12.27.2010

காலச்சுவடு பதிப்பகம் மூலம் எனது புத்தகம்


அன்பு நண்பர்களுக்கு,


“ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம்“ என்ற தலைப்பிலான எனது கட்டுரைத் தொகுப்பொன்று காலச்சுவடு பதிப்பகம் வழியாக ஜனவரி 2ஆம் திகதியன்று மாலை ஆறு மணிக்கு அண்ணா சாலையில் அமைந்துள்ள தேவநேயப் பாவாணர் நுாலக அரங்கில் வெளியிட்டு வைக்கப்படுகிறது. அதனோடு கூட மேலும் 8 நுால்களின் வெளியீடும் இடம்பெறவிருக்கிறது. பிரபஞ்சன், ஹென்றி திபேன், பால் சக்கரியா, சுகுமாரன், ச.பாலமுருகன், ஆ.இரா.வேங்கடாசலபதி, சதானந்த மேனன், வாஸந்தி, ஞாநி ஆகியோர் உரையாற்றவிருக்கிறார்கள்.

நண்பர்கள் அனைவரும் வந்து கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

நட்புடன்
தமிழ்நதி

23 comments:

Unknown said...

வாழ்த்துகள் தமிழ்நதி.

ஸ்டாலின் குரு said...

வாழ்த்துகள்

ஹேமா said...

"தேவதைகளும் கைவிட்ட தேசம்" பெயரே மனம் கலங்கி நிறையக் கதைகள் சொல்கிறது.
மனம் நிறைந்த வாழ்த்துகள் தோழி !

ஈரோடு கதிர் said...

புத்தகத்தின் தலைப்பே வலி சுமந்து வரும் எழுத்துகளைத் தாங்கி வரும் என உணர்த்துகிறது.

வாழ்த்துகள் தமிழ்நதி!

அ சொ said...

வாழ்த்துகள்

நிகழ்வில் நிச்சயம் கலந்து கொளவேன்...
Facebook ல் நிகழ்வு குறித்த்து நீங்கள் விடுத்துள்ள அழைப்பிதழ் தெளிவாக இல்லை.. - அருண் சொக்கன்

Anonymous said...

எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தமிழ்நதி!கலந்து கொள்ள முடியாத தூரத்தில் இருப்பதையிட்டு
மனம் வருந்துகிறது.

பதி said...

வாழ்த்துக்கள் தமிழ்நதி.

தமிழ்நதி said...

நன்றி செல்வராஜ் ஜெகதீசன், ஸ்டாலின் குரு, ஹேமா, கதிர், அருண் சொக்கன், மல்லிகை, பதி.

ஹேமா, நம் “தேவதை“களும் கைவிட்டுவிட்டனவே...:(

கதிர், சென்னை வந்தால் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளுங்கள்.

வருகைக்கு நன்றி அருண் சொக்கன். முகநுாலில் கொடுக்கப்பட்டுள்ள அழைப்பிதழை பெரிதுபண்ணிப் பார்த்தேன். முடியவில்லை. பிறகு வலைப்பூவில் இட்டு, முகநுால் நிலைக்குத் தொடுப்புக் கொடுத்தேன். அதைக் கிளிக்கினால் தெளிவான பக்கத்திற்கு வந்து சேர்கிறது.

மல்லிகை,

தொலைவில் இருந்தாலும், நெருக்கமாக இருப்பதற்கு நன்றி.

பதி, நிறைய நாட்களாக ஆளையே காணோம்... நலமாக இருக்கிறீர்களா?

கவிஞர் இசை said...

vazhthukkal madam

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் தமிழ்நதி

Nandhini said...

வாழ்த்துகள் தமிழ்நதி

பதி said...

பதிலுரைக்கு நன்றி தமிழ்நதி,

நலமே :) ஆய்வுக்கட்டுரையினை முடிக்க வேண்டிய சூழ்நிலையில் இருப்பதனால், பதிவுலகிற்கு நீண்ட விடுமுறை.

Dhanaraj said...

I am waiting for the book.
But can not come to Chennai. Thanks for the invitation.

padmanabhan said...

வாழ்த்துகள். ஒரே நாள் விடுமுறையில் புத்தகக் காட்சியை கண்டு விடும் நோக்கோடு வந்த எனக்கு இரு ஏமாற்றங்கள். முதலாவது,6 மணிவரை எந்த ஏற்பாடுகளும் இல்லாமல் இருந்த புத்தகக் காட்சி அரங்கம்.(அது பற்றி ஒரு கட்டுரையே எழுதலாம்) அடுத்து,காலச்சுவடு அரங்கமும் அதுவரையில் அமைக்கப்படாமல் இருந்தது (தங்களது புத்தகம் வாங்க இயலாமல் போய் விட்டது), காலச்சுவடை தொடர்பு கொண்டு வாங்க உள்ளேன்.

கிருபாநந்தினி said...

தழும்பைப் பார்த்ததுமே பட்ட காயத்தின் வீர்யம் தெரிவது போல புத்தகத் தலைப்பே ரணத்தைச் சொல்லுது. ஆனா, எனக்கு ஒரு சந்தேகங்க்கா! (அதென்னமோ உங்க கிட்டதான் இப்படி சந்தேகக் கேள்விகளே கேக்கத் தோணுது!) நீங்களோ விடுதலைப் புலிகளோட ஆதரவாளர். வாஸந்தி ஆண்ட்டியோ புலிகளை எதிர்க்கிறவர். உங்க புத்தக வெளியீட்டு விழாவுல அவர் வந்து உரையாற்ற சம்மதிச்சது எப்படி?

தமிழ்நதி said...

வாழ்த்துக்களுக்கு நன்றி கவிஞர் இசை அவர்களே...மகாகவிகள் ஆரம்பநிலைக் கவிஞர்களைக் கணக்கில் கொள்வதில்லை என அறியத் தந்தமைக்கு நன்றி:)

தன்ராஜ்,

புத்தகக் கண்காட்சிக்கு வரவில்லையா?

ஆமாம் பத்மநாபன், நானும் நேற்று புத்தகக் கண்காட்சிக்குக் சென்றபின் அந்த ஏமாற்றத்திற்கு உள்ளானேன். ஆனால், கலைந்திருப்பதிலும் ஒரு அழகியல் இருக்கத்தான் செய்கிறது என்று பிறகு நினைத்துக்கொண்டேன்.

உங்களைப் போல வெளியூர்களிலிருந்து ஒருநாள் திட்டத்துடன் வருபவர்களுக்கு அது ஏமாற்றம் அளிக்கவே செய்யும் என்பதை உணரமுடிகிறது.

வாங்க கிருபாநந்தினி... வரும்போதே சந்தேகமா? உங்கள் உடல்நிலை எப்படி இருக்கிறது? நலம்பெற்று விட்டீர்களா? அடிக்கடி உங்கள் வலைப்பூ பக்கம் வந்து பார்ப்பேன்.. ஏதாவது எழுதியிருக்கிறீர்களா என. ஒன்றையும் காணவில்லை. மனசுக்கு சங்கடமாக இருந்தது.

அன்று நடைபெற்றது எனது புத்தக வெளியீட்டு விழா மட்டுமன்று. மேலும் எட்டுப் புத்தகங்கள் அன்று வெளியிடப்பட்டன. அவற்றுள் இரோம் ஷர்மிலா என்பவரால் எழுதப்பட்ட கவிதைகள் குறித்து வாஸந்தி உரையாற்றினார். எனது புத்தகம் பற்றி பிரபஞ்சன் உரையாற்றினார்.

வாஸந்தி அவர்களை புலியெதிர்ப்பாளர் என்றும், என்னை புலி ஆதரவாளர் என்றும் ஒற்றைச் சட்டகத்துள் அடைப்பது நியாயமில்லை என்பது எனது கருத்து. அதைத் தாண்டியும் ஆயிரம் இருக்கும். நாம் அதைப்பற்றி இப்போது விவாதிக்கத்தான் வேண்டுமா? உங்கள் உடல்நிலை முதலில் சரியாகட்டும். நாம் பேசலாம். நன்றி.

விஷ்ணுபுரம் சரவணன் said...

தமிழ்..

அன்று வழக்கத்துக்கு மாறாய் நிகழ்ச்சி குறையில்லாமல் முடிந்தது ஆச்சரியமே. லேகாவை நூல் பெறவைத்ததில் கூடுதல் மகிழ்ச்சி. தீவிர வாசிப்பு மனநிலையை அது மேலும் உற்சாகப்படுத்தும். அது அவசியமானதும் கூட. முன்னமே வாசித்தவை என்றாலும் மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன் கட்டுரைகளை. இணையம் வழியே நட்பான பிரின்ஸ், மண்குதிரை, லேகா ஆகியோரை நேரில் சந்திக்கவும் உதவியது அந்நிகழ்வு.

சரவணன்.

Dhanaraj said...

I thought I could not come to the book fair. But on 6th January I got a chance. I bought many books and your book was one of them.

கிருபாநந்தினி said...

அன்பான விசாரிப்புக்கு நன்றிக்கா! \\அடிக்கடி உங்கள் வலைப்பூ பக்கம் வந்து பார்ப்பேன்.. ஏதாவது எழுதியிருக்கிறீர்களா என. ஒன்றையும் காணவில்லை. மனசுக்கு சங்கடமாக இருந்தது.// சங்கடமே வேணாங்க்கா. இனிமே நான் எதுவும் எழுதுறதா இல்லை; யார் மனசையும் சங்கடப்படுத்துறதாவும் இல்லை. பதிவுகளின் ரசிகையாவே இருந்துட்டுப் போறேனே? :)

Anonymous said...

இப்படிக் கேட்பதற்கு மன்னிக்கவும்! உயிர்மை, காலச்சுவடு போன்ற பதிப்பகங்களல்லாத மாற்றுப் பதிப்பகங்களின் மூலம் தங்கள் நூல்கள் வெளிவந்தால் நன்றாக இருந்திருக்கும். இது என் கருத்து மட்டுமே! படைப்பாளியாக உங்கள் பிரச்சனைகள் புரிகிறது.புத்தகங்கள் வெளியிட்டுத் தான் ஆக வேண்டுமென்கிற இருத்தல் பிரச்சினை உங்களுக்கு இல்லை என நம்புகிறேன். இப்படி ஒரு எழுத்துக்குச் சொந்தக்காரர் இறுதியாக இதுபோன்ற பதிப்பகங்களை நோக்கி நகர்வது நெருடலாகத் தெரிகிறது.எனக்குப் பிடித்தப் பல மாற்றுஎழுத்தாளர்களும் இறுதியில் இந்த இரு பதிப்பகங்களையும் சென்றடைவதைப் பார்த்து வந்திருக்கிறேன். தாங்கள் எழுதுவது வெறும் வியாபார நோக்கம் சார்ந்தல்ல என்பது தெரிந்ததே. விழா எடுத்து நூல் வெளியிடும் பதிப்பகங்கள் கிழக்கோடு இவை இரண்டும் தான் என்பது தெரிந்தாலும்,பிரபல எழுத்தாளர் என்ற போர்வையில் புகழ்மொழி பாடும் அங்குமிங்கும்பாடிகளின் புகழுரைகளுடன் விளம்பரம் தேடி நூல் வெளியிடும் கவிதாயினியும் தாங்கள் அல்ல, ஈழத்தாரின் வேதனையை நாடில்லாமையின் வலியை மொழியில் கடத்தும் மாய எழுத்துக்கள் உங்களுடையது, இது போன்ற பிரபல பதிப்பகங்கள், நூல் விழாக்கள் அன்றி, மக்களிடையே செல்ல, அனைவரையும் சென்றடையும் வண்ணம் வேறுமாதிரியான பரப்புரைகளுடன், நியாய விலையில் நூல்கள் விற்கும் பதிப்பகங்கள், மாற்றுப் பதிப்பகங்களில் தங்கள் நூல்கள் வந்தால் சிறப்பாக இருக்கும். இணையம் தந்த வசதியில் இந்த ஐயத்தைக் கேட்டு வைக்கிறேன்.
மற்றபடி, நூலுக்கு வாழ்த்துகள்! எழுத்துப் பயணம் சிறக்கட்டும்!

padmanabhan said...

இந்தப் புத்தகத்தைப் பற்றி அறிமுக உரை குங்குமம், ஆ.விகடன் போன்றவற்றின் மூலம் அறிய முடிந்தது. காலச்சுவடு இதழும் கட்டம் கட்டி அறிமுகப்படுத்தியிருந்தது. ஆனால் அதில் மட்டும் விலை மற்றும் வி.பி.பி விபரம் போன்றவை இல்லை.

adisivane said...

hellow...tamizhan...since 1986..I had participated many struggles in favour of Tamil elam...in my student level...with DMK student federation but now I am in Vidudhalai chiruththai...my stuggles...still continuing ....my tears also...I coulnot save...a single elam people...I am a useless in this regard... any way congratulation Tamizhnadhi

The Chief Mentor said...

வாழ்த்துக்கள் இந்த புத்தகத்திற்காகவூம் அடுத்தடுத்து புதிய புத்தகங்கள் வெளியாவதற்காகவூம்-http://writersuryakumaran.blogspot.com