7.17.2009

ஷோபா சக்தி! புலி படுத்தால் நரி நாயகனாகுமா?



இதை வாசிக்க ஆரம்பித்திருக்கும் நீங்கள் நினைப்பது சரி. இது வேலையற்றவர்களின் வேலைதான். ஷோபா சக்தி ‘தமிழ்நதிக்கு மறுப்பு’என்று தனது வலைத்தளத்தில் எழுதி நாளாகிறதுதான். இருந்தபோதிலும், கீற்று இணையத்தளத்தில் ஷோபா சக்தியின் பினாமியைப் போலவே பிதற்றிக்கொண்டிருக்கும் குணாளன் என்பவரின் கட்டைப் பஞ்சாயத்து தாங்கமுடியவில்லை. ‘பதில் சொல்’ என்ற தொனியில் அந்தக் குரல் கீச்சிடுகிறது. ஷோபா சக்தியோ நான் கொலை செய்துவிட்டு ‘கள்ள மௌனம் சாதிப்பதாக’வும் ‘பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்’என்றும் தனது இணையத்தளத்தில் அருட்டியிருக்கிறார். (மிரட்டுகிறார் என்று எழுதினால் ‘தமிழ்நதி கழிவிரக்கத்தில் கதைக்கிறார்’ என்று கண்ணைக் கசக்க ஆரம்பிப்பார்) ‘இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் குண்டியைக் குண்டியைத் தூக்கி அடிப்பான்’என்றொரு பழமொழி உண்டு. நான் இரும்புமில்லை. இளகினவளுமில்லை. ஆனாலும், புலியெதிர்ப்பையே முழுநேரத் தொழிலாகக் கொண்டிருப்பவர்களைப்போல எனக்கு நேரமில்லை என்பதைச் சொல்லித்தானாகவேண்டும். சில நாட்களுக்கு முன்னரே ஆதவன் தீட்சண்யாவுடனான அக்கப்போர் நடந்துமுடிந்தது. எனது கவிதைத் தொகுப்பு வேலைகளை அது மிகவும் பாதித்திருந்தது. அடுத்து திருவாளர் ஷோபா சக்தியுடன் பொருதி எனது சக்தியை வீணடிக்கக் கூடாதென்பதனால் ஒதுங்கியிருந்தேன். வழக்கம்போல எனக்குள்ளிருக்கும் கோபம் என்னைச் சும்மா இருக்கவிடுவதாயில்லை. ஆகவே ஷோபா சக்தியின் மறுப்புக்கு மறுப்போ பருப்போ ஏதோவொன்றை எழுதித் தொலைத்தாக வேண்டியிருக்கிறது.

இதை வாசிக்கும் உங்களில் அநேகரைப் போல ‘அங்கே அத்தனை இலட்சம் பேர் தடுப்புமுகாம்களில் அவதிப்பட இங்கே இவர்கள் தின்றுகொழுப்பெடுத்து மீந்த நேரத்தில் மயிர்பிளக்கும் விவாதங்களைச் செய்கிறார்கள்’என்ற கருத்தே எனக்கும் இருக்கிறது. இவர்களோடு விவாதித்துப் பயனில்லை, இல்லாத ஊருக்கு வழி இதுவென்று நான் ஒதுங்கியிருப்பதை ‘கள்ள மௌனமாக’இவர்கள் சொல்வதன் பின்னாலிருக்கும் காழ்ப்புணர்வைத் தாளமுடியவில்லை.

முதலில் ஷோபா சக்தியின் அரசியலுக்கு வருவோம். என்னை ‘அரைகுறை’ என்று சொல்லும் ஷோபா சக்திக்குப் புலியெதிர்ப்பு அரசியலைத் தவிர வேறெதுவும் தெரிந்ததாக எனக்குத் தெரியவில்லை. அவர் அதிமேதாவித்தனமாகக் கொடுத்துவரும் நேர்காணல்கள், இணையத்தளங்களிலும் சஞ்சிகைகளிலும் எழுதிவரும் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து வருபவர்களுக்கு இவரது நிலைப்பாடு தௌ;ளத்தெளிவாகத் தெரிந்திருக்கும். பௌர்ணமியன்று நிலவு உதிக்கவில்லை என்றால்கூட ‘புலிகளின் சதியால் நிலவு மறைந்துவிட்டது’என்று கூசாமல் சொல்லக்கூடியவர்தான் இவர். தவிர, அரசியல் என்பது பட்டறிவிலிருந்தும் படிப்பிலிருந்தும் கேள்வி ஞானத்திலிருந்தும் வரக்கூடியது. ஒரு குழந்தை பிறக்கும்போதே ‘பூர்ஷ்வா’என்றுசொல்லிக்கொண்டு பிறப்பதில்லை. சும்மா ‘அரசியல்… அரசியல்’என்று எங்களுக்குப் பூச்சாண்டி காட்டவேண்டாம். நீங்கள் இயக்கத்தில் இருந்தீர்கள் என்றால், நாங்கள் இயக்கத்துள் இருந்தோம். உங்களைப் போல மொண்ணையான-ஒற்றைச்சாயலுடைய புலியெதிர்ப்பு அரசியலைத்தான் உங்கள் அகராதிப்படி ‘அரசியல்’என்ற பதத்திற்குள் அடக்குகிறீர்கள் என்றால், அந்த அரசியல் எங்களைப் போன்றவர்களுக்கு வேண்டியதில்லை.

வேதாளம் எதிலிருந்து என்மீது தொற்றுகிறது என்று பார்த்தால், “புலிகள் மக்களைப் பணயக் கைதிகளாக வைத்திருக்கவில்லை”என்று கீற்று இணையத்தளத்துக்கு நான் கொடுத்திருந்த நேர்காணலிலிருந்துதானாம். அதற்கான எதிர்வினையை மட்டும் ஷோபா சக்தி காட்டவில்லை. புலிகள் மீதான ஒட்டுமொத்த கெட்டித்த கோபத்தையும் என்மீது உருக்கி ஊற்றப்பார்க்கிறார். என்மீது எகிறிப்பாய்வதன் வழியாக அவர் தனது அரசியல் நேர்மையை நிரூபிக்கப் பார்க்கிறார். என்னைப் புலிகளின் பிரதிநிதியாக நினைத்து வாதப் பிரதிவாதங்களை முன்வைக்கிறார். நான் குற்றவாளிக் கூண்டில் தலைகுனிந்து நிற்கவேண்டும்@ கண்ணீர் மல்கி கதறிக் கதறியழ வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்போல. ஏனென்றால், அவர் மனதில் எனது சித்திரம் மஞ்சளும் கறுப்புமாய்த்தான் படிந்திருக்கிறது.

நான் கீற்று நேர்காணலில் நான் சொல்லியிருந்தது எனது அப்போதைய அறிதலின் பாற்பட்டது. “சர்வதேசத்தின் அனுதாபத்தைப் பெறுவதற்காக வன்னியின் போர் மிகைப்படுத்திச் சொல்லப்படுகிறது”என்று சுசீந்திரன் வகையறாக்கள் என்று புதுவிசைக்கு, உண்மைக்கு மாறாக நேர்காணல் கொடுத்தபோது வாயை மூடிக்கொண்டிருந்த ஷோபா சக்தி, புலிகளுக்கு ஆதரவான குரல்களுக்கு மட்டும் கொதித்தெழும் மாயந்தான் என்ன? நான் அறி;ந்தவரை புலிப்போராளிகள் மக்களின் பாதுகாவலர்களாக, மக்கள் நலன்களுக்காகத் தங்களை அர்ப்பணிக்கிறவர்களாகவே இருந்தார்கள். இருபத்தைந்தாயிரத்துக்கும் அதிகமான போராளிகளும் தளபதிகளும் தம்மைக் களப்பலியாக்கியது அதன் பொருட்டே. பிரபாகரன் அவர்களும் அவ்வாறான கட்டுப்பாடுடைய இயக்கத்திற்குத் தலைவராக இருக்கத்தகு தகுதிகளோடுதான் இருந்தார். அத்தகைய தலைமையின் கீழ் தவறேதும் நடக்க வாய்ப்பில்லை என்று நான் கருதினேன். கடைசிநேரத்தில் அந்த நம்பிக்கை வீண்போயிற்றென்பதை (மக்களை அரண்களாகப் பயன்படுத்தியதில்) நானும் அறிகிறேன். அப்படி நிகழ்ந்திருந்தால் அதை எவ்விதமும் நியாயப்படுத்துவதற்கில்லை. மறுவளமாக, அவ்விதம் நிர்ப்பந்திக்கப்படுமளவிற்கு களநிலைமைகள் மோசமாக அமைந்திருந்தன என்பதும் வருத்தத்திற்குரியதே. அதனால் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட மக்களின் துயருக்கு ஈடாகச் சொல்ல ஒரு வார்த்தைதானும் இல்லை.

‘மக்களுக்கு புலிகள் செய்த துரோகம்’ என்ற வாசகத்தை அடிக்கடி ஷோபா சக்தி பிரயோகிக்கிறார். இதுவரை புழக்கத்திலிருந்த ‘துரோகம்’என்ற வார்த்தையின் பொருளையே தலைகீழாக மாற்றத் தவண்டையடிக்கிறார். ஆம் ஐயா… அத்தனை ஆயிரம் புலிகள் மண்ணுக்காகத் தம்மை ஈந்து மண்ணோடு மண்ணாகியது துரோகந்தான். பிரான்சிலிருந்தபடி இன்னமும் நீங்கள் பிதற்றிக்கொண்டிருப்பது மாபெரிய தியாகந்தான்.

உங்கள் இணையத்தளத்தைக் கொஞ்சம் புரட்டிப் பாருங்கள். நீங்கள் இனவாத அரசுக்கெதிராகப் பேசியது அதிகமா, அன்றேல் புலிகளுக்கெதிராகக் கொந்தளித்தது அதிகமா என்பதை நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

“புலிகளிடமிருந்து தப்பிவரும்போது கொல்லப்பட்ட, புலிகளால் பணயமாகப் பிடிக்கப்பட்டிருந்து இராணுவத்தின் குண்டுவீச்சுக்கு முன்னால் நிறுத்திவைக்கப்பட்ட அப்பாவிச் சனங்களுக்கு இழைக்கப்பட்ட மன்னிப்பேயற்ற துரோகம் என்பதைத் தமிழ்நதி ஏற்றுக்கொள்கிறாரா?”

என்ற கேள்வியின் வழியாக உங்களது நிலைப்பாட்டை நீங்களே வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறீர்கள். ஷோபா சக்தி, நீங்கள் ஒரு புலியெதிர்ப்பாளரே அன்றி ஒட்டுமொத்த அதிகாரங்களுக்கெதிரானவர் அல்ல என்பது இதிலிருந்து புலனாகவில்லையா? உங்கள் மண்டைக்குள் புலிகள் மீதான கோபம் பிரமாண்டமான மலை போல உருத்திரண்டிருக்கிறது. அதன் முன் அரசாங்கம் செய்த-செய்துகொண்டிருக்கும் அராஜகமான படுகொலைகள் சின்னக் கட்டிபோலத் தெரிகின்றன. ‘புலிகளினால் பணயமாகப் பிடித்துவைக்கப்பட்டிராவிட்டாலும்’, ‘புலிகளிடமிருந்து தப்பிவரும்போதும்’சனங்கள் கொல்லப்பட்டே இருப்பார்கள். புலிகள் இயக்கம் தோன்றுவதற்கு முன்னாலும் பேரினவாதிகளால் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை ‘எல்லாம் தெரிந்த தெய்வமாகிய’உங்களுக்கு நான் நினைவுறுத்த வேண்டியதில்லை. இப்போது ‘புலி நீக்கம்’செய்யப்பட்ட மக்கள் தடுப்புமுகாம்களில் எப்படி வதைபடுகிறார்கள் என்பதையும் நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை என நினைக்கிறேன்.

ஒரு போராட்ட இயக்கத்தின் குறைந்தபட்ச நியாயங்களின் அடிப்படையிலேனும் அவர்களை ஆதரிக்கும் நான் குற்றவுணர்வுகொள்ள வேண்டியவள் என்றால், ‘புலிகளின் தியாகங்களை தமிழ்மக்களுக்கெதிரான துரோகமாக’ச் சித்தரித்து, மறைமுகமாக பேரினவாத அழிப்புக்குத் துணைபோய்க்கொண்டிருக்கும் உங்களை என்னவென்பது? ‘எனக்குப் பின்னால் ஒருவன் பிலாப்பழத்தோடு நிற்கிறான் அவனை நினைத்துச் சிரித்தேன்;’ என்று வாய் கிழிபட கிழிபடச் சொன்ன மாம்பழக்காரனின் நினைவுதான் வருகிறது. ‘எத்தனை அருவியில் குளித்தாலும் கையிலுள்ள இரத்தக்கறை போகாது’என்று எழுதியிருக்கிறீர்கள். அப்படிப் பார்த்தால், தவிர்த்தே இருக்கமுடியாத அடிப்படை நியாயங்களைக் கொண்ட ஒரு போராட்டத்தை ‘மாபியா இயக்கம்’ என்று பரப்புரை செய்வதன் வழியாக இனவாதிகளுக்குச் சாமரம் வீசும், குடைபிடிக்கும் உங்கள் உடல்முழுவதும் தமிழ்மக்களின் இரத்தமாகவல்லவோ வழிந்துகொண்டிருக்க வேண்டும்?

ஒரு விடயத்தைப் பற்றி விமர்சிக்க வெளிக்கிடும்போது, முதலில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொண்டு ஆரம்பிப்பது நல்லது. நேரடியாக சம்பந்தப்படாதவர்கள் பொய்ச்சாட்சி சொல்ல வரக்கூடாது. “ஈழத்தமிழர்களது அவலங்களைப் பற்றி நீங்கள் ஏன் எழுதவில்லை?”என்ற கேள்விக்கு ஆதவன் தீட்சண்யாவிடமிருந்து வந்த பதிலே அடிப்படையில் தவறானது. நான் மக்களைப் பற்றிக் கேட்ட கேள்விக்கு அவர் பதில் சொல்லும்போது “விடுதலைப் புலிகள் முஸ்லிம்களை விரட்டியடித்தார்கள்”என்கிறார். விடுதலைப் புலிகளும் மக்களும் வேறு வேறு என்று சொல்லும் உங்களைப் போன்றவர்கள் இப்படியான பதில்களின்போது மட்டும் மக்களையும் விடுதலைப் புலிகளையும் ஒன்றாக்கிவிடுவது எதனால் என்பது எனக்குப் புரியவேயில்லை. ‘கேட்ட கேள்விக்குப் பதில் இல்லையெனில் மௌனமாக இருக்கப் பழகுவது நல்லது’என்பது உங்களுக்கும் தெரிந்த கவிதை வரிதான். (ஆம். அடுத்து என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்) ‘இஸ்லாமியர்கள் மீதான ஒடுக்குமுறை, தலித்துகள் மீதான ஒடுக்குமுறை’ என்று ஆதவன் அந்தச் சமயத்தில் கேள்வி எழுப்பவேண்டிய தேவை என்ன? ஒரு கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் வேறொரு கேள்வியை முன்வைப்பது போலத்தான் அது இருந்தது. தவிர, இஸ்லாமியர்கள் வடக்கிலிருந்து விரட்டப்பட்டது மாபெரிய தவறு என்பதை விடுதலைப் புலிகளும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட எங்களைப் போன்றவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் அதைத் திரும்பத் திரும்பக் கேட்பது எதனால்? இது எப்படி இருக்கிறதென்றால், ‘பூமி உருண்டை’என்று நிறுவப்பட்ட பிற்பாடு, ‘பூமி உருண்டையாக இருக்கிறதா? இருக்கிறதா?’என்று நச்சரிப்பதைப் போலிருக்கிறது. அந்த வீடியோவை உங்கள் நண்பரிடமிருந்து ஒரு தடவை முடிந்தால் வாங்கிப் பாருங்கள். ‘முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டது தவறு என்றுதான் நாங்களும் சொல்கிறோம் ஆதவன்’என்று அதில் நான் சொல்லியிருக்கிறேன்.

“நீங்கள் கேட்காததால் நாங்களும் கேட்கவில்லை”என்ற தொனிப்பட ஆதவன் பேசவில்லை என்று வக்காலத்து வாங்கியிருக்கிறீர்கள். அப்படியானால் என்ன பதில் சொல்லியிருக்க வேண்டும். “இல்லை… நீங்கள் சொல்வது தவறு. நாங்கள் எழுதியிருக்கிறோம்”என்று சொல்லியிருக்கலாம். அதைவிடுத்து, அவரே தனது கைப்பட வரிசைப்படுத்தியிருக்கும் கேள்விகளை என்னை நோக்கி எழுப்பியது எதனால்? உங்களுக்கு நேரம் இருந்தால் அவர் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றின் கீழும் ‘நாங்கள் ஏன் கேட்கவேண்டும்?’என்று எழுதிப்பாருங்கள். மிகப் பாந்தமாகப் பொருந்தும்.

உங்கள் நண்பர் ‘மூக்கைச் சிந்தி எழுதாதீர்கள்’, ‘தலைவிரிகோலமாக எழுந்திருக்கவில்லை என்பதில் மகிழ்கிறேன்’என்கிறார். நீங்களோ ‘வெற்றுப் புலம்பல்’, ‘கழிவிரக்கம்’, ‘அழுவாச்சி’என்றெல்லாம் எழுதுகிறீர்கள். நான் ஒரு பெண் என்கிற காரணத்தால் எடுத்ததற்கெல்லாம் அழுகிற ஆளாக என்னை நீங்கள் கற்பனை செய்துவைத்திருக்கிறீர்கள்.

ஆம்… நான் எனது மக்களுக்காக அழுதேன்தான். அதை ‘போலிக் கண்ணீர்’என்றும் ‘மாமிசம் விறைத்துப்போய்விடுமே என்றழுத ஓநாயின் கண்ணீர்’என்றும் பழிப்புக் காட்டுகிறீர்கள். போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி பரப்புரைத்ததன் வழியாக குரூர சந்தோசம் கொள்ளும் உங்களால் மக்களுக்காக அழமுடியாமலிருக்கலாம். புலம்பெயர்ந்த நாடுகளிலும் தமிழகத்திலும் உங்கள் எழுத்தென்ற நச்சுவிதையைத் தூவுவதன் வழியாக பேரினவாத அரசாங்கத்துக்கு காவடி தூக்கும் உங்களால் மக்களுக்காக அழமுடியாமலிருக்கலாம். புலியெதிர்ப்புக் காய்ச்சலில் வெந்து தணலாகிக்கொண்டிருக்கும் உங்களால் எங்கள் மக்களுக்காக ஒரு துளிக் கண்ணீர் சிந்த முடியாமல் போயிருக்கலாம். ஆனால், வதைபடும், கொல்லப்படும் எல்லா மக்களுக்காகவும் (புலிகளாலோ அரசாங்கத்தாலோ) நான் உண்மையிலும் உண்மையாக அழுதேன் என்பதை உங்களைப் போன்றவர்களுக்கு நிரூபிக்கவேண்டிய அவசியமில்லை. அது பசப்புக் கண்ணீராகவே இருந்துவிட்டுப் போகட்டும். இணையத்தளங்களில் தலை கூழாகிக் கிடந்த குழந்தைகளைக் கண்டு ‘புலிகளைப் பின்தொடர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு நேர்ந்த கதி’என்று கைகொட்டி நகைத்திருக்கலாம். ஆனால், இணையத்தளங்களில் வந்த-வரும் புகைப்படங்களையும் செய்திகளையும் பார்த்து இரக்கமுள்ள எந்த மனிதராக இருந்தாலும் அழவே செய்வர். எப்படி எப்படியெல்லாம் வாழ்ந்த எங்கள் மக்கள் தண்ணீருக்காகவும் உணவுக்காகவும் இராணுவத்தான்களிடம் கையேந்தி நிற்பதைப் பார்த்து எவரால் அழாதிருக்க முடியும்? எந்த இனவாத அரசாங்கம் அந்த இனவழிப்பைச் செய்ததோ அதன் ஆட்சியின் கீழிருக்கும் சிங்கள இனத்தவரும்கூட அழவே செய்வர். நீங்களும் அழுதிருப்பீர்கள்; புலிகள் அழிக்கப்பட்டபோது ஆனந்தக் கண்ணீர் வடித்திருப்பீர்கள். ஏனென்றால், என்ன விலைகொடுத்தும் புலிகளை அழிக்கவேண்டுமென்று தலைகீழாக நின்ற பேரினவாதிகளின் பெருவிருப்புக்குச் சற்றும் குறைந்ததன்று தங்களது புலிக்காய்ச்சல். அல்லது புலியெதிர்ப்புப் பாய்ச்சல்.

‘தமிழ்நதிக்கு மறுப்பு’என்று உங்களால் எழுதப்பட்ட கடிதமோ கண்ராவியோ அதைப் படித்தபோது எனக்குத் தோன்றியது ஒன்றுதான்: “இது என்மீதான கோபமன்று. விடுதலைப் புலிகள் மீதான கோபந்தான். அது எப்படி என்மீது திரும்பியிருக்கிறதென்றால், புலிகளுக்கெதிரான அவரது காகிதப் புரட்சியை அன்றேல் புரட்டை ஆணித்தரமாக நிறுவுவதற்கெதிராக ஒலிக்கும் ஒரு சிறு முனகலாக எனது குரல் அவரைப் பாதித்திருக்கிறது. அதுதான் இத்தனை எள்ளல், துள்ளல்.”

திரு.அன்ரன் பாலசிங்கத்தை ‘மதியுரைஞர் அல்ல; மதுவுரைஞர்’ என்று தேனி சொன்னதை தனிமனித தாக்குதல் என்று கண்டிக்கத் தெரிந்த பெருந்தன்மையாளரான, பெருந்தகையாளரான தங்களுக்கு, ‘பொய்க்குப் பிறந்தவர் தமிழ்நதி’என்று சொல்வது மட்டும் தனிமனிதத் தாக்குதலாகத் தெரியவில்லையா? ‘நீலிக்கண்ணீர் வடிக்கிறார்’என்பது தனிமனிதத் தாக்குதலில் சேர்த்தியில்லையா? பொதுவெளியில் எழுதிக்கொண்டிருக்கும் ஒருவரை ‘கள்ளமௌனம் சாதிக்கிறார்’, ‘முதலைக் கண்ணீர் வடிக்கிறார்’என்பதெல்லாம் எந்த நாகரிகத்தில் சேர்த்தி?

உங்களுடைய நண்பரான ஆதவன் தீட்சண்யாவோ ‘தமிழ்நதி மூக்கைச் சிந்தி பதிவு எழுதாதீர்கள்’, ‘தலைவிரிகோலமாக எழுந்திருக்காமல் இருந்தாரே’என்கிறார். நீங்களோ நான் கழிவிரக்க அரசியல் செய்வதாக எழுதியிருக்கிறீர்கள். கழிவிரக்கத்தை வைத்துக்கொண்டு ஒரு பற்பொடிப் பக்கெட் கூட வாங்கமுடியாது என்று எனக்குத் தெரியாதா? நான் என்ன போர்க்களத்திலா இருக்கிறேன்? அல்லது தெருவோரத்தில் அமர்ந்து பிச்சையெடுத்துக்கொண்டிருக்கிறேனா கழிவிரக்கத்தினால் இரந்து கேட்க? தமிழ்நதி என்பது ஒரு பெண்ணாக இருப்பதால் கழிவிரக்கம் என்று புறந்தள்ளிவிட உங்களுக்கு வசதியாக இருக்கிறது. (இதையும் கழிவிரக்கம் என்று சொல்லிவிடாதீர்கள்) இப்படியெல்லாம் பேசுவதன் மூலமாக உங்களுடைய ஆணாதிக்க மனோபாவத்தை, அடியில் படிந்துள்ள கறுப்புவண்டலை வெளியில் அள்ளிக்கொட்டுகிறீர்கள். உருப்படியாக ஒரு கவிதையை அல்லது கதையை எழுதத் தகுதியற்றவளாக, கழிவிரக்கத்தை மட்டும் நம்பிப் பிழைப்பு நடத்துமளவு எழுத்து வங்குரோத்தில் நான் இருந்துகொண்டிருக்கவுமில்லை.

மேலும், “கடந்த சில மாதங்களாக உக்கிரமாக நடத்தப்பட்ட இனத்துடைத்தழிப்புக்கு எதிராக உங்கள் குரல்கள் உயரவில்லையே… அது ஏன்?”என்பதே நான் மதுரையில் எழுத்தாளர்களைப் பார்த்துக் கேட்ட கேள்வி. யாரைப் பார்த்து அந்தக் கேள்வியை நான் எழுப்பினேனோ அவர்கள் அதைப் புரிந்துகொண்டார்கள். ‘ஈழப்பிரச்சனையில் ஈடுபாடு கொண்டு எழுதியவர்’களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. இனவழிப்புக்கு எதிராக தக்க சமயத்தில் குரல் கொடுப்பது வேறு; ஈழப்பிரச்சனை பற்றி ஆற அமரப் பேசுவது வேறு என்ற புரிதல் ஷோபா சக்திக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஈழப்பிரச்சனை குறித்து கதைகளும கவிதைகளும் எழுதிய வேறும் பலருடைய (உங்களுடைய பட்டியலில் அடங்காத) பெயர்களை வேண்டுமானால் நான் உங்களுக்குத் தருகிறேன். உங்கள் (அ)நியாயத்திற்கு பெயர்களைப் பட்டியலிட்டுக் கூட்டுச்சேர்க்காதீர்கள். உங்களைப் பற்றி எப்படியொரு பிம்பம் அவர்களது மனதில் இருக்குமென்பதை அவர்கள் சொல்லாமலே நானறிவேன். உங்களுக்கு ஜால்ரா தட்டும் ஒரு சிலரைத் தவிர யாவரும் அறிவர்.

நீங்கள் மாக்ஸிசம், கம்யூனிசம், மயிரிசம் எல்லாம் படித்திருக்கலாம். புத்தகங்களில் படித்ததையெல்லாம் நடைமுறைக்கொவ்வாமல் கக்கியும்வைக்கலாம். ஆனால், சாதாரணர்களாகிய எங்களுக்குத் தெரிந்ததெல்லாம், பேரினவாத அரசாங்கம் எங்கள் இனத்தை ஆரம்பத்திலிருந்து காவுகொண்டுவந்தது, நாங்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்பட்டோம், கேட்டுக்கேள்வியின்றிக் கொல்லப்பட்டோம். எங்களது மீட்பர்களாக விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றமும் எழுச்சியும் பெற்றது. (ஆம். அவர்களும் கொலைசெய்தார்கள்) அதுவொரு நீதியான போராட்ட இயக்கமாக எங்களைப் போன்ற சாதாரணர்களுக்குத் தோன்றியது. நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கையில் அவர்கள் வளர்ந்தார்கள். போராடினார்கள். பேரினவாதத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தார்கள். இது எங்களுக்கு தெரிந்த எளிய சூத்திரம். என்ன காரணத்தினால் உங்களுக்குப் புலியெதிர்ப்புக் காய்ச்சல் வந்தது என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த கம்பசூத்திரம்.

நீங்கள் பேசும் அரசியலில் “ஐயோ! புலிகள் வென்றுவிடுவார்களோ… வென்று விடுவார்களோ என்ற பதைப்பை இதுநாள்வரை கண்டோம். “தோற்றுவிட்டார்கள் ஹைய்யா தோற்றுவிட்டார்கள்” என்ற களிப்பை இப்போது காண்கிறோம். ஆக, உங்களுக்கு மக்களைப் பற்றி ஒரு மண்ணாங்கட்டியுமில்லை. புலிகள் தோற்கவேண்டும் அதுவொன்றே உங்களது ஒரே முனைப்பு. இலக்கு. குறிக்கோள். வேண்டுதல்.

தலைவர் பிரபாகரன் எனக்குக் கடவுளாயிருப்பதில் உங்களுக்கேன் இவ்வளவு கடுப்பு என்று எனக்குப் புரியத்தானில்லை. ஒருவேளை யாரை நான் வழிபடவேண்டும் என்பதற்கு உங்களிடம் விண்ணப்பம் அனுப்பி அனுமதி பெற்றுக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ என்னவோ… எனக்குப் பிடித்திருந்தால் சாத்தானைக்கூட வணங்குவேன். (இரண்டும் ஒன்றுதான் என்று நீங்கள் சொல்வதும் கேட்கிறது) சீரடி பாபாவையோ தெருவில் போகிற விறகுவெட்டியையோ தெருப்பொறுக்கியையோ கூட கும்பிடுவேன். உங்களுக்குக் கடுக்கிறதா என்ன? யாரை நாம் வணங்குவது என்பதுகூட நீங்கள் குறிப்பிடும் ‘தனிமனித புண்ணாக்கு’ உரிமையுள்தான் அடங்குகிறது என்றறிக.

என்ன செய்தாலும் நரி நரிதான். புலி புலிதான். நரி கோட்டும் சூட்டும் போட்டுக்கொள்ளட்டும். கழுத்துப்பட்டை வேண்டுமானாலும் கட்டிக்கொள்ளட்டும். தம்மபதத்தை கையில் வைத்துக்கொண்டு கருணையைப் போதிக்கட்டும். சமவுரிமை, சமாதானம், புத்தம், காந்தியம் எதைவேண்டுமானாலும் பேசட்டும். எங்களைப் போன்றவர்களின் கண்களில் நரி நரிதான். புலி புலிதான். ஒருபோதும் நரிகளை வணங்குதல் செய்யோம். தொண்ணூறு வீதமான தமிழர்களின் நிலைப்பாடு இதுவாகவே இருக்கிறது. (கருத்துக்கணிப்பு வேண்டுமானால் நடத்திப்பாருங்கள் ஷோபா சக்தி)

களத்துப்புலிகள் இப்போது அரங்கில் இல்லை. பார்க்கலாம்…. காகிதப்புலிகள் நீங்கள் என்ன தீர்வை முன்வைக்கிறீர்கள் என்று. அதுதான் நாடு நாடாகப் போய்க் கூட்டம் போடுகிறீர்களே… இப்போது தமிழகத்திற்கு விஜயம் செய்திருப்பதாக அறிகிறேன்.


‘டெக்கான் குரோனிக்கல்’, ‘தீராநதி போன்ற ஊடகங்களில் உங்கள் நிலைப்பாட்டைப் பட்டவர்த்தனமாகச் சொல்லியிருக்கிறீர்களே… ‘செத்தும் கெடுத்தது இந்தப் புலி’என்ற வகையில். நண்பர்களே! ஷோபா சக்தி என்ன சொல்லியிருக்கிறார் என்று இங்கே போய்ப் பாருங்கள். http://www.shobasakthi.com/?p=470


முன்பு எழுதியதுபோலத்தான் பூனை இல்லாத வீட்டில் எலிக்குக் கொண்டாட்டம். அல்லது புலி இல்லாத காட்டில் நரிக்குக் கொண்டாட்டம் என்றும் சொல்லலாம். கொண்டாடுங்கள் ஷோபா சக்தி. தங்கள் இனவிடுதலைக்காகப் போராடி, பல்வேறு நாடுகளின் கூட்டுச் சதி என்ற வஞ்சகத்தால் வீழ்த்தப்பட்ட ‘மாவீரர்களின் வீழ்ச்சியைக் கொண்டாடிய மகோன்னதன்’ என்று உங்கள் பெயர் வரலாற்றில் பதியப்படத்தான் போகிறது. எங்களைப் போன்றவர்களின் வாயை உங்கள் வாதத்திறமையால் மூடிவிடலாம். வரலாற்றின் வாயை எதைக்கொண்டு மூடுவதாக உத்தேசம்?

39 comments:

Unknown said...

hi Acca,

Sorry to type in English.

Why do u bother about these guys?
They always like that.

- Kiri

தமிழ்நங்கை said...

சோபா சக்தி ஆதவன் தீட்சண்யா குணாளன் போன்ற அறிவுஜீவிகள் தமிழர்களுக்கான தீர்வாக எதை வைக்கிறார்கள் எனக்கேட்டுச் சொல்லுங்கள்? அங்கே முகாம்களில் வாடும் மனிதர்கள் பற்றியோ அல்லது தினமும் வடக்கிழக்கில் பயத்துடன் வாழும் மனிதர்கள் பற்றியோ இவர்கள் வாய் திறப்பதேயில்லை. புலி எதிர்ப்புத்தான் இவர்களின் வேலை என்றால் இன்று அதுவும் இல்லை. இவர்கள் எதிர்த்த புலிகளை சிங்கள அரசு முற்றாக ஒழித்துவிட்டது. இனியும் இவர்கள் புலி எதிர்ப்பு என்ற கோசத்தை வைத்து ஒன்றும் செய்யமுடியாது.

மக்களுக்காக பேசுபவன் தான் உண்மையான மனிதன் பூஷ்வா. இவர்கள் எல்லாம் வெறும் காகிதப் பூஷ்வாக்களே தவிர நிஜமான பூஷ்வாக்கள் அல்ல.

ஸ்ரீ சரவணகுமார் said...

சபாஷ்

தமிழ்நதி said...

கிரி,

ஆம் அவர்கள் எப்போதும் அப்படித்தான் என்பது தெரியும். எழுத்தால் சொறியும்போது சும்மா இருக்கமுடியவில்லை.

வித்யா,

" புலி எதிர்ப்புத்தான் இவர்களின் வேலை என்றால் இன்று அதுவும் இல்லை."

உண்மை. புலிகள் இல்லையென்பது எம்மைவிட அவர்களுக்குத்தான் பெரிய சிக்கலாக இருக்கப்போகிறது. இனி யாரைத்தான் நோவது? யாரைத் தூற்றுவது? கஷ்டந்தான்.

சிறீசரண், (அந்த எழுத்தைக் காணவில்லை)

இனித் திருப்பித் தட்டுவார்கள். அதற்குமொரு 'சபாஷ்'வைத்துக் கொள்ளுங்கள்:)

சாந்தி நேசக்கரம் said...

//எங்களது மீட்பர்களாக விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றமும் எழுச்சியும் பெற்றது. (ஆம். அவர்களும் கொலைசெய்தார்கள்) அதுவொரு நீதியான போராட்ட இயக்கமாக எங்களைப் போன்ற சாதாரணர்களுக்குத் தோன்றியது. நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கையில் அவர்கள் வளர்ந்தார்கள். போராடினார்கள். பேரினவாதத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தார்கள். இது எங்களுக்கு தெரிந்த எளிய சூத்திரம்.//

அவர்கள் வாழ்ந்ததும் வளர்ந்ததும் எங்களுக்குள்ளிருந்தே.அவர்கள் மடிந்தார்கள் என்றதும் மெளனமாய் அழுவோரும் நாங்களே.

சரி பிழை எதையும் கேட்காமல் அவர்களை நேசித்தோம். எங்கள் வரையில் அவர்கள் தான் (புலிகள்) எங்களின் மீட்பர்கள்.

ஏற்கனவே ஆதவன் தீட்சண்யா வறுத்ததை இப்போ சோபா சக்தி நிறுக்கிறார் போலிருக்கிறது. இந்த முதலைகள் தமிழனித்தை ஒரு போதும் நினைக்கவும் இல்லை நேசிக்கவும் இல்லை. புலிக்காய்ச்சலில் புலிகளின் அழிவைத்தான் எதிர்பார்த்துக்கிடந்தார்கள். அவர்கள் ஆசைப்படி புலிகள் முடிந்துவிட்டார்கள். இனி இந்த எலிகள் போய் போராடலாமே ?

ஒரு காலம் புலிகள் சோபா சக்தியை வெளியேற்றினர் ? சோபாசக்திக்குத் தான் இது வெளிச்சம்.

புலிபுலியென்று புலம்பியவர்களுக்கு இப்போ தங்கள் மேதாவித்தனங்களை அறிவிக்க புலிகள் இல்லாதது பெரும் தலைவலிதான்.

தமிழ்நதி,
தொடர்ந்து இந்த சோபாக்களுக்கும் சக்திகளுக்கு எழுதுவதால் உங்கள் நேரம்தான் வீணாகிறது.
பெண்ணொருத்தி இப்படி மச்சான் முறை கொண்டாடும் ஆண்களை நோக்கி கேள்வி கேட்டாலே இப்படித்தான் இந்த ஆதிக்கமனங்கள் ஊழைக்காற்றில் தள்ளி அழகுபார்க்கும் என்பது புதியதல்ல.
விட்டுவிடு தோழி
போய்த் தொலையட்டும்.

சாந்தி

S.S. JAYAMOHAN said...

தமிழ் நதி அவர்களுக்கு,

" எதை வேண்டுமானாலும் பேசுங்கள், எதை வேண்டுமானாலும்
எழுதுங்கள், அனால், காலத்தின் விமர்சனம் உங்கள்
பிணங்களைத் தோண்டி தூக்கில் இடும் " என்று
வலம்புரி ஜான் ஒரு புத்தகத்தில் எழுதியது எனக்கு
பிடித்த வாசகம்.

அவதூறு பேசுபவர்கள் காலத்தின் விமர்சனத்திற்கு
ஒரு நாள் பதில் சொல்லித்தான் தீர வேண்டும்.

அனால், நீங்கள் உடன் அடியாக வார்த்தைகளில்
சாட்டையாடி கொடுத்து விடுவது உங்களின்
தனித் தன்மை.

அன்புடன்
எஸ். எஸ். ஜெயமோகன்

Anonymous said...

'....சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டபோதோ, ஆப்கன் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோதோ புலிகள் அது பற்றிக் கண்டனம் தெரிவிக்கவில்லையே!....."

என்று ஆதவன் தீட்சன்யா போல திருவாய் மலர்ந்திருக்கிறார். இவர் அவரிடம் படித்தாரா அல்லது அவர் இவரிடம் படித்தாரா?

சபேசன் said...

விறகுவெட்டி, தெருப்பொறுக்கி, புலி, நரி என்று நீங்கள் பயன்படுத்தியிருக்கும் உதாரணங்களைக் கொண்டு யாழ்ப்பாணிய வேளாள சிந்தனை கொண்ட ஒருவராக உங்களை சித்தரித்து சோபசக்தி விரைவில் கட்டுரை தீட்டுவார். இது நிச்சயமாக நடக்கும். பொறுத்திருந்து பாருங்கள்.

கண்டும் காணான் said...

புலிஎதிர்ப்பு அரசியலை மட்டும் வைத்துக்கொண்டு தன்னையும் ஒருவனாக நிலை நாட்டி, மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை புலி அழிந்தால் போதும் என்ற பெரிய மனமுடையவர்க்ளையும் இலங்கை தேசிய கீதம் பாடி மெய்யுருகுபவர்க்ளையும் காணும்போது , புலிகள் ஏன்தான் இவர்களை தடைசெய்தார்கள் என்ற கேள்விக்கு இப்போது விடை கிடைக்கிறது. இவ்வளவு நாட்கள் புலியை காரணம் சொல்லி இப்போது :செத்தும் கெடுத்தது புலி" என்று கூறி வாளாவிருக்கும் உணர்ச்சி அற்ற ஜடங்களே , நீங்கள் மக்களுக்காக எப்போதுதான் குரல் கொடுப்பீர்கள்?

Anonymous said...

விளம்பரத்துக்காக விபச்சாரம் செய்யகூட துணியும் உலகம் இது.

vanathy said...

புலி இருந்தபோதும் திட்டினார்கள் ,இறந்தபோதும் திட்டுகிறார்கள்

முஸ்லிம்களை விரட்டியதைபற்றி சொல்கிறார்கள்.
அது புலிகள் செய்ய மிகப் பெரிய தவறுதான் ,ஆனால் அது நடந்தது பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்பு..
தொன்னூற்றி ஐந்தாம் ஆண்டிலிருந்து யாழ்ப்பாணத்தில் ராணுவ ஆட்சிதான் நடக்கிறது ,அப்படி இருக்கும்போது இந்த முஸ்லிம் குடும்பங்களை எப்போதோ யாழ்ப்பாணத்துக்கு குடியேற்றி இருக்கலாம்தானே.ஏன் செய்யவில்லை.?
இத்தனைக்கும் பல முஸ்லிம் கட்சிகள் பல தடவைகள் இலங்கை அரசில் அங்கம் வகித்து அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள்.

ஆதிக்க சாதி மனப்பான்மை யாழ்ப்பாணத்தவர்களுக்கு மட்டும் சொந்தமான ஒன்றல்ல ,இந்து சமயம் என்ற பேரில் இந்தியாவிலும் இந்து சமயத்தவர் இருக்கும் எல்லா இடங்களிலும் அது இருக்கிறது .
கிழக்குத்தமிழர் , வன்னித் தமிழரோடு ஒப்பிடும்போது யாழ்ப்பாணத் தமிழரிடம் சாதிதிமிர் அதிகம் உள்ளது உண்மைதான் ,ஆனால் அதற்காக சிங்கள ஆதிக்கத்தில் இருந்து விடுபட ஈழத்தமிழர் நடத்தும் போராட்டம் நியாயம் இல்லாததாக ஆகிவிடாது .
அத்துடன் என் போன்றோர் வளர்ந்து வரும் காலத்தில் ஆயுதப்போராட்டம் தீவிரம் அடைந்த காலத்தில் சாதி வேறுபாடுகளின் உக்கிரம் குறைந்து விட்டது.
புலிகளின் உறுப்பினராக வேளாள ,பிராமண இளைஞர்கள் ,தலித் இளைஞர்கள் என்று எல்லா சமூகங்களில் இருந்தும் போராடி இறந்திருக்கிறார்கள் .
அடக்குமுறை எங்கிருந்து வந்தாலும் அதை எதிர்த்து போராடுபவர்கள்தான் உண்மையான படைப்பாளிகள் .
அது தலித்துகளுக்கு எதிரான ஆதிக்க சாதியின் அடக்குமுறை என்றாலும் சரி, தமிழருக்கு எதிரான சிங்கள அரசின அடக்குமுறை என்றாலும் சரி.

தமிழருக்கு உள்ளே இருக்கும் அடக்குமுறையும் தவறுதான், தமிழருக்கு எதிரான அடக்குமுறையும் தவறுதான்.
இவர்கள் இரண்டுக்கும் எதிராகப் போராடுகிறார்களா?

அங்கு வன்னி முகாம்களில் வாடும் மக்களுக்காகவும் வாய் திறக்கவே அஞ்சி வாழும் ஏனைய தமிழர்களுக்காகவும் இவர்கள் தமது சக்தியை செலவழிக்கலாமே?

எத்தனை நாட்களுக்குத்தான் இல்லாத புலிகள் பற்றி கீறின ரெகார்ட் மாதிரி கதை
சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்கள் .

--வானதி

Unknown said...

தமிழ், உங்கள் நேரத்தை இவர்களுக்கு தின்னக் கொடுக்காதீர்கள். விஷம் தோய்ந்த வார்த்தைகளில் துளிக் கூட உண்மை இல்லையாத போதும் எதிர்வினையாற்றி மட்டுமே இவர்களுக்கு சூடு போட முடிகின்றது. ஆனால் சொரணையற்றவர்களிடம் பேசி பயன் என்ன? //என்ன செய்தாலும் நரி நரிதான். புலி புலிதான். நரி கோட்டும் சூட்டும் போட்டுக்கொள்ளட்டும். கழுத்துப்பட்டை வேண்டுமானாலும் கட்டிக்கொள்ளட்டும். தம்மபதத்தை கையில் வைத்துக்கொண்டு கருணையைப் போதிக்கட்டும். சமவுரிமை, சமாதானம், புத்தம், காந்தியம் எதைவேண்டுமானாலும் பேசட்டும். எங்களைப் போன்றவர்களின் கண்களில் நரி நரிதான். புலி புலிதான். ஒருபோதும் நரிகளை வணங்குதல் செய்யோம். தொண்ணூறு வீதமான தமிழர்களின் நிலைப்பாடு இதுவாகவே இருக்கிறது. // நூறு சதவீதம் சரி தமிழ். தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என்பதெல்லாம் மகாபாரதத்தோடு முடிந்த கதை போலும். அங்கு எம் தமிழ் மக்கள் அமைதியாக வாழவேண்டும், அவர்களுக்கான அடிப்படை உரிமைகளை மீட்டுத் தர வேண்டும், என்பதைப்பற்றியெல்லாம் அக்கறை காட்டாமல் பிதற்றிக் கொண்டிருப்பதையே பிழைப்பாக வைத்திருக்கும் மனிதர்களிடம் நியாயங்களையும் சரியான வாதங்களையும் எதிர்பார்ப்பது வீண்.

தமிழ்நதி said...

இப்போதைக்கு அனானி அல்லது பினாமிக்கு மட்டும் பதில்.. பிறகு ஏனைய நண்பர்களோடு கதைக்கிறேன்.

"விளம்பரத்துக்காக விபச்சாரம் செய்யகூட துணியும் உலகம் இது.ட"

ஆமாமாமாம். ஆனால் ஒரு வித்தியாசம்... விபச்சாரத்தின்போது ஒருத்தி தன்னுடலை மட்டுமே விற்கிறாள். இப்படியானவர்கள் ஒட்டுமொத்த இனத்தையே கூட்டிக்கொடுக்கிறார்கள். நிறைவாக இருக்கிறதா?

Anonymous said...

sabash. ennavendru solvathu ungal thunichalai. engal manthil ungalukkana mariyathai koodikkonde irukkirathu.

v r with u...
prasanna.(r u remeber me?)

நேசமித்ரன் said...

பிணவறையின் குளிரடுக்குகளில்
வளர்ந்தபடி இருக்கும் நகங்கள்
கைவிடப்பட்டவர்களின்
இமை ரோமங்களிடையே தம்மை
இருத்திக் கொள்கின்றன

கனவுகளில்
உதிரம் உறைந்த பற்கள்
நகங்களைத் தொடர்ந்து
அவர்களின் புணர்ச்சிகளை திருநங்கைகளின்
காமங்களாய் உருக்குலைக்கின்றன

கைவிடப்பட்டவர்கள்
பென்சில்களுக்கு பிரதியாய்
முதுகுத் தண்டின் மஜ்ஜைகளையும்
விரைப்பையின் மீதங்களையும்
கையெழுத்திட பணிக்கப்படுகிறார்கள்

கைவிடப்பட்டவர்களின் மொழி
ஒரு சர்க்கஸ் புலியின் குரலாய் திரிகிறது

கைவிடப்பட்டவர்களின் குழந்தைகள்
நாளடைவில் தம் வளர்ப்பு பிராணிகளின் பெயரோடு
தம் சினேகிதர்களின் பெயரை குழப்பிக் கொள்கிறார்கள்

அதே
பற்கள் புனித சின்னமாக்கப்படுகின்றன

கைவிடப்பட்டவர்களின் கடவுள்
தன் பெயரை மாற்றிக்கொள்கிறார்(ள்)



பென்சிலுக்கு பிரதியாய் இவர்கள் வேண்டுவதை நாம் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது சகோதரி
இன்னும் கூட காட்டமாக பதில் சொல்லி இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது..!

வெண்காட்டான் said...

பௌர்ணமியன்று நிலவு உதிக்கவில்லை என்றால்கூட ‘புலிகளின் சதியால் நிலவு மறைந்துவிட்டது’என்று ///
pilai. paasisa endu solli than solluvar. illavittal shoba shakthi touch irukkahtu. eeaan ivangalkukellam pathil sollukreerkal. vangum kassukku kulaikum naaikal.

பாண்டியன் said...

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் -பழமொழி
புலி இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் -புதுமொழி

புலிகள் அட்டைபடத்திலாவது இருப்பதால் தான் இவர்கள் வயிறாற உண்டு சரக்கடிக்க முடிகிறது அவர்கள் பிழைப்பில் மண் அள்ளி போடும் தங்கள் செயலை வன்மையாக கண்டிக்கிறேன்..

பதி said...

இதையும் வாசித்தேன் பின்னூட்டங்களுடன் சேர்த்து....

என்னைப் பொறுத்த வரை, இது போன்ற விவாதங்கள் கூட இனவாத அரசின் திட்டப்படி, (முகாமில் அடைபட்டிருக்கும் மக்களின் சுதந்திர வாழ்வு, அரசியல் உரிமை, இனப்பிரச்சனைக்கான தீர்வு போன்றவறை பற்றி சிந்திக்க விடாமல்) சென்று கொண்டிருப்பதாக தோன்றுகின்றது.

தமிழ்நதி said...

நன்றி சாந்தி,

எப்போதும்போல வந்து போய்க்கொண்டிருங்கள். எனக்கே ஏன் இப்படியெல்லாம் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று எரிச்சலாக இருக்கிறது. திரும்பத் திரும்ப ஒரே விடயங்களைக் கதைத்து என்ன செய்யப்போகிறோம்... இனி என்ன கத்தினாலும் என் வேலையைப் பார்ப்பதாகத்தான் உத்தேசம். (இப்படித்தான் சொல்வேன் என்கிறீர்களா?:)

எஸ்.எஸ்.ஜெயமோகன் (இனிஷியல் முக்கியம்:)

இந்தக் காலம் எம்மளவில் இருண்டகாலம். ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. எல்லா நம்பிக்கைகளும் சரிந்துகொண்டிருப்பதாக உணர்கிறேன்.

சாட்டையடி கொடுப்பது தனித்தன்மைதான். சில சமயங்களில் செருப்படியும் படவேண்டியிருக்கிறது.

அனானி நண்பரே,

பரஸ்பரம் நிறையப் படித்திருப்பார்கள்தான் போலிருக்கிறது.

சபேசன்,

"விறகுவெட்டி, தெருப்பொறுக்கி, புலி, நரி என்று நீங்கள் பயன்படுத்தியிருக்கும் உதாரணங்களைக் கொண்டு யாழ்ப்பாணிய வேளாள சிந்தனை கொண்ட ஒருவராக உங்களை சித்தரித்து சோபசக்தி விரைவில் கட்டுரை தீட்டுவார். இது நிச்சயமாக நடக்கும். பொறுத்திருந்து பாருங்கள்."

எழுதட்டும் சபேசன். எனக்கும் எழுதத் தெரியும். ஏன் வேளாளரில் தெருப்பொறுக்கி இல்லையா? அவர்கள் விறகுவெட்டுவதில்லையா? மேலும் இந்தப் பொதுப்புத்திக்காரர்களை என்ன செய்வதென்று தெரியவில்லை. பிராமணர்கள், பள்ளர்கள், பிள்ளைமார்கள், அருந்ததியர், வேளாளர்கள், முதலியார்கள் எல்லோருக்குள்ளும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தேயிருக்கிறார்கள். 'வேளாளர்' எனப்படுபவர் யாவரும் ஆதிக்கச் சக்தியினர் என்பதுபோன்ற பொதுப்புத்தி வளர்ந்துகொண்டேயிருக்கிறது. எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்துவதுதானே அறிவாகும்?

கண்டும் காணான்,

நீங்கள் காலத்திற்கேற்றபடி பெயர் வைத்திருக்கிறீர்கள். அப்படி இருந்தால்தான் பிழைக்க முடியும் போலிருக்கிறது. இல்லையெனில் யாவும் பிழைத்துவிடுகிறது.

அனானி,

விளம்பரத்துக்கு எழுதுவதைவிடவும் வேறு பல வழிகள் இருக்கின்றன அல்லவா?

வானதி,

நீங்கள் கேட்டிருக்கும் கேள்வியை நிறையப் பேர் கேட்டுவிட்டார்கள். 'புலிகளிடமிருந்து யாழ்ப்பாணத்தை மீட்டு (???) தம்வசம் வைத்திருக்கும் இராணுவ அரசாங்கம் முஸ்லிம்களை ஏன் இன்னமும் மீள்குடியேற்றவில்லை?'என்று. அந்தக் கேள்வியை இவர்களைப் போன்றவர்கள் சமயோசிதமாக மறந்துவிடுகிறார்கள். இதையும் 'செலக்டிவ் அம்னீசியா'வினுள் அடக்கலாம்.

உமா,

மெளனம் கலக நாஸ்தியாம் சொல்கிறார்கள். தவிர, திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டிருப்பவர்களிடம் பேசித்தான் என்ன செய்வது? நிறையப் படிக்க வேண்டும். நிறைய எழுதவேண்டும் என்ற என் இலக்கில் இனித் தொடர்ந்து பயணிப்பேன்.

பிரசன்னா,

உங்களை எனக்கு மயூரனின் நண்பனாக நினைவிருக்கிறது. அவர்தானே நீங்கள்? உங்கள் வலைப்பூவிலிருந்து பின்னூட்டமிடுங்கள். ஏனென்றால், என்னைப் பாராட்டி வரும் பின்னூட்டங்கள் எல்லாம் ஏன் அனானிகளிடமிருந்தே வருகின்றன என்று ஒரு அனானி வந்து இன்றைக்குத்தான் கேட்டுவிட்டுப் போயிருக்கிறது. இந்தப் பதிவில் பின்னூட்டமிடும் நண்பர்கள் தயவுசெய்து வலைப்பூவிலிருந்து இட்டால் நன்றியுடையவளாக இருப்பேன்.

நேசமித்ரன்,

உங்கள் தார்மீக கோபம் புரிகிறது. கருத்திலெடுத்துக்கொள்கிறேன்.

நன்றி வெண்காட்டான்.

பாண்டியன்,

உங்கள் கண்டனத்தைப் பதிவுசெய்திருக்கிறீர்கள். கணக்கிலெடுத்துக்கொள்கிறேன்:)

பதி,

இனி இப்படி யாருக்கும் பதில்சொல்லிக்கொண்டிருக்கப் போவதில்லை. 'ஏன் கள்ள மெளனம்...'என்று கிண்டலடித்தார்கள். 'நேரமில்லையாம் அவவுக்கு'என்று பழிப்புக் காட்டினார்கள். தாங்கமுடியாமல் எழுதினேன். இனி என்னவும் கத்தட்டும் என்று விட்டுவிடவே எண்ணம்.

soorya said...

அன்றும் அப்படித்தான்,
வானம் இருண்டு கொண்டே போயிற்று.

இன்றாவது.............
வானம் வெளிச்சமாகாதா என
மனசு தன் ஈரல் குலையைப் புடுங்கி புடுங்கிப் புண்ணாயிற்றுப் போ..!

அரங்கப்பெருமாள் said...

எப்பிடியோ மக்களை கேடயமாக பயன்படுத்தியது தவறு. நினைத்துப் பாருங்கள்... இவருக்குப்பின் யாரினி வழி நடத்துவார்கள்? தலைமை இல்லாத இயக்கமாக இருக்கிறதே? இப்பொழுது அமைதியாக போராடுவோம் என்றால்,தலைவர் ஒருவர்தான் சண்டைக்கு காரணமா? கால் நூற்றாண்டு நடத்திய போராட்டத்தின் பயன் என்ன? மீண்டும் ஆரம்பித்த புள்ளியிலேதான் சேர்க்கப்பட்டதா? இதற்கா இத்தனை பழி,இத்தனை உயிர்? தலைவர் இறக்கவில்லை என்று இன்னும் கூறி வருகிறார்களே? எனக்கென்னமொ எங்கே போகிறது என்றே புரியவில்லை

தமிழ்நதி said...

வணக்கம் அரங்கப்பெருமாள்,

உங்கள் கேள்விகளும் ஆதங்கமும் நியாயமானதே. உங்களைப் போன்ற குழப்பங்கள் எனக்கும் உண்டு. பாதை இருண்டுதான் கிடக்கிறது. என்றாலும், ஏதாவது நடக்கும் என்று நாம் நம்பிக்கொண்டிருப்பதில்தானே வாழ்க்கை ஓடுகிறது. இங்கு சில அதிமேதாவிகள் பேசிக்கொண்டிருப்பதைப்போல 'கையில்லட்டு'ஆக இல்லை தீர்வு என்பது மட்டும் வெளிச்சம்.

சூரியா,

நீங்கள் மட்டுமில்லை... இங்கும் பலர் வெறியில்தான் எழுதுகிறார்கள்; கொலைவெறியில், நிறைவெறியில்.

அது யார் 'வடபழனியில் விலைபோன தங்கச்சி?' சாராயம் உள்ளே போனால் பூராயம் வெளியில் வரும் என்கிறார்கள்:)

Anonymous said...

"அலைகள் ஓய்வதில்லை!" இது இயற்கையின் நியதி. அதுபோல சுதந்திர போராட்டங்களும் ஓய்வதில்லை - இது வரலாற்று உண்மை. அதைப்போலவே போராட்டங்களின் போது எடுக்கப்படும் முடிவுகள் சில சமயம் தவறானதாக மற்றவர்களுக்கு தோன்றலாம். ஆனால் போராட்டத்தின் அடிப்படை காரணங்களுக்கு முன் வலுவிழந்து விடும். இது புராணங்கள் காட்டும் உண்மை. காலம் பதில் சொல்லும்

நேசமித்ரன் said...

சகோதரி ..!

என் வலையத்துக்கு ஒருமுறை வாருங்கள்.
பிரபஞ்சன் கையால் விருது வாங்குபவர் நீங்கள்
ஏதோ என்னால் முடிந்த ஒரு வாழ்த்து

Anonymous said...

// ‘இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் குண்டியைக் குண்டியைத் தூக்கி அடிப்பான்’என்றொரு பழமொழி உண்டு. //

Sorry for typing in English. I've never heard the above proverb before :-)) I think you created it for Shobashakthi.

Sridhar said...

இந்திய சுதந்திர காலங்களில் மாமேதை அம்பேத்கரின் உயர்ஜாதி எதிர்ப்பை ஆதவன் சமகால இலங்கை தமிழர்களின் மீதான ஒடுக்குமுறையுடன் ஒப்பிட்டு தலித் அரசியலின் மூலம் தன்னையும் உயர்த்தி கொள்ளலாம் என்று நினைக்கிறார் போலும். அவருக்கு வேண்டுமானால் அப்படி ஒரு நினைப்பு இருந்து விட்டுப் போகட்டும். ஆனால் ஏற்கனவே மீளாதுயரிலிருக்கும் ஈழத்தமிழர்களின் பால் அக்கறை தான் இல்லை. குறைந்த பட்சம் கொச்சைப் படுத்தாமல் இருக்கட்டும்.பிறகு அவரின் மேதாவி தனத்தையும் மார்க்சிய சிந்தனையும் மெச்சி உச்சி முகர்த்து கொள்கிறோம்.

Anonymous said...

tamilnathi,

u have responded aptly and deeply. Your anger is justified. Peple lik Shobasakthi and aadhavan theeshanya will be thrown away by the pages of history . We'll contin u to work an voice for the suffering people and the world'd greatest warriors - Tigers- relentlessly. Prabhakaran is undoubtedly our leader and he is one of the world's greatest warriors!

kavignar thamarai

மாதவராஜ் said...

உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் அதே வேளையில்,
//நீங்கள் மாக்ஸிசம், கம்யூனிசம், மயிரிசம் எல்லாம் படித்திருக்கலாம். // என எழுதியதற்கு என் கண்டனத்தையும் பதிவு செய்கிறேன்.

-/பெயரிலி. said...

///நீங்கள் மாக்ஸிசம், கம்யூனிசம், மயிரிசம் எல்லாம் படித்திருக்கலாம். // என எழுதியதற்கு என் பாராட்டு. இந்தியாவின் சிபிஎம் மார்க்ஸிஸ்டுக்கள் இந்துத்துவாக்கூத்தாடிகளிலும்விடக் கொடுமையானவர்கள். வாயாலே மட்டும் தங்களை முற்போக்காகக் காட்டிக்கொண்டு அலைகின்றவர்கள். ஈழத்தமிழர்களை இந்திய அதிகாரவர்க்கம் கொல்ல உதவியதிலே இந்த சீட்டுக்கவி வெண்ணெய்வெட்டி (முன்னைய இந்திய இராணுவச்)சிப்பாய்களுக்கு நிறையப் பங்கு உண்டு, நீங்கள் மிகவும் தெளிவாக இந்திய மார்க்ஸியம், கம்யூனிசம், மயிரிசம் என்றே எழுதியிருந்தால் இன்னுமும் மெருகடைந்திருக்கும்.

மாதவராஜ் said...

பெயரிலிகளோடு பேச நான் விரும்பவில்லை. இதுபோன்ற கமெண்ட்களை அனுமதிப்பதும் சரியில்லையென்றே படுகிறது. தமிழ்நதி அவர்கள் என்ன சொல்கிறார் என்பதே எனக்கு முக்கியமானது.

தமிழ்நதி said...

Mathavaraj and peyarili,

I think Something is going on between you guys. I don't know what to say. sorry i will download e kalappai and write in tamil tomorrow. in London now.

Anonymous said...

மார்க்ஸியம் இப்ப பைபிள், குரான் மாதிரி ஆயிட்டுதே; யாரும் ஒன்னும் தப்பா சொலகூடதுன்னு ! இதையும் பெயாரிலி மாதவராஜ் சண்டை ஆக்கிட்டீங்களே தமிழ்நதி?

தமிழ்நதி said...

மாதவராஜ்,

என் உணர்வுகளைப் புரிந்துகொண்டதாக எழுதியிருக்கிறீர்கள். அதேவேளை நான் ‘மயிரிசம்’என்று எழுதியதற்கான கண்டனத்தையும் பதிவுசெய்திருந்தீர்கள். நீங்கள் மகத்தானதாக நம்பிக்கொண்டிருக்கும் ஒரு இசத்தினையடுத்து அப்படியொரு சொல்லை எழுதுமளவிற்கு நான் கசப்படைந்திருக்கிறேன் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். இத்தனை நடந்தபிறகு என்னளவில் எதுவும் புனிதமாகத் தோன்றவில்லை. புனிதம், அபுனிதம் எல்லாம் கடந்த வெறுமையில் நின்றுகொண்டிருக்கிறோம். என்னைக்கூட எழுதினார்கள் ‘தமிழ்நதி நம்பும் பாசிச புலியிசம்’என்று. எனக்குக் கோபமே வரவில்லை. நடைமுறையில் இல்லாத, அன்றேல் ஒவ்வாத இசங்களிடத்தில் ஒவ்வாமை இருப்பதை எப்படி விலக்கிக்கொள்வது?

பெயரிலி,

மேற்சொன்னதன் வழியாக உங்களோடும் உரையாடியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

அனானி,

ரொம்பவுந்தான் காத்துக்கொண்டிருப்பீர்களோ...? எனக்கு வழக்கத்திலேயே சண்டைகளில் ஆர்வமில்லை. ஏதோ காலக்கோளாறு விரும்பத்தகாதவை நடந்துவிட்டன. எனக்கே ஆர்வமில்லை என்னும்போது வேறு இருவருக்குள் சண்டையை மூட்டிவிடுமளவுக்கு... அது அவர்கள் இருவருக்கும் இடையிலான பிரச்சனை. தவிர, இருவருமே என்னைவிட அனுபவமும் அறிவும் வாய்க்கப்பெற்றவர்கள். நான் இடைபுகுந்து கோர்த்துவிட ஒன்றுமில்லை.

Anonymous said...

ஒரு தனிநபரின் மீதுள்ள கோபத்தின் விளைவாக மயிரிசத்தின் வரிசையில் மார்க்சியத்தையும் கம்யூனிசத்தையும் சேர்ப்பது எப்படி சரியாகும்?

//அப்படி ஒரு சொல்லை எழுதுமளவிற்கு நான் கசப்படைந்திருக்கிறேன் ”//

மீண்டும் தனிமனிதர் மீதான் உங்கள் கோபங்களால் இசஙகள் மீது கோபப்படுவது என்ன வகை அரசியல் என்று எனக்கு புரியவில்லை.உஙகளுக்கு தத்துவங்களின் மீது கசப்பு வருகிறதென்றால் எங்கேயோ புரிதலில் சிக்கல் இருக்கிறது.

jerry eshananda said...

போதும் தமிழ்நதி,தமிழீழம் என்ற நீண்ட நெடியதொரு பயணத்தில் இனிவரும் உங்கள் படைப்புகள் அனைத்தும், சக பதிவர்களுக்கு உற்சாகம் தரக்கூடிய வகையிலும், விடுதலை உணர்வுகளை தக்க வைத்து கொள்ளும் வகையிலும் வரட்டும். சாதிய துண்டுகளை தோளில் போட்டுகொண்டு வலம் வரும் சோபா, ஆதவன் என்னும் மிட்டா மிராசுகளுக்கெல்லாம் பதில் எழுதி எல்லோரின் நேரத்தை படுகொலை செய்ய வேண்டாம்.

Anonymous said...

//என்னளவில் எதுவும் புனிதமாகத் தோன்றவில்லை//

மார்க்சியமோ கம்யூனிசமோ அல்லது நீங்கள் சொன்னது போல மயிரிசமோ எதுவும் புனிதமில்லை.அவை மக்களுக்கானவை. புனித டப்பாவுக்குள் வேதங்கள் வேண்டுமானால் அடைபட்டுக் கிடக்கட்டும். அந்த கண்றாவி டப்பாவுக்குள் நீங்கள் கண்டுபிடித்த மயிரிசத்தை வேண்டுமானால் போட்டு அடையுங்கள்.மார்க்சியத்தையோ கம்யூனிசத்தையோ போட்டு அடைக்கும் வேலையை செய்ய வேண்டாம்.நீங்களே கூறியது போல் உங்களுக்குத் தெரியாத ஒன்றைப் பற்றி, கருத்து சொல்லாமல் இருப்பது சரியாக இருக்கும்.

-/பெயரிலி. said...

There is nothing going on between him & me. However I do not like the people who shed crocodile tears for eelam tamils after all happened, but still stand behind their party that supported and helped sri lankan racist government. This guy Madhavaraj is one of such person.

Mr. Mdhavaraj,
I am not an anony. If you had rather clicked my profile, you would have reached my blog.

-/பெயரிலி. said...

If this is CPM official blog there is no need to allow comments that do not support the party policy. However this is Thamizhnathy's blog. She of course has the right to what to accept and what is not

-/பெயரிலி. said...

by the way, I have NOTHING against Marxism, if you have not read what I useD to write. However I am against Hindian CPM, Sri Lankan blind Chinese Communist Warriors and Diaspora Sri Lankan Troskyists. I certainly love to see much action by Maoist in India. The Much the merrier.