5.27.2009

ஈழவிடுதலையின் தோல்வியில் இணைந்த சாருவுக்கும், ஜெயமோகனுக்கும்…


‘சுயமோகி’ என்று ஜெயமோகனை வர்ணித்த சாருவும், சாருவிடம் தொடர்ச்சியான ஒவ்வாமை கொண்டிருந்த ஜெயமோகனும் இணையும் புள்ளியாக, ஈழவிடுதலைப் போராட்டத்தின் தோல்வி அமைந்துவிட்டிருப்பதில் ஈழத்துக்காரியும் மேற்குறிப்பிடப்பட்டிருக்கிறவர்களின் வாசகியுமாகிய நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
முதலில் சாருவுக்கு,

“சதாம் ஒரு நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர். அந்தத் தேசத்தின் வலிமையான இராணுவமே அவர் கையில் இருந்தது. மக்கள் அவர் பக்கம். விதம் விதமான ஆயுதங்கள். இவ்வளவு இருந்தும் அமெரிக்காவை எதிர்க்க முடியவில்லை. ஒரு மண்குழிக்குள் பதுங்கி வாழ்ந்து, அமெரிக்கச் சிப்பாய்களிடம் சிக்கி, மரணதண்டனை விதிக்கப்பட்டுச் செத்தார். சதாம் உசேனுக்கு அந்த நிலை என்றால், ஒரு மிகச் சிறிய கெரில்லா இயக்கம் எப்படி சிறிலங்கா, இந்தியா, சீனா முதலிய பல நாடுகளின் இராணுவத்தைச் சமாளிக்க முடியும்? இப்படிப்பட்ட சூழலில் ஆயுதத்தைக் கையில் எடுப்பது தற்கொலைக்குச் சமம் அல்லவா?” என்று எழுதியிருக்கிறீர்கள்.

‘மிகச் சிறிய கெரில்லா இயக்கம்’என்று நீங்கள் சொல்வதை நான் மறுக்கிறேன். எண்ணிக்கையில் எதுவும் இல்லை என்பதை இவ்வளவு அறியப்பட்ட எழுத்தாளராகிய நீங்களும் அறிந்தே இருப்பீர்கள். மிகச் சிறிய கெரில்லா இயக்கத்தின் நெருக்குதல்கள் தாங்கமுடியாமல்தான் இந்திய இராணுவம் தோல்வியோடு திரும்பிவந்தது என்பதை நீங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வஞ்சத்தை, வன்மத்தை பதினெட்டு ஆண்டுகள் கழித்து அவர்கள் தீர்த்துக்கொண்டது வேறு விடயம்.
இத்தனை ஆண்டுகாலப் போருக்குப் பிறகும், இழப்புகளுக்குப் பிறகும் சிங்கள இனவாதிகளால் தமிழர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை நீங்கள் செய்திகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். அறிந்ததையே மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டிருக்க இயலாது.

உரிமைகளை இழந்து, இருப்பொன்றே பொருட்டு என்று வாழ்ந்திருப்பதே சரி என ஒரு எழுத்தாளர் சொல்வது எனக்கு நகைப்பளிக்கிறது. சமரசங்கள் செய்துகொள்வதும் சகிப்புத்தன்மையோடிருப்பதும் விட்டுக்கொடுப்பதும் இலக்கிய அரசியலுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படும் ஒரு மண்ணிற்கு அது எவ்விதத்தில் பொருந்தும்? அமெரிக்காவின் வலிமை தெரிந்தே அதை வியட்நாம் எதிர்த்துப்போராடியது. தென்னாபிரிக்கா எதிரியின் வலிமையை அறியாமல் போராடியது என்று உங்களால் சொல்லமுடியுமா?
“யாழ்ப்பாணம் ஆப்கானிஸ்தானைப் போல காட்சியளிக்கிறது. அங்கே தமிழர்கள் மீண்டும் 30 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது போல அமைதியாக வாழ ராஜபக்சே வழிவகுத்துக் கொடுக்கவேண்டும். இதற்கும் அவரை உலகநாடுகள் நிர்ப்பந்திக்கவேண்டும்”

நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்று முடிந்த நாள் 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதியாகும். அந்த நிறைவையொட்டிய கொண்டாட்டங்களின்போது இனவெறியர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட காடைத்தனத்தின்போது கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை ஒன்பது. அது நீங்கள் குறிப்பிடும் அதே யாழ்ப்பாணத்தில், அதே முப்பதாண்டுகளின் முன் நடந்த படுகொலைதான். நாடளாவிய ரீதியில் தமிழர்களுக்கெதிராக கலவரங்கள் வெடித்த ஆண்டுகளான 1956, 1958, 1971 இவைகூட முப்பதாண்டுகளுக்கு முற்பட்டவைதாம். 1981ஆம் ஆண்டு எங்களது உயிரினும் மேலாகப் போற்றப்பட்ட நூலகம் இனவாதிகளால் எரியூட்டப்பட்டு சாம்பரானது, நீங்கள் குறிப்பிடும் முப்பதாண்டுகளுக்கு ஈராண்டுகளே குறைவான காலகட்டத்தில்தான். ஆக, எங்களுக்கெதிரான இன அடக்குமுறைகளையும் படுகொலைகளையும் பொறுத்துக்கொண்டு வாழ நாங்கள் பழகிக்கொள்ளவேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். பேரினவாத ஆண்டைகளின் கீழ் அடிமைகளாக வாழ மறுப்பதை நீங்கள் தவறென்கிறீர்கள்.

நீங்கள் விரும்புவதே போல போராளிகள் இப்போது ஆயுதங்களை மௌனிக்கச் செய்திருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் சமாதானப் பேச்சாளர்கள் போர்க்களத்திலே ஆயுதங்களைக் கைவிட்டு வெள்ளைக்கொடியோடு சரணடையச் சென்றபோதுதான் இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். சரணடையச் சென்ற சமாதானப் பேச்சாளர்களையே எவ்வித அறங்களுமின்றிச் சுட்டுக்கொன்ற அரசு இனியாகிலும் நீதியோடு நடந்துகொள்ளும் என்று நீங்கள் எவ்விதம் எதிர்பார்க்கிறீர்கள்? அப்படித் தமிழர்களோடு அவர்கள் அதிகாரத்தைப் பகிர மறுக்கிறபோது, ‘ஆயுதங்களைக் கைவிட்டு அமைதி வழியில் போராட வேண்டும்’என்ற உங்கள் வார்த்தைகளை எங்கு கொண்டுபோய் வைத்துக்கொள்வீர்கள்?

“எங்களைப் பொறுத்தளவில் விடுதலைப் புலிகள் என்ற ஒரு அமைப்பே இனி இல்லை”என்று வெற்றியின் மமதையில் கூறிவரும் கோத்தபாய ராஜபக்சே, யாரைத் தமிழர்களின் பிரதிநிதிகளாக முன்னிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்போகிறார்? பேரினவாதத்திடம் விலைபோன கருணா, பிள்ளையான், டக்ளஸையா?
விடுதலைப் புலிகள் தோற்றபின், அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டும் நீங்களும் ஜெயமோகனும் இதுநாள்வரை இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் பேரழிவுகளைக் குறித்துப் பேசாதிருந்தது என்ன காரணத்தினால்? அதிகாரங்களுக்கு அஞ்சுகிறவர்கள், அதற்கு மறைமுகமாகத் துணைபோகிறவர்களுமாகிறார்கள். எனக்கும் இந்த விமர்சனம் பொருந்தும்.
‘காந்திய வழியைத் தேர்வதே நல்லது’என்று நீங்கள், ஜெயமோகன் குறிப்பிட்டிருக்கிறீர்கள். தமது சகோதரர்கள் ஈழத்தில் படுகொலை செய்யப்படுகிறார்களே என்று இங்கே காந்திய வழியில் நடத்தப்பட்ட ஊர்வலங்களுக்கும், உண்ணாவிரதங்களுக்கும் ஏதாவது பலன் இருந்ததா? காந்தியத்திற்குப் பதிலாக, பரிசாகக் கிடைத்தது காவலர்களின் தடியடிகள்தானே? இந்தியாவில் காந்தியம் விடுதலையைப் பெற்றுத் தந்தது என்றால், எல்லா நாடுகளுக்கும் அது பொருந்தும் என்று எந்த அடிப்படையில் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? காந்தியத்தினால்தான் விடுதலை கிடைத்தது என்பதும் சர்ச்சைக்குரியதே.

“நம் இனம் ஈழத்தில் அழியும்போது உலகம் என்ன செய்தது என நாம் குமுறுகிறோம். உலகில் நாலில் ஒரு பங்கு இதுபோன்ற உள்நாட்டுப் போர்களில் அழிந்துகொண்டிருக்கிறது என்பதை நாம் உணர்வதில்லை. அந்த உள்நாட்டுப்போர்களைக் கண்டு நாம் என்ன செய்தோம் என்று பேசுவதில்லை”
என்று எழுதியிருக்கிறீர்கள் ஜெயமோகன்.

ஈழத்தில் தமிழினம் அழியும்போது உங்கள் ஒரே வெளிப்பாடாகிய எழுத்தின் வழி நீங்கள் குமுறவில்லை என்பதை நாங்கள் பார்த்துக்கொண்டுதானிருந்தோம். சக மனிதன் மீதும் சமூகத்தின் மீதும் நீங்கள் கொண்டிருந்த அக்கறையைக் கண்டு வியந்துகொண்டுதானிருந்தோம். மேற்கண்ட வாசகங்களால் நீங்கள் உங்களைப் பற்றி எந்தவிதமான பிம்பத்தைக் கட்டமைக்க முயல்கிறீர்கள்? ‘நாடு, மொழி, இனம், எல்லைகளைத் தாண்டிய மானுடநேயன் நான்’ என்று உங்களை நிறுவ நீங்கள் முயற்சி செய்கிறீர்களா? அப்படிப் பேசுவதென்பதில் இருக்கும் ஒரு சிறிய பம்மாத்தை எங்களைப்போன்ற அறிவிலிகளும் புரிந்துதானிருக்கிறோம். சொந்தக் குழந்தை இறப்பின்போதும் பக்கத்து வீட்டுக்காரனின் குழந்தையின் இறப்பின்போது சிந்தப்படும் கண்ணீரின் அளவை நாங்களும் அறிந்துதானிருக்கிறோம். குறைந்தபட்சம் உங்கள் நண்பர்களாயும் வாசகர்களாயும் இருக்கக்கூடிய ஈழத்தமிழர்கள் அடிபடும்போதும் அழிவுறும்போதும் வாய்திறவாத நீங்களா உலகத்தின் ஏதோவொரு மூலையில் இருப்பவனுக்காகப் பேசப்போகிறீர்கள்? நடைமுறையைக் கணக்கிலெடுக்காத இந்தச் சித்தாந்தப் பூச்சாண்டிகளை, புத்தகம் படித்துக் கக்கும் விடயங்களில் இருக்கக்கூடிய பொய்மைகளை நாங்கள் வெறுக்கிறோம். இதே விடயங்களை சமூக அக்கறையுடைய எவராது சொல்லியிருந்தால் எனது வெளிப்பாடு வேறாகவே இருந்திருக்கும்.

ஒரு விடுதலைப் போராட்டம் தோல்வியடைந்துவிட்டது என்பதற்காக அதன் நோக்கமும் மூலமும் தவறு என்று எப்படிச் சொல்லமுடியும்? உதாரணத்திற்கு நீங்கள் ஒரு நாவலை எழுதுகிறீர்கள்… உங்கள் மனதில் உள்ள ஒரு கருவைக் கதையாக விரிக்கிறீர்கள். அது ஒருவகையில் வாசகர்களை முன்னிறுத்தித்தான், அவர்களைச் சென்றடையும் என்ற எதிர்பார்ப்புடன்தான் (நீங்கள் மறுத்தாலும் சிறிய அளவில் எனினும் அதுவே உண்மை) எழுதப்படுகிறது. அது உங்களால் எதிர்பார்த்த அளவுக்கு வாசகர்களைச் சென்றடையவில்லை என்றால், அதை அந்தப் படைப்பின் தோல்வியாகக் கொள்வீர்களா? கலாபூர்வமான படைப்புகள் (நல்ல சினிமா, ஓவியம்) போன்றவை தோல்வியைத் தழுவுவது படைப்பின் தோல்வியா? பார்ப்பவரின் தோல்வியா?

தமிழினம் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது தீவிர மௌனத்தில் ஆழ்ந்திருந்த நீங்களெல்லாம் திடீரென்று இப்போது பேச முற்படுவதன் நோக்கம்தான் என்ன? வன்முறை தவறு என்று சொல்லும் நீங்களெல்லாம் இலங்கை அரசின் வன்முறையைப் பற்றி ஏன் பேசவில்லை? இப்போது வந்து 'ராஜபக்சே ஹிட்லர் என்பதை ஒப்புக்கொள்கிறோம்'என்றால் முடிந்துவிட்டதா? வன்முறையை எதிர்ப்பதென்பது அதைப் பிரயோகிப்பவர்களின் அதிகாரத்தைப் பொறுத்து வேறுபடுகிறதா? இந்த விடயத்தில் நீங்களும் எங்கள் நாட்டைச் சேர்ந்த சிலரும் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள்.

விடுதலைப் புலிகள் மீது நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளில் பலவற்றை நானும் ஒப்புக்கொள்கிறேன். குறிப்பாக முஸ்லிம்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து காலக்கெடு விதித்து விரட்டியது, அரசியல் தொலைநோக்கோடு செயற்படாதது, தங்களை விமர்சித்த அறிவுஜீவிகளைக் கொலைசெய்தது உட்பட. ஆனால், அவர்களது விடுதலைப் போராட்டமே ஒரு தவறு என்பதைச் சொல்வதற்கு, உங்களைப் போன்றவர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை நான் சொல்லியாக வேண்டும். சொற்களை வைத்து சித்துவிளையாட்டுக் காட்டுவது மட்டும் எழுத்தாளனின் கடமையன்று. சமூகத்தின்பால் அக்கறையுடையவனாக இருப்பதும், செயற்படுவதும் அவர்களது கடமையாகிறது. சமூகத்தால் மதிக்கப்படும் எழுத்தாளன் என்பவனும் ஊடகங்களைப் போலவே மக்களின் கருத்துகளைச் செதுக்குவதில் (அல்லது சிதைப்பதில்) முக்கிய பங்காற்றுகிறான் - ஆற்றுகிறாள் என்ற வகையில், நீங்கள் நச்சுவிதைகளைத் தூவாதீர்கள்.

நான் எல்லாக் காலங்களிலும் பார்வையாளராகவே இருந்திருந்தால், ஈழத்தவள் என்றபோதிலும், உங்களைப் போலவே இதைப் பற்றி எழுதும் தகுதி எனக்கும் இருந்திருக்காது. ஆனால், சில வகைகளிலேனும் அதில் பங்கெடுத்துக்கொண்டவள், பாதிக்கப்பட்டவள் என்றவகையில் எனக்கு அந்த உரிமை இருப்பதாக நான் கருதுகிறேன்.

உங்கள் இருவரையும் குற்றஞ்சாட்டுவதற்காகவோ பரபரப்பைக் கிளர்த்துவதற்காகவோ எழுதவில்லை. (அதுதானே இங்கே நடக்கிறது) இழப்பை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சம்பந்தப்பட்டவர்களின் துக்கம் புரியாது. இழிவுபடுத்தல்கள் தெரியாது. மனித இனம் மட்டுமல்லாது மிருகங்களும்கூட அதனதன் சுதந்திரத்திற்குப் பங்கம் ஏற்படாமல் வாழ்வதென்பது பிறப்புரிமை. ஏனைய நாடுகளோடு குறிப்பாக தென்னமெரிக்காவோடு ஒப்பிட்டு ‘அவர்கள் மட்டுமே அப்படிப் போராடுவதற்கான நிர்ப்பந்தத்தைக் கொண்டிருந்தார்கள்’என்பது நகைப்பிற்குரியது. எனது தெருவில் நான் சுதந்திரமாகத் திரிவதற்கும், எனது மார்புகளை மாற்றான் ஒருவன் என் மறுப்பையும் மீறித் தொடும் இழிநிலைக்கு விட்டுக்கொடுத்துக்கொண்டிருப்பதென்பதும் சகித்துக்கொள்ளத்தக்கதுதானா? எனது அயலவரின் குழந்தையைக் கதறக் கதறத் தூக்கிச் சுவரில் மோதித் தலையைச் சிதறடிப்பதை நான் எப்படிச் சகித்துக்கொள்வேன்? தமிழினத்தில் பிறந்துவிட்டேன் என்பதற்காக நான் யார் என்பதை ஒவ்வொரு விசாரணைச் சாவடியிலும் நிரூபித்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியந்தான் என்ன? நீங்கள் காற்றைப்போல திரிபவர்கள். எந்த மூச்சுத்திணறலுக்கும் பழக்கப்படாதவர்கள். உங்களுக்கு போராடப் புறப்பட்டதன் நியாயப்பாட்டைப் பற்றியெல்லாம் நான் விளக்கிக்கொண்டிருப்பது வியர்த்தம்.

பல்லாயிரம் உயிர்களை, வளங்களை இழந்தோம். மனச்சிதைவிற்கு ஆளானோம், தடுப்புமுகாம்களுக்குள் விலங்குகளிலும் கேவலமாக வாழ விதிக்கப்பட்டோம். உலகெங்கிலும் அகதிகளாக அலைவுறும் கேவலத்திற்கும் ஆளானோம் என்றவகையில் தோற்றுவிட்டோம்தான். ஆனால், இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து பெரும்பான்மையினரால் இழிவுசெய்யப்பட்டோம், இரண்டாந்தரக் குடிமக்களாக பாரபட்சம் காட்டப்பட்டோம். எங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கொடி இல்லை. ஆட்சி மொழி இல்லை. உயர்கல்வியிலும் பாரபட்சம் காட்டப்பட்டது. அப்போது எங்களிடம் ஆயுதங்கள் இருக்கவில்லையே… ‘எங்களைக் கண்ணெடுத்துப் பாருங்கள்’என்று கதறிய கதறல் உலகத்திற்குக் கேட்காமல் போன காரணத்தினாலேயே தற்காப்புக்காக ஆயுதங்களைக் கையிலெடுக்கத் தள்ளப்பட்டோம். இந்த முப்பதாண்டு காலப்போராட்டத்தின் பின்பு, இவ்வளவு இழப்பின் பின்புதான் உலகம் எங்களைக் கண்ணெடுத்துப் பார்க்கிறது. (பார்த்துக்கொண்டேயிருப்பார்களா செயலாற்றுவார்களா என்பது அடுத்த கேள்வி) சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இப்போதிருக்கும் நிலையை நாங்கள் வந்தடைவதற்கு (உங்கள் வார்த்தைகளில் சொன்னால் அரசியல் நிலைப்பாட்டிற்கு) என்ன காரணம்? ஆயுதப் போராட்டம்தானே? இது வெற்றியல்லவா? இதை எப்படித் தோல்வியென்று சொல்லலாம்?


ஜெயமோகன்,

உங்கள் வலைத்தளத்தை நானும் படித்துவருகிறேன். எங்கள் ஜனங்கள் கொல்லப்படும்போது நீங்கள் ஆன்மீகம் பேசிக்கொண்டிருந்தீர்கள். எங்கள் குழந்தைகளின் தலைகள் சிதைக்கப்பட்டபோது நீங்கள் சகிப்புத்தன்மையைப் போதித்துக்கொண்டிருந்தீர்கள். பசியால் விழுந்து இறந்தபோது, பௌத்தம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தீர்கள். இந்தியா இலங்கை அரசுக்கு ஆயுதமும் ஆட்படையும் கொடுத்து தமிழர்களைக் கொன்றுகுவிக்கப் பணித்தபோது, அதைக் கேள்வி கேட்காமல் இந்திய இறையாண்மையை உயர்த்திப் பிடிக்கும் இழிவேலையைச் செய்துகொண்டிருந்தீர்கள். தமிழர்களிடம் இலக்கியம் வளர்த்துவரும் நீங்கள், தமிழையே மூலதனமாகக் கொண்டு வளர்ந்துவரும் நீங்கள், தமிழர்களுக்கெதிராகவே இயங்கிக்கொண்டிருந்தீர்கள். உங்கள் சொற்களின் சித்துவிளையாட்டில் நானும் மயங்கித்தானிருந்தேன். உங்கள் எழுத்தை வியந்து போற்றி மின்னஞ்சல் கூட அனுப்பியிருக்கிறேன். உரத்த குரலில் பொய் சொல்வதனால் உண்மையைக் கொன்றுவிட முடியாது என்பதை, சாதாரணளாகிய நானும் அறிவேன். உண்மையின் வேர்கள் மண்ணுக்குள்தான் இருக்கின்றன. இந்த வரட்சி நீங்கும் ஒரு காலத்தில் இலையும் தளிருமாய் அது மண்ணைத் துளைத்து வெளிவரும் என்பதை நீங்களும் மறுக்கமாட்டீர்கள். காத்திருங்கள் ஜெயமோகன். பலரும் பாராட்டும் ஒரு விடயம் அடிப்படையில் சரியாக இருக்கவேண்டுமென்று என்ன கட்டாயம் இருக்கிறது?

இங்கே ‘ஆயுதப் போராட்டம்தான் அமைதி திரும்ப ஒரே வழி’என்று நான் சொல்லவரவில்லை. அதற்குரிய அசாத்தியங்களை, கசப்பான முன்னனுபவங்களை சொல்லவந்தேன். மேலும், அப்படிச் சொல்லக்கூடிய அருகதை, சமூகப் பொறுப்புணர்வு உங்கள் இருவரிடத்திலும் இல்லை என்பது, உங்களை அவதானித்ததிலிருந்து பிறந்த, தனிப்பட்ட என்னொருத்தியின் கருத்தாக இருக்கிறது. அதுவே இந்தப் பதிவெழுதக் காரணமும் ஆகியது.

இனிவரும் காலங்களில் நான் உங்கள் இருவராலும் கடுமையாக விமர்சிக்கப்படுவேன் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமுமில்லை. இலக்கிய அரசியலின் அடிப்படைத் தன்மைகளான பழிவாங்கல்கள், தூக்கிப்பிடித்தல்கள், தூற்றுதல்கள், துதிபாடல்கள் எல்லாவற்றையும் உணர்ந்தவளாகவே இருக்கிறேன். என்னைக் காட்டிலும், எழுத்தில் நான் வளர்வதைக் காட்டிலும், எங்கள் போராட்டத்தின் நியாயமும், தியாகமும் உங்களைப் போன்றவர்களால் தூர்க்கப்படுவதை, திசைதிருப்பப்படுவதை எதிர்ப்பது எனக்கு முக்கியமாகப்படுகிறது.

தேவதைகள் மௌனமாகிவிட்டால், பேய்கள் உச்சஸ்தாயியில் பாட ஆரம்பித்துவிடுகின்றன. இது பேய்களின் காலமும் களமுமாயிருக்கிறது. என்ன செய்வது?

94 comments:

வினவு said...

தங்களது அற்பத்தனமான தனிப்பட்ட ரசனை எனும் கண்றாவியை வைத்தே இலக்கிய ரசனையெனும் கெட்டுப்போன வாயுவைக் கொண்டு வாசகர்களின் சிந்தனையை மெல்லக் கொன்று வரும் இந்த இலக்கிய கிரிமினல்கள் ஈழத்தை மட்டுமல்ல எல்லா சமூக அரசியல் பிரச்சினைகளையும் பேசுவதற்கு அருகதையற்றவர்கள். உங்களது நியாயமான கோபத்தை வலுவான வாதத்துடன் பதிவு செய்தமைக்கு வாழ்த்துக்கள்

வினவு

நந்தா said...

தன்னை ஓர் அறிவாளியாய், நினைத்துக் கொண்டு குன்றிலேறி நின்று வாசகர்களுக்கு உபதேசம் செய்யும் இவர்கள் தனது அரசியல் நிலைப்பாடுகளை மனசாட்சியுடன் ஒரே ஒரு முறையாவது சுயபரிசோதனை செய்து பார்க்கட்டும்.

தன்னை ஓர் எல்லைகளற்ற உலகத்தின் மனிதாபிமான விரும்பியாக அறிவிக்கத் துடிக்க்க இவர்கள் படும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

பக்கத்து வீடு எரியும் போதே வேடிக்கை பார்த்த இவர்கள், அதற்காய் ஒரு சிறு சலனத்தை கூட ஏற்படுத்த முயலாத இவர்களா உலகின் எந்த ஒரு மூலையில் நடக்கும் மனித பேரவலங்களையும் எதிர்க்கப் போகின்றவர்கள்...

போங்கடா போய் ஒரு கோடி ரூபாய் கொடுத்தாலும் எப்படி நண்பர்களுடன் தண்ணியடிச்சு செலவழிப்பேன்னோ, பௌத்தத்தின் தத்துவ விளக்கம்னோ எந்த கருமத்தை குறித்தும் கட்டுரை எழுதித் தொலையுங்கள்.

எல்லாத்துக்கும் கருத்து சொல்றேன்னு எங்க உயிரை வாங்கித் தொலையாதீங்க.

soorya said...

நல்ல பதிவு தோழி,
ரொம்பநாளா நினைத்துக் கொண்டிருந்தேன் யாராவது இது பற்றி எழுதமாட்டார்களாவென. பொருத்தமான பேனாவிலிருந்து வந்த அருமையான எழுத்துகள். தொடரட்டும் தங்கள் கோபம்.
நன்றி.

தமிழரங்கம் said...

எல்லா இலக்கிய பொறுக்கிகளுக்கு சரியான விமர்சனம். வாழ்த்துகள். உங்கள் கட்டுரையை எம் இணையத்தில் மறுபிரசுரம் செய்துள்ளோம்.
http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5791:2009-05-27-07-38-16&catid=75:2008-05-01-11-45-16

சென்ஷி said...

//எல்லாத்துக்கும் கருத்து சொல்றேன்னு எங்க உயிரை வாங்கித் தொலையாதீங்க.//

இந்த வரியை எழுதாம விட்டுடுவீங்களோன்னு பயந்துட்டு இருந்தேன். ஆனா திருந்துவாங்கன்னு நினைக்கறீங்களா :-((

பாண்டியன் said...

அட போங்கக்கா பாகிஸ்தானும் சீனாவும் பொந்தியாவும் ஈழ் பிரச்சனையில் ஒரே புள்ளியில் இணையும் போது இதெல்லாம் சாதாராணம்

rooto said...

really superb. cant type in tamil becase of font problem and time problem in office. will agree with 99% of ur argument. weldone

Chellamuthu Kuppusamy said...

காமக் கதை எழுதுகிற எழுத்தாளன் ஒரு வேளை பீட்ஸா தின்ன முடியவில்லை என்பதைக் காட்டிலும் பெரிய விஷயமாக இனப் படுகொலை இருக்க வேண்டியதில்லை.

இனிமேல் புலிகள் செய்த தவறுகளை புதைபொருள் ஆராய்ச்சி செய்யப் பலரும் புறப்படுவார்கள். மாலனும், சோவும் கூட அறிவழகன் என்ற சாரு நிவேதிதாவோடு ஒப்பிடும் போது பரவாயில்லை எனப்படுகிறது.

சாருவைப் பொருத்தவரை, அவர் எழுதியதன் உள் நோக்கம் என்னவென்பதை நீங்கள் உணர வேண்டும். For him, there is nothing called bad publicity.

ராஜ நடராஜன் said...

உங்கள் எழுத்தின் கோபங்கள்,நியாயங்கள் சரியானவையே.

பிச்சைப்பாத்திரம் said...

அன்புள்ள தமிழ்நதி,

இந்தப்பதிவின் உள்ளடக்கம் விரிவாக விவாதிக்கப்பட வேண்டியது. அதனுள் புக நான் விரும்பவில்லை. அவரவர் பக்கத்தின் நியாய தர்மங்கள் அவரவர்களுக்கு. ஆனால் உங்களின் கோபத்தை வெளிப்படுத்த நீங்கள் தேர்ந்டுத்த அந்த மொழியின் போக்கும் நடையும் என்னை மிகவும் கவர்ந்தது. அதைப் பாராட்டவே இந்தப் பின்னூட்டம்.

வாசுகி said...

பலரது எண்ணங்களை பிரதிபலித்து எழுதியுள்ளீர்கள்.உங்கள் பதிவு மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.
சில ஜனநாயகவாதிகளுக்கு தாங்கள் என்ன எழுதுகிறோம் என்றே தெரிவதில்லை.
இதெல்லாம் அவர்களுக்கு விளங்கும் என்றா நினைக்கிறீர்கள்.

Anonymous said...

அரசு, முதலாளிகள், ஆன்மீக வாதிகள், காந்திய வாதிகள், பின் நவீனத்துவ வாதிகள் (தற்போதைய வடிவம்) ஆகிய எல்லோரும் ஒரு கட்டத்தில் ஒன்றாகி உபதேசிப்பார்கள்... உழைக்கும் மக்களே... உங்கள் கோரிக்கைகளை எல்லாம் முடிந்த (?) பின்னர் எழுதிக் கொடுங்கள்.. பரிசீலிப்போம் என்று..... என்ன ஒரு ஒற்றுமை...

King... said...

ரசிக மனே நிலையில் அவர்களை தாங்குவதுதான் இந்த கர்வம் மிகுந்த திணிப்புகளுக்கு காரணமாயிருக்கலாம்.

King... said...

\\
எல்லாத்துக்கும் கருத்து சொல்றேன்னு எங்க உயிரை வாங்கித் தொலையாதீங்க
\\

:))

King... said...

இவ்வளவு கோபத்திலும் உங்களுடைய மொழிநடை
கூடவே இருக்கிறது...

Anonymous said...

// இந்திய இறையாண்மையை உயர்த்திப் பிடிக்கும் இழிவேலையைச் செய்துகொண்டிருந்தீர்கள் //

//அருகதை, சமூகப் பொறுப்புணர்வு உங்கள் இருவரிடத்திலும் இல்லை//

ஈழ போராட்டம் நிறைய அந்நிய சக்திகளின் உதவிகளோடுதான் நடைபெற்றுள்ளது இதுவரையிலும், அவர்கள் மாற்று கருத்துக்களை முன்வைக்கும் போது ஈழவர்கள் துரோகி பட்டம் கொடுக்கிறீர்கள், பேச அருகதை இல்லை என்கிறீர்கள், தமிழர்களுக்கே உரித்தான குணம் போலும்!
மேலே கொடுக்க பட்டிருக்கும் உங்கள் எழுத்துகளில் உள்ள பிழைகளை நீங்களே அறியுங்கள்!

// வெள்ளைக்கொடியோடு சரணடையச் சென்றபோதுதான் இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் //

புலிகளும் இப்படிபட்ட துரோகங்கள் புரிந்திருக்கிறார்கள் - அமிர்தலிங்கம்...

// இந்திய இராணுவம் தோல்வியோடு திரும்பிவந்தது //

ஏளனமா...? திரும்ப அழைக்கபட்டது!

தோல்விகளை, தவறுகளை யார் வேண்டுமானாலும் சுட்டி காட்டலாம்,
அமைதியாக ஏற்க வேண்டியதுதானே! அடுத்த போராட்டாத்தில் அவைகளை நடக்காமல் பார்த்து கொள்ளலாம், உணர்ச்சிவயம் மட்டுமே உடைய கூட்டம், உதவி செய்தவர்களை எல்லாம் எட்டி உதைக்கும் ஒரு கூட்டம் வெற்றிபெற இயலாது.

தமிழ்நதி said...

அன்பு நண்பர்களுக்கு,

முதலில் இந்தக் கோபத்தின் நதிமூலத்தை நீங்கள் அறியவேண்டுமென நான் விரும்புகிறேன். எங்களுடைய சனங்கள் கொல்லப்பட்டார்கள்... நாய்களைப்போல விரட்டப்பட்டார்கள்... வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார்கள்... இணையத்தளங்களின் செய்திகளைப் பார்த்துக் கண்ணீர் வடிக்காத நாட்களே இல்லை.உலகெங்கிலும் வாழும் பெரும்பாலான ஈழத்தமிழர்கள் சாப்பிடும் சாப்பாட்டில் கண்ணீர்த்துளி கலந்திருந்தது.

ஆம் நாங்கள் தோற்றுப்போனோம் ஒருவகையில். அரசியல் ரீதியாக நாங்கள் வெல்வோம் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம். இப்போது பார்த்து, பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல, 'நீங்கள் இப்படிச் செய்திருக்கவேண்டும்; அப்படிச் செய்திருக்க வேண்டும்'என்ற போதனைகள் - வழங்கத் தகாதவர்களின் வாயிலிருந்து உதிர்வதை நாங்கள் வெறுக்கிறோம். ஏனென்றால், நாங்கள் துன்பப்பட்டபோது நீங்கள் மெளனமாக இருந்தீர்கள். அந்த மெளனத்திற்கான எதிர்வினைதான் இந்தக் கோபம்.

----

நன்றி வினவு. எழுத்தாளர்களுக்கு சமூகப் பொறுப்புணர்வு வேண்டும் என்பதன் அடிப்படையில் எழுதினேன்.

நந்தா,

"எல்லாத்துக்கும் கருத்து சொல்றேன்னு எங்க உயிரை வாங்கித் தொலையாதீங்க"

இந்த அதிமேதாவித்தனத்தைத் தாளமுடியவில்லை. நாளையே 'இப்படித்தான் கக்கூசுக்குப் போகவேண்டும்'என்றொரு புத்தகம் எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வாங்க சூரியா,

தாங்க முடியவில்லை இவர்கள் அழிச்சாட்டியம்.

நன்றி தமிழரங்கம்,

இது உங்கள் வலைத்தளத்தில் பிரசுரிக்கப்படுமளவிற்குத் தகுதிபெற்றிருக்கிறதா என்பதில் எனக்குச் சந்தேகமிருக்கிறது:) சட்டென எழுந்த கோபத்தில் 'எடிட்'பண்ணாமலே போட்டிருக்கிறேன். ஆனால், எந்த வார்த்தையும் மீளப்பெற்றுக்கொள்ளுமளவிற்கு நியாயமற்றதாக இருப்பதாக எனக்கு இப்போதும் தோன்றவில்லை.

சென்ஷி,

உயிரைக் கொடுப்பது எழுத்து என்கிறார்கள். நீங்கள் மாறிச் சொல்கிறீர்கள்:)

ஆமாம் பாண்டியன்.

இந்தியாவும் சீனாவும் பாகிஸ்தானும் ரஷ்யாவும், ஏன் கியூபாவும்கூட இவர்களோடு இணையும்போது... இவர்கள் இணைவதற்கென்ன?

நன்றி rooto

"இனிமேல் புலிகள் செய்த தவறுகளை புதைபொருள் ஆராய்ச்சி செய்யப் பலரும் புறப்படுவார்கள்."

புற்றீசல்கள்போல கிளம்பியிருக்கிறார்கள் குப்புசாமி. நன்மை விளையும் விமர்சனங்களை முன்வைக்கட்டும். புலிகளும் அதை இனி ஏற்றுக்கொள்வார்கள். 'எனக்கு எல்லாம் தெரியும் மாமூ'என்ற துருத்தல்கள் வேண்டாம் என்கிறேன்.

ராஜ நடராஜன்,

கோபத்தின் பின்னாலுள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டமைக்கு நன்றி.

சுரேஷ் கண்ணன்,

அவரவர் நியாயங்கள் அவரவர்க்கு என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அடிப்படை நியாயங்கள் சில உண்டல்லவா? ஒருத்தி ஏன் தன் கணவனை விட்டு கள்ளக்காதலனோடு ஓடிப்போனாள் என்பதற்குக் கூட நியாயமான காரணங்கள் இருக்கும் - அது சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒன்றாக இருந்தபோதிலும்.

தவிர, இது விரிவான கட்டுரை அன்று. ஜெயமோகனையும் சாருவையும் படித்தேன். உடனே அமர்ந்து எழுதினேன். ஒரு எழுத்தைக்கூட நான் மாற்றவில்லை. என் கோபந்தான் எழுதியது. விரிவான கட்டுரையை ஒருநாள் எழுதுகிறேன். நான் விரிவாக எழுதவில்லை. ஆனால், நான் எழுதியது தவறும் இல்லை என்றே இந்தக் கணம் வரை எனக்குத் தோன்றுகிறது.

எனக்கு எங்கள் சனங்கள் துடிக்கப் பதைக்க செத்துபோனதும் விடுதலைப் போராட்டம் சிதைந்துபோனதும் பெரிய மனவேதனை. அடிப்படை அறியாது அதை எவர் தூற்றினாலும் 'கைவைத்தியம்'சொன்னாலும் கோபம் வருகிறது.

Unknown said...

காந்திய வழிப் போராட்டத்தைப் பரிந்துரைக்கும் எழுத்தாளர்கள் ஈழத்தில் நடந்த காந்திய வழிப் போராட்டங்களை மறந்துவிட்டுப் பேசுகிறார்கள் அல்லது அது பற்றிய அறிவு இல்லாமல் உளறுகிறார்கள்.

//சொற்களை வைத்து சித்துவிளையாட்டுக் காட்டுவது மட்டும் எழுத்தாளனின் கடமையன்று. சமூகத்தின்பால் அக்கறையுடையவனாக இருப்பதும், செயற்படுவதும் அவர்களது கடமையாகிறது.//

well said.

Anonymous said...

சென்ஷி said.....
/// //எல்லாத்துக்கும் கருத்து சொல்றேன்னு எங்க உயிரை வாங்கித் தொலையாதீங்க.//

இந்த வரியை எழுதாம விட்டுடுவீங்களோன்னு பயந்துட்டு இருந்தேன். ஆனா திருந்துவாங்கன்னு நினைக்கறீங்களா :-(( ////

அட கடவுளே, கருத்து கூட சொல்ல கூடாதா....? என்னே ஒரு சர்வாதிகாரம்? வாழ்க ஈழ தமிழன்!
எங்கள் வீட்டில் உள்ள ஈழ தமிழர் ஒருவர் சொன்னார், அவங்க (புலம் பெயர்ந்த ஈழ மக்கள் நாட்டுக்கு திரும்ப இயலாது இனிமேல், சொகுசுக்கு ஆட்பட்டவர்கள் அவர்கள், ஈழபோர் முடிவுக்கு வர கூடாது என்பதே அவர்கள் விருப்பம், புலிகள் இருந்த வரை சரி, இனிமேல் பிரச்சினை ஓய்ந்துவிட்டால்...? அவர்கள் அப்படித்தான் உங்களை எல்லாம் திட்டுவார்கள், கேம்பில் உள்ள மக்களை கேட்டீர்களெண்டால் புலிகளை காரி உமிழ்வார்கள், வீர்ர்கள் என்று சொல்லுவர்கள் ஏன் எங்களோடு பதுங்கி அப்பாவிகளை துன்புறுத்த வேண்டும்? ஆணால் புலம் பெயர்ந்த pizza, burger களுக்கு அவர்கள்தானே கண் கண்ட தெய்வம், அவர்களை தவறு என்று சொல்லி நீங்கள் வாங்கி கட்டி கொள்ளாதீர் என்றார், உண்மைதான் போலும்!)

ஸ்டாலின் குரு said...

காந்தியின் ஒத்துழையாமை பற்றிய புகழுரையோடு துவங்கும் சாருவிடம் நாம் துவக்கத்திலேயே கேட்க வேண்டிய கேள்வி ஒன்று உள்ளது.

இந்திய சுதந்திரம் என்பதை ஏதோ காந்தியால் கடையில் இருந்து வாங்கி தரப்பட்ட கடலை மிட்டாயாக சித்தரிக்கும் பாமர மனப்பான்மை ஒருபுறம் இருக்கட்டும்,

கொல்லப்பட்ட இருபத்தி இரண்டு போலீஸ்காரர்களின் உயிர்களுக்காக காலனிய அதிகார வர்க்கம் பறித்த பத்தொன்பது உயிர்கள் மற்றும் சிறைக்கு அனுப்பப்பட்டு வாழ்க்கை சிதைந்த நூற்றி பதிமூன்று மனிதர்கள் ஆகியவர்களின் சார்பாக காந்தி செய்தது என்ன ?

வன்முறையை மக்கள் செய்தால் குற்றம் அரசு செய்தால் நியாயம் என்று கூறிய காந்தியின், திடீர் சீடரான சாருவின் ஈழ பிரசனை மீதான மௌனத்தை,காந்தியின் காலனிய அதிகார வர்க்கத்தோடான சமரசத்தொடும்,மௌனத்தொடும்,பொருத்தி பார்ப்பதில் நமக்கு ஒன்றும் சிரமமில்லை.

தங்கள்,பொருளாதார,ராணுவ நலன்களுக்காக உலக வல்லாதிக்க ஏகாதிபத்தியங்கள் ஈழ தமிழ் மக்கள் மீது நிகழ்த்திய கொடூரங்களுக்கு எதிராக மௌனத்தை கடைபிடித்ததன் மூலம் காந்தியை போலவே தானும் ஒரு அப்பட்டமான காலனிய ஏகாதிபத்திய ஆதரவாளன் என்பதைத்தான் சாரு நிருபித்திருக்கிறார்.

vignathkumar said...

prabharan is very less selfish,not selfish minded person. we cant expect democrasy in fighting. is prabharan the person who prohibited the tamileans rights and democrasy? it is singlavan politicans and politics. it is charu, jayamohans commedy. how many tamies do they wrote about 49 o rights in tamil magazeens.
how many times they gave voice to rigths to speak?
can they answer?
though prabharan is fighter he have given chance and oppertinuty to tamil womens in his fields fighting , sucied bom attack etc.
i think these people will not support tamil womens to speaking freely.
tamil nadhi it is a great about u that u accept the error of ltt {killing the persons who says the opnion } it is very bad culture.
voilence may not be solution but there can be a satisfaction for victum.
compeling{forceing} non voilence on victum is awful and crimenal with out giving any solution.
who ever ask tamileans to stop voilence they should give equal ringts in sri lanka if not they can shut

-L-L-D-a-s-u said...

//இந்தியாவில் காந்தியம் விடுதலையைப் பெற்றுத் தந்தது என்றால்//

Credit to British ..

-L-L-D-a-s-u said...

ஈழம் பலரை இணைக்கிறது போல.. இந்தியா & பாகிஸ்தான் , இந்தியா & சீனா , ஜெமோ &சாரு ..

முத்துகுமரன் said...

குறைந்த பட்சம் ஈழத்தில் பெண்கள் பெண்களாக வாழ முடிந்தது என்றால் அது புலிகளால்தான் என்று இவர்களுக்கு ஒரு போதும் புரியாது

சிங்களனாக பிறந்து அமைதியாய், அகிம்சையாய், புத்தம் சரணம் கச்சாமி என்று வாழமல் ஈழத்தமிழனாக பிறந்ததுதான் தவறு என்று அருளாசி வழங்காமல் இருக்கிறார்களே என்று மகிழ்வடையுங்கள்.

பிரெஞ்சு நாட்டிலோ லத்தின் அமெரிக்க நாடுகளிலும் போய் நீங்கள் செத்தால் சாருவின் கவனிப்பைப் பெறலாம், பக்கத்தில் செத்து என்ன பிரயோசனம்.

ரேவதி said...

நன்று உங்கள் பதிவு அருமை. உங்கள் பதிவை படித்து வார்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு நான் இருக்கிறேன். உங்களிடம் உள்ள கோபமும் என்னிடமும் இருகிறது.. நானும் நம்பிகையுடன் இருக்கிறேன் நல்ல முடிவுக்காக . கடவுள் நல்ல முடிவை கொடுப்பார் என்ற நம்பிகையில்.......

எப்பொழதும் குறை கண்டுபிடிபவர்களே


பிரபாகரனின் வரலாற்று பக்கங்களை புரட்டுகள். நம் வீட்டு பெண்களின் கற்புகள் சூறையாடபட்டு. நம் வீட்டு குழைந்தைகள் கொள்ளபட்டு. உரிமைகள் மறுக்கப்பட்டு இருந்தால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு வீட்டுலயும் ஒரு பிரபாகரன் உருவாகி இருப்பான். உரிமைக்காகதான் அவர் ஆயுதம் எடுத்தார். இதில் ஒன்றும் தவறு இருபதாக எனக்கு தெரியவில்லை. அடிமை வாழ்கை போதும் என்றால் இந்தியா ஏன் சுதந்திரம் வாங்க வேண்டும்.
பிரபாகரன் செய்தது ஒரு தீவிரவாதம் என்றால். சுபாஷ் செய்ததும் ஒரு தீவிரவாதமே....

Unknown said...

நானும் ஜெயமோகனை வாசித்து வந்துதானிருக்கிறேன் எப்பொழுதேனும் எம் தமிழின இடர் குறித்துவிவாதிக்கிறாரா என்று...இப்படியோர் பேரின அழிவை அவர் கண்டுகொண்டதாகவேத் தெரியவில்லை...ஒரு இனத்தின் சிதைவைக் கண்டுகொள்ளாத அவரின் எழுத்துக்கள் என்னத்தைக் கிழிக்கப் போகிறதோ தெரியவில்லை...உலகையே உட்கொண்ட பேறறிவாளனாக அவர் இருக்கலாம் ஆனால் தான் சார்ந்த ஒரு இனத்தின் அழிவை தட்டிக்கேட்க தைரியமிருக்கிறதா? அந்த பேறறிவுக்கு?
ஒரு ஈழத்து சகோதரி விமான குண்டு வீச்சில் வீழ்ந்துகிடக்கும் தன் கணவணின் பிணத்தருகே கதறிக்கொண்டிருக்கிறாள்....அருகில் அவளது இரு குழந்தைகள் விம்மியபடியே.இப்பொழுது வானத்தில் மீண்டும் விமான சத்தம்.....அந்த தாய் தன் இரு குழந்தைகளையும் பங்கருக்குள் பாதுகாக்கும் பொருட்டு விரைகிறாள் ....குழந்தைகள் பாதுகாக்கப்படுகிறது...ஆனால் தாய் குண்டுவீச்சில் பலியாகிறாள்.....புகைமூட்டம் தெளிந்தபின் அவளின் ஆண்மகன் தன் தாயைத் தேடுகிறான்....சிதைந்த பிண்டங்களின் ஊடாக அவன் தாயின் சேலைத் துண்டே மிஞ்சுகிறது...அதைத் தன் கரங்களில் பதித்து கதறித் துடிக்கிறான்.....மீண்டும் வானத்தில் சிங்கள விமான சத்தம்...இப்பொழுது அச்சிறுவன் பயந்து ஓடவில்லை மாறாக ஒரு சிறு கல்லை எடுத்து 5000 மீட்டர் உயரத்தில் வட்டமிடும் விமானம் நோக்கி எறிகிறான்....அவனின் உணர்ச்சி வேகத்தில் அந்த விமானம் சுக்கு நூறாக உடையும் என்பது வேறு விடயம்...ஆனால் சர்வதேசமே ஜெய மோகனே அவனின் அந்த செயல் தவறாகுமா?நீங்கள் அவனுக்கு உதவ வேண்டாம் ஆனால் அவன் எறியும் அந்த கல்லுக்கு தயவு செய்து சர்வதேச தடை மட்டும் விதித்து விடாதீர்கள்.....அவன் எறியும் அக்கல்லில் அவன் பெற்றோரின் இரத்தக் கறையும்,அவன் சகோதரியின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது...

தமிழநம்பி said...

உண்மைகளை விளக்கிய உங்கள் உணர்வுரைக்கு உண்மையான மாந்தன் மதிப்பளித்தே தீரவேண்டும்.

கோவை சிபி said...

தமிழக வாசகர் மத்தியில் தொடர்ந்து நச்சு விதையை
விதைத்து வரும் இருவரிடம் இதைத்தவிர வேறெதுவும் வர வாய்ப்பில்லை.

Anonymous said...

i am tired of this guys(charum,jeyamohan) nonsense opinions...u dont have to take charu's opinion seriously..after 6 months he may write that"i have realised that what i have said about LTTE is absolute bullshit" just like he did in nan kadavul review..people use to say easiest think is to give advice to somebody...much more easiest thing is to give advice to a failed rebel group...thats what they are trying to do..armed struggle carried out by LTTE is unavoidable to the circumstances they are given in the past..despite the fact they won or lost the war they just did what they needed to do in that time...anyway just as charu concluded we all will be very happy if the issue came to an end with a political solution...but the fact is we cant see any sign of honest political solution in that cursed island for tamils ---- jayaseelan

Anonymous said...

இப்படியொரு பதிவு எப்போது வரும் என்று தான் பார்த்துக்கொண்டு இருந்தேன்.
முதலில் உங்களுக்கு நன்றி.
தங்களை ஒரு ஜனநாயகவாதியாக காட்டிக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தினால்
எதுக்கெடுத்தாலும் கண்ணை மூடிக்கொண்டு புலிகளை எதிர்ப்பார்கள்.
ஆனால் இந்த ஜனநாயகவாதிகளென தம்மை நினைப்பவர்கள் மற்ற‌
அமைப்புகளை பற்றி கதைப்பதில்லை. அவர்களுக்கே தெரியும் மற்ற அமைப்புகளின்
லட்சணம். தனது இனத்தையே இந்தியாவுடன் கூட்டு சேர்ந்து அழித்தவர்கள் தலைவர் ஆகிவிடலாம்
என்று அவசரப்படுகிறார்கள்.

@ manippakkam

//கேம்பில் உள்ள மக்களை கேட்டீர்களெண்டால் புலிகளை காரி உமிழ்வார்கள் //
முதல் தடவை இராணுவத்தால் இரசாயன ஆயுதம் பாவித்த பின் இந்தியாவிற்கு தப்பி
வந்தவர்களிடம் எடுத்த பேட்டியை முதலில் வாசிக்கவும்.

http://www.alaikal.com/news/?p=16627

Anonymous said...

Hi,
I just want to give below a quote from Roberto Bolano which I feel is pertinent to your post. It is about art and writer and it goes like

"But every single damn thing matters! Only we don't realize. We just tell ourselves that art runs on one track and life, our lives, on another, and we don't realize that's a lie. "

சின்னப்பயல் said...

///உலகெங்கிலும் வாழும் பெரும்பாலான ஈழத்தமிழர்கள் சாப்பிடும் சாப்பாட்டில் கண்ணீர்த்துளி கலந்திருந்தது.///

கையாலாகாத தமிழ்நாட்டுத் தமிழனின் கண்ணீரும் இதில் அடக்கம்..

mathi - india said...

தென்னாப்பிரிக்கா எப்படி சுதந்திரம் பெற்றது ?

அணுகுண்டு போட்டா ?

சாருவும் ஜெயமோகனும் சொன்னது சரிதான் ,

துப்பாக்கி தூக்கி நீங்கள் சாதித்தது என்ன ? பாதி மக்களை காவு வாங்கியதை தவிர ?

Surya said...

அன்புள்ள தோழிக்கு,

சகோதரன் முத்துகுமாரின் எழுத்துகளை படித்த போது வந்த கண்ணீர் மீண்டும் இன்று வந்தது....
முத்துகுமாரின் மரணத்திற்கு பின் நடந்ததை தாங்களும் அறிவீர், கவனமாக அந்த எழுச்சியை அழித்து விட்டார்கள்...
உங்களை போன்றவர்கள் அந்த பணியை தொடரவேண்டும், ஜெயமோகன் மற்றும்
சாருபாலா போன்றவர்களின் நிறத்தை மக்களுக்கு தெளீஉபடுதுங்கள்...
அதேநேரத்தில் தமிழக தமிழர்களின் அரசியல் அறியாமையை ஈழ மக்களிடம்
தெளீஉபடுதுங்கள்...
" குண்டுவீச்சில் பலியாகிறாள்.....புகைமூட்டம் தெளிந்தபின் அவளின் ஆண்மகன் தன் தாயைத் தேடுகிறான்....சிதைந்த பிண்டங்களின் ஊடாக அவன் தாயின் சேலைத் துண்டே மிஞ்சுகிறது...அதைத் தன் கரங்களில் பதித்து கதறித் துடிக்கிறான்.....மீண்டும் வானத்தில் சிங்கள விமான சத்தம்...இப்பொழுது அச்சிறுவன் பயந்து ஓடவில்லை மாறாக ஒரு சிறு கல்லை எடுத்து 5000 மீட்டர் உயரத்தில் வட்டமிடும் விமானம் நோக்கி எறிகிறான்....அவனின் உணர்ச்சி வேகத்தில் அந்த விமானம் சுக்கு நூறாக"

- நன்றி சிவா

Surya said...

"துப்பாக்கி தூக்கி நீங்கள் சாதித்தது என்ன ? பாதி மக்களை காவு வாங்கியதை தவிர ?"
மதி- மதி இல்லை உனக்கு
தமிழ் இனத்தை உலகுக்கு காட்டியவன் பிரபாகரன், நீ காட்டியது மான் ஆட மயில் ஆட மட்டும் தான்...
முடித்தால் அவர்களுக்கு ஆறுதலாக பேசு, இல்லை என்றால் சண் டிவி பார் புத்தி வளரும்.. ஓகே வா..

யுதர்களை போல் தமிழனும் தனிநாட்டை உருவாக்கும் காலம் வரும்

Boodham said...

சாரு நிவேதிதா ஜட்டி விளம்பரம் போன்ற கிளு கிளு கட்டுரை தானே எழுதுவார். ஏன் இப்படி கட்டுரை எழுதி இருக்கிறார் அப்படின்னு குZகம்பிட்டு இருந்த நேரத்தில் உஙளது கட்டுரை வந்தது மகிழ்ச்சி .
சாரு நிவேதிதா மற்றும் ஜெயமோகனுக்கு போன்றோரின் மொக்கைகள் புதிய நபர்களை குழப்பி விடும். தக்க சமயத்தில் சரியான பதிலடி எழுதியதற்கு நன்றி. தமிழ் சர்க்கிளில் மீள் பிரசுரம் செய்த ரயாகரன் தோழருக்கும் நன்றி.

தமிழ்நதி said...

ஜெயமோகன், சாருவுக்கு தமிழ்மணத்தில் 'வாசகர்கள்'அதிகம் என்று எனக்கு இதுநாள்வரையில் தெரியாமல் போய்விட்டது.:) இப்படிக் கடுப்பைத் தூண்டி இப்படியொரு பதிவை எழுதும் நிலைக்கு என்னைத் தள்ளிவிட்டார்கள். நானொன்றும் சொல்லிக்கொள்ளும்படியான சண்டைக்காரி இல்லை. இன்று இப்படியாயிற்று அவ்வளவுதான்.

ராஜா / KVR,

நீங்கள் சொன்னது ஒரு முக்கியமான விடயம். ஆரம்பத்தில் காந்திய வழியில்தான் தந்தை செல்வாவும் மற்றவர்களும் போராடினார்கள். அதற்கு இனவாதிகள் 'உனக்குப் பெப்பே... உங்கப்பனுக்கும் பெப்பே'என்றுவிட்டார்கள். அதன்பிறகுதான் ஆயுதப்போராட்டமே பிறந்தது. 1956ஆம் ஆண்டில் காலிமுகத்திடலில் அகிம்சாவழியில் போராட்டம் நடத்தியவர்களைக் குண்டாந்தடிகளால் அடித்தும், குண்டுக்கட்டாகத் தூக்கிக் கடாசியும் போட்டவர்கள் இந்தப் பெளத்த பேரினவாதிகள்தான். இவர்கள் போதிக்கும் அஹிம்சா வழியில், இதே அஹிம்சா மண்ணிலிருந்து வந்த இராணுவத்தினரின் முன் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, தண்ணீரும் அருந்தாமல் உண்ணாநோன்பிருந்த திலீபனுக்கு என்ன நடந்தது? அன்னை பூபதிக்கு என்ன நடந்தது?

Manippakkam,

"அட கடவுளே, கருத்து கூட சொல்ல கூடாதா....? என்னே ஒரு சர்வாதிகாரம்? வாழ்க ஈழ தமிழன்!"

கருத்துச் சொல்லக்கூடாதென்று யார் சொன்னார்கள்? ஏன் இப்படி அலறுகிறீர்கள்? செத்துக்கொண்டிருந்தபோது வராதவர்கள், ஏனென்று கேட்காதவர்கள், பிணத்தைத் தூக்கிப் போகும்போது மட்டும் வந்து, 'ஏங்க சாக விட்டீங்க...'என்று அங்கலாய்ப்பதுதான் தவறு என்கிறோம். அதிலிருக்கும் பொய்மையைத்தான் சாடுகிறோம். அதைப் புரிந்துகொள்ளுங்கள்.

தயவுசெய்து ஈழத்தமிழன் - இந்தியத் தமிழன் என்று பிரித்துப் பேசாதீர்கள். ஈழ மண்ணில்தான் பிரபாகரன் பிறந்தார். அங்கேதான் கருணாவும் பிறந்தார். காந்தியும் கோட்சேயும் ஒரே மண்ணில்தான் பிறந்தார்கள். பண்டார வன்னியனும் காக்கை வன்னியனும் - கட்டபொம்மனும் எட்டப்பனும் பிறந்ததெல்லாம் ஒரே மண்ணில்தான். மண்ணில் தவறில்லை; தனிப்பட்ட மனிதரின் குணவேறுபாடுகள்தான் காரணம். சும்மா வந்து 'ஈழத்தமிழன் என்றால் சர்வாதிகாரி'என்று எடுத்துவிடாதீர்கள்.

"கேம்பில் உள்ள மக்களைக் கேட்டீர்களென்றால் புலிகளைக் காறி உமிழ்வார்கள்"


ஐயா, நீங்களும் உங்கள் நண்பரும் பத்திரிகை படிப்பதில்லையா? காம்பில் உள்ளவர்கள்தான் கண்ணீர் விட்டிருக்கிறார்கள் 'இனி எங்களுக்கு நாதியில்லை. நாய்களைப் போலத்தான் நடத்துவார்கள்'என்று. பிழையான கருத்தை எழுத்துப் பிழை இல்லாமலாவது சொல்லியிருக்கலாம்.

இந்திய இறையாண்மையை உயர்த்திப் பிடிக்கவில்லை என்றா சொல்கிறீர்கள்? அவர்களின் பக்கங்களை நீங்கள் மீள்வாசிப்புச் செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

'ஈழப்போராட்டம் நிறைய அந்நிய சக்திகளின் உதவியோடுதான் நடைபெற்றது'

அப்படியா...? எனக்குத் தெரியாதே... இந்தியாவில் புலிகளும் ஏனைய இயக்கங்களும் பயிற்றுவிக்கப்பட்டார்கள். அப்புறம் எந்த அந்நிய உதவிகளோடு போராட்டம் நடத்தப்பட்டது என்ற தரவுகளைத் தந்தீர்களென்றால் எனது அறிவை மேம்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும். ஒருவேளை வெளிநாடுகளில் இருக்கும் எங்கள் மக்களைச் சொல்கிறீர்களோ... நீங்கள் அப்படி அபத்தமாகச் சொல்லக்கூடியவர்தான்.

// இந்திய இராணுவம் தோல்வியோடு திரும்பிவந்தது //

"ஏளனமா...? திரும்ப அழைக்கபட்டது!"

புதிது புதிதான தகவல்களோடு வருகிறீர்கள். 'கொக்கமக்கா'என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால், அந்த வார்த்தை இவ்விடத்தில் பொருத்தமாக இருக்குமென்றே நினைக்கிறேன். இந்திய இராணுவம் திரும்பிவந்தபோது நான் அங்குதான் இருந்தேன்.

"தோல்விகளை, தவறுகளை யார் வேண்டுமானாலும் சுட்டிக் காட்டலாம்"

அப்படியா சொல்கிறீர்கள்? அதற்கொரு தகுதியும் வேண்டாமா? தெருவோடு போகிறவன் உங்கள் வீட்டிற்குள் புகுந்து 'உம் பொண்டாட்டி சரியில்லை'என்றால் ஏற்றுக்கொள்வீர்களா?

தமிழ்நதி said...

நன்றி வாசுகி,

யாராவது ஒருவர் ஆரம்பித்து வைக்கவேண்டுமல்லவா? எத்தனை காலத்திற்கென்று தலையாட்டிக்கொண்டு இருப்பது? இனித் தொடர ஆட்கள் இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

அனானி நண்பரே,

"அரசு, முதலாளிகள், ஆன்மீக வாதிகள், காந்தியவாதிகள், பின் நவீனத்துவவாதிகள் (தற்போதைய வடிவம்) ஆகிய எல்லோரும் ஒரு கட்டத்தில் ஒன்றாகி உபதேசிப்பார்கள்... உழைக்கும் மக்களே... உங்கள் கோரிக்கைகளை எல்லாம் முடிந்த (?) பின்னர் எழுதிக் கொடுங்கள்.. பரிசீலிப்போம் என்று..... என்ன ஒரு ஒற்றுமை..."

என்று சொல்லியிருந்தீர்கள்.


இந்தக் காகிதப் புலிகள் அப்படித்தான் சொல்வார்கள். 'எல்லாம் முடிந்த பிறகு'வந்து உபதேசிக்கிறார்கள். இந்த உலகத்தில் எளிதானது, அறிவுரை சொல்வது என்பதை இப்போதெல்லாம் அடிக்கடி உணரமுடிகிறது.

கிங், ஒரு விசயம் சொல்லியிருந்தீர்கள்.

"ரசிக மனோநிலையில் இவர்களைத் தாங்குவதுதான் இந்தக் கர்வம் மிகுந்த திணிப்புகளுக்குக் காரணம்"

மிக உண்மை. அவர்களை ஏன் யாரும் கேள்வி கேட்பதில்லை? அவர்களுடைய பக்கங்களில் அவர்களைத் தட்டிக்கொடுக்கும் கடிதங்களே பெரும்பாலும் பிரசுரமாவது எப்படி? இதுவொரு இலக்கிய சர்வாதிகாரம்.

"தங்கள்,பொருளாதார,ராணுவ நலன்களுக்காக உலக வல்லாதிக்க ஏகாதிபத்தியங்கள் ஈழ தமிழ் மக்கள் மீது நிகழ்த்திய கொடூரங்களுக்கு எதிராக மௌனத்தை கடைப்பிடித்ததன் மூலம் காந்தியை போலவே தானும் ஒரு அப்பட்டமான காலனிய ஏகாதிபத்திய ஆதரவாளன் என்பதைத்தான் சாரு நிருபித்திருக்கிறார்."

உங்களை வழிமொழிகிறேன் ஸ்டாலின் குரு.

தமிழ்நதி said...

விக்னாத்,

இதே மாதிரியான ஒரு விவாதம் முன்பெல்லாம் நடக்கும். 'விடுதலைப் புலிகள் தவறு செய்கிறார்கள். அவர்களது விடுதலைப் பாதை தவறு'என்று விமர்சிப்பவர்களிடம் எங்களைப் போன்றவர்கள் ஒரு கேள்வி கேட்போம் 'நீங்கள் இதற்குச் சரியான ஒரு தீர்வைச் சொல்லுங்கள். இந்தப் பிரச்சனையைக் கையாளும் வழிகளைச் சொல்லுங்கள்'

மெளனம்தான் அவர்களது பதிலாக இருந்தது. கேள்வி கேட்பவர்களிடம் பதில்கள் இருப்பதில்லை.

L-L-D-a-s-u,

வித்தியாசமாகப் பெயரை எழுதியிருக்கிறீர்கள்.

//இந்தியாவில் காந்தியம் விடுதலையைப் பெற்றுத் தந்தது என்றால்//

Credit to British ..

வென்றால் காந்திக்கு credit. இப்போது தோற்றதால் விடுதலைப் புலிகளுக்கு Debit:)

முத்துக்குமரன்,

லத்தீன் அமெரிக்காவில் செத்தால் சாரு கண்டுகொள்வார் போல என்று நீங்கள் சொன்னதை யோசித்துப் பார்த்தேன். ஜெயமோகனுக்கும் அது பொருந்தும். எப்போதும் கேரளக் கவிஞர்களைத் தூக்கிப்பிடிப்பார். தமிழை மாற்றாந்தாய் மனோபாவத்தோடுதான் பார்ப்பார். உரைநடைக்காரர்கள் கவிதையைக் குறித்துப் பேசலாம்; அதை அனுபவித்து 'நல்லது' 'கெட்டது'என்று தரம்பிரிப்பது சாத்தியமா என்பதில் எனக்குச் சந்தேகமிருக்கிறது. கவிதை எழுதுவதைப் பற்றி ஜெயமோகன் புத்தகமே போட்டார். காலக்கொடுமை!

கருத்துக்கு நன்றி ரேவதி. முதல்தடவையாக என் வலைப்பூ பக்கம் வந்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். எல்லோரிடத்திலும் கோபம் இருக்கிறது தோழி. ஏன் வெளிப்படுத்துவதில்லை? எழுதுங்கள்.

சண் சிவா,

அவர்கள் பேசமாட்டார்கள் சிவா. இன அழிவைப் பற்றி அவர்களேன் பேசுகிறார்கள்? பேசுவதற்கு எத்தனையோ விடயங்கள் இருக்கின்றன. குயிலைப் பற்றி, குரங்கைப் பற்றி, மதத்தைப் பற்றி, மனிதம் பற்றி பேசுவார்கள். பேசிக்கொண்டேயிருப்பார்கள்.

தமிழ்நம்பி,

இதுவொரு அவசரப் பதிவு. நிதானமாக ஆற அமர இன்னொரு பதிவு போட வேண்டும். நேரம் கிடைக்குமானால்:) response ஐப் பொறுத்தது அது.

கோவை சிபி,

நச்சுவிதைகள் செடியானால் தமிழகத்திற்கே ஆபத்து. நீங்கள் கேள்வி கேட்கப் பழகமாட்டேனென்கிறீர்கள்.:(

ஜெயசீலன்,

"i am tired of this guys(charum,jeyamohan) nonsense opinions...u dont have to take charu's opinion seriously..after 6 months he may write that"i have realised that what i have said about LTTE is absolute bullshit"

அப்படியா? மாற்றி மாற்றிப் பேசுவாரா? நான் அவருடைய வலைப்பக்கம் போவதில்லை. இன்று ஜெயமோகன் சுட்டி கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து போனதால்தான் இந்த அனர்த்தம்.

"armed struggle carried out by LTTE is unavoidable to the circumstances they are given in the past..despite the fact they won or lost the war they just did what they needed to do in that time..."

மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள். அவர்கள் முன்பு வேறென்ன தெரிவு இருந்தது?

அனானி நண்பரே,

"தனது இனத்தையே இந்தியாவுடன் கூட்டு சேர்ந்து அழித்தவர்கள் தலைவர் ஆகிவிடலாம்
என்று அவசரப்படுகிறார்கள்."

அது நடக்காது. கோமாளிகள் ராஜாக்களாக முடியாது.

Mathi-Indai,

"தென்னாப்பிரிக்கா எப்படி சுதந்திரம் பெற்றது ?அணுகுண்டு போட்டா?"

நெல்சன் மண்டேலாவை எதற்காகச் சிறையில் அடைத்தார்கள்? உண்ணாவிரதமிருந்தார் என்றா? தீவிரவாதியெனக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நெல்சன் மண்டேலா பின்னாளில் எப்படி விடுதலைப்போராட்டத்தின் தலைவர் என்று போற்றப்பட்டாரோ அதுபோல எங்களுக்கும் ஒருநாள் வரும்.

"துப்பாக்கி தூக்கி நீங்கள் சாதித்தது என்ன? பாதி மக்களை காவு வாங்கியதை தவிர?"

மீதி மக்கள் இருக்கிறோமல்லவா? பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள். காவு கொடுக்காமல் கடையில் கிடைக்காது சுதந்திரம்.

கருத்துக்களுக்கான எதிர்வினையை ஒரே பின்னூட்டமாகப் போடலாமென்றால் அனுமதிக்க மாட்டாதாம். அதனால் பிரித்துப் பிரித்துப் போட்டிருக்கிறேன். இது பின்னூட்டத்தை அதிகரிக்கும் உத்தி இல்லை என்பதை இத்தால் தெரிவித்துக்கொள்கிறேன்:)

Anonymous said...

Don't invite these people for any literary events in Tamilnadu and outside

Don't buy their books

நேசமித்ரன். said...

கண்ணீர்ச் சொட்டாய் இருக்கும்
எம்தேசத்திலிருந்து வரும்
உப்புக்காற்றில் ஒட்டியிருக்கும்
மரங்களில் மோதி உடைத்த சிறார்களின்
மூளை துகள்கள்

33 லட்ச கபாலங்களில்
உதிரம் ஊற்றி குடித்தும்
ஊழி வாய் நிரம்பாத துட்டமினுவின்
வாளேந்திய சிங்கத்தின்
வாயிலிருக்கும் புத்தனின் பல்

பிச்சியாய் அரைப் பிரேதமாய் கிடக்கும்
வன்புணர்ந்த எம்பெண்ணுக்கருகே கிடக்கும்
மலமூத்திரக்குடுவைகள்

ஷெல்லடித்த புகைப்புழுதி
அடங்கி புலர்த்தும் நரக ஓலங்கள்

மானிட்டர் திரை நிரப்பும் மாண்டோர்
பட்டியல்

சிப்பிகளுக்கதிகமாய்
சில்லுகளாய் சிக்கும் மண்டையோடுகள்

உரக்கச் சொல்லுங்கள்
புலிகள்...
தீவிரவாதிகள்...!
பெருங்கருணை பேரரசு சிங்கள
நல் அரசு....
***************************************
குருதி கசியும் காயங்களுடன்
சந்திக்க நேர்ந்தது கானகத் தீவின் நடுவே
மெசியாவை
மரித்த சீஷர்கள் குறித்து
துயரம் மிகுந்த குரலில் கேட்க துவங்கிய போது
நிமிர்ந்து சொன்னான்
காயங்கள், கண்ணீர், பிரார்த்தனைகள்
குருதி வழியும் நம்பிக்கைகள்
எம்மை உயிர்ப்பிக்கும்
எப்போதும்
உயிர்த்தெழுதல்
எம்மை பரிணமிக்க வைக்கிறது....
மெசியாக்கள் உயிர்த்தெழுவர்...
*********************************
ஆயுதங்களாய் அடித்தப் பின்னும்
வளர்ந்த படி இருக்கும் எலும்புகள்

துட்டமினு துவங்கி ராஜபக்ஷே வரை
எழுதிய குருதி
சரித்திரம் அடங்கிய
கறுப்புப் பெட்டி

நட்சத்திரங்களின் தூரத்தில்
சிதறிக் கிடந்த சூரியன்கள் கூட்டம்

திலீபனின் முத்துக்குமரர்களின்
மரண வாசக பேழைகள்

உதிரம் தெளித்த சமாதானக் கொடிகள்
தமிழீழ தேசத்தின் அரசியல் சாசனம்
சயனைடு குப்பிகள்

ஆயுதங்களாய் மனிதர்கள்
மனிதர்களாய் ஆயுதங்கள்...

வெள்ளம் வடியக் காத்திருக்கிறான்
ஆறேழு முறை உயிர்த்தெழுந்த
நோவா

***************************************
பிசாசு வென்றிருக்கும்
இந்த சூதாட்டத்தில் அரிந்து கொடுத்தாயிற்று

உயிர் பருகத்தந்த பாகங்களை
காவலிருந்த கருவறைகளை
சுரக்கத் துவங்காத விரைப்பைகளை

தாள இயலாததாய் இருப்பது
துரோகத்தின் துயர் மிகு தீவதைகளை
இறையாண்மையின் பெயரால்
பிள்ளைக்கறி தின்னும் நீதி தேவதைகளை
துப்பாக்கிகள் தாழ்ந்ததும் அகதிகள்
கைதிகளாவதை

ஒரு அபத்தமாக
ஒரு முடிந்த கொடுங்கனவாக
ஒரு பைத்தியக்காரனின் திமிராக
நசியத் துவங்கும் நம்பிக்கைகள்
மாற்ற துவங்குவதை......
***************************

நன்றி...!

-நேசமித்ரன்
nesamithran.blogspot.com

தமிழ்நதி said...

நீளமாக ஒரே பின்னூட்டத்தில் பதில் எழுதினால் வலையேற்ற விடாமல் தடுப்பது எதுவென யாராவது அறிந்தவர்கள் சொல்லுங்கள். சிலர் பின்னூட்டம் என்ற பெயரில் கட்டுரைகளையே போட்டிருப்பதை நான் பார்த்திருக்கிறேன்ட:(

நண்பரே,

But every single damn thing matters! Only we don't realize. We just tell ourselves that art runs on one track and life, our lives, on another, and we don't realize that's a lie. "

என்ற Roberto Bolano வின் கூற்று எத்தனை உண்மையானது. கலையும் வாழ்வும் ஒரு தடத்தில் இயங்குதல் அறியாதார் சொல்லும் பொய் அது. கண்டுகொள்ளாதீர்கள்.

சின்னப்பயல்,

கண்ணீர் இன்னமும் தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது. வேறு விடயங்களுக்காக. இன்று பத்திரிகையில் பார்த்தீர்களா? ஒரு தாய் தனது கைக்குழந்தையோடு ஒருநேரச் சாப்பாட்டைப் பெற வரிசையை நோக்கி விரைந்து செல்கிறாள். அவளைத் தொடர்ந்து செல்கின்றன மேலும் இரு குழந்தைகள். வாழ்க்கை இவ்வளவு குரூரமாகவா இருக்கும்?

சூர்யா,

நான் என்ன தெளிவுபடுத்துவது? அது உங்கள் பணியுமல்லவா? ஏன் பொய்மைகளுக்கு அஞ்சுகிறீர்கள்? தவறெனத் தோன்றுவதை நேர்நின்று சொல்லுங்கள். இவர்களிடம் ஆயுதம் இல்லையே...!

பூதம், (இதென்ன பெயர்? உங்களை வேறு எப்படித்தான் அழைப்பது?)

சாருவின் வலைப்பக்கம் அவ்வளவு பரிச்சயமில்லை. ஆனால், கோணல் பக்கங்கள் ஒரு கிசுகிசுத் தொனியில் இருந்தபடியால் படித்தேன். அடுத்தவர் அந்தரங்கத்தை வாசிப்பது போலிருந்தது. பிடித்துத்தானிருந்தது. நீங்கள் சொன்ன 'ஜட்டி விளம்பரம்' குறித்து... சொல்வதற்கு ஒன்றுமில்லை:)

அனானி,

Don't invite these people for any literary events in Tamilnadu and outside

Don't buy their books

அது என் கையில் இல்லை. தொண்டரடிப்பொடிகள் இருக்கும்வரை அது சாத்தியமுமில்லை. நான் என்னை மட்டும் திருத்திக்கொள்ள முயற்சிக்கிறேன்.

நேசமித்ரன்,

நான் உங்கள் வலைப்பூ பக்கம் இன்றைக்கு வந்தேன். கவிதைகள் மிக நன்றாய் இருக்கின்றன என்று சொல்வது, இந்தக் கவிதைகளைப் பொறுத்தளவில் பொருத்தமற்றது. வேதனையை எப்படி நன்றாக இருக்கிறது என்று சொல்ல முடியும். வேதனையாக இருந்தது. கவித்துவத்தோடு கூடிய வரிகள் குற்றவுணர்வைத் தூண்டுகின்றன. தொடர்ந்து வாசிப்பேன்.

பாண்டியன் said...

தமிழக தமிழர் பக்கம் உங்கள் பக்கம் இருக்கும் கோபம் நியாயமானதே! அதற்கு காரணம் அரசியல் பன்னாடைகள் என்பதே உண்மை!!

முத்து குமார் உடலை ஊர் ஊராக எடுத்து பிரச்சாரம் செய்ய விடாமல் தடுத்தது யார்?எப்போது பிணத்தை எடுப்பார்கள் என வினவியது யார்? எல்லாம் தமிழக அரசியல் கழிசடைகள்.கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஈழ ஆதரவாளர் போராட்டத்தினை வக்க்கீல்கள்=போலிசு போராட்டமாக மாற்றி பிறகு ஈழ ஆதர்வு அரசியல்லுக்காக கன்னட செயலலிதாவை முன்னிறுத்தி.. எல்லாம் இன்று உல்டாவாகி போய் நிற்கிறது! இந்த புரட்சிகர கம்முனாட்டிகாள் பற்றி ஒன்று சொல்லவிரும்புகிறேன் ஈழ பிரச்சனை எடுத்து கொண்டு காஷ்மீர் பிரச்சனையும்,நாக இனப்பிரச்சனையும் இணைத்து லிங்க் கொடுப்பது ஒரு கழிசடை செயல் இவன்களுடைய கோசத்தினை கேட்கும் போதே ரோக்காரன் மேலிடத்திற்கு எடுத்து போயிருப்பான் இனி சொல்ல என்ன இருக்கிறது வழக்கம் போல எல்லா பன்னாடைகளும் புலி தோல்வி ஏன் என ஆராயச்சி செய்ய வெளிவந்துட்டான் ..இவனுங்க எழுத்தெல்லாம் அப்படி என்ன உள்ள்தோ இலக்கியவாதிகள் தான் ரசம் சாம்பார் என திரிகிறார்காள் இவனுங்களுடைய எழுத்தை படித்தா தூக்கம்தான் வருகிறது... அதில் உங்கள் சார்ப்பு பார்க்கும் போது ஒன்று தான் நினைவு வருகிறது
http://www.youtube.com/watch?v=nPd01YOukNM

truthseeker said...

துக்கம் அனுஷ்டிக்கும்போது இப்படி யாரேனும் அறிவுரை கொடுத்துக்கொண்டிருந்தால் எரிச்சலாகத்தான் இருக்கும்.

ஆனால், மருந்து கசப்பாகத்தான் இருக்கும். சில சமயம் உமட்டவும் செய்யலாம். ஆனால் அது அப்படித்தான் இருக்கும். வினவு போல இனிக்கப்பேசும் கயவர்கள் புதைகுழிக்குள்தான் தள்ளுவார்கள். கடுமையாக பேசுபவர்கள் உங்களை மீட்கவே அவ்வாறு கடுமையாக பேசுகிறார்கள் என்று புரிந்துகொள்ளுங்கள்.

இங்கே பலர் எல்லா அஹிம்சை போராட்டமும் பார்த்துவிட்டுத்தான் வன்முறையை கையில் எடுத்தார்கள் என்று எழுதியிருக்கிறார்கள். அது உண்மைதான். ஆனால், அஹிம்சை போராட்டம் நீண்டது. பொறுமையானது. நீங்கள் திட்டும் எழுத்தாளர்களே ஆசாத்துக்கும் நேருவுக்கும் நடந்த உரையாடலை பதிந்திருக்கிறார்கள். விடுதலை என்பது மெதுவாக பரிணமிக்க வேண்டும். அடித்து பிடுங்கிவிடலாம் என்று இறங்கினால், சாதாரண மக்கள்தான் இறந்துபோவார்கள். அதனைத்தான் திரும்பத்திரும்ப அவர்கள் சொல்கிறார்கள். வன்முறைமிகுந்த மனித ஆழ்மனம் அப்படித்தான் வன்முறையில் பிடுங்கிவிடலாம் என்று இயம்புகிறது. மிருக உணர்ச்சியை அடக்கி மனிதநேயத்தை போற்றுங்கள் என்று அவர்கள் கேட்கிறார்கள்.

அவர்களுக்காகவே போராடுகிறோம் என்று சொல்லி அவர்களை கொன்று சாதிக்க முனைவது என்ன? மக்களை கொன்று நாடு எதற்கு? சுய சொறிதலுக்கா? பார் நான் போராடி பெற்றுவிட்டேன் என்று தம்பட்டம் அடித்துகொள்ளவா? உண்ணாவிரதத்தை கூட கொலை போல செய்கிற வன்முறை மனதின் மூலம் அடைந்தது என்ன? வெறும் கொலைகள்தான். மனித உயிர்கள் மறைந்ததுதானே மிச்சம்?

இங்கே வினவு வந்து உங்களுக்கு சொறிந்துவிட காரணம், அவர் கும்பிடும் தெய்வங்களான ஸ்டாலின், மாவோ போன்ற கொலைகாரர்களை ஜெமோவும், சாருவும் சாத்தியதுதான்.

மக்களுக்காகத்தான் , மக்களின் உரிமைகளுக்காகத்தான் போராட்டம்.

முட்டை உடைக்காமல் ஆம்லெட் செய்யமுடியாது என்று மனித உயிர்களை வைத்து வீரவசனம் பேசுபவர்களை புறந்தள்ளுங்கள்.

இதுவும் கசப்பாகத்தான் இருக்கும் என்று தெரியும். ஆனால் என்ன செய்வது? சொல்லத்தோன்றியது. சொன்னேன் அவ்வளவுதான்.

vanathy said...

தமிழ் நதி ,
கடந்த பல நாட்களாக மிகப் பெரிய மன உளைச்சலில் என்ன செய்வதென்றே தெரியாத தவிப்பில் இருக்கும் பல ஈழத்தமிழர்கள் இவர்கள் மட்டுமல்ல ,இவர்களைப் போன்று இன்னும் பலரும் சொல்லும் கருத்துக்களால் வேதனையின் உச்சக் கட்டத்தில் இருக்கிறோம்.

போர் நடந்தபோதும் இப்போது அதன் பின்னும் நடந்தேறும் நிகழ்ச்சிகளினால் எதிர்காலத்தில் அங்கிருக்கும் தமிழர்களைக் காப்பாற்ற செயல் திட்டங்களை வகுக்காவிட்டால் இன்னும் ஓரிரு தலைமுறைகளில் அங்கு ஈழத்தமிழர்கள் என்ற இனமே சிங்கள பேரினவாதிகளால் அழிக்கப் பட்டு விடுமோ என்ற மிகப் பெரிய பயம் யதார்த்த பூர்வமாக கண் முன் தென்படுகிறது.

இப்படியான இக்கட்டான சூழ்நிலையில் கூட ,பாதிக்கப் பட்ட மக்களுக்கு ஆதரவாகவோ ,அல்லது மனிதத்திற்கு எதிராக நடந்த சிங்கள அரசுக்கு ,அந்த சிங்கள அரசுக்கு எல்லாவிதமான உதவியும் செய்த உலக நாடுகளுக்கு எதிராகவோ ஒரு கருத்துக் கூட கூறாத இவர்களைப் போன்றவர்களைக் காணும்போது மானுடம் ,மனிதாபிமானம் என்பதெல்லாம் வெறும் வார்த்தைகள் தானோ என்று எண்ணத் தோன்றுகிறது.

லட்சக் கணக்கில் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளார்களே ,அவர்களின் வலி இவர்களுக்கு தெரியவில்லையா ?
உணர்வுகளே இல்லாத வெறும் கோட்பாடுகளும் ,மனிதாபிமானமே இல்லாத அறிவுஜீவித்தனமும் ஈரமில்லாத வறண்ட மனங்களைத்தான் காட்டுகின்றன.

ஈழத்தமிழர் படும் அவலத்தைக் கண்டு கண்ணீர் விட்டால் ,உலகில் மற்ற இனத்தவரும் அவலத்துக்கு உள்ளாகிறார்கள் தானே.,ஏன் இதற்ககு மட்டும் கண்ணீர் விடுகிறீர்கள் என்று கேட்கிறார்கள்.
இவர்கள் சொல்ல வருவது என்ன?
என் பிள்ளை விபத்துக்கு உள்ளானால் என் மனம் தவித்தால், அங்கே நானூறு மைல்களுக்கு அப்பால் உள்ள நகரத்தில் இன்னொரு பிள்ளைக்கும் இதே நிலைதான் ,அப்படியிருக்கும்போது ,உங்கள் பிள்ளைக்காக நீங்கள் எப்படி அழலாம் என்று கேட்பது போல உள்ளது.
அங்கே நானூறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் பிள்ளைக்கு நடப்பதற்கும் எங்களுக்கு வருத்தம்தான் ,ஆனால் எமது பிள்ளைக்கு நடக்கும் போது அதை நெருக்கத்தில் இருந்து உணர்கிறோம்.தமிழருக்கு மட்டுமல்ல எந்த இனத்துக்குமே அது இயல்புதானே.

இன்று ஈழத்தமிழருக்கு நடக்கும் கொடுமைகளைக் கண்டு வேதனைப் பட தமிழராக இருக்கக் கூடத்தேவையில்லை ,மனிதராக இருந்தாலே போதும்.

இன்னொரு சாரார் புலிப்பாசிசம் என்ற பழைய பல்லவியையே இன்னும் பாடிக் கொண்டு இருக்கிறார்கள்.இப்போதுதான் புலிகள் எல்லாம் அழிந்துவிட்டார்கள் என்று சொல்கிறார்களே ,நீங்கள் அங்கிருக்கும் மக்களுக்கு விமோசனம் வருவதற்கு என்ன செய்வதாக உத்தேசம்?சிங்கள அரசோடு பேசி தமிழர்களின் உடனடித்தேவைகளையும் அதன் பின்பு எதிர்கால அரசியல் தீர்வையும் காண்பதற்கு உங்களிடம் ஏதாவது திட்டங்கள் உள்ளதா ?

இன்னும் சிலர் வந்து எவன் செத்தால் உங்களுக்கு என்ன ,ஏன் இங்கே தமிழகத்தில் இழவுப்பாட்டு பாடுகிறீர்கள் என்று கேட்கிறார்கள் .உலகமயமாக்கலும் நுகர்வோர் கலாச்சாரமும் மனிதர்களை இப்படி இரக்கமற்றவர்களாக முழுச் சுயநலவாதிகளாக மாற்றிவிட்டதா?

இந்திய தேசியவாதிகள் வந்து சொல்கிறார்கள் ,ஏன் தமிழ் தமிழர் என்று குறுகிய சிந்தனையில் இருக்கிறீர்கள் என்று.
இருபத்தைந்து மைல் தூரத்தில் இருக்கும் மக்களுக்காக கண்ணீர் வடித்தால் அது குறுகிய மனப்பான்மை ,குண்டுச்சட்டிக்குள் குதிரை ஊட்டுவது. அப்படி என்றால் உலகமே ஒரு கிராமம் என்ற பின்பு செயற்கையான நாடுகள் என்ற எல்லைகள் எதற்கு ?,இந்தியா என்ற குறுகிய சிந்தனையைத் தவிர்த்து பாகிஸ்தானியர்களையும் மனிதர் என்று பார்த்தால் காஷ்மீருக்காக போரே இல்லாமல் அமைதி காக்கலாம்தானே?

இன்னும் சில பேர் ,இவர்கள் மனித உரிமை பற்றிப் பேசுவார்கள் ஒடுக்கப் பட்டவர்கள் பற்றிப் பேசுவார்கள் ,கருத்து சுதந்திரம் பற்றிப் பேசுவார்கள் ,இந்த எல்லாம் தெரிந்த 'ஞாநிகளுக்கு' தமது பக்கத்து நாட்டில் ஒரு மனிதக் கூட்டத்துக்கு எதிராக நடந்த கொடுமை மிகுந்த போர் பற்றி ,அங்கு சிங்கள அரசு நடத்தும் மனித உரிமை மீறல்கள் ,இன அழிப்பு ,பத்திரிகையாளர்கள் மீதான இலங்கை அரசின் ஒடுக்கு முறை எல்லாம் பெரிய விஷயங்கள் இல்லை ,எத்தனை ஆயிரம் தமிழர்கள் உயிர் இழப்பதோ அல்லது பேரினவாத அரசினால் அடிமைப் படுத்தப் படுவதோ இவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை.

மிக நீளமாக எழுதி விட்டேன் ஈழத்தில் எமது மக்களின் அவலம் என் போன்றோரை ஒரு நடைப் பிணமாகவே ஆக்கிவிட்டது.நெஞ்சிலே ஒரு வெற்றிடம் குடி கொண்டு விட்டது .ஈழத்தமிழ் மக்கள் பட்ட, படுகின்ற ,இனிமேல் படப் போகின்ற வேதனைகளை நினைத்தால் நெஞ்சே வெடித்துவிடும் போலுள்ளது ,மாலுமி இல்லாத கப்பலில் இருக்கும் மக்கள் ஒரு புயலில் அகப்பட்டுக்கொண்டு தவிப்பது மாதிரியான ஒரு உணர்வு இதயத்தை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது.
இப்படியான நேரத்தில் சிலரின் கருத்துக்கள் இந்த உணர்வை இன்னும் மோசமாக்குகிறதே என்ற வருத்தம் தான் என்னை எழுதத் தூண்டியது ..

-வானதி

யாரோ அவன் யாரோ said...

நாளையே 'இப்படித்தான் கக்கூசுக்குப் போகவேண்டும்'என்றொரு புத்தகம் எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை////

சாரு எழுத ஜெயமோகன் முன்னுரையுடன் உயிர்ம்மை வெளியிடும்...

He likes Wine, Women and Gods..

யாரோ அவன் யாரோ said...

தானும் ஒரு அப்பட்டமான காலனிய ஏகாதிபத்திய ஆதரவாளன் என்பதைத்தான் சாரு நிருபித்திருக்கிறார்.....///

well said...

Anonymous said...

Sister, can you please change the word "Defeat" from your title. What happened now is the Armed Freedom Fight over (or temporarily over). As long as Tamil's do not get their rights, the freedom fight will continue in different forms....
Don't worry about Charu or Jayamohan....they don't know much about these....

sugan said...

முன்னொரு காலத்தில் யுத்தம் இருந்தது!
*************************************
மகிந்த மாத்தய எங்கள் மரியாதையை ஏற்றுக்கொள்ளுங்கள்
................................
அரசு என்பது ஆச்சிரமம் நடத்திக்கொண்டிருக்கும் அமைப்போ
அல்லது தேர்தல்களை நடத்தி உறுப்பினர்கள் மந்திரிகள் முதன்மந்திரி உள்ளிட்ட பாராளுமன்ற அமைப்புமுறைமூலமாக மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அமைப்போ அல்ல என நாம் பட்டுணர்ந்துள்ளோம்.

பொலிஸ்- இராணுவம்- நீதிமன்றம் - சிறைச்சாலை-இவற்றால் ஆனதுதான் அரசு இயந்திரமென்ற அரசறிவியலுக்கு அப்பால் அரசு
சமகாலத்தில் எப்படித்தொழிற்படும் என்பதற்கான ஆகச்சிறந்த உதாரணமும் சர்வதேசம் உலக ஒழுங்கு எப்படி இருக்கின்றது என்பதற்கான எடுத்துக்காட்டாகவும் நாம் நமது இலங்கை அரசைக்கேள்விக்கிடமின்றி சிறப்புதாரணம் கொள்ளமுடியும்.

அதேநேரத்தில் விடுதலைப்போராட்டம் என்பதன்பேரால் எப்படியான கொடூரங்களும் பயங்கரங்களும் உச்சபட்சமாக நிகழ்த்தமுடியும் என்பதற்கும் இந்த உலகத்தின் புத்தாயிரத்தின்தொடக்கத்தில் புதிய தசாப்தத்தில் நடந்துமுடிந்த நிகழ்வுகள் நமக்குமுன்னால் அள்ளிநிறைந்து கிடக்கின்றன.
.
போர் முடியும் என எல்லோரிடமும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இருந்தபோதிலும் நல்லமாதிரி முடியவேண்டுமென இருந்த அசட்டு நம்பிக்கை
அபத்தமாக அவலச்சுவையுடன் முடிந்துள்ளது.இப்பேரழிவின் சுழலிலிருந்து கிழக்குமாகாணம் தன்னை மிகவும் புத்திசாலித்தனமாக விடுவித்துக்கொண்டிருக்கிறது.

யுத்தத்திற்குப்பின்னான காலம் குறித்து புகலிடக் கவிதை ஒன்று இப்படிச்சொல்கிறது.

"இறக்கப்பிறந்தவனைச் சாகப்பண்ணி.... அதற்கொரு காரணம் சொல்லி கைதட்டுக்கேட்கும் காலம் அகன்றிருக்கும்.."

இந்தப்போரிலே ஈடுபட்டுத்தப்பியோடியவர்களுக்குத்தான் தெரியும் அதனது பயங்கரங்களும் அவலங்களும்.
நமது மாவீரர் குடும்பங்கள் இனி எப்படி எதிர்கொள்ளப்படும் என்பதை எழுதாமல் இருப்பது அவர்கள் மரணங்களைக் கொச்சைப்படுத்தாமல் இருக்க உதவும்.
தியாகிகள்-துரோகிகள் எனப்பிளவுபடுத்தப்பட்ட சமூகவகைப்படுத்தலிலிருந்து
இந்தப்போர்முடிவு மாபெரும் விடுதலையை அழித்திருக்கிறது.
இந்தவகையில் மகிந்த மாத்தயா எம் மரியாதையை ஏற்றுக்கொள்ளுங்கள்.அகதிமுகாங்களுக்கு தமிழரசியற்தலைவர்களின் பெயரைச்சூட்டிய உங்கள் நுண்ணுணர்விற்காக சிறப்பு மரியாதையையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

சிங்கள சினிமா மட்டுமல்ல சிங்கள அரசியலும் உலகத்தரம் வாய்ந்தது என மாத்தையா நீங்கள் நிறுவியிருக்கிறீர்கள்.

தேசியப்பெருமிதங்களும் இனப்பெருமைகளும் எங்குதானில்லை?

இனம்-மொழி-தேசம்-தன்னாட்சி- சுயநிர்ணய உரிமை-விடுதலை-உரிமை - சுதந்திரம் - இவற்றிற்கு எதிர்மறையான அர்த்தங்களை வழங்கியதென்றவகையில் மோசமான முன்னுதாரணமாகவும் சர்வதேச போராட்ட சக்திகளுக்கும் எதிர்ப்பியக்கங்களுக்கும் குழப்பத்தையும் நம்பிக்கையீனத்தையும் எச்சரிக்கையையும் வழங்கியிருக்கிறோம்.

இந்த முப்பதாண்டுகாலத்தில் இந்தப்போரிற்கான எதிர்ப்பில் இந்த யுத்தம் நிறுத்தப்படவேண்டும் என மிகவும் மெலிதான ஈனஸ்வரத்தில் ஒலித்த எப்போதும் ஒலித்துக்கொண்டிருந்த போர் எதிர்ப்புப் போராளிகளுக்கு இந்த போர் முடிவு கசப்பான வெறுமையான வேதனையான துயர்மிகுந்த வெறுத்துப்போன மனநிலையை அளிக்கிறது.

""இந்த அராஜக யுத்தங்கள் நாகரீக சமுதாயத்தின் நல்விழுமியங்கள் அனைத்தையும் தடயமே இல்லாமல் குழிதோண்டிப்புதைத்தன" "என சிங்கள சமூகத்தின் புரட்சியாளரான தயபால திராணகம ஆயிரத்தித் தொளாயிரத்து தொண்ணூறாம் ஆண்டில் "துப்பாக்கிக்கலாசாரத்திலிருந்து மீள்வது எப்போது?" என்றதனது கட்டுரையில் நமது புகலிட சஞ்சிகையில் குறிப்பிடுகிறார்.
.
"செம்மனச்செல்வி சிவபெருமானுக்கு அடித்த அடி ஏன் எல்லா உயிர்கள்மேலும் படவேண்டும்.அடிக்க ஒருபிரம்பு இருந்ததால் .." என்ற நியாயமான கேள்வியிலிருந்து "ஆயுதங்களை வீசி எறிவோம் கடலுக்குள்...." என்பதுவரை போர் எதிர்ப்பில் இலக்கிய முகம் எதிர்ப்பு இலக்கியமாகவே இருக்கிறது.

துப்பாக்கிகளின் பேரைச்சொல்வதே கெளரமாகிப்போன தேசத்தில் மானுடத்தை யார் மதித்தார்....என கவிதை மானுட மேன்மைக்காக அழுதிருக்கிறது.

அறம் ஆன்மீகம் சகோதரத்துவம் அன்பு கருணை பரிவு நேசம் இவற்றிற்கும் சக மனிதரை மதித்தல் என்ற பக்குவத்திற்கும் இனி தமிழ்ச்சமூகம் தயாராகவேண்டியுள்ளது.

சுகன்

Anonymous said...

தோழி தமிழ்நதிக்கு,
உங்கள் வலைப்பூவை தொடர்ந்து வாசிக்கிறேன்.

500/1000 பக்க தலையனை தயாரித்து விற்பவன் ஜெயமோகன், அவன் தமிழனே அல்ல மலையாளத்தான். எந்த மலையாளத்தான் தமிழனுக்கு நல்லது செய்வான்? விஜய் நம்பியார்? சிவசங்கர மேனன்? ஜெயமோகன்?

அவன் (ஜெயமோகன்)சுயமோகி என்றால் இவன் (சாரு நிவேதிதா) ஆண்மோகி. அவனே ஒரு குழப்பவாதி, ஆணா பெண்ணா என்று தெரியாதவன். தாயோடும் மகளோடும் உறவு கொள்பவன். மஞ்சள் பத்திரிக்கையில் எழுத வேண்டியதை எல்லாம் இலக்கியம் என்பவன். (வாட்டசாட்டமான ஆண்கள்) நட்போடு கை கொடுத்தால் காமத்தோடு உள்ளங்கையை சுரண்டுபவன். ஆண் சுகத்திற்காக பிரான்சு லண்டன் என்று அலைபவன். தன் வக்கிர பால் உணர்ச்சிகளை இலக்கியம் என்று சொல்லிக் கொள்பவன். தன் ஆண்மோக வடிகாலுக்கு ஒரு பெண்ணை போல் எழுதி http://vijisekar.wordpress.com/ ஊரை ஏமாற்றுபவன்.

சிற்றின்பத்தில் திளைக்கும் இவனும், மலையாள இலக்கியம் படித்து தானும் மலையாளி என்று நினைத்துகொள்ளும் ஜெயமோகனும் தமிழ் இலக்கிய உலகின் சாபங்கள். விளம்பரப் பிரியர்கள்.

இவர்கள் சொன்னதை நீங்கள் ஏன் பெரிதாக எடுத்துக் கொள்கிறீர்கள்? உங்கள் வலைப்பூ கண்டனத்தை வைத்து விளம்பரம் தேடிக் கொள்வார்கள் இருவரும்.

அடிப்படை உரிமைகளுக்காக கனவு, நட்பு, உறவு, காதல், தூக்கம், பசி, மறந்து தன் இன்னுயிரை துச்சமென மதித்தது நாளைய, வருங்கால சந்ததிகளின்சுதந்திர காற்றுக்காக இன்னுயிர் நீத்த 40,000 புலிகளை பற்றியும் த்யாகம் பற்றியும் இவர்களுக்கு புரியாது. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்.

யாழினி அத்தன் said...

தமிழ்நதி,

நீண்ட இடைவெளிக்கு பிறகு பதிவுகள் இட ஆரம்பிக்கிறேன். வணக்கம்.

உங்கள் நியாயமான வாதத்தை தெளிவாக எடுத்துரைத்துள்ளீர்கள். இங்கே பிரச்சினை என்னவென்றால் ஒரு ஈழத்தமிழனின் உண்மை வலியை அவன் மட்டுமே ஆழப்பூர்வமாக உணர்ந்து கொள்ள முடியும். உணர்வாளர்கள் என்றும் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்வார்கள் (இழவு வீட்டைப் போல). அறிவாளிகள் "இப்படி செய்" "அப்படி செய்"என்று எரிச்சலூட்டுவார்கள். சாரு-வும் ஜெயமோகனும் "psuedo intelligents" அதாவது அரைவேக்காடுகள். சாரு இளையராஜாவின் திருவாசகத்தை ஒரு முட்டாள் மாதிரி காழ்ப்புணர்ச்சியில் வர்ணித்ததை நான் இன்னும் மறக்கவில்லை. பஞ்சு மெத்தையில் தூங்குபவர்களுக்கு பாயின் படுத்துறங்கும் அசெளகரியம் எங்கே தெரியப்போகிறது??

யாழினி அத்தன் said...

வணக்கம் தமிழ்நதி. நீண்ட இடைவெளிக்குப் பின் எழுதுகிறேன்.

ஒரு பக்கம் டைப் செய்து பதிவு பொத்தானை அழுத்தினால் பதிவைக் காணோம்.

ஒரே செய்தி மட்டும் சொல்ல முற்படுகிறேன்.

"பாம்பின் கால் பாம்பறியும்"

"பஞ்சு மெத்தையில் உறங்குபவனுக்கு பாயின் அசெளகரியம் எப்படி தெரியும்"

Anonymous said...

இவங்கட எழவு இலக்கியம் யாருக்கு வேணும்? கலைஞர் முத்தமிழ் அறிஞ்ஞர். கவிதை எழுதுவார் கதை எழுதுவார் காவியம் வசனம் எல்லாம் எழுதுவார். இதனால் முத்தமிழ் காவலர். கலைஞரின் இந்த பட்டத்தால் அவரை யாரும் எதிர்க்க முடிந்ததில்லை. அது பாரதிராஜாவாகட்டும் சீமானாக்கட்டும் வைரமுத்து ஆகட்டும் எவராயினும் இலக்கிய உறவை முறித்து ஈழத்தமிழர் படுகொலை செய்யப்பட கண்மூடிக்கிடந்த கலைஞரை தூக்கி எறியமுடிந்ததில்லை.

எமது மக்களில் இருந்தே எமக்கான இலக்கியம் தோன்றுகின்றது. வரலறு பதியப்படுகின்றது. இவற்றை கையாளத் தெரிந்தவர்களான இலக்கிய வாதிகள் பிரபலமாகின்றார்கள். மக்கள் அவலப்படுகையில் ஏன் என்று கேட்காத எந்த இலக்கியவாதியும் அவனது படைப்புக்களும் எமக்கானவை இல்லை. அவனது படைப்புளின் மீதான மதிப்பால் அவனை ஆதரிக்க முடியாது. அது தர்மத்துக்கு விரோதமானது. இன்று கலைஞர் படைத்த ஒரு காவியம் பெரியவிடயம் இல்லை. படைப்புக்களோடு சேர்த்து தூக்கி எறிய தயங்கக் கூடாது.

எம்மக்களின் வாழ்வை வைத்து இலக்கியம் படைத்து அவர்களை படிக்கவைத்து பதவி பட்டம் புகழ் செல்வம் பெற்று அந்த மக்களுக்கு கொள்ளி வைப்பதும் துணைபோவதுமான ஒருவனின் எந்த ஒரு முன்னைய உன்னத படைப்பும் அருவருக்கத்தக்கது.

NewWorldOrder said...

Thanks Tamilathi for flaying the false-skin of these writers. why should we concern about these chameleons? we need to go in our path to get the rights of Eelam Tamils. Don't heed to these stupid writers.

கண்டும் காணான் said...

தற்போதுதான் திடீர் எனக் கண்டுபிடித்தது போல
சில ஜனநாயக இலக்கிய வாதிகளின் பேனா
ஈழப் போர்ராட்ட முறையே தவறு எனும்போதுதான்
புலிகளை இழந்தது , இதயத்தில் சுடுகின்றது

http://kandumkaanaan.blogspot.com

Anonymous said...

you are useless refugee. go back to your country, if you live in india repect indian laws .

you dont have any rights to comment about my country., get lost

Anonymous said...

திரைப்பட வாய்ப்பிற்காக தான்
எழுதியதை இணையதளத்திலிருந்து தானே எடுத்துவிட்டு, நடிகர் சங்கத்தில்
மன்னிப்புக் கேட்ட ஜெயமோகன்
பணம் தேவையில்லை, நான் எழுதியதற்கு மன்னிப்புக் கேட்க
மாட்டேன் என்று உறுதியாக
நிற்கவில்லையே. நடிகர் சங்கம்
தடை விதித்தால் வசனம் எழுத
முடியாது என்பதால் பணத்திற்காக,
வாய்ப்பிற்காக சமரசம் செய்து
கொண்டவர் ஈழமக்கள் போராட்டத்தை
கொச்சைப் படுத்தி எழுதுவதும், அறிவுரை கூறுவதும் எத்தனை அபத்தம்.

ஜெயமோகன்,சாருவை ஈழத்தமிழர்கள்
புறக்கணிக்க வேண்டும். அவர்கள் எழுதியதை வாங்கமாட்டோம் என்று
முடிவெடுத்து நிராகரிக்க வேண்டும்.
தங்களுக்கு பொருளாதார பாதிப்பு
ஏற்பட்டால் இவர்கள் மன்னிப்புக்
கேட்கத் தயங்கமாட்டார்கள். அப்போது
பிராபகரன் புகழ்பாடவும் இவர்கள்
தயாராக இருப்பார்கள். எனவே இவர்களின் படைப்புகளை வாங்குவதை ஈழத்தமிழர்கள் நிறுத்த
வேண்டும். ஈழத்தமிழர் காசில் ஆஸ்த்ரேலியா,ஐரோப்பா சென்றுவரும் ஜெயமோகன்களுக்கும்,
சாருக்களுக்கும் அதுதான் சரியான
பதிலாக இருக்க முடியும்.

நம்பி.பா. said...

கூர்மையான வார்த்தைகளில் எழுதியிருந்தாலும் மிகவும் தெளிவாக உங்கள் விமர்சனத்தைப் பதிவு செய்திருக்கிறீர்கள்!

தமிழ்நதி said...

நண்பர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்.

அனானியாக வந்து பின்னூட்டம் விடும்போது எந்த முகத்தையும் கற்பனை செய்ய முடிவதில்லை. குறைந்தபட்சம் உங்கள் பெயரையாவதும் கருத்தின் முடிவில் குறிப்பிடுங்கள். 'பெயரில் என்ன இருக்கிறது?'என்று தயவுசெய்து கேட்டுவிடாதீர்கள். நிச்சயமாக எதுவோ இருக்கிறது.

---
பாண்டியன்,

முத்துக்குமார் என்ற அற்புதமான இளைஞன் கேட்டுவிட்டுப் போன கேள்விகளை அதிகாரத்தின் விரல்கள் எப்படி அழித்தன என்பதை நீங்கள் பார்த்தீர்கள் அல்லவா? இந்நிலைதான் இனி இங்கு தொடரும். யாராவது தூய்மையும் அர்ப்பணிப்பும் நிறைந்த இளைஞர்கள் இந்த அதிகாரங்களைக் கேள்வி கேட்டுத் திரளும்வரை இதுவே தொடரும். அதற்கு நூற்றாண்டுகளும் காத்திருக்கவேண்டியேற்படலாம்.
------------

ஆத்மா,

பின்னூட்டத்தில் நீங்கள் வினவுவோடும் கதைத்திருக்கிறீர்கள். அதற்கு அவர் பதில் சொல்வார். அவர் என்னை எதற்காக 'சொறிந்து'விட வேண்டும்? 'எதிரிக்கு எதிரி நண்பன்'என்ற அடிப்படையிலா? எல்லாவற்றையும் அப்படி ஏன் நாம் பார்க்கவேண்டும்?

உங்கள் வார்த்தைகள் எனக்கு சிறிய வருத்தத்தைத் தந்தன. ஆனால், நமது கருத்துக்குச் சார்பாக எல்லோரும் பேசவேண்டுமென்று எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

எனக்கு அயர்ச்சியாக இருக்கிறது ஆத்மா. இந்த மனிதர்கள் ஏன் போராட வெளிக்கிட்டார்கள் என்று முதலிலிருந்து மீண்டும் மீண்டும் ஆரம்பிப்பது அயர்ச்சியாக இருக்கிறது.
அஹிம்சைப் போராட்டத்துக்குப் பொறுமை வேண்டும் என்று நீங்கள் கூறுவதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், கண்ணெதிரில் இவ்வளவு அநீதிகளைப் பார்த்துக்கொண்டு அஹிம்சையைக் கடைப்பிடிக்க முடியுமென்றா நினைக்கிறீர்கள். அதிலும் இளைஞர்கள். சில விடயங்கள் வாதத்திற்குத்தான் சரி; வாழ்க்கைக்கு அல்ல.

"வன்முறைமிகுந்த மனித ஆழ்மனம் அப்படித்தான் வன்முறையில் பிடுங்கிவிடலாம் என்று இயம்புகிறது. மிருக உணர்ச்சியை அடக்கி மனிதநேயத்தை போற்றுங்கள் என்று அவர்கள் கேட்கிறார்கள்."

என்று சொல்லியிருந்தீர்கள். எல்லா மனிதருக்குள்ளும் வன்முறை இருக்கிறது. நீங்கள் பரிந்துபேசும் ஜெயமோகனுக்குள்,சாரு நிவேதிதாவுக்குள்ளும் அது இருக்கவே இருக்கும். அது வெளிப்படும் அளவையும் வடிவத்தையும் தேர்வது சூழல்தான். மனிதர்கள் அல்ல. எனக்குப் பின்னால் இருளில் ஒருவன் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறான் என்றால், நான் ஒரு தடியை எடுத்து கையில் வைத்துக்கொள்வேன். அவன் என்னை நெருங்கினால் நிச்சயமாக அடிப்பேன். அது வன்முறையன்று. தற்காப்பு. எனக்குத் தீங்கு நேரிடுமோ என்ற பயத்தில் என்னைக் காத்துக்கொள்ளவே நான் தடியை எடுத்தேன்.இது மிக எளிதான விடயம். உங்களுக்கு இதை எல்லாம் விளக்கவேண்டியதில்லை. விடுதலைப் போராட்டமும் அப்படித்தான் பரிணமித்தது.

மக்கள் அழியாமலிருக்க அவர்கள் போராடினார்கள் என்று நான் சொல்கிறேன். அவர்கள் போராடியதனால்தான் மக்கள் அழிந்தார்கள் என்று நீங்கள் சொல்கிறீர்கள். மாற்றி மாற்றி இப்படியே பேசிக்கொண்டிருந்தால் 'கோழியிலிருந்து முட்டை வந்ததா... முட்டையிலிருந்து கோழி வந்ததா'போல நீண்டுகொண்டுதான் போகும்.

"பார் நான் போராடிப் பெற்றுவிட்டேன்"என்று பெருமிதம் காட்ட உயிரோடும் இருக்கவேண்டுமல்லவா? பல்லாயிரம் போராளிகள், தளபதிகள் களத்தில் மாண்டுபோனார்கள். உயிரைவிட்ட பிற்பாடு பதவி என்ன? பவிசு என்ன? யார் யாரிடம் பெருமிதம் பேசுவது?

----

தமிழ்நதி said...

வானதி,

"லட்சக் கணக்கில் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளார்களே ,அவர்களின் வலி இவர்களுக்கு தெரியவில்லையா ?
உணர்வுகளே இல்லாத வெறும் கோட்பாடுகளும் ,மனிதாபிமானமே இல்லாத அறிவுஜீவித்தனமும் ஈரமில்லாத வறண்ட மனங்களைத்தான் காட்டுகின்றன."

அதைத்தான் நானும் சொல்கிறேன். உயிர்போகும் தறுவாயில் இருக்கும் ஒருவன் தாகத்திற்குத் தண்ணீர் கேட்டால் தண்ணீர்தான் கொடுக்கவேண்டுமேயன்றி, 'நான் ஒரு கவிதை சொல்கிறேன் பார்'என்று ஆரம்பிக்கக்கூடாது. இவர்களுடைய பிரச்சனை என்னவென்றால் practical ஆக இருக்க முயலாதது. சாதாரண விடயங்களைச் சிக்கலாக்குவது. கருத்துருவாக்கங்கள் வேண்டும்தான். அதை இடம், சூழல் பார்த்துப் பேசமாட்டேனென்கிறார்கள். கிடைக்கும் இடங்களில் தங்கள் மேதாவித்தனத்தைக் காட்டிவிடத் துடிப்பது இவர்களின் வேலை. வெற்றுக் கோட்பாடுகளால் யாதொரு பயனுமில்லை. எளிமையாகப் பேசக்கூட இவர்களால் முடியாமல் போனதற்கு, இவர்களை 'உசுப்பிவிட்டவர்களும்'ஒருகாரணம். வானத்திலிருந்து இவர்களெல்லாம் தரைக்கு இறங்கிவரவேண்டும். அதுவே என் பிரார்த்தனை.

--
யாரோ இவன் யாரோ,

எப்படித்தான் இப்படிப் பெயர்களையெல்லாம் கண்டுபிடிக்கிறீர்களோ:)
நீங்கள் சொன்னது நடந்தாலும் நடக்கலாம். யார் கண்டது?

---

அனானி நண்பரே,

'தோல்வி'என்ற சொல்லை எனது தலையங்கத்திலிருந்து மாற்றிவிடக் கேட்டிருந்தீர்கள். அதில் ஒரு சின்ன அற்பத்தனமான அரசியல் இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்ளவேண்டும். இந்தக் கட்டுரை வழியாக நான் சில விடயங்களைச் சொல்ல நினைத்தேன். அது வெளியில் எடுத்துச் செல்லப்படவேண்டுமென்று கருதினேன். அதற்காக தலையங்கத்தில் 'தோல்வி'யைச் செருகினேன். தெரிந்தே செய்த தவறு. கட்டுரையில் இது தோல்வியன்று என்பதை விளக்கியிருக்கிறேன். நன்றி.

---

சுகன்,

நீங்கள் நான் நினைக்கும் சுகனாக இருந்தால், கீழ்க்கண்ட பந்தியையே உங்கள் நிலைப்பாடாக எடுத்துக்கொள்கிறேன்.

"இந்த முப்பதாண்டுகாலத்தில் இந்தப்போரிற்கான எதிர்ப்பில் இந்த யுத்தம் நிறுத்தப்படவேண்டும் என மிகவும் மெலிதான ஈனஸ்வரத்தில் ஒலித்த எப்போதும் ஒலித்துக்கொண்டிருந்த போர் எதிர்ப்புப் போராளிகளுக்கு இந்த போர் முடிவு கசப்பான வெறுமையான வேதனையான துயர்மிகுந்த வெறுத்துப்போன மனநிலையை அளிக்கிறது."

இந்தப் புள்ளியிலாவது நாம் சந்தித்துக்கொள்கிறோம் என்பதில் மகிழ்ச்சி. யாரோ சொன்னார்கள் "விடுதலைப் புலிகளின் வெற்றி என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் வெற்றியன்று; ஆனால், அவர்களின் தோல்வி என்பது அனைத்து தமிழர்களின் தோல்வியுமாகும்"என்று.

நிர்க்கதியான ஒரு நிலையில் நாம் எல்லோரும் நின்றுகொண்டிருக்கிறோம். இதில் கிழக்கு மாகாணம் மட்டும் புத்திசாலித்தனமாகத் தப்பித்துக்கொண்டதென்றா சொல்கிறீர்கள்? அழிவிலிருந்து தப்பித்தது ஆனால், இதன்பிறகான அடக்குமுறைகள் அனைவருக்கும் பொதுவானவைதாமே.

"அறம் ஆன்மீகம் சகோதரத்துவம் அன்பு கருணை பரிவு நேசம் இவற்றிற்கும் சக மனிதரை மதித்தல் என்ற பக்குவத்திற்கும் இனி தமிழ்ச்சமூகம் தயாராகவேண்டியுள்ளது."

என்ற உங்கள் வார்த்தைகளை முன்வைத்து நடக்கவேண்டியதுதான். போராட்டம் மக்கள்மயப்பட்ட நிலைக்கு நகருமெனில் மேற்கண்ட வார்த்தைகளும் நடைமுறைச் சாத்தியப்பாடுடையவையே.

----
அனானி நண்பரே,
(எத்தனை பேரைத்தான் இப்படி விளிப்பது? தயவுசெய்து உங்களுக்கு ஏதாவது பெயர் சூட்டுங்கள்)

"இவர்கள் சொன்னதை நீங்கள் ஏன் பெரிதாக எடுத்துக் கொள்கிறீர்கள்? உங்கள் வலைப்பூ கண்டனத்தை வைத்து விளம்பரம் தேடிக் கொள்வார்கள் இருவரும்."

அவர்கள் இருவரும் ஏற்கெனவே பிரபலமாக இருப்பவர்கள்தான். மேலதிக விளம்பரம் தேவையா என்ன? வேண்டுமென்றால், 'தமிழ்நதி என்றொருவர் இப்படி எழுதினார்'என்று எனக்குத்தான் விளம்பரம் ஆகிவிடும் போலிருக்கிறது:)

---------

தமிழ்நதி said...

ஏன் ஒரே பின்னூட்டத்தில் எல்லோருக்கும் பதில் சொல்லமுடியவில்லை என்று தெரியவில்லை. ஏதோ 'காரெக்டர்ஸ்'அதிகமாக இருப்பதாகச் சொல்கிறது.

வாருங்கள் யாழினி அத்தன்,

மீண்டும் வந்திருக்கிறீர்கள். உங்கள் இரண்டு பின்னூட்டங்களுமே கிடைத்தன. ஆம். நீங்கள் சொல்வதுபோல அவலங்களை வெளியில் நின்று பார்ப்பவர்களுக்கு அறிவுரை சொல்லத்தான் தோன்றும். இதில் எங்களைப் போன்ற ஈழத்தவர்களும் சளைத்தவர்களல்ல. நாங்கள் போரைப் பார்க்கும் விதத்திற்கும், போர்க்களத்தில் துப்பாக்கிச் சன்னங்களுக்கும் எறிகணைகளுக்கும் நடுவில் இருந்து போரைப் பார்த்துவிட்டு, இன்று தடுப்புமுகாம்களில் விழிகுத்தி அமர்ந்திருக்கும் மனிதர்களுக்கும் இடையில் கூட வேறுபாடுகள் இருக்கும். போர் வெற்றிகரமாக நடக்கும்போது எங்களுக்கொரு பெருமிதம். தோற்றபின் துயரம். அவர்களுக்கு? அது வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாததாக இருக்கும்.

----

"பாரதிராஜாவாகட்டும் சீமானாக்கட்டும் வைரமுத்து ஆகட்டும் எவராயினும் இலக்கிய உறவை முறித்து ஈழத்தமிழர் படுகொலை செய்யப்பட கண்மூடிக்கிடந்த கலைஞரை தூக்கி எறியமுடிந்ததில்லை. "

என்று சொன்ன நண்பருக்கு,

வைரமுத்து சரி. பாரதிராஜாவையும் சீமானையும் அப்படியா சொல்கிறீர்கள்? காங்கிரசுக்கு எதிரான பிரச்சாரம் என்பது கலைஞருக்கு எதிரான பிரச்சாரமாகவன்றோ பார்க்கப்பட்டது? நேரடியாக அவருடைய பெயரைப் பிரயோகிக்காத போதிலும். வைரமுத்து.... ஐயோ! நான் புலம்ப ஆரம்பித்துவிடுவேன் போங்க.

ஒருகாலத்தில் அவருடைய வித்துவக் கர்வத்தைப் பார்த்து வியந்திருந்தோம். இப்போது பொய்மையைப் போற்றுதலைக் கண்ணெதிரில் காண்கிறோம்.

----

நன்றி பி.எஸ்.குமார்,

நீங்கள் சொல்வதே இப்போது செய்யத்தக்கது.

---

அனானி எதிரிக்கு,

you are useless refugee. go back to your country, if you live in india repect indian laws .

you dont have any rights to comment about my country., get lost

என்று சொல்லியிருந்தீர்கள்.

First of all, I am not a refugee as you think. I am a tourist and journalist. I have all the rights to comment about the country which ruined our normal life.

----
நண்பரே,

"ஜெயமோகன்,சாருவை ஈழத்தமிழர்கள்
புறக்கணிக்க வேண்டும். அவர்கள் எழுதியதை வாங்கமாட்டோம் என்று
முடிவெடுத்து நிராகரிக்க வேண்டும்."

"இவர்களின் படைப்புகளை வாங்குவதை ஈழத்தமிழர்கள் நிறுத்த
வேண்டும்."

என்றெல்லாம் சொல்லியிருந்தீர்கள். என் ஒருத்தியின் முடிவில் என்ன இருக்கிறது? மக்கள் செத்துப் போவதா முக்கியம் ஐயா? அதைப் பற்றி அவர்கள் எழுதாவிட்டாலென்ன..தீவிர இலக்கியம் முக்கியம். அவர்களால் சொல்லப்படுகின்றன வரட்டுத் தத்துவங்கள் முக்கியம். மதம் பற்றிய அறிவு பெருக வேண்டும். அப்போதுதான் சகிப்புத்தன்மை வளரும். சகிப்புத்தன்மை அடிமைகளாக நீடிக்க வகைசெய்யும். ப்ச்!

பூங்குழலி said...

உங்கள் தமிழ் வசீகரிப்பதாக இருக்கிறது .

உங்கள் கோபம் நியாயமானது தான் .இத்தனை நாட்களாக ,வருடங்களாக சும்மா வேடிக்கை பார்த்தவர்களுக்கு இன்று ஆலோசனை சொல்ல உரிமை இல்லை என்றே சொல்ல வேண்டும்

இயல்வன் said...

தோழியருக்கு,
உண்மையான தமிழர்களின் உணர்வின் வெளிபாடு இதுவே.

//தேவதைகள் மௌனமாகிவிட்டால், பேய்கள் உச்சஸ்தாயியில் பாட ஆரம்பித்துவிடுகின்றன. இது பேய்களின் காலமும் களமுமாயிருக்கிறது. என்ன செய்வது?//

மிக சரியான வார்த்தைகள், இந்த பேய்களுக்கு, களத்தில் துயரபடுபவர்களின் துக்கம் எங்கே தெரியப்போகிறது. உணர்வினை உணராமல் வெறும் புத்தக செய்திகளை வைத்து வாசக கூட்டத்தை ஏமாற்றும் பித்தர்கள் இவர்கள். போராடும் மக்களோடு இவர்களை களத்தில் இறக்கிவிட்டாலும், தண்ணி அடிக்க பார் இல்லையே என்று தான் உயிரைவிடும் முண்டங்கள் இவர்கள்.

குறிப்பு: நானும் சாருவை வாசித்தவன் தான்.

Anonymous said...

சரியான சாட்டையடி
Renga

தமிழ்நதி said...

பூங்குழலி,

"உங்கள் தமிழ் வசீகரிப்பதாக இருக்கிறது."என்று சொல்லியிருந்தீர்கள். நன்றி. தமிழும் அத்தனை வசீகரம் பொருந்திய மொழியாக இருக்கிறது அல்லவா? எம்முடைய போதாமைகளால் அதை நாம் சரிவரக் கையாள்வதில்லை என்பதே உண்மை.

தமிழர்ஸ்.டாட்.கொம்.

இணைக்கிறேன்.

இயல்வன்,

உங்கள் பெயர் வித்தியாசமாக இருக்கிறது. 'களத்தில் கொண்டு போய் விட்டுவிட்டால்....' களத்தின் கொடுமை அவர்களுக்குத் தெரியாது. களமாடுபவர்களின் வேதனை அவர்களுக்குப் புரியவும் புரியாது. அவர்களது வாழ்க்கை குறிப்பிடத்தக்களவு போராட்டங்களைக் கொண்டிருக்கவுமில்லை. கூசாமல் அறிவுரை சொல்லமுடியும் அவர்களால்.

அனானி நண்பரே,

எப்படி இந்தப் பதிவுக்கு மட்டும் இத்தனை அனானிப் பின்னூட்டங்கள் வருகின்றன? உண்மையை உங்கள் பெயரில் சொல்ல அஞ்சுகிறீர்களா? என்னவோ போங்கள்...:(

சாட்டையை வேறு யாராவதுதான் விசிறவேண்டுமா..? ஏன் அது நீங்களாக இருக்கக்கூடாது?

உண்மை விளம்பி என்ற பெயரில் வந்து பின்னூட்டம் இட்டவருக்கு,

நீங்கள் பெரிய தகவல் களஞ்சியமாக இருப்பீர்கள் போலிருக்கிறது:) ஆனால், துரதிர்ஷ்டவசமாக உங்கள் பின்னூட்டத்தைப் பிரசுரிக்க இயலவில்லை. moderate பண்ணிப் பார்த்தேன். அதுவும் முடியவில்லை.

சாரு ஓரினச் சேர்க்கையாளர் என்பது உண்மையோ பொய்யோ அது அவருடைய தனிப்பட்ட விடயம் அல்லவா? அதைப் பற்றி நாம் பேசுவது அவசியமா நண்பரே...! ஆட்களைப் பற்றியல்லாது ஆக்கங்களைப் பற்றிப் பேசலாமே நாம்.

உங்கள் பின்னூட்டத்தில் இருக்கும் கெட்டவார்த்தைகளை (அதை அப்படித்தான் சொல்லிப் பழக்கமாகிவிட்டது) நீக்கிவிட்டு மறுபடியும் அனுப்புங்கள். நன்றி.

K.R.அதியமான் said...

1970கள் வரை காந்திய வழியில், ஈழத்தந்தை செல்வாவின் தலைமையில் போராடி, விரக்த்தியடைந்த பின்
தான் ஆயுத போர் ஆரம்பம் ஆகியது. காந்தியம் பிரிட்ஸ் அரசை எதிர்க்க பயன்பட்டது போல இட்லரின் ஃபாசிச ஆட்சியை எதிர்க சரிப்படாது என்பதை காந்தி அடிகளே உணர்ந்திருந்தார்.

70களில் 'பொடியன்கள்' ஆயுதம் ஏந்தி போராட்டத்தை ஆரம்பித்ததெல்லாம் சரியானதுதான். அது மிக மிக இயற்க்கையான ஒரு செய்க்கைதான். வேறு வழியே இல்லாவிட்டால் மனிதன் அதைதான் செய்வான். ஆனால் பின்னாட்களில்,
"விடுதலை" புலிகள் பாதை தவறி, பல கொடூரங்களை அவர்களே புரிந்ததுதான் பெரும் தவறு. மேலும், ஒரு கட்டத்திற்க்கு மேல், யதார்த்தை உணர்ந்து, ஒரு அமைதி உடன் படிக்கைக்கு உடன் பட்டு, ஈழத்திற்க்கு குறைவான,
ஆனால் இந்தியாவில் தமிழர் நிலை போல, ஒரு ஃபெடரல் அமைப்பை அடைய அரிய சந்தர்பங்களை வீணடித்தனர்
என்பதே எம் ஆதங்கம் / வருத்தம். 1994இல் சந்திரிகா அரசு அளித்த அருமையான வாய்ப்பை வீணாக்கியது தவறு என்று ஆன்டன் பாலசிங்கம் அவர்கள் 2003இல் கிளினோச்சியில் பேசும் போது தெரிவித்தார். அவரின் ஆலோசனைகளை
புலித்தலைமை கேட்க்கவில்லை என்பதே எம் ஆதங்கம். வீரம், தியாகம், அர்பணிப்பு போன்ற குணங்கள் மட்டும் பத்தாது. விவேகம் மற்றும் யதார்த்தை புரிந்து கொள்ளும் அறிவும் மிக மிக தேவை என்பதை இன்று உணர்கிறோம்.

சாருவிற்க்கு, உலக சினிமா, இலக்கியம், இசை பற்றி ஓரளவு தெரியும். ஆனால் அரசியல் மற்றும் பிற விசியங்கள் பற்றிய
அவரின் கருத்துக்களை இவ்வளவு சீரியசாக எடுத்துக்கொள்ள தேவையில்லை.

தமிழ்நாடன் said...

சகோதரி,
உங்கள் நியாயமான கோபம் எழுத்தில் தெரிகிறது. ஆண்மையற்ற/உணர்வற்ற/நேர்மையற்றவர்களிடம் ஆறுதல்களை எதிர்ப்பார்ப்பது மிக தவறு. ஆனாலும், இவ்விருவர்களின் ஈனத்தனத்தை மற்ற இணைய நண்பர்களுக்கு அடையாளப்படுத்தியமைக்கு நன்றி.

ஈழப்போராட்ட்ம் தோற்க்கவில்லை, அடுத்தக்கட்டத்திற்க்கு நகர்வதாகவே நினைக்கிறேன்.

தமிழர்கள் அனைவரும் உரிமையை பெற்றேடுக்க, நம்பிக்கையோடு தத்தமது வழிகளில் போராட வேண்டும்.

Unknown said...

அறிவுசீவிகள் என்று சொல்லிக்கொண்டு எதை வேண்டுமானாலும் பேசலாம், எழுதலாம் என்று நினைக்கும் இவ்வினத்துரோகிகளுக்கு சரியான குட்டு வைத்துள்ளீர்கள். ஆனால், தமிழனின் இழிவு என்னவென்றால், இவர்களைப் போன்றவர்களை பேசவிட்டு வைத்திருப்பதுதான். வேற்று இனக்குழுவில் இப்படி நடந்துகொள்பவர்கள் உடனே அகற்றப்படுவர், சுரனையற்ற தமிழனும், தமிழன் என்ற போர்வையில் உலவும் இனத்துரோகிகளும் உள்ள வரை இவர்கள் வாழ்ந்துகொண்டுதானிருப்பார்கள்.

காந்தியம் பேசுகிறார்களே, இன்றைக்கு ஒரு காந்தியவாதியையாவது இவர்களால் சுட்ட முடியுமா?, காந்தியின் பெயர் தாங்கியவர்களின் கோரத்தாண்டவத்தின் வெளிப்பாடுதானே நாம் கண்டவை.

உலகெங்கும் பரவிய எம்மினம் போர்ப்பரணி பாடியபோது புல்லாங்குழல் ஊதியக் கூட்டத்தினர்தானே இவர்கள்.

இவர்களுக்கு மலையாளம், ருசியா... வில் உள்ளதுதானே இலக்கியம், ஒரு முறையேனும் தமிழை உயர்த்தி பேசியிருக்கிறார்களா?

இவர்கள் படைக்கும் குப்பையெல்லாம் நமக்கு இலக்கியம், தமிழன் படைக்கும் இலக்கியமெல்லாம் இவர்கள் பார்வையில் குப்பைகள் தானே?

தமிழின் மேன்மை புரியாமல், அதற்கு நிகராக படைக்கும் திறனில்லாமல், வெளியிலிருந்து திருடி, காப்பி அடித்து தங்களைத் தாங்களே புகழ்ந்துகொள்ளும் சுயமோகிகள் தானே இவர்கள்.

இத்துரோகிகள் தக்க பாடம் படிப்பர், எம்மின வரலாற்றிலிருந்து அகற்றப்படுவர்.

தமிழீழம் மலரும், தரம்கெட்ட இவர்கள் தலைகுனிவர், தரணியில் விலக்கப்படுவர்.

நன்றி

Unknown said...

சாருவும், ஜெயமோகனும் மட்டுமல்ல. தமிழை மூலதனமாக்கி பிழைப்பு நடத்தி இன்று பல கோடிகளுக்கு சொந்தக்காரராக இருக்கும் ‘கவிப்பேரரசு’ வைரமுத்து ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்தாரா? வைகை அணைக்காக இடம் பெயர்க்கப்பட்ட தான் சார்ந்த சில நூறு கிராமத்து மக்களின் சோகத்தை எழுதி சாகித்ய அகாதமி விருது பெற்ற வைரமுத்து, இலட்சக்கனக்கான ஈழத்தமிழ் மக்கள் சொந்த நாட்டிலேயே படுகொலை செய்யப்பட்டும், சொல்லொனாத் துயரத்திற்கு ஆட்படுத்தப்பட்டும், அகதிகளாக இடம் பெயர்க்கப்பட்டுள்ளனரே..இதற்காக இந்தக் கவிப்பேரரசு குரல் கொடுக்காமல் மௌனமாய் இருப்பதேன்? இவர்களின் தமிழ் உணர்வும், இன உணர்வும் வெறும் பிழைப்புக்காகத் தானா? ஒருவேளை இனிமேல் ‘ஈழக்காவியம்’ எழுதி சில இலட்சங்களையும், சில விருதுகளையும் வாங்க முனைவாரோ?
இன்னொருவர் குறித்தும் எனக்குள் கேள்வி எழுகிறது. முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தான் பிறந்த இராமேஸ்வரத்திலிருந்து 18 மைல் தொலைவில் உள்ள தன் இன மக்கள் படும் துயரம் பற்றியோ, அங்கு நடக்கும் இனப்படுகொலை பற்றியோ இதுவரை எந்த கருத்தையும் வெளிப்படுத்தியதில்லை. ஈழத்தமிருக்காக இவரெல்லாம் குரல் கொடுத்தால் இந்திய அரசை பணியவைத்து போரை நிறுத்த ஏதுவாக இருக்கும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றும். ஆனால் எப்படி இவர்களால் இப்படி மௌனமாக இருக்க முடிகிறது என்ற கோவமும் வரும்.

மூர்த்தி

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

விட்டுத் தள்ளுங்கள் தோழி! இவர்களைப் போல அறிவுஜீவிகள் கூட்டம் கூட்டமாக இனி கிளம்பி வருவார்கள். உலகை உற்று நோக்கி விமர்சிப்பவர்களுக்கும், உலகம் உற்று நோக்க வேண்டுமென்றே விமர்சிப்பவர்களுக்கும் வித்தியாசம் உண்டு!

Unknown said...

அடப்போங்கடா...என்னால் முடிந்தது இவ்வளவே.... புலிகள் ஒன்றும் பெரிய மகாத்மாக்கள் இல்லை. 1983 ஜூலை கலவரத்துக்கும் அவர்கள்தான் காரணம். ஆனால் ஒரே ஒரு கேள்வி. 1983ல் புலி ராணுவத்தை அடித்தது. அரசாங்கத்தின் பார்வையில் புலிகள் பயங்கரவாதிகள். கொழும்பிலிருந்த அப்பாவித் தமிழனுமா பயங்கரவாதி? அவர்களைச் சிங்களக் காடைகளிடமிருந்து காப்பாற்றியிருக்க வேண்டாமா?? அதை அரசு செய்யவில்லை. ஆனால் புலிகள் செய்தார்கள். பதிலடி கொடுத்தார்கள் அப்போ, புலிகளை நாங்கள் ஆதரிப்பதில் என்ன தவறு?
அக்கா, தமிழ் நதி அக்கா, உவயளுக்கெல்லாம் நாங்கள் பட்ட பாடுகள் தெரியாது. உவையளுக்கு பதில் சொல்லிறதவிட வேற ஏதாவது செய்யலாம். தமிழ்நாட்டில முக்கால்வாசி மறைகழண்டு போய் திரியுது. அதுக்கு ஒண்டும் செய்யேலாது.

soorya said...

தோழிக்கு,
இங்கேயும் 2 சூர்யாக்களுள.
எங்கே போனாலும் இந்தப் பெயர் வைப்பது கடினந்தான்.
என்னைத் தாங்கள் நன்கறிவீர்கள்.
படிப்போர் மனசிலும் பின்னூட்டமிடும் உறவுகளிலும் சூர்யா... என்ற பேர் நாறிப்போய் ரணமாகி அந்தப் பெயர் வேண்டாமே என எண்ணத் தோன்றுகிறது.
எனை நீங்கள் அறிந்தவரைக்கும் இந்தப் பெயரிலேயே உலவுகிறேன். இனியும்.
நன்றி.
பெயரில்கூட வாழ வழியில்லை.
விட மாட்டாங்கள்.

Anonymous said...

அதியமான் அத்தார், வாங்கோ

பாலசிங்கத்தார் எப்ப சொன்னார், சந்திரிக்காவோட சமாதானப்போய் உரிமை பெற இருந்த சந்தர்ப்பத்தைத் தவறவிட்டது பிழையென?

அப்படியொ சந்தர்ப்பம் அறவேயில்லையென்பதுதான் அவரது நிலைப்பாடு. சந்தடி சாக்கில பாலசிங்கத்தார் சொன்னாரென ஒரு முழுப்பொய்யை அவிழ்க்காதீர்கள். சந்திரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் (உண்மையில் அது சந்திரிக்காவுடனானதன்று; சில அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைதான்) என்ன நடந்ததென்று பாலசிங்கம் தனிப்புத்தகமே எழுதியுள்ளார்.

தனங்களுக்குப் பாதை திறக்கவோ யாழ்ப்பாணத்துக்குப் பொருளாதாரத் தடையெடுக்கவோகூட விரும்பாத சந்திரிக்கா தான் அப்போதைய சமாதானத் தேவதையென்பதை நீங்கள் நினைவிற்கொள்ளுங்கள். அன்று யாழ்ப்பபாண மக்களுக்கான பொருளாதாரத் தடையை இறுதிவரை சந்திரிக்கா நீக்க முன்வரவில்லையென்பது குறிப்பிடத் தக்கது.

அடுத்த சமஸ்டி தொடர்பானது.
சமஸ்டி அமைப்பில் தீர்வைக்காணவும் அது தொடர்பில் பேசவும் தாம் தயாராயிருக்கிறோமென்று அறிவித்த புலிகளும், சமஸ்டி அமைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை; ஒற்றையாட்சிதான் தீர்வு என்று முழங்கிய சிங்களத்தரப்பும் இன்று உங்கள் கருத்தில் இடம்மாறி இருக்கிறார்கள். (ரணில் சமஸ்டிக்கு வந்தாரென்று பழைய புராணம் பாடிக்கொண்டு வரவேண்டாம். தாம் சமஸ்டி அமைப்பிலான தீர்வை ஆதரித்ததில்லை, எங்கள் கொள்கைளும் ஒற்றையாட்சியே என ரணிலும் ஐக்கிய தேசியக் கட்சியும் அறிவித்து உங்களுக்கு எப்போதோ ஆப்படித்துவிட்டார்கள்)
புலிகளைக் குறைசொல்வதை மட்டுமே முழுநேர நோக்கமாகக் கொண்டவர்களுக்கு நடந்தது, நடப்பது எதுவும் தெரியாது.

சரி குறைதான் சொல்கிறீர்கள், அதைக்கூட நேர்மையாகச் செய்யத் தெரியவில்லை. பொய் புரட்டுக்களைச் சொல்லித்தான் நீங்கள் புலிகளை விமர்சிக்க வேண்டிக்கிடக்கிறது பாருங்கள். அங்கேயிருக்கிறது உங்கள் புலியெதிர்ப்பு வங்குரோத்து.

-கொண்டோடி

தமிழ்நதி said...

அதியமான்,

உங்களால் கொண்டோடிக்கு இடப்பட்ட பின்னூட்டத்தை சில காரணங்களால், மனத்தடைகளால் இதில் பிரசுரிக்க முடியவில்லை. உங்கள் மின்னஞ்சல் முகவரியைத் தாருங்கள். தனி மடலிடுகிறேன். எல்லாம் பேசப்பட வேண்டும்தான். ஆனால் அதற்கு இது சமயமல்ல என்பது என் தாழ்மையான கருத்து. பேசலாம்.மின்னஞ்சல் முகவரியைப் பின்னூட்டமாக இடுங்கள். அதைப் பிரசுரிக்க மாட்டேன்.

K.R.அதியமான் said...

athi68@gmail.com (it is always available in my blogger profile) ;

and incidently, I have discussed the issues of LTTE and Eelam struggle and violations by both sides with Sunguna Diwakar many times. We agree about LTTE and other points. those who know better usually are not emotional about LTTE but weary and tired of its instrangience.

and you should post my comment freely, i belive. esp the link about the Lost oppurtunietes for Tamils. Anton Balasingham's comments are very pertinent and is the answer to Kondodi.

and i wrote this too :

and i wrote the following in orkut :

ஆன்டன் பாலசிங்கம் என்னும் ஞானி
விடுதலை புலிகளில் முக்கிய தலைவர் மற்றும் குரு போனறவர் ஆன்டன்
பாலசிங்கம். ஆரம்ப நாட்களில் இருந்தே பிரபாகரனின் முக்கிய கூட்டாளியாக,
ஆலோசகராக, வழிகாட்டியாக, இருந்தவர். அவரின் மனைவி அடேல் பாலசிங்கம்
(ஆஸ்த்ரேலியா நாட்டை சேர்ந்தவர்) பெண் புலிகளுக்கு தலைவராக சிறுது காலம
பணியாற்றியவர். புலிகளில் தலைமைக்கும் இவர்கள் இருவரும் மிக
முக்கியமானவர்கள்.

உலக அரங்குகளில், தமீழ மக்களின் துன்பங்களை, சிங்கள அரசின் இனவாதத்தை
கொண்டு சென்றவர்கள். சிங்கள் அரசுகளுடன் புலிகள் நடத்திய அனைத்து
பேச்சுவார்த்தைகளிலும் பங்கு கொண்டார்.

பாலசிங்கம் பெரிய அறிவாளி ; உலக அறிவும், ஆழ்ந்த வாசிப்பனுபவும், தொலை
நோக்கு பார்வையும் கொண்டவர்.

யாதார்த்தை முற்றிலும் உணர்ந்தவர். 1994இல் சந்திரிக்கா அளித்த ஃபெடரல்
தீர்வை ஏற்றிருக்கலாம் என்று 2003இல் கிளினோச்சியில் ஒரு கூட்டத்தில்
வெளிப்படையாக‌ பேசினார். மாறும் உலகத்தையும், எதிரியின் பலத்தையிம்,
புலிகளின் பலத்தையும் அறிந்தவர்.

அவரின் தீர்க்கதரிசனமான வாதங்களை புலிகளின் தலைமை கேட்டக்க‌வில்லை.

http://en.wikipedia.org/wiki/Anton_Balasingham

http://www.timesonline.co.uk/tol/comment/obituaries/article754765.ece
Anton Balasingham
Journalist who became the chief strategist and negotiator of the Tamil
Tigers in their struggle for autonomy

here is a mail from my professor who helped them a lot in the 80s :

sub : intransigence of LTTE

Dear Athiyaman,

The LTTE wasted all glorious opportunities for an honourable
compromise. Mr. Anton Balasingam also has to share a part of the blame. The worst crime is
the unnecessary suffering and loss of lives in the last three months when LTTE knew that it had absolutely no chance of victory. By their mistake, they have also done a lot of disservice to the surviving members of the Tamil community.

But past is past.

If the scoundrels of Tamilnadu politics keep their mouth shut at this hour of immense tragedy,
it might benefit the surviving members of Tamil community in Sri Lanka more. By trying to make
the gullible believe that Prabhakaran is still alive, these rascals want to ensure their political survival in Tamilnadu unmindful of the effect it would have to fan the Sinhalese majoritarian propoganda and politics.

Let us hope for the best.

vignathkumar said...

why dint the peole like seman,parathi raja, viramuthu dint say karunanathi name in elaction campiagan? small politicans like taimilaruvu maniyan mensioned the falts of karunanadhu. tamil writer gani mensionded all partys frod in elam issue.
these cinema creators are not mahaathmas or genun king{uthmars} their{arukathis} are questionable.
in which possion u keep karuna,takless etc.
in same position i keep these barathi raja sema etc.{tamil ena throge} when me and my friends use to seak about seeman,brathiraja,vairamuthu etc we use to speak in special awful,velguar language. am not oppose to taileans voilence againts singlavaen government and milletry for tamilean but i oppose these tamil cine people even am not scare of any one.

Anonymous said...

அன்புத்தோழிக்கு,
போராட்டம், போர், வன்முறை, எதிர்வன்முறை, அடிமைவிலங்கு இதெல்லாம் சாருவுக்கோ செயமோகனுக்கோ அல்லது எந்த ஒரு தமிழக எழுத்தாளனுக்கோ கற்பனையில் மட்டுமே வசப்படும் விடயங்கள். ஆனால் உங்களைப்போன்றோருக்கு அதன் வலிகளும் நிசங்களும் சந்தித்த நிசங்கள். அவர்களின் ஆராய்ச்சிகளோ நமது எதிர்வாதங்களோ ஒரு மயிருக்கும் பிரயோசனப்படாத விடயங்கள். எழுத்துக்களோ கருத்துக்களோ ஆயுதங்கள் முன் பேசமுடியாது என்ற சாத்தியத்தை.. சத்தியத்தை உணராதவர்களுடன் பேசி பிரயோசனமில்லை. சரிதான் புலிகள் பலியாகிவிட்டனர். இனி இவர்களது கருத்துக்களாவது சுதந்திரத்தை பெற்றுத்தந்தால் மகிழவேண்டியதுதான்! கருணாவின் கருணையாலும், சோனியாவின் கடைக்கன் பார்வையாலும் சீன/சப்பானியர்களின் உதவிகளாலும் தமிழன் சுயமரியாதையோடு வாழும் ஒருங்கிணைந்த தென்இலங்கையில் என் இனிய வலைநண்பர் சாருவுக்கு அவருக்குப்பிடித்த சில "முக்கோணச் சிரைத்தல்"களும் செயமோகனுக்கு கண்டிவாழ் செல்வக்குமரனின் ஆன்மிக ஆலோசனைகளும் கிடைக்குமென்றால் மகிழ்வது நமெல்லாரும்தானே! வாழ்க தமிழினம்!

அன்புடன்
ஓசை செல்லா

தமிழ்நதி said...

அனானி எதிரிக்கு,

நீங்கள் அனுப்பியிருந்த பின்னூட்டத்தைத் தவறுதலாக நிராகரித்துவிட்டேன். அதைப் பிரதி பண்ணி மறுபடி இங்கே பிரசுரித்திருக்கிறேன்.
---

are you a tourist to my country .. you are most welcome..

are you journalist? dont say.the first quality of a journalist should be like mirror rather than getting in to .
your peoples were the sole responsible for the current state. it is very easy to pass blame on others.

you cant shake a single brick of mother india.

watch this video.
http://www.youtube.com/watch?v=XZ2LK0d9WdQ

learn how to live in a multi lingual society

---
Dear Sir,

http://www.youtube.com/watch?v=iQi0WYSGNTg

Why don't you watch this video too? Is this a drama? have you forgotten the riots against the innocent people? I have a long list sir. If you want, i can submit those. I am not here to shake your mother india. I have so many things to do for my people. I am leaving this country soon. But wherever i go i will write the truth.Truth only.


learn how to live in a multi lingual society

கே.பாலமுருகன் said...

தமிழ்நதிக்கு வணக்கம். சாருவையும் ஜெயமோகனையும் விட்டுவிடுங்கள். இப்பொழுது ஷோபா சக்திக்கு வருவோம்.

ப்ரான்சின் அகதிச் சூழலில் ஊத்தையர்களோடு ஊத்தையனாக விளிம்புநிலைச் சிந்தனைகள், மாற்று அரசியல், தலித் இலக்கியம், கலாச்சாரக் கலைப்பு என்பதாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஷோபா சக்தி, அவரின் ‘ம்’ ‘தேசத்துரோகி’ கொரில்லா’ போன்ற நாவல்களின் மூலம் இன்றளவும் முக்கியமான நாவலாசிரியராகவும் பேரீனவாத கொடுரங்களுக்கும் அதிகாரத்திற்கு எதிராகவும் மிகத் தீவிரமாக செயல்படும் போராட்டவாதியாகவும் அறியப்படுபவர் ஷோபா சக்தி.
அவரை அண்மையில் ஒரு நேர்காணல் செய்திருந்தேன். அதில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் இப்படி பதில் அளித்திருந்தார்:

"உயிருள்ள தடுப்புச் சுவர்களாக மனிதத் தடுப்பரண்களாக மக்களைத் துப்பாக்கிமுனையில் புலிகள் தம்மோடு தடுத்து வைத்திருக்கிறார்கள். புலிகளின் கண்களில் மண்ணைத்தூவிட்டு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து தப்பிவரும் மக்களைப் புலிகள் சுட்டு வீழ்த்துகிறார்கள் என வன்னியிலிருந்து செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன."-ஷோபா

கே.பாலமுருகன்: புலிகள் தனி ஈழத்துக்கான போராட்டத்தில் சொந்த மக்களையே கொள்கிறார்கள் என்பது எப்படி உண்மையென புரிந்து கோள்ள முடியும்? அவை வெறும் செய்தியாகக் கூட இருக்கலாமா? அப்படி உண்மையென்றால் ஈழப் போராட்டமே பொய்யாகிவிடுமே?

ஷோபா சக்தி: புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதையும் யுத்தப் பிரதேசங்களிலிருந்து மக்கள் தப்பிப்போகாமல் தடுத்து வைத்திருப்பதையும் அய்.நா. அவை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் போன்ற சர்வதேச அமைப்புகள் ஆதாரங்களோடு நிரூபித்திருகின்றன. ஈழத்தின் உண்மையான செய்திகளை அறிவதற்கு புலிகளின் ஊடகங்களையும் குமுதம், விகடன் போன்ற வணிக இதழ்களையும் மட்டும் நம்பியிருக்காமல் சர்வதேச ஊடகங்களையும் தயவு செய்து கவனியுங்கள். நான் புலிகள் மீதான இந்தக் குற்றச்சாட்டை அங்கிருந்து தப்பிவந்த மக்களிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில்தான் சுமத்துகிறேன்.

விடுதலைப் புலிகளின் அரசியற் தவறுகள்தான் ஈழப்போராட்டத்தின் தோல்விக்கு முதன்மைக்காரணம். அவர்கள் இலங்கைப் பேரினவாத அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திநின்ற சகோதர விடுதலை இயக்கங்களை அழித்ததிலிருந்து இடதுசாரிகளை ஒழித்துக் கட்டியது, வடபகுதியில்

பரம்பரை பரம்பரையாக வாழந்த இஸ்லாமியர்களைக் கொள்ளையிட்டு விரட்டியது, ராஜிவ்காந்தி கொலை, அப்பாவிச் சிங்கள, தமிழ் மக்கள் மீதான
கொலைகள் போன்ற எண்ணற்ற தவறுகளால் ஒரு விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக ஒரு அரசியல் போராட்டத்தை வெறும் இராணுவத் தந்திரங்களாகச் சீரழித்தார்கள். புலிகளின் தவறுகளுக்கு இன்று தமிழ்மக்கள் வட்டி செலுத்துகிறார்கள். நாங்கள் ஒரு போராட்டத்தைத் தோற்றுவிட்டு நிற்கிறோம்.

நன்றி: அநங்கம் இதழ்-மலேசியா
கே.பாலமுருகன்

பாரதி.சு said...

வணக்கம் தமிழ்நதி...
அருமையான எதிர்வினை. சாரு,ஜெமோ, ஞானி வகையறாக்கள் எல்லாம் ஒரே குப்பையில் ஊறிய மட்டைகள். இவர்கள் மீதிருந்த மதிப்பெல்லாம் மலையேறி நீண்டகாலமாகிவிட்டது. அதிலும் சாரு, ஜெமோ இருவரின் அலப்பறை தாங்கமுடியா ரகம்.
ஏதோ இவர்கள் எழுத்தாளர்கள் என்பதால் தெரியாத விடயத்தில் எல்லாம் மூக்கை நுழைக்கலாம், கருத்து சொல்லலாம்...வாசிக்கிறவங்க நவ துவாரங்களையும் பொத்திக்கொண்டு ஏற்றுக்கொள்வார்கள் என்பது இவர்கள் நினைப்பு.
எங்கள் மக்கள் அவலத்தில் கதறிய போது இவர்கள் பேனா எங்கிருந்தது?.
ஜெமோ ஆன்மீகத்தியானத்திலும், சாரு "சுய இன்பம்" காணல் எப்படி என்ற சிந்தனையிலும், ஞானி வகையறாக்கள் உதட்டளவில் ஜனநாயம் "பறைந்து" கொண்டும் திரிந்தார்கள்.
இவர்கள் பேசும் ஜனநாயகம்?? இவர்களுக்கே தெரியாத விடயம் என்பது இவர்கள் செயலைப் பார்த்தால் புரிந்துகொள்ளலாம்.
இவ்வளவு காலமும் கும்பகர்ண தூக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் இப்போது "அப்படி செய்திருக்கலாம்,இப்படி செய்திருக்கலாம்" என்று இப்போது கும்மியடிப்பது கூறுகெட்டதனமாக இருக்கிறது.
இந்தப் பன்னாடைகள் எல்லாரையும் கருத்துச் சொல்லச்சொல்லி எவன் அழுதான்.
நான் எப்போதுமே மாற்றுக்கருத்துகளை ஒரேயடியாக புறந்தள்ளி ஒதுக்குபவனல்ல..ஆனாலும் மேற்குறிப்பிட்டவர்கள் இதுவரை கண்ணைமூடி தியானம் இருந்துவிட்டு "இப்போது மட்டும்" லூசுத்தனமாக கருத்துளை கொட்டுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

பி.கு:-மன்னிக்கவும்.
ஏதோ ஆத்திரத்தில் இக்கருத்துரையில் அநாகரிகமான சொல்லாடல்களை பயன்படுத்திவிட்டேன்..ஆனால் அது என் உணர்வுஅளை கொட்ட அவசியமானது. சாருவின் எழுத்துக்களை வாசிப்பவர்களுக்கு இது புதிதல்ல.

pandiyan said...

அன்னானிக அட்டகசம் தாங்க முடியலப்பா! மூதேவி அனானி பெங்களூர்ல கண்டக்டர்கிட்ட சில்லரை தமிழ்ல கேட்ட தரமாட்டான்டா எங்கட வாழுது உங்க இந்தி தேசியம் பன்னாட.. MCA படிச்சுட்டு போன என்ன மாதிரி ஆளுங்களையே இந்தி தெரியலனு தூக்குறானான்டா இந்திக்காரன் ஆனா சென்னைல பாதிபேர் புராசட் லீடர் அவந்தான்டா இதுல இந்தி தேசியம் கோவம் வருதோ! இதோ வருகிறது இந்தி தேசியத்திற்கான பதிவு....

http://siruthai.wordpress.com/2009/05/29/இலங்கை-வல்லரசாக-மாறுவதின/

Joe said...

அவர்களின் (சாரு & ஜெமோ) வாதம், "புலிகளை எதிர்த்து முன்பே நாங்கள் இந்தக் கருத்துக்களைச் சொல்லியிருந்தால் எங்கள் உயிர் போயிருக்கும். இப்போது அவர்கள் பலர் உயிரோடு இல்லை, அல்லது அவர்களிடம் துப்பாக்கி இல்லை, எனவே தைரியமாக எங்கள் கருத்தைச் சொல்கிறோம்".

இதற்கு முன் எத்தனை எழுத்தாளர்களை தமிழ்நாட்டுக்கு வந்து புலிகள் கொன்றார்கள்?

ஈழத்தமிழர்களுக்கு நல்வாழ்வு அமைய இறைவனை வேண்டுகிறேன் என்று சொல்லமுடியவில்லை. சர்வாதிகாரிகள் மகிழ்ச்சியுடன் வாழவும், அப்பாவித் தமிழர்கள் செத்து மடியவும், எதுவும் செய்திடாமல் வேடிக்கை பார்த்திடும் அந்த உயர்சக்தியின் மேல் நம்பிக்கை/விசுவாசம் சிறிது சிறிதாக போய்க் கொண்டிருக்கிறது.

அன்புடன்,
இன்னுமொரு கையாலாகாத தமிழன்.

Anonymous said...

//ப்ரான்சின் அகதிச் சூழலில் ஊத்தையர்களோடு ஊத்தையனாக விளிம்புநிலைச் சிந்தனைகள், மாற்று அரசியல், தலித் இலக்கியம், கலாச்சாரக் கலைப்பு என்பதாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஷோபா சக்தி, அவரின் ‘ம்’ ‘தேசத்துரோகி’ கொரில்லா’ போன்ற நாவல்களின் மூலம் இன்றளவும் முக்கியமான நாவலாசிரியராகவும் பேரீனவாத கொடுரங்களுக்கும் அதிகாரத்திற்கு எதிராகவும் மிகத் தீவிரமாக செயல்படும் போராட்டவாதியாகவும் அறியப்படுபவர் ஷோபா சக்தி.//

பாலமுருகன் - அடுத்து பார்ப்பனீயம் பற்றி சோ ராமசாமியிடம் பேட்டி எடுங்கள்.

Anonymous said...

@Dear Sir,

http://www.youtube.com/watch?v=iQi0WYSGNTg

Why don't you watch this video too? Is this a drama? have you forgotten the riots against the innocent people? I have a long list sir. If you want, i can submit those. I am not here to shake your mother india. I have so many things to do for my people. I am leaving this country soon. But wherever i go i will write the truth.Truth only.


learn how to live in a multi lingual society@

Dear Mam

thanks for your reply.
i never said we dont have any problems in my country.ofcourse the link which i have attached in my last post is from a Doordarshan video . the national network;s popular video ( very old in deed)

the reason for including the link is

we have problems we have differences.there is always 10% of any society you can find some crooked minds. its complete absurd to blame entire indian nation for some silly elements.

thanks for your link. the gujarat riots.. as a indian i am shame for that.. but did gujarat muslims taken arms and fighting for separate country?? the goverment is doing best for them to overcome the bad memories.

even in bangalore tamils targeted
at year 1991..is the common tamil and kannadiga's fighting with each other now??

life has to pass on..

we are stoood by the name indian ,ofcourse it may be stupid for you .but its truth.

india a large multi lingual society with 100+ corers of peoples..

most of the people comfortable and happy with the union mixing with peoples..living with the policy of give and take something.

please learn the life and how to live from us.

the irony is that , your you tube link talks about genocide in gujarat but at same time you have forgotten your most favorite organization LTTE has thrashed 1L muslims from jaffna in a single day.

as a LTTE supporter you dont have right to speak about humanity and back stabbing.

normally truth hurts.

Anonymous said...

@அன்னானிக அட்டகசம் தாங்க முடியலப்பா! மூதேவி அனானி பெங்களூர்ல கண்டக்டர்கிட்ட சில்லரை தமிழ்ல கேட்ட தரமாட்டான்டா எங்கட வாழுது உங்க இந்தி தேசியம் பன்னாட.. MCA படிச்சுட்டு போன என்ன மாதிரி ஆளுங்களையே இந்தி தெரியலனு தூக்குறானான்டா இந்திக்காரன் ஆனா சென்னைல பாதிபேர் புராசட் லீடர் அவந்தான்டா இதுல இந்தி தேசியம் கோவம் வருதோ! இதோ வருகிறது இந்தி தேசியத்திற்கான பதிவு...@

.
Pandiyan learning MCA is not a big deal. this is not a only qualification to work. you have some attitude problem. with your wrong attitude you are under qualified for any work.

in bangalore either you have to speak kannada or hindi. if you dont know those language its your mistake. why are blamming bus conductors for this.is chennai bus conductors are good in Kannada , does they speak all the langauges in india?

you know more than 4 L tamil software engineers working in bangalore alone.why most of them were not facing any issues and passing their life happily ?

please grow up man. dot put blame on something else for your dis abilities .

today you are very safe in a and enjoying the wisdom. the main reason for the quath is indian nationalism.

தமிழ்நதி said...

அனானி நண்பருக்கு,

பாண்டியனுக்கு நீங்கள் அளித்திருக்கும் பதிலிலிருந்து உங்களுக்குத் தமிழ் புரிகிறது என்றவகையில் தமிழிலேயே நானும் பதிலளிக்கிறேன்.

நீங்கள் என்னைத் திட்டி ஒரு பின்னூட்டம் இடுவீர்கள். நானும் அதை வாசித்துவிட்டு வரிந்துகட்டிக்கொண்டு உங்களுக்கு ஒரு பதில் பின்னூட்டம் போடுவேன். நீங்கள் ஒரு 'லிங்க்'கொடுப்பீர்கள். பதிலுக்கு நானும் ஒன்று. இதனால் யாதொரு பயனும் இல்லை. ஏனென்றால், நானோ நீங்களோ நாம் கொண்டிருக்கும் கருத்துக்களில் இருந்து பின்வாங்கப்போவதில்லை. உங்களது 'ஒருங்கிணைந்த இந்தியக் கனவில்'நீங்கள் மிதந்திருங்கள். எங்கள் மக்களுக்கான போராட்டம் நியாயமானது; அது வஞ்சகத்தினால் தோற்கடிக்கப்பட்டது என்ற வருத்தத்தோடு நானும் இருந்துவிட்டுப் போகிறேன்.

'அகதி நாயே! உன் நாட்டுக்கு ஓடிப்போ'என்று சொல்வதற்குக்கூட ஒரு குரூரமான மனம் வேண்டும். அது உங்களுக்கு இருக்கிறது. இதுதான் இந்திய நாகரிகம் என்றால், நன்று! மிக நன்று! தோற்றுப்போனவர்களை எள்ளி நகையாடும் அற்பகுணம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. அவுஸ்திரேலியாவில் தாக்கப்படும் இந்திய மாணவர்களுக்காக உண்மையில் நான் வருத்தப்படுகிறேன். ஏனென்றால், தாக்கப்படும் வலியை பாதிக்கப்பட்டவள் என்றவகையில் நான் உணர்வேன்.

நீங்கள் என் கட்டுரையைச் சரியாகப் படிக்கவில்லைப் போலும். யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டது தவறு என்று அதில் நான் சொல்லியிருக்கிறேன். புலிகளின் குறைகளையும் சேர்த்து அவர்களை நான் நேசிக்கிறேன். அவர்கள் எங்களது சகோதரர்கள், சகோதரிகள். எங்கள் மண்ணில் பிறந்த ஒப்பிடற்கரிய மாவீரர்கள். அவர்களது தோல்வி ஒட்டுமொத்தமாக ஒரு இனத்தின் தோல்வி என்பதை உங்களைப் போன்ற சிலரைத் தவிர அனைவரும் அறிவர்.

தோல்வி என்பது நிரந்தரமில்லை. வெற்றியும் அவ்விதமே.

இனிமேலும் எனது வலைப்பூவுக்கு வந்து நீங்கள் பின்னூட்டம் இடவேண்டியதில்லை. என் பதிவை நீங்கள் வாசிக்கவேண்டுமென்று நான் உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்ளவுமில்லை. சிறுபிள்ளைகள் போல மீண்டும் மீண்டும் பின்னூட்டங்களாலோ பதிவுகளாலோ தாக்கிக்கொள்வதைவிடவும் எனக்கு வேறு வேலைகள் இருக்கின்றன.

No hard feelings. Thank you.

நாதாரி said...

இளவேனில் இவர்கள் இணையாத புள்ளிகள் மிகக்மிகக்குறைவு

கண்ணா.. said...

மிக நல்ல பதிவு....

நான் ஏன் இத்தனை நாள் இதை பார்க்காமல் மிஸ் செய்தேன் என்று தெரியவில்லை..

தற்போதுதான் நண்பர் ஜோ அவர்கள் இந்த லிங்கை அனுப்பி படிக்க சொன்னார்கள்..

கிட்டதட்ட இதே கருத்தில் நானும் "புலிகளின் வெற்றி" என்று ஓரு பதிவை இதே நாளில் போட்டிருந்தேன்...

ஆனால உங்களின் வார்த்தை தேர்வும், விவரித்த விதமும் மிக அருமை...

உங்கள் கருத்தக்களை அப்படியே ஏற்று கொள்கிறேன்...

Anonymous said...

you are useless refugee. go back to your country, if you live in india repect indian laws .

you dont have any rights to comment about my country., get lost///

இந்த முட்டாளுக்காக நான் தங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

--kid

karu said...

appaadaa! rompa naalukku appuram narukkentru vanthullathu vaalthukkal.

karunaa

Sasi said...

"முஸ்லிம்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து காலக்கெடு விதித்து விரட்டியது' Tigers have their own reason..

யாசவி said...

//முதலில் இந்தக் கோபத்தின் நதிமூலத்தை நீங்கள் அறியவேண்டுமென நான் விரும்புகிறேன். எங்களுடைய சனங்கள் கொல்லப்பட்டார்கள்... நாய்களைப்போல விரட்டப்பட்டார்கள்... வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டார்கள்... இணையத்தளங்களின் செய்திகளைப் பார்த்துக் கண்ணீர் வடிக்காத நாட்களே இல்லை.உலகெங்கிலும் வாழும் பெரும்பாலான ஈழத்தமிழர்கள் சாப்பிடும் சாப்பாட்டில் கண்ணீர்த்துளி கலந்திருந்தது.

ஆம் நாங்கள் தோற்றுப்போனோம் ஒருவகையில். அரசியல் ரீதியாக நாங்கள் வெல்வோம் என்று நம்பிக்கையோடு இருக்கிறோம். இப்போது பார்த்து, பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல, 'நீங்கள் இப்படிச் செய்திருக்கவேண்டும்; அப்படிச் செய்திருக்க வேண்டும்'என்ற போதனைகள் - வழங்கத் தகாதவர்களின் வாயிலிருந்து உதிர்வதை நாங்கள் வெறுக்கிறோம். ஏனென்றால், நாங்கள் துன்பப்பட்டபோது நீங்கள் மெளனமாக இருந்தீர்கள். அந்த மெளனத்திற்கான எதிர்வினைதான் இந்தக் கோபம்.//

well said.

I have same feeling.

Every body ready for postmortem not act on the situation.

By one helpless human from oversea.

yasavi.blogspot.com

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

சுனாமி யார் யாரையோ கொண்டு போச்சு.. ஹ்ம்ம். இவனுங்க கிட்ட இருந்து எப்படி தப்பிக்கரதுன்னு தெரியல!!

நல்ல கட்டுரை, தமிழ்நதி அவர்களே....

மதி.இண்டியா said...

//தென்னாப்பிரிக்கா எப்படி சுதந்திரம் பெற்றது ?அணுகுண்டு போட்டா?"

நெல்சன் மண்டேலாவை எதற்காகச் சிறையில் அடைத்தார்கள்? உண்ணாவிரதமிருந்தார் என்றா? தீவிரவாதியெனக் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட நெல்சன் மண்டேலா பின்னாளில் எப்படி விடுதலைப்போராட்டத்தின் தலைவர் என்று போற்றப்பட்டாரோ அதுபோல எங்களுக்கும் ஒருநாள் வரும்.

//

தீவிரவாதத்தை கைவிட்டதால்தான் மண்டேலா மக்களை பலி கொடுக்காமல் சுதந்திரம் வாங்கினார்கள் ,