வன்னியில் விடுதலைப் புலிகளின் பாசிச, ஹிட்லரிச, நாசிச, மோசிச ஆட்சியின் கீழ் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருந்த மக்களை கருணையுள்ளத்தோடு ‘மீட்ட’இலங்கை அரசாங்கம், அவர்களை எத்தகைய வசதிகளோடு வாழ்வாங்கு வாழவைத்துக்கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் புகைப்படங்கள் இலங்கையிலிருந்து ஒரு நண்பரால் மின்னஞ்சலில் அனுப்பப்பட்டிருக்கின்றன. என்னைப்போலவே வேறு சில நண்பர்களுக்கும் அவை அனுப்பப்பட்டிருப்பதால், அவர்களும் தங்களது இணையத்தளங்களில் அப்புகைப்படங்களை வெளியிட்டிருப்பார்கள். சற்றுமுன்னர்தான் tamilcircle.net இல் அவற்றைப் பார்த்தேன். அந்தக் குறிப்பிட்ட நண்பரால் தனது இணையத்தளத்தில் இப்படங்களைப் பிரசுரிக்கமுடியாது. அவரைத் தேடிப்பிடித்து சங்காரம் செய்துவிடுவார்கள். வவுனியாவிலுள்ள முகாம்களில் மக்கள் புழங்கும் இடங்களில் நெளியும் புழுக்களுக்கு இணையானதே இலங்கை அரசாங்கத்தின் ஜனநாயகமும் என்பது உலகறிந்தது. மழைநாட்களில் வசதிகள் ஏதுமற்ற அந்த முகாம்களில் மக்கள் படும் துயரங்களை இந்தப் படங்கள் விளக்குகின்றன. இதுதானையா இலங்கையின் புழுநரகம்!
8.15.2009
Tweet | |||||
Subscribe to:
Post Comments (Atom)
12 comments:
குண்டுபோட்டுக் கொல்லும் திட்டத்திலிருந்து எப்படியோ தப்பித்தவர்களை முகாம் போட்டுக் கொன்றுகொண்டிருக்கிறார்கள். இதைத்தான் எங்கள் முதல்வர்கூட "சுமூக நிலை" நிலவுவதாகச் சொல்லி மனம் நிறைந்திருக்கிறார்.
உங்களிடமிருந்து இலங்கை அரசை வெளிச்சமிட்டுக்காட்டும், மக்களின் துயரை உலகுக்குக் கொண்டுவரும் இப்படியான இடுகைகளைத்தான் எதிர்பார்க்கிறேன்.
இதே மக்களை புலிகள் கேடயமாக பாவித்த போது புகைபடம் போட மறந்தது ஏனோ?
செல்வநாயகி,
முதல்வருக்கு எப்போதும் எல்லாம் ‘சுமுகநிலை’தான். அதிகாரங்களிடமிருந்து நாம் வேறெதைத்தான் எதிர்பார்க்க இயலும்? விரக்தி நீடித்திருக்கிறது. கொஞ்சம் மனப்புழுக்கம் ஓயட்டுமென்றிருந்தேன். உண்மையிலேயே நாங்கள் இப்போதுதான் முற்றிலும் நாடிழந்தவர்களாகியிருக்கிறோம். எதையும் பேசும் மனநிலை இல்லாதிருக்கிறது.
வாங்க அனானி,
அதெப்படி உங்களுக்கு மட்டும் இப்படி மூக்கில் வியர்த்துவிடுகிறது? நீங்கள் என்னுடைய தீவிர வாசகராயிருப்பீர்கள் போல… அடிக்கடி வந்து ‘அடித்துவிட்டு’ப் போகிறீர்கள். தண்ணீருக்கு மேலால் துள்ளும் மீனை லபக்கென்று கவ்விக்கொள்ளும் கொக்கைப்போல நான் எப்போது இலங்கை அரசாங்கத்தைக் குறைகூறிப் பதிவுபோட்டாலும் வந்து வாலாட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள். உங்களைப்போன்ற அதிதீவிர விசுவாசிகளைக் காண்பதரிது. விடுதலைப் புலிகள் மக்களைக் கொன்ற புகைப்படங்கள் எனக்குக் கிடைக்கவில்லை. உங்களுக்கும் கிடைத்திராது என்றே நம்புகிறேன். எது எப்படி இருந்தபோதிலும், உங்கள் ‘நக்கீர’க் குணத்தைப் பாராட்டத்தான் வேண்டும்.
இந்தப் படங்களைக் காணும் போது மக்களின் அவல நிலை மட்டுமல்லாது அவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய பேரினவாதத்தின் கொடூர முகமும் தெரிகின்றது.
நண்பர்களிடமும் பகிர்ந்து கொண்டுள்ளேன்...
தமிழ்நதி தவறாக எடுத்துகொள்ள வேண்டாம். எல்லா ஊரிலுமே மழை பெய்தால் இதுபோல தண்ணீர் தேங்கத்தான் செய்யும். ஒருவேளை விடுதலைபுலிகள் ஆட்சி புரிந்தால் மழையே பெய்யாதா. உங்களை மாதிரி பங்களாவாசிகளுக்கு வேண்டுமானால் இந்த படங்களில் காணப்படும் சூழல் புழுநாயகமாக காணப்படலாம். இதைவிட மோசமான சூழலில் இலங்கையிலும், இந்தியாவிலும் நாட்டின் ஜனத்தொகையில் எண்பது சதவிகிதத்திற்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
நன்றி பதி
அனானி அதிசூரரே,
இவ்வளவு உண்மைகளைப் பேசும் நீங்கள் ஏன் உங்கள் பெயரில் வெளியில் வந்து கதைக்கக்கூடாது? இலங்கை அரசாங்கத்தைப் போல நாங்கள் தேடிப்பிடித்து உங்களை அடிக்கப்போகிறோமா? சிறையில் அடைக்கப்போகிறோமா? எதற்காக அஞ்சுகிறீர்கள்? ஆக, நீங்கள் சொல்கிற நியாயங்களில் உங்களுக்கே நம்பிக்கை இல்லை. அப்படித்தானே?
உங்கள் அறியாமையை நினைத்துப் பரிதாபப்படத்தான் முடிகிறது. ஏற்கெனவே ஏழ்மையில் இருக்கும் மனிதர்களையும், போரில் உறவுகள் கொல்லப்பட்டு, அங்கங்கள் சிதைக்கப்பட்டு, வீடுகளும் உடமைகளும் அழிக்கப்பட்டு பலவந்தமாகத் தமது வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களையும் ஒன்றெனப் பார்க்கிறீர்கள். அவர்கள் தத்தமது வீடுகளில் இருந்தால் மழையென்ன வெள்ளமென்ன… நாங்கள் ஏன் அதைப்பற்றிக் கதைக்கப்போகிறோம்? அது எல்லோருக்குமான பொதுநியதி. இலங்கையிலும் இந்தியாவிலும் ஏழைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். இங்கு ஏழ்மையல்ல பிரச்சனை; தனிமனித உரிமைகள்தான் பிரச்சனை. தான் நினைத்தபடி வாழ்வதற்கான உரிமையைத் தட்டிப்பறித்ததுதான் பிரச்சனை. குடிசையில் இருக்கும்போது பெய்யும் மழையும் அகதி முகாமில் இருக்கும்போது பெய்யும் மழையும் வெள்ளமும் ஒன்றல்ல. பைத்தியக்காரத்தனமான உங்கள் பின்னூட்டங்களை இனி நான் பிரசுரிப்பதாக இல்லை.
நான் பங்களாவாசியா? ஏனையா உங்களுக்கெல்லாம் எரிகிறது? நான் மிகுந்த ஏழ்மையிலிருந்து வந்தவள். எனது ஆரம்பகால சொந்தக்கதை சோகக்கதை சொல்ல இது இடமல்ல.
// எல்லா ஊரிலுமே மழை பெய்தால் இதுபோல தண்ணீர் தேங்கத்தான் செய்யும். ஒருவேளை விடுதலைபுலிகள் ஆட்சி புரிந்தால் மழையே பெய்யாதா. /
அடங்கொண்ணியா, என்ன ஒரு அறிவு, நடுநிலைச் சிந்தனை கேட்டுப் புல்லரிச்சுப் போயிடுது! ணா எப்படீங்கண்ணா இப்படியெல்லாம் சிந்திக்கறீங்க எந்த விடுதில அறையெடுத்து உக்காந்து மல்லாக்கப் பார்த்து சிந்தித்து இந்த உயரிய கருத்தாக்கத்த எல்லாம் எடுத்து வுடுறீங்க. சொன்னீங்கணா நாங்களும் அங்க அறையெடுத்து அரசமரத்தடில ஞானம் பெற்ற புத்தரைப் போல முக்தி அடையலாம் இல்ல உங்கள மாதிரி அறிவப் பெறலாம்.
தெருவுல, சேரில வேறெங்கெணும் வாழும் அடித்தட்டு மக்கள் கம்பி வேலி போட்ட வளாகத்துல இல்லீங்கண்ணா.. ஒரு வேள வெள்ளம் பெரிசாச்சுனா அவிங்க கோயில் குளத்துல,பள்ளி எங்கணும் போயி ஒண்ணு ரெண்டு நாளு தங்கிக்கலாம்ணா, இல்லன்னா மேடான தெருவுக்கு வந்து நின்னுக்கலாம். இங்க கம்பி வேலியத் தாண்டினா வேட்டுன்னு நேத்து தானுங்கண்ணா அறிவிச்சு புட்டாங்க.. இதெல்லாம் உங்களுக்கு எங்க தெர்யப் போவுது.. கட்டாயம் ஆடுமாடுகள் போல கம்பியிட்ட பட்டில சுத்த வர காவலுக்குள்ள பயத்தோட சோறு தண்ணி இல்லாம, கக்கூசுக்குப் போக முடியாம இருக்கறதுக்கும் சேரில வெள்ளம் வாறதுக்கும் கொஞ்சம் வித்தியாசம் இருங்கண்ணோவ்... ஆனாலும் பாருங்க, நானும் புலிக கட்டுப்பாட்டுப் பகுதில இருந்து வந்தவன் தானுங்கோண்ணா.. மழ வந்து வெள்ளம் ஆனா.. புலிகள் வண்டிய அனுப்பிச்சு ஒலிபெருக்கியோட முன்கூட்டியே வெளியேறச் சொல்ருவாங்கணா, அருகெல உள்ள பாடசாலைப் பக்கம் தங்க ஏற்பாடு நடக்கும். உடனடியா சொகாதாரப் பிரிவு செயல்ல எறங்கும். நோய் பரவாது மருந்துங்கள் அடிக்கப் படும். வந்த மக்களுக்கு உடனடி உணவுகள் வழங்கப் படும். தண்ணிய வெளியேத்த மாற்றுகள் நடக்கும்.. இப்படித்தானுங்க அங்க நடக்கும், இருந்ததால சொல்றேன். போதாக்கொறைக்கி வானிலை , சொனாமி மையம் வேற ஆரம்பிசாங்கணா.. எல்லாம் நடந்து முடிஞ்ச கத.
ஆனாலும் இப்படி எளிதாக் கூட சிந்திச்சுப் பார்க்காம, உடனயே காண்டுல பெனாத்தியிருக்கீங்கனா, அதுல தெரிறது உங்க காழ்ப்புணர்வு தானுங்கோ!
:(
கொட்டும் மழையில் முகாம்களில் தவிக்கும் ஒரு லட்சம் தமிழர்கள் என உரக்கக்குரல் அறிவித்து பின்னாடி 3 முப்பெரும் தலைவர்கள் சிரித்துக்கொண்டே பேசுவதை காட்டுகிறார்கள் சில டி.வி.களில். ஏனோ??? அவர்கள் இது போன்ற புகைப்படங்களை பார்த்திராதவர்களா இல்லை அவலங்களை கேட்டறியாதவர்களா ?????????
புலிகள் ஆட்சியில் மழை பெய்யவில்லையா என்று கேட்டுப் புல்லரிக்க வைத்த மண்டை நிறைய மூளையும் மனதெல்லாம் ஈரமும் கொண்ட மாமேதையே, கீழ்க்கண்டவற்றையும் படித்துவிட்டு உங்கள் கருத்து முத்துகளை உதிருங்கள்:
"IDPs swimming in human excreta" - Sunday Leader, Sri Lanka
http://www.thesundayleader.lk/20090816/NEWS.HTM
IDPs at drowning point - Lakbima News Sri Lanka
"http://www.lakbimanews.lk/news/laknew1.htm"
‘Sri Lankan refugee camps worst in history’
Former Attorney General and Solicitor General of Sri Lanka: Chitta Ranjan de Silva
http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=%E2%80%98Sri+Lankan+refugee+camps+worst+in+history%E2%80%99&artid=OPjofvJL0dc=&SectionID=vBlkz7JCFvA=&MainSectionID=fyV9T2jIa4A=&SectionName=EL7znOtxBM3qzgMyXZKtxw==&SEO=
"Amnesty calls for detention camps to be unlocked"
'The largest camp - Menik Farm - is horrendous. It holds about 160,000 people in an area smaller than one square kilometre. That's like the entire population of Bournemouth having to live, eat and sleep in an area the size of Wembley Stadium.
http://www.amnesty.org.uk/news_details.asp?NewsID=18368
Catholic leaders urge Sri Lankan Tamils' release
http://news.aol.com/article/catholic-leaders-urge-sri-lankan-tamils/619676
மயிலே! மயிலே! இறகு போடு என்றால் போடாது! நான் சிங்கள பாசிட்டுகளுக்கு எதிராக துப்பாக்கி ஏந்த தயார்..என்னோடு என்னால் முடிந்தவரை 120 தோழர்களை சேர்த்த்து இருக்கிறேன்..தாங்களும் எத்தனையோ ஒன்றரை லட்சத்திற்கும் மேலான ஈழ தமிழர்கள் இங்கு தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள் அவர்களை ஒருங்கிணையுங்கள்.. எம்மோடு வரசெய்யுங்கள்..ஆனால் அவர்கள் பேசுவதுதான் எனக்கு புரியவில்லை..
எபோதான் இந்த அவலநிலைக்கு முடிவோ தெரியவில்லை.....
இங்கிருக்கும் அயோக்கியர்கள் அங்கு என்றுமே நடக்காதவர்கள் போல் பேசுவது மிகவும் வேதனையைத் தருகிறது....
பாண்டியன் ; ஏன் அங்கு இருக்கும் தமிழன் ஆவது விட்டு விட்டுங்கள் இனி ஒரு போர் வேண்டாம் எங்கள முடியாது.அழிவது என்றால் அது இனொரு தமிழன் அகத்தான் இருக்கும் வேறு யாரும்இல்ல வேறு வழியை தேடனும், போர் முடிவாகாது ....... இப்படி மக்கள் அகதிமுகாமில் இருபதகு போரும் ஒரு காரணம்
Post a Comment