பர் கேட்கிறார். “மலையகத் தமிழர்களை ஈழத்தின் சாதித்தமிழர்கள் மதிக்கவில்லை. அதனால், அவர்கள் மீது நடத்தப்பட்ட இனவழிப்பை நாங்கள் தட்டிக் கேட்கவில்லை. நாங்கள் கேட்கவேண்டுமென்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்?”என்று. நீங்கள் விடுதலைப் புலிகளது அராஜகங்களுக்கு எதிரானவர்தானே? ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர் அல்லவே? உங்கள் நண்பரின் கேள்விக்கான உங்களது பதில் என்னவாக இருக்கும்?
மீண்டும் சொல்கிறேன். இந்தக் கட்டுரையிலுள்ள விடயங்களைக் கதையுங்கள். எனது வார்த்தைகள் எல்லாமே கறுப்பும் மஞ்சளும் நீண்ட வாலும் கொண்டவையல்ல.
Subscribe to:
Post Comments (Atom)
64 comments:
இலங்கை தமிழர் பிரச்சனை இருக்கட்டும், முதலில் நீங்கள் பூனை படத்தை எடுங்கள், அலுவலகத்தில் அமர்ந்து பதிவு படிக்க தடையாக உள்ளது பூனை படம்.
என் கருத்தும் விடுதலை புலிகள் அமைப்பு ஜனநாயகம், மாற்று கருத்து போன்றவற்றில் நம்பிக்கை இல்லாத அமைப்பு.
குப்பன்_யாஹூ
குப்பன் யாகூ,
நீங்கள் இட்ட பின்னூட்டத்துக்கும் என் பதிவுக்கும் என்ன தொடர்பு?
கட்டுரையின் கடைசி வரிகள் வரை வாசிக்கும்படியாக உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். மற்றது பூனைப் படத்தை எடுக்கும்படியாக இப்படி அதட்டிச் சொல்லவேண்டியதில்லை என்று நினைக்கிறேன். இரண்டு நாட்கள் எடுக்கும் பூனைக்குட்டியைத் தூக்க.
ஆதவன் பேசுவது இன்றைய மார்க்சிஸ்ட் மார்க்சியம். தேசியத்திற்குள் உள்ளடங்கிய புரட்சி சித்தாந்தம். அவர்கள் வேறு வகையாக பேசுவார்கள் என்று எதிர்பார்ப்பது ஏமாளித்தனமே! மனித நேயம் என்பது கூட இடம் பொருள் ஏவல் பார்த்துத்தான் வரும் என்றால் அவன் மனிதனாகவே இருக்க முடியாது. படைப்பாளி என்பது இன்றைய சூழலில் நல்ல ஒரு முகமுடியாக மட்டுமே இருக்கிறது. சாதிய அடக்குமுறைகள்ளுக்கு எதிராக குமுறும் மனம் இன அடக்குமுறையை கள்ளத்தனமாய் ரசிக்கிறது என்றால் நம்பிக்கைகள் பொய்த்துக்கொண்டிருப்பதின் நீட்சியாக பார்க்க வேண்டும். புலிதான் இன்று தமிழர்க்குள் இருந்த பூனைக்குட்டிகளை எல்லாம் வெளியே இழுத்து வந்திருக்கிறது
"படைப்பாளி என்பவன் நாடு, மதம், மொழி, நிறம், எல்லைகள், முன்விரோதங்கள், பின்குரோதங்கள் எல்லாவற்றையும் கடந்தவன்"---உண்மைதான் தமிழ்நதி. யுகமாயினி திருச்சிக் கூட்டத்தில் என்ன நடந்தது.அதே காழ்ப்புணர்ச்சிதானே ஆதவன் பிரபஞ்சன் இருவராலும் வெளிக்காட்டப்பட்டது.The caravan should pass on. Chithan
விவாதம் சூடு பறக்கப் போகும் ஒரு அனுபவப் பகிர்வு...
//ஆளுமைகள் என்று நாம் நினைத்துக்கொண்டிருப்பவர்களின் அடிமனங்களில் சிறுமைகள் புற்றெடுத்துக் குடிகொண்டிருப்பதைக் காணநேரும் காலமோ இது என்று தோன்றுகிறது. //
அப்படி காண்பது கூட ஒரு வகையில் நல்லது தான்... !!!!!!!
Our voice should go for stop killings in the name of race/religion/caste,gender,colour,etc... என்று தொடர்ந்து பல தளங்களில் விவாதிப்பவர்கள் அல்லது அப்படி கூறுபவர்கள் பலரும் தாங்களின் முறை வரும் பொழுது தட்டையாக சிந்திகின்றார்களோ என்றே தோன்றுகின்றது.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலான சிறுபாணன்மை தமிழ் மக்களின் அவலத்தை, அதற்கு காரணமான சிங்களப் பேரினவாதத்தை ஒற்றை வரியில் முடிக்கும் இவர்களின் வாதத்திறமை மெய்சிலிர்க்க வைக்கும் சமயங்களில்.
உங்கள் வருத்தத்தில் பங்குகொள்வது தவிர வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை.
தமிழினம் இன்னும் ஒரு நவீனகால ஆதிவாசியினம் அவ்வளவுதான்.
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5927:2009-06-29-15-36-19&catid=75:2008-05-01-11-45-16
//எழுத்தாளர் தமிழ்நதி போன்ற பொய்க்குப் பிறந்தவர்கள் ‘அப்படிப் புலிகள் பிடித்து வைத்திருப்பதாகச் சொல்வது பொய்’ என்று தமிழக ஊடகங்களில் பரப்பிய அப்பட்டமான பொய்யை நீங்களும் நம்புகிறீர்களா?//
http://www.shobasakthi.com/?p=422
தோழர் எதுக்கு பாஸ்டன் பாலாஜி போல ஆளுங்களோட சினாப் ஜட்சுக்கு கனெக்சன் தர்றீங்க. அந்தாளு தலைப்ப என்னன்னு போட்டிருக்காருன்னு பாருங்க.
Aadhavan Dheetchanya on Eelam Tamils situation in Sri Lanka: Lit Meets: Tamil Nathy: Authors, Writers Forum
அவருக்கூ ஆடவன் டீக்ஸன்யாவோட ஸ்ரீலங்காவுல ஈழம் தமிழர்கள் நிலைமைங்குறதுதான் ஒங்க பதிவோட அம்சமா வெளங்குது. லிங்கு பண்ண எடம் குடுக்காதீங்க
ஆதவன் தீட்சண்யா பற்றி நல்லபிப்பிராயம் இருந்தது.
யாரைத்தான் நம்புவதோ ஏழையின் நெஞ்சம்.
யூ ரூ புரட்டஸ்????
என்று கேட்கத் தோன்றுகிறது.
வீ.அரசு சொன்னதும் அவரது ஆவேசமும் அங்கீகரிக்கத்தக்கது.
ஈழத் தமிழர்களின் போராட்டங்களில் நிறையவே பங்கெடுத்தவர்.
விக்க்ரமாதித்யன் பாவம் அவர் நடந்து வருவது மனத்திரையில் ஓடியது. பாசம் கொள்வதற்கு ஒரு சிறந்த மனிதன்.
சிலரை யெல்லாம் ஏந்தான் நான் வாசிச்சு புளகாகிதம் அடைகிறோனோ..?
நல்லா எழுதுவார்கள். ஆனால் கொம்புகளும் அடியாட்களும் எங்கிருந்துதான் வருகுதோ ஆண்டவா????
//பணயமாகப் பிடித்து வைத்திருப்பவர்களை விடுதலை செய்யுமாறு புலிகளிடம் வலியுறுத்திச் சொல்ல வேண்டிய நேரத்தில் “விரும்பியே மக்கள் புலிகளுடனிருக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு, இன்று “என்னை அழவிடுங்கள்” என்று மாய்மாலம் போடும் தமிழ்நதி வகையறாக்களின் முதலைக் கண்ணீரை நீங்கள் புரிந்தகொள்ளவே போவதில்லையா? மக்களை இலங்கை இராணுவம்தான் கொன்றது. ஆனால் மக்களை தப்பிச் செல்லவிடாமல் இராணுவத்தின் கொலை இலக்குகளாக நிறுத்தி வைத்திருந்த புலிகளிற்கு இந்த மனிதப் பேரழிவில் பங்கில்லையா? இந்தப் பாதகத்தை எதிர்த்துக் கேள்வி கேட்காமல் கடைசிவரை புலிகளை நியாயப்படுத்திக்கொண்டிருந்துவிட்டு இன்று தனது வலைப்பதிவில் வால்ப்பாறையின் வனப்பை ரசித்து எழுதுவதும் அடுத்த நிமிடம் அழுவதும் அடுத்த நிமிடம் அருவியின் எழிலை வியப்பதும் அதற்கடுத்த நிமிடமே அய்யோ நான் அழுகிறேனே என்றும் ‘அந்நியன்’ பட அம்பி மாதிரி மாறிமாறி தமிழ்நதி பினாத்துவது அருவருப்பாயிருக்கிறது. எத்தனை அருவியில் குளித்தாலும் தமிழ்நதி போன்றவர்களின் கையில் படிந்திருக்கும் இரத்தக்கறை போகவே போகாது. ஏனெனில் இவர்கள் தெரிந்தே தவறு செய்தார்கள். அந்தத் தவறை இன்றுவரை நியாயப்படுத்துகிறார்கள். உருட்டும் புரட்டும் சிரட்டையும் கையும்.//
http://www.shobasakthi.com/?p=422
//சகமனிதர்பால் அன்பும் கருணையும் சகோதரத்துவமும் பொழிகிற உன்னதமான பண்பை நோக்கி நகர விரும்புகிறவர்களின் முன்னே மறித்து நிற்பது உத்தப்புரம் சுவர் மட்டுமல்ல என்றாலும் இந்தச் சுவர் இடித்தகற்றப்பட வேண்டும். நியாய சிந்தனையுள்ள ஒரு குடிமக்கள் தமது மனதுக்குள் மறித்து நிற்கும் சுவர்களைத் தகர்த்து வெளியே வந்து இப்போது எழுப்ப வேண்டிய முழக்கம் ‘உத்தப்புரம் சுவற்றை இடி. அல்லது இடிப்போம்…’//
http://cyrilalex.com/?p=418
இது ஆதவன் தீட்சண்யா சகமனித அன்பைப் பற்றிப் பேசிய கட்டுரையின் ஒரு பகுதி
//உங்கூட்டுப் பொண்டுக நமுத்த சுள்ளியோட சேந்தெரிஞ்சு கஞ்சிக் காய்ச்சியிருக்காங்களா கண்ணுத்தண்ணி உப்பு கரிக்க
ஈரஞ்சேராம எளப்பு நோவெடுத்துசெத்த சொந்தத்த எடுக்க வக்கத்து பொணத்தோட ராப்பகலா பொழங்கித் தவிச்சதுண்டா
ஒழவுமாடொன்னு கோமாரியில நட்டுக்க ஒத்தமாட்டைக் கட்டிக்கிட்டு உயிர்ப் பதற அழுதிருக்கா உங்குடும்பம்
எதுக்கும் ஏலாம உஞ்செல்லப்புள்ளையோட சிறுவாட்டக் களவாண்டு சீவனம் கழிஞ்சிருக்கா
தங்கறதுக்கு வூடும் திங்கறதுக்கு சோறுமிருந்துட்டா சவுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே //
http://keetru.com/literature/poems/aadhavan_5.php
//வல்லுறவுக்கு பிளக்கப்பட்ட தொடையிடையே
வழியும் உதிரம்
ஒரு சொல்லுக்கும் மற்றொன்றுக்குமான
இடைப்பள்ளத்தில் தேங்கி
உங்களது மெல்லிதயத்தை மூழ்கடித்துவிடும்
அபாயமுண்டு
ஒவ்வொரு வரியும்
கேட்பாரற்று மார்ச்சுவரியில் கடத்தப்பட்டிருக்கும்
பிரேதங்களைப்போல தெரியும்பட்சம்
வீடு திரும்பாத உறவினர்களைத் தேடியலையக்கூடும்
முதல் பாராவுக்கும் அடுத்த பாராவுக்கும்
இடையேயுள்ள வெளி
கடலோரத்தில் பொக்லைன்களால் தோண்டப்பட்ட
பெருங்குழிகளாக சாயலிடுமானால்
இக்கவிதையை சுனாமிக்கானதாய் தப்பர்த்தம்
கொள்ள வாய்ப்புண்டு
என்கவுண்டரில் தெறித்த ரத்தத்துளி போல்
சிதறிக்கிடக்கும் முற்றுப்புள்ளிகள்
தூக்கத்தில் வளர்ந்து
நடுகற்களை நினைவூட்டும் நிறுத்தற்குறிகள்
வேறெதோ பயணத்தைக் கிளப்பிவிட்டு
ஊர்திரும்பலை சாத்தியமற்றதாக்கிவிடும்
ஒரே ஊரின்
வெவ்வேறு சாதி சுடுகாடுகளைப் போலிருக்கும்
அடுத்தடுத்தப் பக்கங்களில்
வெட்டுப்பட்டு மொக்கையான
கன்னங்கரிய எழுத்துக்களாலாகி
யாவரும் வெறுக்கத்தக்கவொரு கவிதையிருக்கிறது.
//
மேற்கண்ட பத்திகளை இங்கு சுட்டியதன் காரணம்
தீட்டுக்கு எதிராக பேசும் தீட்சண்யவுக்குள் தான் எவ்வளவு தீட்டு
எத்தகைய குரூரம்
பேனாவுக்குள் பொய்யும் எழுத்தில் பாசாங்கும் வழிய
உள்ளே சிறுமை அகலாத சீராளர்கள் மன்னிக்கவும் சீழாளர்கள்
ஈரம் மிச்சம் இல்லாத இவர்கள்
முகமூடியை கிழித்ததற்கு காரணமாய் இருந்ததற்கு நன்றி தமிழ்நதி!
'நமது அண்டை நாடான இந்தியா' எனும் ஆதவன் தீட்சண்யாவில் சொல்லாடாலில் திளைத்துக் கிடந்தேன். அவை வெறும் வார்த்தை விளையாட்டு என்பதை அங்கே நிரூபணம் செய்திருக்கிறார் போலும்.
ஆறு மாதத்திற்கு முன் ஈழத்தில் பாலாறும், தேனாறும் ஓடியது என்கிற ரீதியில் எழுதுகிற செத்த மூளை எழுத்தாளனுக்கு தானும் சரி நிகர் சமானம் என்று உங்கள் மூலமாய் உலகிற்கு தகவல் சொல்லி இருக்கிறார்.
ஆவி பேட்டியெல்லாம் படித்துவிட்டு சுயபுத்தி வீரனென்று ஏமாந்துவிட்டேன். அவரது தற்போதைய முழக்கங்களாவது உண்மையாய் இருக்கட்டும் என்று பிரார்த்திப்போமாக!
குப்பன் யாஹூ...
சரியான காமெடி பீஸ் அய்யா நீர். அலுவலகத்தில் அமர்ந்து படிக்க பூனை என்ன தடை செய்கிறது என்று புரியவில்லை. பூனை மியாவ் மியாவ் என்று கத்துகிறதா ? இல்லை பூனை குறுக்கால போகும் பதிவு ராசியில்லாததா ? முழு பதிவையும் மகரநெடுங்குழைகாதன் சத்தியமாக நீங்கள் படிக்கவில்லை. ஆம் ஐ ரைட் ?
Thank you for raising that question in first place. Let them talk. We can see their other side!
ஆதவன் பேச்சு மிக மட்டமாக இருக்கிறது. நாம் எல்லோருக்கும் இந்த உலகில் உள்ள மற்ற ஒவ்வொரு மனிதரையும் கொள்ளுமளவுக்கு போதுமான கடந்த கால வரலாறு இருக்கிறது. அதை எல்லாம் பெருந்தன்மையோடு மறந்தும் மன்னித்தும், அவற்றை மீண்டும் நடக்காமல் செய்வதும், இப்பொழுது இருக்கும் நாகரிகத்தின் அடிப்படையில் சமத்துவ சமுதாயம் காண்பதுமே அறிவுடைமை.
ஒரு படைப்பாளியின் வாயால் வந்த வார்த்தைகள் என்பதை வாசிக்கும் போது அதிர்ச்சி மட்டும் அல்ல அழுகையும் வருகிறது .கடைசி நேரம் வரை இவர்களையா நம்பி எங்கள் மக்கள் இருந்தார்கள் . இந்த மா பாதகச் செயலுக்கு உடந்தையாக இருந்த ஒரு அரசியல் கட்சியே , மீண்டும் மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட போதே மனசுக்குள் ஒரு நெருடல் இருந்தது. ஆனால் இப்போது பார்க்கும் போது நாம் பழிவாங்கப்பட்டிருக்கிறோம் என்கிற எண்ணம் உறுதியாகின்றது .ஆனால் எம் மூதாதையர்களால் கேவலப்படுத்தப்பட்ட மலையக மக்கள் விடயத்தில் வெட்கித்தலை குனிகிறோம் .இன்னும் கூட சில இடங்களில் உள்ள சாதிவெறியும் பாகுபாடுகளும் சே சே ..இவையெல்லாம் ஒரு இனத்தில் இருக்கும் வரை அந்த இனம் சபிக்கப்பட்ட இனமாகவே இருக்கும். அன்புள்ள அக்கா உங்களைப் போன்றவர்களால் ஆதவன் ,ஷோபாசக்தி ,சாரு.ஜெயமோகன் போன்றவர்களின் மனதில் நிட்சயம் ஒரு மாற்றம் வரும் என்று நம்புகிறேன்.
புனை படம் படிக்க தடையாக இல்லையே குப்பன். உங்கள் பிரவுசரில் ஏதேனும் கோளாறா?
// இரண்டு நாட்கள் எடுக்கும் பூனைக்குட்டியைத் தூக்க.
//
:((
தமிழ்நதி,
உங்களது நியாயமான கேள்விகளும் ஆதங்கமும் புரிகிறது. ஆதவன் தீட்சண்யா யுகமாயினி கூட்டத்தில் ஒரு பெரியவரை(அவர் வயதுக்காவது மரியாதை கொடுத்திருக்கலாம்) கிழி கிழி என்று கிழித்ததைத்தான் நாம் பார்த்தோமே!
//படைப்பாளி என்பவன் நாடு, மதம், மொழி, நிறம், எல்லைகள், முன்விரோதங்கள், பின்குரோதங்கள் எல்லாவற்றையும் கடந்தவன் என்ற எண்ணங்களெல்லாம் தவிடுபொடியாகச் செய்தீர்கள் நண்பரே! நன்றி.//
இதெல்லாம் எழுத்தில் மட்டுமே என்பதை நீங்கள் இன்னும் உணரவில்லையா?
உங்களது நியாயமான கேள்விகளுக்கு விடையளிக்க இயலாத இந்தியனில் நானுமொருவன்.
இந்தப்பின்னூட்டம் உங்களது மொழிநடைக்காக.
மன்னிக்கவும்.
offtopic இந்தப் பூனைக்குட்டி நான் நினைத்ததை சொல்ல விடாமல் தடுத்தது. தயவு செய்து அதை எடுக்க வேணாம்... :)
எழுத்தாளர்களை எல்லாம் அறிந்த சமூகப் போராளிகளாகப் பார்க்கும் உங்கள் பார்வையில் தான் குறை பாடு உள்ளது.எவ்வாறு சினிமாவின் மூலம் கதானாயகர்கள் உயரிய மனிதர்களாகாக் கட்டமைக்கப் படுகிறார்களோ அதே விதத்தில் எழுத்தாளர்கள் தங்களின் எழுத்தின் வசீகரத்தால் தங்களைச் சமூகத்தின் கதா நாயகர்களாகக் கட்டமைக்கிறார்கள்.
உண்மையான சமூகப் போரளிகள் களத்தில் நின்று போராடுபவர்கள் மட்டுமே.சோபாசக்தியும்,ஆதவன் தீட்ச்சண்யாவும் தமது எழுத்தாற்றலால் மக்களை மயக்கும் அரிதாரம் பூசிய வேட தாரிகள்.ஆங்காங்கு இவர்களின் அரிதாரப் பூச்சு எடுபடுகிறது அவ்வளவு தான்.ஜெயமோகானின் வேடம் ஒன்று இவர்களின் வேடம் இன்னொன்று , பூச்சு எல்லாருக்கும் ஒன்று தான்.
வணக்கம் தமிழ்நதி
ஆதவன் கிட்ட ஈழத் தமிழர்கள் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாவே இருங்க, "ஏன்டா மலையகத் தமிழர்களை கள்ளத்தோணின்னு கூப்பிட்டீங்கன்னு கீழ புடிச்சு தள்ளி விட்டாலும் விடுவாரு.
என்ன மனுசரைய்யா அவரு? எப்படி இவ்வளவு கீழ்த்தரமா பேசத் தோனுது?
கீழ்கண்ட கோபங்கள் ஆதவனின் கருத்தால் வந்தது
தலப்பா கட்டுன சர்தாரே ஈழத் தமிழருக்காக தெருவுல இருங்குறான் உங்களுக்கு என்ன பண்ணுது? தனித்து நிக்கிறியளோ? அட போங்கய்யா.....
எல்லாத்தையும் விடுங்க, இப்ப நீங்க நினைக்கிற புலி இல்லைத்தானே? இறங்கி போராடுங்க பார்ப்போம், நாங்கள் உங்கள் பின்னால் நிற்கிறோம். ஜனநாயகத்தையும், மாற்றுக்கருத்தையும் ஏற்றுக் கொள்கிற தலைவனை கொண்டு வாங்க, ஏற்றுக் கொள்கிறோம்.
முடிந்தால் மிஞ்சியிருக்கும் ஈழத் தமிழருக்காக போராடுங்க இல்லையென்றால், உங்கள் தமிழ்த் திறமையை வைத்து புத்தங்கங்களை எழுதுங்க ஈழத் தமிழரை விடுங்க.
ஈழ பிரச்சனையை ஆதரித்து ஆதவன் பேசினால் தான் நீங்கள் ஆச்சிரியபடவேண்டும்.. சோபா சக்தி நன்றியாய் வாலாட்டுகிறார் ஆதவன், அந்த அளவிற்கு நாம் மகிழவேண்டும், அவருக்காவது நன்றியை இருக்கிறாரே என்று...
ஆதவன் தீச்சன்யா போன்ற நவீன பார்பனர்கள் அப்படிதான் பேசுவார்கள்.. சாவு வீட்டில் சாதி பார்ப்பவன் பார்பான் தான் அவனுக்கு அடுத்து இந்த பின் நவினத்துவ, முன் நவீனத்துவ, கீழ் நவீனத்துவ, மேல் நவீனத்துவ, இலக்கிய் புடிங்கிகள் தான்...
நானும் நிகழ்விற்க்கு இரண்டு நாளும் வந்திருந்தேன். முதல் நாள் தலைமை தாங்கிய மதிப்பிற்க்குரிய பேராசிரியர் தொ.ப அவர்களின் பேச்சில் கூட 'தெற்கே விசும் காற்றில் இரத்த வாடை
அடிக்கிறது' என குறிப்பிட்டார்.
அதே நாள் மாலையில் நடந்த விவாதத்தில் கூட ஈழப்பிரச்சனை அல்லாது வேறு சில விவாதத்தில்( ந.முருகேச பாண்டியன் உதவிக்கொண்டு) சிற்சில சிராய்ப்புகள் ஏற்பட்டன ஆரோக்கியமாக. இதை குறிப்பிடுவதால் இதையும் ஈழப்பிரச்சினையும் ஒரே தட்டில் வைக்கிறேன் என எண்ணிவிட வேண்டாம்.
எனக்கு பிடித்த எழுத்தாளர்கள் பிரபஞ்சன்,எஸ்.ரா, கோணங்கி, நாஞ் சில் நாடன், ஆதவன் தீட்சண்யா போன்றவர்கள் வரிசையில் நீங்கள் அமர்ந்தது மகிழ்சியாக இருந்தது. ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக புரிந்தது. நீங்கள் நிச்சயம் ஈழம் பற்றித்தான் பேச போகிறிர்க்ள் என்று. ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். நேரமின்மை என்பது அன்று
மிக நெருக்கடியான பிரச்சனையாக இருந்ததை நீங்கள் அறிவிர்கள். பேராசிரியர் வீ. அரசு சொன்னது போல் 'இதுவல்ல நேரமும் இடமும்'
என்பது உண்மை தான். மற்றபடி ரீ.கண்ணன், லேனா குமாரும் சொன்னது சரி
ஆதவன் தீட்சண்யா என்ற படைப்பாளியை ஒட்டு மொத்தமாக ஒதுக்கிவிடவும் வேண்டாம் என்று அன்புடன் பணிவுடன் கேட்டு கொள்கிறேன் ஒரு வாசகன் என்ற முறையில்.
வாதம், விவாதம் என்றால் சில உராய்வுகள்- சிராய்ப்புக்கள் வெடிப்புக்கள் வருவது இயல்பு. வாழ்வனுபவத்தில் இது ஒரு அடுக்கு என தெளிக.
நன்றி
நண்பர்களோடு உரையாடுவதன் முன் ஷோபா சக்தி என்பவர் எழுதிய 'காமெடி பீஸ்' பற்றிக் கதைக்க வேண்டியிருக்கிறது. இணையத்தில் தேடோ தேடென்று தேடியும் கிடைக்காத அமரந்தாவின் கடிதத்தை நேசமித்ரனும், நிலவனும் இன்னுமொருவரும் கண்டுபிடித்து சுட்டி தந்திருக்கிறார்கள். நீங்களும் வாசித்துப் பயன்பெறுங்கள்.
அந்தக் கடிதத்தில் என்னைக் குறித்த பகுதியைப் படித்ததும் எனக்கு வடிவேலின் வாயிலிருந்து உதிரும் சில பிரபலமான வாசகங்கள்தான் நினைவில் வந்தன. 'அவனா நீயி', 'சின்னப்புள்ளைத்தனமா இருக்கு', 'லூசுத்தனமாப் பேசாத' .
தமிழ்நதிக்குப் புலிகளைப் பிடிக்கும். அதற்காக நான் புலிகளுக்காகப் பொய்ப்பிரச்சாரம் செய்துகொண்டு திரியவில்லை.' தமிழக ஊடகங்களில் பரப்பிய அப்பட்டமான பொய்யை நீங்களும் நம்புகிறீர்களா?' என்று கேட்கிறார். நான் எந்த ஊடகத்திலய்யா அப்படிக் கதைத்திருக்கிறேன்? கீற்று என்ற இணையத்தளத்திற்கு அளித்த நேர்காணல் தவிர்த்து நான் வேறெங்கும் அந்தத் தொனிப்படப் பேசியதேயில்லை. தண்ணியடித்துவிட்டு விண்ணைப் பார்த்துக்கொண்டு படுத்திருக்கும் நேரத்தில் வேறு ஏதாவது உருப்படியாக யோசியுங்கள். சும்மா கற்பனைக் கதைகளை எடுத்து விடாதீர்கள்.
நான் எனது மக்களுக்காக அழுகிறேனாம். அதேசமயம், வால்பாறைக் கூட்டத்துக்குப் போய் அருவியையும் ரசிக்கிறேனாம். இப்போதுதான் 'நீயென்ன லூஸா?' என்று கேட்கத் தோன்றுகிறது. தனது இனத்திற்காக இரங்கியழும் ஒருத்தி அருவியை ரசிக்கக்கூடாதா? இருபத்திநான்கு மணிநேரமும் சமையலறை மூலையில் அமர்ந்து நான் அழுதுகொண்டிருக்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களோ...? என்ன நடந்தாலும் இந்த உலகம் ஓடும் என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். உங்கள் காதலி பிரிந்தபிறகும் உங்கள் தாய்மண்ணை நீங்கியபிறகும், நீங்கள் வேலை இழந்தபிறகும் காலத்தின் பயணம் தொடரவே செய்யும். அதை யாரும் நிறுத்துவதற்கில்லை. போர்க்களத்தின் நடுவில் நிற்கிறவன்கூட சிரிக்கவும் காதலிக்கவும் செய்வான். ஒற்றைப்படையில் நான் இயங்கவேண்டுமென்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்? அழுவதும் சிரிப்பதும் சினப்பதும் நேசிப்பதும் எல்லாம் ஒருத்திக்குள் நிகழவே செய்யும். எனது மக்கள் செத்துப்போனார்களே என்று என்னைச் சுருட்டிக்கொண்டு படுத்திருக்கவும் இயலாது. அதேசமயம், அவர்களுக்காக இரங்காமல், பேசாமல் இருக்கவும் இயலாது.
சனங்களுக்காக அழுத அன்றே நீங்கள் மதுச்சாலைக்குப் போனதில்லையா? பெண்ணின் இதழ்களைப் பற்றியதில்லையா? ஏன் ஒரு மனிதரை ஒற்றைச்சாயல்பட சிந்திக்கிறீர்கள்? தயவுசெய்து வளருங்கள். வளர்ந்தவர்கள் போலப் பேசுங்கள்.
கடைசியாக ஒன்றே ஒன்று.. உங்களையொத்தவர்களிடம் பேசுவது வியர்த்தம். விடுதலைப் புலிகளை அரக்கர்களைப் போல சித்தரிக்கும் நீங்கள் இன்னமும் உயிருடன்தான் இருக்கிறீர்கள். எழுதுகிறீர்கள். கூட்டங்களுக்குப் போய் விவாதிக்கிறீர்கள். அவர்கள்தான் துடிக்கப் பதைக்கச் செத்துப்போனார்கள். காற்றில் கலந்து போனார்கள். அதன்பிறகும் அவர்களைத் தூற்றிக்கொண்டிருப்பதால் உங்களுக்கு ஏதாவது ஆகப்போகிறதா? புலிகள் அரக்கர்கள்தான். சரி! அவர்கள் கதை முடிந்தது. ஐயா தேவர்களே! எங்களுக்கு ஒரு வழி காட்டுங்கள்.
நாளை உங்களோடு பேசுகிறேன் நண்பர்களே,
நேரகாலத்திற்குத் திரும்பிப் போகவேண்டும். நன்றி.
பூனை குட்டி படத்தை எடுக்க சொல்லி விண்ணப்பமாகத்தான் கேட்கிறேன், அவசரத்தில் அந்த வார்த்தை அடிக்க மறந்து விட்டேன்.
நான் சொல்ல வந்தது, ஈழத்த் தமிழ் பிரச்சனிக்கு நாங்கள் எப்படி கண்மூடி தனமகா ஆதரவு தருவது, நீங்கள் எப்படி எல்லா தமிழ் எழுட்டளர்களும், வாசகர்களும், வாக்காளர்களும் ஆதரவு தர வேண்டும் என்று எடிர்பார்க்கிறீர்கள் , புரிய வில்லை எனக்கு.
எங்கள் தேசத்தின் தலைவரை கொலை செய்ந்தவர்கள் (ராஜிவ் காந்தியை), எங்கள் தேசபிதாவின் கொள்கைக்கு (அகிம்சா) நேர் எதிர் முறை கொள்கை உடையவர்கள் (வன்முறை ). நாங்கள் எப்படி மனம் நிறைந்து ஆதரவு அளிப்பது.
ஜனநாயகம் என்ற ஒரு கோட்பாடு மீதே பிரபாகரனுக்கு நம்பிக்கை இல்லை. நேர்மையும் இல்லை. ராஜிவ் காந்தியியா கொலை செய்து விட்டு, துன்பியல் சம்வம என்று சொல்லவே மூன்று வருடங்கள் ஆனது.
எனவே தமிழ் எழுதாளர்கள் எல்லாரும் ஈஅழ்த்தை ஆதரிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதே எனது கருத்து, உடனே எங்களுக்கு தமிழ் மீது ஆசை இல்லை, பாசம் இல்லை, உணர்வு இல்லை என்று சொல்லாதீர்கள். நாங்க எங்கள் தமிழ்நாட்டை தமிழ் தாயை நேசிக்கிறோம். ஆனால் இலங்கை, மலுசிய, சிங்கபூர் தமிழர்களை நேசிக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை, எங்கள் விருப்பத்திற்கு உட்பட்டது அது.
அன்பன்
குப்பன்_யாஹூ
1.தனக்குச் சோறிட்ட, தனக்குத் துணிதந்த தனது சொந்த மக்களையே பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த ஒரு இயக்கத்தை,///
தனக்குச் சோறிட்ட, தனக்குத் துணிதந்த தனது சொந்த மக்களையே பணயக் கைதிகளாகப் புலிகள் பிடித்துவைத்திருந்ததாக கூறும் சோபாசக்தி,இன்றைக்கு முகாம்களில் இருக்கும் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்தும் சொல்லொணா சித்திரவதைகளையும், கொடுமைகளையும், பார்த்த பிறகும் புலிகளையும் தமிழர்களையும் வேறுபடுத்திபார்க்கும் பரந்த மனமுடையதுதான் இலங்கை அரசு என்பாறோ ?
புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் எம் மக்கள் எங்களோடு விருப்பட்டுத்தான் இருக்கிறார்கள் வேண்டுமானால் சர்வதேச பார்வையாளர்கள் வந்து பார்வையிட்டு மக்களையே கேட்டுக்கொள்ளலாம் என்றபோது அதை வரவேற்று தானும் தனது சகாகளுடனும் சேர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு சர்வதேச பார்வையாளர்களை திரட்டிக்கொண்டு யுத்த களத்திற்கு போய் உண்மையை கண்டறிந்திருகலாமே
புலிகள் வேறு மக்கள் வேறு என்று புலம் பெயர்ந்த நாடுகளில் இருந்து புலம்பிக்கொண்டிருக்கும் இவர் போன்றவர்களை விட புலிகள் விதைத்து தேசிய சென்ற விடுதலை நெருப்பை மக்கள் மனங்களில் இருந்து அழிக்க முடியும் என்று கனவுகள் கண்டுகொண்டு,போர் முடிந்த பிறகும் போர்சூழலையும் ஒடுக்குமுறைகளையும் தொடர்ந்துகொண்டிருக்கும் சிங்களனின் நடவடிக்கைகளில் இருந்தே புலிகளும் மக்களும் ஒன்றுதான் என்று நாம் எளிதாக உணரலாம்.
கடைசிவரை ஒபாமாவிடமும் சார்க்கோஸியிடமும் கெஞ்சிக்கொண்டிருந்த ஒரு இயக்கத்தை,///
ஒபாமாவும் சர்கோசியும் புலிகளை அழிக்க வேண்டும் அல்லது அழிய விட வேண்டும் என்கிற எண்ணம் கொண்டிருந்ததாக சோபா சக்தியின் வார்த்தைகளில் இருந்தே புரிந்துகொள்வதிலும்,அதில் அவர்கள் இருவரும் கடைசிவரை உறுதியாகவே இருந்தார்கள் என்பதையும் புரிந்துகொள்வதில் நமக்கு சிரமமில்லை.
உலகின் மிக பெரிய ஏகாதிபத்திய நாடுகளின் அரச தலைவர்களின் இந்த செயல்பாடுகளில் இருந்தே புலிகள் ஏகாத்பத்திய எதிர்ப்பில் கடைசிவரை உறுதியாகவே இருந்தார்கள் யாரிடமும் கெஞ்சி கொண்டிருக்கவில்லை என்பதையும் எளிதில் கண்டுகொள்ளலாம்.
ஆதவனின் மேல் இருந்த மரியாதையை “எரியும் குடிசையில் பீடி பற்றவைக்கும்” தோரணையில் அமைந்த அவரது பேச்சு குறைக்கிறது.
இவ்வளவு திமிரான மனிதநேயமற்ற ஒரு கருத்தை ஆதவன் தீட்சண்யா மனதுக்குள் வைத்திருந்தாரென்றால் அவரைப்பற்றி எனக்குள்ளிருந்த மதிப்பனைத்தையும் முற்றிலும் துடைத்தெறிய விரும்புகிறேன். அவர் விடுதலைப்புலிகளின் எதிர்ப்பாளர் என்பதனாலல்ல. அது முன்பே தெரிந்தும் அவர் அனைத்துப் பிரச்னைகளில் முன்வைத்திருக்கும் வாதங்களுக்காக அவர் மீது பெரிதும் மதிப்பு வைத்திருந்தேன். அ.மார்க்ஸ் கூட அப்படித்தான். ஈழப்பிரச்னையில் அவர் வாதங்களுடன் உடன்படாவிட்டாலும் அவர் தமிழ்ச்சூழலில் முன்வைத்துள்ள பல வாதங்கள் முக்கியமானவை, மதிப்புக்குரியவை.
ஆதவன் தீட்சண்யா உள்வைத்திருக்கும் மனிதநேயத்துகெதிரான இப்படியொரு அறிவுத்திமிர் அவர் எதிர்த்து வரும் சாதித்திமிருக்கு எந்தவகையிலும் குறைந்ததல்ல.
நன்றி - சொ.சங்கரபாண்டி
ஒரு அப்பட்டமான மார்க்ஸிய விரோத இயக்கத்தை, தனது பொருளாதாரக் கொள்கை திறந்த பொருளாதாரக் கொள்கையே எனப் பகிரங்கமாக அறிவித்து வந்த இயக்கத்தை, கம்யூனிஸ்டுகளை கொன்றொழித்த ஒரு இயக்கத்தை, தனது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கம்யூனிஸ்ட் இயக்கம் தொடக்கம் சகல அரசியல் இயக்கங்களையும் தடைசெய்திருந்த ஒரு இயக்கத்தை, ஏகபிரதிநிதித்துவம் என்ற பாஸிச நிலைப்பாட்டை வரித்திருந்த ஒரு இயக்கத்தை லத்தீன் அமெரிக்க இடதுசாரி விடுதலை இயக்கங்களுடன் ஒப்பிட்டுப் பேச உங்களுக்கு என்ன நெஞ்சழுத்தம்?///
எந்த சமரசங்களுக்கும் விட்டுகொடுப்புகளுக்கும் கடைசிவரை உடன்படாமல் உலகின் தலை சிறந்த ஏகாதிபத்திய போராளிகளின் வரிசையில் தங்கள் அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் இணைத்துக்கொண்டுள்ள புலிகளை மார்க்சிய விரோதிகள் என்று சில அதிமேதாவிகள் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.
தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் ஈழ பகுதிகளை உலக ஏகாதிபத்தியங்களின் ராணுவ பொருளாதார மேலாதிக்க நலன்களுக்காக திறந்துவிட புலிகள் சம்மதித்து இதுவரை அவர்கள் அங்கே அனுமதித்த ராணுவ தளங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் பட்டியலை சோபா சக்தி வெளியிட்டால் எங்களை போன்ற தற்குறிகள் அறிந்துகொள்ள வசதியாக இருக்கும்.
\\சமூகத்திலுள்ள சாதி, மதச் சதிகளை எதிர்ப்பேன். ஆனால், சகமனிதன் கொல்லப்படுவதை ரசிப்பேன் என்றவகையில் இருக்கிறது உங்கள் விவாதம்.\\
அவரைப் பற்றிய சரியான உண்மை சொன்னீர்கள் தமிழ்நதி.
இனி அவரிடம் நான் கேட்க நினைப்பது ...
தலித்தியம் தேவைதான் அதற்காக தமிழன் இனம் அழித்தாலும் தலித்தியம் தான் பேசுவேன் என்றால் எதைக் கொண்டு உங்களை அடையாள படுத்துவீர்கள். விதிவிலக்கைத் தவிர்த்து மற்ற அத்தனை பார்ப்பனின் ஈழக் கருத்துடன் நீங்கள் ஒத்துபோவது ஏன் ? நீங்கள் நல்ல சிந்தனையாளர் என்பதை இப்படியா உறுதிப்படுத்துவது ?
கொசுக்கடித்தால் கொசுவிற்காக நாம்தான் வலை கட்டிக்கொள்ள வேண்டும். அதைவிட்டால் கொசுவை மட்டும் அழிக்கலாம். அதற்காக மக்கள் இருந்தால் தானே கொசு கடிக்கும் ஆகவே மக்களை அழிப்போம் என்று கழுத்தில் சிவப்பு துண்டை முடிஞ்சுவிட்டு பேசக்கூடாது. உங்கள் கருத்தும், வார்த்தைகள் உண்மையாக இருக்கலாம் ஆனால் அதற்காக ஈழ நிலைமைக்கு உங்களின் விளக்கம் நல்ல மருந்து என்றா நினைக்கிறீர்கள்.
மனிதம் பற்றி பேச உம்மையே நீர் இப்படித் தகுதி இழக்கச் செய்து கொண்டீரே !!!
வேதனை வேதனை !!
உங்களின் வார்த்தைகளே உம்மைச் சிறுமை ஆக்கியது.
ஒரு அப்பட்டமான மார்க்ஸிய விரோத இயக்கத்தை, தனது பொருளாதாரக் கொள்கை திறந்த பொருளாதாரக் கொள்கையே எனப் பகிரங்கமாக அறிவித்து வந்த இயக்கத்தை, கம்யூனிஸ்டுகளை கொன்றொழித்த ஒரு இயக்கத்தை, தனது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கம்யூனிஸ்ட் இயக்கம் தொடக்கம் சகல அரசியல் இயக்கங்களையும் தடைசெய்திருந்த ஒரு இயக்கத்தை, ஏகபிரதிநிதித்துவம் என்ற பாஸிச நிலைப்பாட்டை வரித்திருந்த ஒரு இயக்கத்தை லத்தீன் அமெரிக்க இடதுசாரி விடுதலை இயக்கங்களுடன் ஒப்பிட்டுப் பேச உங்களுக்கு என்ன நெஞ்சழுத்தம்?///
அதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுக்கிறோம் என்கிற பெயரில்,அதிகாரத்துவத்துக் கெதிரான போராட்டங்களை முன்னெடுக்கும் அமைப்புகளில் இயங்கும் அதிகாரத்தை மட்டுமே பின்நவீனத்தின் பின்னால் நின்றுகொண்டு விமர்சனம் என்கிற பெயரில் முதலாளித்துவத்துக்கு சேவை செய்யும் சோபா சக்தி போன்றவர்களுக்கு கம்யூனிசத்தின் மேல் என்ன திடீர் என்று அக்கறை பொத்துக்கொண்டு வருகிறது என்று தெரியவில்லை.
மார்க்சிய புத்தகங்களையே புரட்டி பார்க்காத ஒரு தற்குறி. தாங்கள் இழைத்த அத்துணை தவறுகளையும் தாண்டி உலக உழைக்கும் மக்களுக்கான தங்கள கடமையை தங்கள உயிரை அர்ப்பணித்து செய்து முடித்திருக்கும் புலிகளை அமரந்தா போற்றுவதை விமர்சனம் என்கிற பெயரில் கொச்சைபடுத்துவது நமது கால கட்டத்தின் அவலங்களில் ஒன்று.
நீண்ட காலங்களாகவே விடுதலைப் புலிகளிற்கு ஆதரவாகச் செயற்பட்டு சிறைகளையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்ட பல தமிழகத்துத் தோழர்களை அறிவோம். கருத்துரீதியாக முரண் இருப்பின்கூட எந்தப் பலனும் எதிர்பாராமல் அவர்கள் செய்த தியாகங்கள் மதிப்பிற்குரியவை. சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை. உண்மையாகவே உங்கள் கடிதத்தில் உள்ளதுபோல நீங்கள் புலிகளை விடுதலைப் போராளிகளாகக் கருதும் பட்சத்தில் கடந்த இருபத்தைந்து வருடங்களாக நீங்கள் புலிகளுக்கு ஆதரவாக அல்லவா இயங்கியிருக்க வேண்டும். கியூபாவரை நட்புறவு வைத்திருக்கும் நீங்கள் வெறும் முப்பது கிலோமீட்டர்கள் தூரத்திலிருந்த புலிகள் இயக்கத்தை ஆதரித்து ஏன் இயங்கவில்லை? உங்கள் திடீர்ப் புலிப் பாசத்தின் பின்னணியில் எதுவிருக்கிறது?
கண்டிப்பாக அது மார்க்ஸியமாக இருக்க முடியாது///
அமரந்தா,பதில் அளிக்க வேண்டிய கேள்விக்கு நாம் பதில் சொலவது சரியாக இருக்காது என்றாலும்
தங்கள் ராணுவ பொருளாதார நோக்கங்களுக்காக ஈழ போராட்டத்தை ஒடுக்க முனைந்த சர்வதேச மற்றும் இந்திய நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் சொன்ன புலிகள் மக்களை கேடயங்களாக பயன்படுத்துகிறார்கள் என்கிற குற்றசாட்டையே அப்படியே வாந்தி எடுத்த சோபா சக்தியின் பின்னணியில் எது இருக்கிறது என்கிற கேள்வியை மட்டும் நாம் முன் வைக்கலாம்.
நட்புமுரண்பாடும் பகைமுரண்பாடும் தெள்ளத்தெளிவாய் விளங்கிய எனக்கு ஒரு மநுவிரோதி எப்படி ஒரு அப்பட்டமான மநுதர்மகட்சியில் இருக்கிறார் எனபது விளங்கமாமல் மண்டைக்குள் எரிந்துகொண்டே இருக்கிறது
(ஆதவன்)
சோபா ஷக்திக்கு தமிழகத்தில் டப்பிங் பேசும் ஆதவன்.
ராஜபக்ஷேயிடம் பெரும் தொகை பெற்ற ஷோபா அதில் ஒரு பகுதியை ஆதவன் வசம் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதை அறிந்த புதுவிசை ஆசிரியர் ச.தமிழ்ச்செல்வன் மெல்ல புதுவிசையிலிருந்து வெளியேறினார். அந்த தொகையின் கித்தாபில் தான் ஆதவன் இத்தனை ஜம்பத்துடன் மிடுககாக திரிகிறார். பாருங்கள் மனுஷ்னுக்கு பணம் வந்தால் எத்தனை அகம்பாவமும் திமிரும் சேர்ந்து கொள்கிறது, கடவு கூட்டத்தில் மூன்று முறை அவரது கைகளுக்கு ஒலிவாங்கி சென்றது, மூன்று முறையும் குறையாத அகம்பாவத்தை அக்கப்போரை அனைவரும் காது மடல் குளிரக் கேட்டனர்.
அது வெல்லம் சரிங்கோ இது எல்லாம் நீரா கண்டுபிடித்தீர் ஆதவனே, எல்லாம் மார்க்சியம் போல் எக்ஸ்போட் குவாலிட்டி சரக்கு தானே, இது பிராண்ஸ் நாட்டு சரக்கு.. ஆனால் நீர் பேசுவதை பார்த்தால் அக்மார்க் உம் கண்டுபிடிப்பு போல் உள்ளதே... டப்பிங் வாய்சுக்கே இத்தனை திமிரா..........
பிணத்தின் மீது அதிகாரம் தேடி, சுய விளம்பரம் தேடும் இந்த கோஸ்டியை தமிழகம் இனம்கானட்டும்.
அற்புதனின் கருத்துக்கள் சரியாக இருக்கிறது! சினிமா ஹீரோக்கள் போல் இவர்களும் தங்கள் உலகங்களை கட்டமைத்துக் கொள்கிறார்கள்! இவர்களை அதி பராக்கிரமசாலிகள்,அசகாயசூரர்கள்,
உலக மேதாவிகள் என நம்புவோர் தான் அப்பாவிகள். இவர்களின் புனைவுலகத்தை ரசித்துவிட்டு அத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.
செயல்களுக்கும், வாழ்முறை நிஜச் செயற்பாடுகளுக்கும் இவர்களுக்கும் வெகு தூரம்!
அட, ஆதவனின் கருத்துப் படி பார்த்தாலும், வன்னியில் வாழ்ந்தோரில் சரிக்குச்சரி பாதியானோர் இந்திய வம்சாவளித் தமிழர்கள். பண்டா/சாத்திரி ஒப்பந்தத்தின் பின்னரும், மலையகத்தில் அடிக்கடி இடம்பெறும் இனக்கலவரங்களின் தொடர்ச்சியாகவும் வன்னி நிலத்தில் குடியேறியோர். இவர்கள் பேரன்களும், பேத்திகளும், மகன்களும் மகள்களும் கூட புலிகளில் பெருவாரியாக இணைந்திருந்தார்களே!
பட்டியல் வைத்துக்கொண்டு நீ ஏன் எழுதவில்லை என்று கேட்பதோ, இல்லை வீட்டுப்பாடம் எழுதினாயா என்பதுபோல சரிபார்ப்பதோ நல்லதல்ல. இன்னொன்று, இதுபோன்ற கேள்விகளை மூளைகளில் இருந்து அகற்றச் சொல்வதும் அதை மிகச்சிறந்த திறனாய்வாளர்கள் மறைந்திருந்து ஆதரிப்பதும் எதையோ கூர்தீட்டுவது போல இருக்கிறது. யாராவது ஒருவர் பெண்ணிய எழுத்தாளரை கேவலப்படுத்திப் பேசினால் மனது வலிக்கிற உதிரம் துடிக்கிற அதே வருத்தம் மேலிடுகிறது தோழரே. ஆதவன் கேட்ட கேள்விகளை விமர்சிக்கிற சாக்கில் தலித் எழுத்துக்களை எல்லாம் சகட்டுமேனிக்கு கெட்ட வார்த்தையில் திட்டுகிற பின்னூட்டங்களை உங்கள் பதிவு கொண்டாடுகிறது. தயவு செய்து வேண்டாம் தமிழ் நதி. உலகத்து ஒடுக்கப்பட்டவரெல்லாம் எனது என்னும் தோழமை தான் எழுத்து. அதில் ஆண், பெண், ஜாதி பேதம் வேண்டாம். உங்களுக்கு வந்த பின்னூட்டங்களில் உள்ள இடைவெளிகள், அதிலிருக்கிற கோபம் தவறானது அதை ஆதரிக்கவோ அணுமதிக்கவோ வேண்டாம் ப்ளீஸ்.
சரிசெய்யுங்கள், இல்லாவிட்டாலும் கூட உங்கள் பேரில் உள்ள பெண்ணியவாதிக்குறிய மதிப்பு. உங்கள் எழுத்தின் மீதுள்ள மரியாதை எள் முனையளவும் குறையாது. அப்படிக் குறைவதற்கு எழுதென்ன டென்னிஸ், கிரிக்கெட், ஷேர் மார்க்கெட் தரவரிசையா சரிவதற்கு ?. இல்லை பண்ணையார் வீட்டு சேவகப்பொருளா புறந் தள்ளுவதற்கு.
//முஸ்லிம் மக்கள் வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளால் இரவிரவாக விரட்டியடிக்கப்பட்டார்கள். நீங்கள் அதைக் கேட்டீர்களா? திண்ணியத்தில் எங்களது தலித் மக்களின் வாயில் மலம் திணிக்கப்பட்டது. ஈழத்தமிழர்கள் அதற்கெதிராகக் குரல் கொடுத்தீர்களா? சாதிக்கலவரங்களில் அவர்கள் கொல்லப்பட்டபோது நீங்கள் குரல் கொடுத்தீர்களா? வெண்மணியில் எரிக்கப்பட்டபோது பேசினீர்களா? //
ஆதவனின் கோபத்தில் என்ன தவறு கண்டீர்கள்?
அவரது வார்த்தைகளில் இருக்கும் உண்மைகள் கொஞ்சம் அதிர்ச்சி தடுமாற்றமும் தரத்தான் செய்யும்.
//நாங்கள் ஈழத்தமிழர்களுக்காகப் பேசவேண்டுமென்று, குரல்கொடுக்கவேண்டுமென்று நீங்கள் ஏன் எதிர்பார்க்கிறீர்கள்? //
அமாம்.. ஏன்?
ஆதவன் பற்றிய தங்களுடைய வருத்தமும், தங்கள் வருத்தம் பற்றிய அடர்கறுப்பின் கருத்துக்களும் தராசின் தட்டுகளில் மேலும் கீழும் அசைந்து கொண்டிருக்கிறது.
ஆனால் ஷோபாசக்தியின் தனிமனித துவேசம் வன்மையாக கண்டிக்கதக்கது. ஷோபாசக்தி தயவுசெய்து இதை தவிர்க்க வேண்டும்....
அதே சமயம் வன்மையான விவாதங்களிலிருந்து தமிழ்நதி நீங்களும் விலக வேண்டுகிறேன்.... தேவை ஈழத் தமிழனின் கன்னக் கதுப்புகளில் வழிந்தோடும் கண்ணீரில் ஏதாவது ஒரு துளியை துடைப்பதுதான்...
//எங்கள் தேசத்தின் தலைவரை கொலை செய்ந்தவர்கள் (ராஜிவ் காந்தியை), எங்கள் தேசபிதாவின் கொள்கைக்கு (அகிம்சா) நேர் எதிர் முறை கொள்கை உடையவர்கள் (வன்முறை ). நாங்கள் எப்படி மனம் நிறைந்து ஆதரவு அளிப்பது.//
குப்பன் யாகூ
மஹாத்மா காந்தியின் கொள்கையை தியாக தீபம் திலீபன் கடைப்பிடித்தபோது உங்கள் பாரதம் என்ன நாக்கா வழித்துக்கொண்டிருந்தது? உங்கள் காந்தியின் கொள்கையை தமீழீனத் தலைவர் 3 மணித்தியாலங்கள் அண்ணா சமாதீயில் நேரடி ஒளிப்ரப்பியபோது உங்கள் இந்தியா ஐபிஎல்லில் எந்த அணி வெல்லும் என பார்த்துக்கொண்டிருந்ததே அதெல்லாம் அகிம்சையா?
ஆதவன் மட்டுமல்ல!
பலர் இம்மாதிரியான ரெடிமேட் பதிகளுடன் தான் இருக்கீறார்கள்,
அதாவது இம்மாதிரியான சொல்லாடல் கிட்டதட்ட 20 வருடமாக நடந்து கொண்டிருக்கிறது,
நான் அறிந்து பலர் ஈழதமிழர்கள் பிழைப்பிற்காக இங்கிருந்து சென்றவர்கள், அவனிடம் போய் தனிநாடு கேட்டால் எப்படி கொடுப்பேன் என்று வரலாறு அறியாமல் பேசுகிறார்கள், இரைச்சலில் ஆதவனுடய பேச்சும் அம்மாதிரியான தோணியை கொடுக்கவே நானும் எழுந்து குரல் கொடுத்தேன்!
தமிழகத்தில் இனபடுகொலையை ஆதரிக்கும் அதிரிகாரமையத்திற்கெதிராக மக்களை கிழர்தெழச்செய்யும் முயற்சியில் சினிமா துறையினர் தீவிரமாக இயங்கி கொண்டிருந்த போது அது முழுமையான உள்நாட்டு அரசியல் பிரச்சனை ஆனது. அதிகாரம் நேரடிகாகவும், மறைமுகமாகவும் பல தாக்குதல் நிகழ்த்தியபோது தம்மை எழுத்தாளர்கள் என்று சொல்லி கொள்பவர்கள் அதிகாரமையத்திற்கெதிரான எந்த போராட்டத்தையும் அறிவிக்கவில்லை.
ஒருவேளை தமக்கு கிடைக்க இருக்கும் பட்டமும், பணமுடிப்பும் கிடைக்காமல் இருந்துவிடும் என்ற பயமோ என்னவோ!
பதிவுலகில்(blogger) இதெற்கென ஒருநாள் நடத்திய கூட்டம் கூட அவர்கள் நடத்தவில்லை என்பது வேதனையானது!
அதே நேரம் தோழர் பாமரன் ஊர் ஊராக சென்று திவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பதை பெருமையுடன் இங்கே பதிவு செய்கிறேன்!
அவருடன் துணை இருந்தவர்கள்
இயக்குனர் மணிவண்ணனும்,சீமானும்!
இணையத்திலும் முடிந்தமட்டும் பதிவு செய்திருக்கிறார் அவரது குமுறல்களை!
இந்த ஆதவன் சிபிஎம் கட்சியின் அடிமை தான். ஈழம் விஷ்யத்தில் கட்சி நிலைபாட்டுடன் அவரது நிலைபாடும் ஆச்சரியமாக ஒத்துப்போவதால் தான் தலைகால் தெரியாமல் பினாத்துகிறார். சாதியை எதிர்ப்பும் விமர்சனமும் நிறைந்த அவரது மநுவிரோதனை அவரது சிபிஎம் கட்சி தனது மார்க்சிஸ்டு இதழில் எப்படு தார் தாராய் கிழித்து எரிந்தது என்பது பாவம் பலர் அறிய மாட்டார்கள். அங்கே வாங்கிய அடிகளை மறைத்து இப்படி ஒப்பனையுடன் இலக்கிய கூட்டங்களில் தாதா வேஷ்ம் தரிக்கிறார்
அருமைத்தோழர் தமிழ்நதி!
இங்கு நடக்கும் விவாதங்கள் சில வரம்பு மீறியதாகவும், வன்மம் மிகுந்ததாகவும் இருக்கின்றன. தோழர் ஆதவனின் கருத்தும், விவாதமும் சர்ச்சைக்குரியன என்றால் அது குறித்து மட்டுமே பேச வேண்டும். மிகுந்த துவேஷமும், அதன் பின்னால் இருக்கும் அர்த்தங்களும் தாங்கள் அறிவீர்கள் என நினைக்கிறேன். அவைகளை மௌனமாக அனுமதிப்பதா... அல்லது உங்கள் விமர்சனங்களோடு அனுமதிப்பதா என்பதைத் தாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மிகுந்த வருத்தங்களுடன்....
மாதவராஜ்
ஷோபா ஷக்தி மது விடுதிகளில் குடித்து விட்டு உளறுவதை அப்படியே பதிவு செய்து ஐபோடில் அவரது நன்பர்கள் சேமிக்கிறார்கள். அதனை உடன் மின்னஞ்சலில் உடன் இரவே தமிழக நன்பர்களுக்கு அனுப்ப்புகிறார்கள். அதை வீடியும் முன் அ.மார்க்ஸ், ஆதவன் என ஒரு பட்டியலினர் டப்பிங் பேசி தயாராகிவிடுகிறார்கள். தமிழ சினிமாவின் நிச்சயம் இவர்கள் அளவிற்கு சுத்தமாக டப்பிங் பேசும் கலைஞர்கள் இல்லை எனலாம். பிரகாசமான எதிர்காலம் இவர்களுக்கு உள்ளது
எங்களைப்பத்தி யாரும் எழுதலையா என்று அந்தரித்து கெஞ்சுகிற நிலைக்கா போய்விட்டோம் நாம்..?
எழுதினா எழுதட்டும் இல்லைன்னா போகட்டும் -
அதை விட்டுட்டு அமெரிக்க மாமா தரும் சாக்லெட்டு டேஸ்ட்டு என்றதுபோல தமிழ்நாட்டுகாரர் எழுதினால்தான் நல்லாயிருக்குமென நினைப்பது எங்கட கையகலாத்தனத்தை காட்டுகிறது.
ஒருவேளை நாங்க ஒரு சிறுபான்மையினம் என்பதாலோ என்னவோ யாரையாவது தொங்கிக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறதோ..
எனக்கது பிடிக்கவில்லை.
ஆதவன் மீதும் அவரது செயலின் மீதும் அதீத கோபத்தில் எழுதியதால் ஒரு தவறு நேர்ந்துவிட்டது. "ஒரு மநுவிரோதி, மநுதர்ம கட்சியில் எப்படி இருக்கலாம்?" எனக் கேட்பதற்கு பதிலாக "ஒரு மநுவிரோதி, மநுவிரோத கட்சியில் எப்படி இருக்கலாம்"? என்று எனது முந்தைய பின்னூட்டத்தில் எழுதிவிட்டேன். தவறுக்கு வருந்துகிறேன்.
-மகேசன்.
தமிழ்நதி அவர்களுக்கு,
என்னைப்பற்றிய தங்கள் அவதூறுக்கு நான் மின்ன்ஞசலில் பதில் அனுப்பியுள்ளேன். அதை பிரசுரிக்ககுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
-ஆதவன் தீட்சண்யா
அன்பு நண்பர்களுக்கு,
உங்களோடு நிறையப் பேசவேண்டும். ஆனால், இப்போதிருக்கும் மனோநிலையில் பேசமுடியவில்லை. உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது சொல்லிவிடுவேனோ என்று அஞ்சுகிறேன். இனி வரும் பதிவுகள் வழியாக உங்களோடு உரையாடுவேன். தயவுசெய்து பொறுத்துக்கொள்ள வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
தோழர் மாதவராஜ்,
நீங்கள் கேட்டுக்கொண்டபடி 'செருப்பாலடிக்கும்'பின்னூட்டத்தைத் தூக்கிவிட்டேன். அதுவும் உங்கள் மனம் புண்படக்கூடாதே என்ற காரணத்திற்காக மட்டுமே.
ஆதவன் தீட்சண்யா எனக்கு மின்னஞ்சல் வழியாக ஒரு மடல் அனுப்பியிருக்கிறார். அதை எனது வலைப்பூவில் பிரசுரிக்க வேண்டுமெனக் கேட்டிருக்கிறார். 'என்னைப் பற்றிய தங்கள் அவதூறுக்குப் பதில்'என்று வந்திருக்கும் அந்தக் கடிதம் முழுவதும் அவதூறாகவே இருக்கிறது. அதை எனது வலைப்பூவில் பிரசுரித்தால் நான் அதற்கு மறுப்பு எழுதவேண்டும். நான் எழுதினால் அவர் தொடர்ந்து எழுதுவார். ஆகவே இது தொடர்சங்கிலி விளையாட்டாகவே போய்க்கொண்டிருக்கும்.
அவர் எழுதிய கடிதம் 'கீற்று'இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படவிருக்கிறது. www.keetru.com என்பது அந்த இணையத்தளத்தின் முகவரி. இன்று அல்லது நாளை, என்னைப் பற்றி ஆதவன் தீட்சண்யாவால் எழுதப்பட்டிருக்கும் அவதூறு உங்களுக்கு வாசிக்கக் கிடைக்கும்.
ஆதவன் தீட்சண்யாவுக்கு,
உங்கள் கடிதத்தை வாசித்தேன். அதெப்படி நீங்களும் ஷோபா சக்தியும் தனிப்பட்ட தாக்குதல் விடயத்திலும் ஒன்றுபோலவே இருக்கிறீர்கள் என்று நினைத்து வியந்தேன்.
உங்கள் கடிதத்தை நான் எனது வலைப்பூவில் பிரசுரித்தால், நிச்சயமாக அதற்கு நான் பதில் எழுதவே செய்வேன். எனது இயல்பு அப்படி. பிறகு நீங்களும் பதில் எழுதுவீர்கள். இது இப்படியே தொடர்விளையாட்டாக நீளும். எனக்கு வேறு பணிகள் இருக்கின்றன. உங்களுக்கு இஷ்டமெனில் நீங்கள் விரும்பிய வலைத்தளங்களில் உங்கள் கருத்துக்களைப் பிரசுரிக்கலாம்.
அந்தக் கடிதத்தைப் பற்றி உங்களிடம் சில வார்த்தைகள் சொல்லவேண்டியிருக்கிறது. உங்கள் உண்மை முகம் மற்றவர்களுக்குத் தெரிந்துபோய்விட்டதே என்ற கோபத்தில் என்மீது சேற்றை வாரியிறைத்திருக்கிறீர்கள்.
"ஓரளவுக்குப் பதட்டம் தணிந்தால்கூடப் போதும். நான் ஊருக்குப் போய்விடுவேன்"என்று கீற்று.காம் இல் சொல்லியிருந்தது நான்தான். அங்கு பதட்டம் தணியவுமில்லை. நான் போகவுமில்லை. அதையொரு கிண்டலாகச் சொல்வதற்கு ஒரு குரூர மனோநிலை வேண்டும். உங்களுக்கு அது வாய்த்திருக்கிறது. வாழ்த்துக்கள். ஆனால், அங்கு பிரச்சனை கொஞ்சம் தணிந்தால்கூட நான் போவேன் என்பதை நான் உங்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை. நான் அங்குதான் போய் இருக்க நினைத்திருந்தேன். ஆனால், உங்கள் தனிமனிதத் தாக்குதலைப் பார்த்தபிறகு என்ன நம்பிக்கையில் அங்கு போவது என்று இப்போது யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
தேவேந்திர பூபதியை எதற்காக இங்கு தேவையில்லாமல் இழுத்திருக்கிறீர்கள்? நான் முன்வைத்த உங்கள்மீதான விமர்சனத்துக்கு (அது கருத்துரீதியானது)நீங்கள் பதிலளிக்கும் முறை இதுதானா? தனிப்பட்ட முரண்களைச் செருகுவதன் வழியாக உங்கள் வாதத்திற்கு வலுச்சேர்க்கிறீர்களா? அப்படியெல்லாம் சேர்ப்பதன் வழியாக ஒரு நீளமான கடிதத்தை எழுதி என்னைப் பழிவாங்கிய திருப்தியை அடைந்துவிடலாம் என்று நினைத்தீர்களா? கேவலமாக இருக்கிறது. தனிப்பட்ட விடயங்களை ஒரு பொதுவிசயத்திற்கு 'உப்பு, உறைப்பு, புளிப்பு'சேர்க்க அழைத்திருப்பது.
ஆதவன் தீட்சண்யா,
ஒரே பின்னூட்டமாகப் போடமுடியவில்லை. தொடர்கிறேன்.
நீங்கள் என்ன பேசினீர்கள் என்பதைப் பற்றி நான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் விளக்கவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், உங்கள் பேச்சை அங்கே கூடியிருந்த அத்தனை பேரும் கேட்டுக்கொண்டிருந்தார்கள். சகபதிவர்களான வடகரைவேலன், முத்துவேல், லூஸ்பையன், கார்த்திகைப்பாண்டியன் உட்பட என்று நான் நினைக்கிறேன். நீங்கள் அந்தக் கருத்துப்படப் பேசவில்லை என்றால், 'உங்களுக்காக நாங்கள் ஏன் குரல்கொடுக்க வேண்டும்?'என்று பேசவில்லை என்றால், லேனாகுமாரும், ரி.கண்ணனும் எதற்காக எழுந்திருந்து வந்து அப்படியொரு கருத்தைச் சொன்னார்கள்? எதற்காக பேராசிரியர் அரசு உங்களுக்கெதிராகப் பேசவேண்டும்? அந்தக் கூட்டத்தில் உங்களுக்கு ஆதரவாக ஒரு குரலேனும் எழுந்ததா?
ஆம். வீடியோ பதிவு இருக்கிறது. அதை சில தினங்களில் நான் பெற்றுவிடுவேன். அப்போது எல்லாம் தெரிந்துவிடும். (நீங்கள் குறுக்கிட்டு எதிர்ப்பணி ஆற்றாமல் இருந்தால்)
சரி. "எங்களுக்கே ஆயிரம் பிரச்சனைகள் இருக்கின்றன. உங்களுக்காக நான் ஏன் பேசவேண்டும், எழுதவேண்டும்"என்று நீங்கள் சொல்லவில்லை என்று ஒரு பேச்சுக்காக (நிச்சயமாக பேச்சுக்காகத்தான்) சொன்னாலும், ஆனந்தவிகடனிலும் அதே தொனிப்பட பேட்டி கொடுத்திருந்தீர்களே... அதை எப்படிப் புரட்டிப்போடப்போகிறீர்கள்?
நான் கனடாவில் வாழாமல் இங்கே வாழ்வதைப் பற்றியும் யாராவது கேள்வி எழுப்பலாம் என்று சொல்லியிருக்கிறீர்கள். (உண்மையில் அதையெல்லாம் ஏன் இங்கு இழுக்கிறீர்கள் என்று எனக்குப் புரியத்தானில்லை) நான் இங்கு வாழும் காரணத்தை அந்த யாரோ ஒருவர் கேட்பாரேயாகில் நான் சொல்லிவிட்டுப் போகிறேன். உங்களையும் யாராவது "நீ ஏன் தொலைபேசித் திணைக்களத்தில் வேலை செய்கிறாய்?" என்று கேட்டாலும் கேட்பார்கள். பதிலோடு காத்திருங்கள்.:)
'ஆதவன் என்னை நாட்டைவிட்டுப் போகச்சொல்கிறான்'என்று நிச்சயமாக மூக்குச் சிந்தி எழுதமாட்டேன். நீங்கள் நினைக்கும் பெண்ணல்ல நான்; உங்களைப் போன்றவர்களின் சலசலப்புக்கு அஞ்சி ஓடுவதற்கு.
நான் ஈழத்தில் வாழ்ந்தவரை முஸ்லிமையும், மலையகத்தாரையும் புறக்கணித்ததில்லை. எனது முஸ்லிம் தோழர்களைக் கேட்டால் அதைப்பற்றி உங்களுக்கு விளக்கமாகச் சொல்வார்கள். 'சிங்களவன் பகையாளி'என்றுகூட நான் எழுதியதில்லை. பேரினவாத அரசாங்கத்தின் மீதுதான் எங்கள் கோபமெல்லாம்.
இவ்வளவு பதில் எழுதியதே என் நேரத்தைத் தின்றிருக்கிறது. நிச்சயமாக இனி உங்களுக்கு நான் ஒரு எதிர்வினையும் ஆற்றமாட்டேன்.
இறுதியில் ஒன்று. கருத்துக்களால் மோதமுடியாமல், தனிப்பட்ட தாக்குதல்களைக் கையிலெடுப்பதிலிருந்து உங்களை இனியாகிலும் திருத்திக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
உங்களைப் பார்த்துப் புன்னகைக்கும் அளவு சூழல் நேராது. ஏனென்றால், நான் உங்களைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களைத் தவிர்த்துக்கொள்வேன். உதட்டை அகல விரித்து பல்லைக் காட்டுவதற்குப் பெயர் புன்னகையன்று.
கீற்றுவில் உங்கள் கடிதம் வெளிவந்தால், எனது பக்கத்தில் அதற்கு இணைப்புச்சுட்டி கொடுக்கிறேன்.
நன்றி
//சகபதிவர்களான வடகரைவேலன், முத்துவேல், லூஸ்பையன், கார்த்திகைப்பாண்டியன் உட்பட என்று நான் நினைக்கிறேன். //
லூஸுன்னு முடிவே பண்ணிட்டிங்களா!
நான் ”வால்பையனு”ங்க!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
சரி சரி வால்பையன் குறைநினைத்துக்கொள்ளாதீர்கள். நீங்கள் லூஸ்பையன் அல்ல. இனி அந்தப் பின்னூட்டத்தை வாசிக்கிறவர்கள் வால்பையன் என்றே வாசிக்கும்படியாகக் கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு மேலதிக சாட்சியம். கார்த்திகைப்பாண்டியனின் இந்தப் பதிவையும் படியுங்கள்.
http://ponniyinselvan-mkp.blogspot.com/2009/07/blog-post.html
ஆதவன்,
உங்கள் தனிப்பட்ட தாக்குதலுக்கு மேலுமொன்றை உதாரணமாகச் சுட்டமுடியும். "எனக்குத் தெரியும். இலங்கை முழவதும் ஏ.சி. செய்யப்பட்டாலும்கூட நீங்கள் நாடு திரும்பமாட்டீர்கள் என்று." என்று சொல்லியிருந்தீர்கள். உங்களது இந்த வன்மம் எங்கிருந்து, எதன் அடிப்படையில் பிறக்கிறது என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது. விடுதலைப் புலிகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நான் அங்கு திரும்பிச் சென்று வாழத்தான் வாழ்வேன். வாழ்ந்தேன். எனது சொந்தக் கதைகளை இணையத்தில் பேசக்கூடாதென்பதற்காக சில விடயங்களை நான் இங்கு சொல்ல விரும்பவில்லை. கனடாவில் பதினொரு ஆண்டுகள் வாழ்ந்தபோதிலும் அந்த மண் ஒட்டாமல் 2003ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பிப்போய் 2006வரை அங்கு வாழ்ந்த கதையை என் நண்பர்கள் அறிவார்கள். வீடு கட்டும்வரை ஒழுங்காகப் புரண்டு தூங்கமுடியாத எட்டுக்கு எட்டு அடி கொட்டிலில் (குடிசையில்) வாழ்ந்திருந்தது நீங்களல்ல. நான்தான். அந்தக் கொட்டிலில் நாங்கள் ஏ.சி.போட்டிருக்கவில்லை. எனது தாய்மண் மீதான ஒட்டுதல்தான் என்னை அங்கு அழைத்துச்சென்றது.
மேலும், ஒருவர் ஏ.சி.யில் இருப்பதும் வெட்டவெளியில் படுப்பதும் அவரவர் தெரிவு. முன்பே சொன்னதுமாதிரி 'கருத்தால் அடிக்க வக்கற்ற நீங்கள், கால்களால் அடிக்காதீர்கள்.' உண்மையில் நீங்கள் பெரிய மார்க்ஸியவாதிதான். அதில் எனக்கு இப்போது ஒரு துளியும் சந்தேகமேயில்லை.
ஆதவன் அவரது புதுவிசையில் தமிழ்நதியின் ‘ஆதவன் தந்த அதிர்ச்சி’
கட்டுரையை பிரசுரிப்பாரா...... பதில் இல்லை என்றால்,,, அவரது கட்டுரையை பின் எப்படி தமிழ்நதி தன் வலைபூவில் வெளியிடுவார்
'யாரைக் காட்டுவீர்கள்?"ஆதவன் தீட்சண்யா
"இந்தியத் தமிழர்களை தோட்டக்கூலிகள், கள்ளத்தோணிகள் என்று இலங்கைத்தமிழர்கள் இன்றளவும் ஏளனம் பேசுவதைக் கண்டித்த ஈழப்படைப்பாளிகள் என்று யாரைக் காட்டுவீர்கள்?
இந்தியாவிலிருந்து பிடித்து செல்லப்பட்ட இந்த மலையகத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தலித்துகள் என்பதால் அவர்களை தமிழர்கள் என்று இனரீதியாக இணைத்துக்கொள்ள யாழ்ப்பாண வெள்ளாள மனநிலை இடம் கொடுக்கவில்லை என்பதைக் கண்டித்து எழுதிய ஈழப்படைப்பாளிகள் உண்டா?"ஆதவன் தீட்சண்யா
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3335:2008-08-27-21-10-04&catid=145:rayakaran&Itemid=109
13.மலையக மக்களின் இரத்த அட்டையைப் போல் உறிஞ்சி வாழ்ந்த, வாழ்கின்ற தேசியங்கள்
14.மலையக மக்களின் இரத்தத்தில் உருவான உழைப்பும், மூலதனமும்
15.ஏன் சிங்கள மக்களை பிரிட்டிசார் பயன்படுத்தமுடியவில்லை.
16.மலையக மக்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட நிகழ்வு
17.மலையக மக்களை நாடு கடத்திய இனவாதிகள்
18.மலையக மக்களின் வாழ்விடங்களையே சூறையாடிய இனவாதிகள்
19.இனவாத அரசியலும் மலையக மக்களின் இழிநிலையும்
"தமிழ்பேசும் முஸ்லிம்கள் அனைவரையும் ஈழ விரோதிகள் என்று முத்திரை குத்தி 48 மணி நேர கெடு விதித்து 500 ரூபாய் பணம் அல்லது அதற்கீடான பொருளுடன் வெளியேற்றிய புலிகளின் இனச்சுத்திகரிப்பைக் கண்டித்த படைப்பாளி எவரேனும் உண்டா ஈழத்தில்?" ஆதவன் தீட்சண்யா
விடுதலைப்புலிகள் தவறுகளை உணர்ந்து திருந்தி விட்டார்கள்!?
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4843:2009-01-23-14-25-44&catid=277:2009
தேசிய இனப்பிரச்சனையும் முஸ்லிம் மக்களும்
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4437:2008-11-21-12-18-22&catid=244:-4-199*
திருகோணமலை முழுவதும் நடந்தது இனவழிப்பே ஒழிய யுத்தமல்ல
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=354:2008-04-13-20-34-03&catid=180:2006
புலிகள் மூதூரில் நடத்தியது என்ன?
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=393:2008-04-13-20-16-51&catid=180:2006
முஸ்லீம் மக்கள் மேல் தமிழராகிய நாம், அதிகாரத்தைச் செலுத்த முடியுமா?
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1810:2008-06-02-21-02-43&catid=72:0406
முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறையும், அதற்கு அடிப்படை புலிகளின் வரி விதிப்பும்!
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1762:2008-05-31-21-21-45&catid=72:0406
மதிப்பிற்குரிய தமிழ்நதி அவர்களுக்கு..
ஆதவன் தீட்சண்யாவை நாம் இந்த விஷயத்தில் பொருட்படுத்தவே தேவையில்லை. இழவு வீட்டில் யாரும் இல்லை என்று ஊர்ஜிதம் செய்து கொண்டு நேற்றைய வன்மத்தோடு இன்று எச்சில் துப்பி விட்டு செல்லும் வக்கிரக்காரர்கள் இவர்கள்.சம காலத்து மனித அவலத்தின் ஊடாக இவர்களுக்கு வன்மம் கொள்ள முடிகிறதென்றால்.. இவர்களுக்குள் உள்ள படைப்பு மனம் குறித்த சந்தேகம் எழுகிறது.விடுதலைப் புலிகள் அமைப்பின் மேல் உள்ள வன்மம் சோபா சக்தி உள்ளிட்ட இவர்களைப் போன்ற ஆட்களுக்கு வன்னி மக்களின் துயரத்தின் மீது இப்போது கவிழ்ந்திருக்கிறது.என்னைப் போன்ற தாயகத் தமிழனுக்கு ஆறாத வடுவாய்,மாறாத குற்ற உணர்ச்சியாய் ஈழ மக்களின் துயரம் இதயத்தில் உறுத்திக் கொண்டே இருக்கிறது. தினம் தோறும் மனித வாழ்வில் நுகரப்படும் சாதாரண சலுகைகளும் , இன்ப உணர்வுகளும் கூட இச்சமயத்தில் நம்மை இயல்பிற்கு மீறிய குற்ற உணர்ச்சியில் வீழ்த்துகிறது. ஆனால் ஆதவன் தீட்சண்யாவும், சோபா சக்தியும் இந்த தருணத்தை கொண்டாடி மகிழ்ந்து..குறை சொல்லி ...வன்மம் பாராட்டுகிறார்கள் என்றால் நம் எதிரி சிங்கள பேரினவாதம் மட்டுமல்ல என்பதை நாம் உணர்கிறோம். வலி சுமப்பதை விட இந்த வக்கிரக்காரர்களின் வன்மத்தை சுமப்பது அவ்வளவு எளிதல்ல.. ஆனால் மீண்டெழுதல் என்பது சவால்கள் நிறைந்ததுதான். இணைந்தே எதிர் கொள்ளலாம்
தோழமையுடன்
மணி.செந்தில்
கும்பகோணம்
முஸ்லிம் மக்கள் வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளால் இரவிரவாக விரட்டியடிக்கப்பட்டார்கள். நீங்கள் அதைக் கேட்டீர்களா?
உண்மையில் இந்த கேள்விக்கான விடையை பிரபாகரன் உயிருடன் இருக்கும்போதும் தரவில்லை செத்தாப்பிறகும் யாரும் தருகிறார்களில்லை என்ன செய்வோம்
யாரிடம் போய் சொல்வோம்?
முசுலீம் மக்களை ஏன் விரட்டினார்கள் என்ற காரணத்தை அப்துல்லா தனது வலைப்பூவிலேனும் எழுதினால் நாங்கள் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்தானே
இன்னும் அதிர்சியிலிருந்து மீளமுடியாமல் முகமூடிகளின் பின்பிருந்த x முகங்கள் யாருடையதிண்டும் அறியவேண்டியதில்லை
சோபா சக்தியின் குரல் குறித்து ஆராய்ச்சி செய்யவேண்டியதில்லை அதுபோலவே ஆதவனுடையதும்
இளைய அப்துல்லாஹ், கூடவே ஏன் சிங்களவன் தமிழரை அடிக்க வரும்போது தமிழர் கூடவே இருந்து சிங்களவன் வரும் போது தலையில் தொப்பியை மாட்டிக் கொண்டு அங்கிருந்து தப்பித்தது, ஆர்மிக்குத் தகவல் சொல்வது, புலிகள் உண்டாக முதலே ஜிகாத் அது இது என்று புத்தளம், மட்டக்களப்பு, மன்னார் பகுதிகளில் நோட்டீசுகள் அடித்து தேர்தல் காலங்களில் கொட்டம் புரிந்த மர்மம், தமிழர் போராட்டங்களைக் காட்டிக் கொடுத்த காரணம் போன்றவற்றையும் விவரிக்கவும்!
கிழக்கிலிருந்து உங்கள் ஒட்டுக்குழுக்களால் என் குடும்பம் சிதைக்கப்பட்டு விரட்டப் பட்ட கிராமவாசி நான், அதற்கு உங்கள் முஸ்லீம் அமைச்சர்களும் அவர்களது கைக்கூலிக் புலனாய்வுக் குழுக்களும் பதிலுரைப்பார்களா, இந்த இலட்சணத்தில் நீங்கள் பிரபாகரனிடம் பதில் கேட்கிறீர்கள்..
நீங்களும் நானும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருப்பது எங்கே கொண்டு போய் நிறுத்தும். அத்தீவில் நீங்களும், நானும் உரிமையுடன், விடுதலையுடன் வாழப் போகும் எதிர்காலம் பற்றியும் அதற்கு நீங்களும் நானும் என்ன செய்யலாம் எனப் பேசுவதும் தன் உருப்படியானது இக்காலத்தில்..
அவர்கள் தவறுகள் நடந்ததை ஒத்துக் கொண்டு அதற்காக மன்னிப்பும் கேட்டார்கள். மீள்குடியேற்றத்தையும் வரவேற்றார்கள், நீங்கள் தாங்கிப் பிடிக்கும் சிங்கள அரசு தான் அதைச் செயலாக்கப் பின்வாங்கியது.
vaangum kasuku kathum tamillarangam vidungal. ivarkal eppavum ithu mattum thaan solluvarkal. tamilmanathil thalaipum muthal variyum matuume pulikal saarpaai eluthi pilaipu nadathukum kevalamaanvarkal. tamillakaluku nadahta alivukal pattri ivarkal ehtuvum pesamattarkal. kaaranam they are paid for it.
தமிழ்நதிஎங்கோ தவறு நேர்ந்திருக்கிறது ஆதவனிடம் நேர்மையிருக்கிறது வெற்று கூச்சலில்லை அது
அவருடைய ஆதங்கங்களை பேச எல்லாஉரிமையுமிருக்கிறது ஆனால் அவர் பேசியது திரிக்கப்பட்டிருக்கிறது அவர் மீது பாய்ந்த்போதுகிடைத்த கரித்துண்டுகள் மிகசுவையாக இருக்கலாம் அதை நீங்கள் பங்கும் போடலாம்.
அவர் பேசவேண்டியவை நிறைய ஆனால் குறைவாக பேசவேண்டிய நிலையில் ஈழநிலை அவருடைய பார்வை இன்னும் கூர்மையாகவும் போக வாய்ப்பளித்தமைக்கு நன்றி
ஆதவன் (எ) ரவிச்சந்திரன் என் நண்பர். யார் மீதும் காழ்ப்புணர்வு அவருக்குக் கிடையாது. விவாதங்களில் இருக்கும் ஆர்வத்தின் காரணமாக காரசாரமாகப் பேசுகிறவர். முதல் பரிச்சயத்தில் அவர் மேல் இருக்கும் முள் மட்டுமே தெரியும். உள்ளே பலாச்சுளை இருப்பது புரிய சில காலம் பழக வேண்டி இருக்கும்.
Dear Tamilnadhi,
I too have/had the same question but not to the writers, but to the whole tamil people, and to those who have the power influence and knowledge about the miseries of our own tamil brothers and sisters. I know that all tamil people are my brothers and sisters.
I am a Muslim and it does not stop me to tell that I never support my fellow Tamil people being tortured, rapted and killed. I have been always thinking and worrying about them. But i accept that i was not able to or try to do anything. May be this is a starting point. I love all people of the world and especially the Tamil people, who practice a rich and humble culture.
What Adhavan Theetchanya told is completely wrong and un-acceptable. It is foolish and is ignorable.
Thanks,
Thoufiq
Post a Comment