10.20.2007

கூட வராதவன்


தண்டவாளத்தை விழுங்கி விழுங்கி
ஏப்பமிட்டு விரைகிறது புகைவண்டி
எதிரெதிர் இருக்கையில்
இருக்குமெம் கண்களில்
நொடிக்கொருதடவை
மினுக்கிட்டுப் பின்தங்கும் மின்கம்பங்கள்...
பச்சை விழுத்தும் மரக்காடுகள்…
குளக்கரையோரத்தில் குளிக்கும்
குறுக்குக்கட்டுத் தேவதைகள்…

குருட்டுப்பிச்சைக்காரன்
பிசிறிய குரலால்
தட்டியெழுப்புகிறான் அவரவர் பிரியங்களை

வெறிக்கூச்சலிட்டு விரைகிற ரயிலில்
நான் அவனோடும்
நீ அவளோடும்
பயணித்துக்கொண்டிருக்கிறோம்

35 comments:

தவ சஜிதரன் (முன்னம் வியாபகன்) said...

கடைசி நான்கு வரிகளும் மென்னதிர்வு மிக்கவை.. கவிதை நல்லா இருக்கு... அதை விடுவம்... நான் யோசிக்கிறது பத்தி அதிகமா நையாண்டி பண்ணிட்டீங்களா... கீழ்வரும் கொமென்ட்டையும் தவிர்க்க முடியல...

//எதிரெதிர் இருக்கையில்
இருக்குமெம் கண்களில்
நொடிக்கொருதடவை
மினுக்கிட்டுப் பின்தங்கும் மின்கம்பங்கள்...//

எதிரெதிர் இருக்கைக‌ள்ல‌ இருக்கிறீங்க‌ன்னா ஒருத்த‌ருக்குப் 'பின்'த‌ங்குற‌ மின்க‌ம்ப‌ம் ம‌த்த‌வ‌ருக்கு 'முன்'த‌ங்க‌த்தானே முடியும்? இந்த‌ க‌ண்டுபிடிப்பு எப்ப‌டி இருக்கு?

தவ சஜிதரன் (முன்னம் வியாபகன்) said...

//வெறிக்கூச்சலிட்டு விரைகிற ரயிலில்
நான் அவனோடும்
நீ அவளோடும்
பயணித்துக்கொண்டிருக்கிறோம்//

இந்த வரிகள இப்பிடி மாத்தியிருந்தீங்கன்னா இன்னமும் அழுத்தம் அதிகமா இருந்த்திருக்கும்னு தோணுது:

//வெறிக்கூச்சலிட்டு விரைகிற ரயிலில்
பயணித்துக்கொண்டிருக்கிறோம்
நான் அவனோடும்
நீ அவளோடும்//

தமிழ்நதி said...

ஐயா ஒக்காந்து யோசிப்பவரே:) இருவரும் எதிரெதிரில் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால், புகையிரதம் ஒரே திசையில்தான் விரைந்துகொண்டிருக்கிறது. இருவரும் அதைக் கடந்தேதான் செல்கிறார்கள். ஆகவே அது இருவருக்குமே பின்தங்குகிறது. முன்னெதிர்ப்பட்டு பின்மறைகிறது. சரியா...? 'இவிங்களோட தாவு தீர்ந்துடும்'என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். எதற்கும் உங்கள் நதிமூலத்தை ஆராயலாமென்றிருக்கிறேன். நக்கீரர் பாட்டனுக்குப் பாட்டனாயிருக்கலாம்:)

தமிழ்நதி said...

வியாபகன்! எனக்கு சுந்தரரராமசாமி அவர்களின் கவிதை வரியொன்று நினைவில் வருகிறது. சொன்னால் கோபித்துக்கொள்வீர்கள் அதனால் சொல்லவில்லை.:)

soorya said...

நல்ல கவிதை நண்பி.
எனக்கு நானுஓயா..நுவரெலியா..ரயில் பயணங்கள் நினைவில் வந்து போனதைத் தவிர்க்க முடியவில்லை.

soorya said...

நான் முன்னர் எழுதிய பின்னூட்டம் கிடைத்ததா?
நீண்ட நாட்களாக நான் இங்கில்லை.

cheena (சீனா) said...

கவிதை அருமை. தமிழ் கொஞ்சுகிறது. சொல்லின் எளிமை மனதை மகிழ்விக்கிறது. வியாபகனை விடுங்கள். இருந்தும் அவர் நல்ல விமர்சகராகத் தான் தோன்றுகிறார்.

இதுவரை நான் கேட்டிராத படித்திராத வரிகள் இவை. புகைரதம் - தண்டவாளம் விழுங்குதல் - ஏப்பம் விடுதல் - குளக்கரையோரம் குளிக்கும் குறுக்குக்கட்டு தேவதைகள் - குருட்டுப் பிச்சைக்காரனின் பிசிரட்டிக்கும் குரல் -

பாராட்டுகள் - வாழ்த்துகள் - தொடர்க

கடைசி நச்சென்று ஒரு பஞ்ச் - 4 வரிகள். சடாரெனத் திரும்பும் ஹேர்பின் பெண்ட். எதிர்பாராத வரிகள்.

கவிதையை இப்படி முடிக்க தனித் திறமை வேண்டும். அது உங்களிடம் இருக்கிறது.

தமிழ்நதி said...

சூர்யா!நீண்டநாட்களாக உங்களைக் காணக்கிடைக்கவில்லை. இப்போது காரணம் அறிந்துகொண்டேன். இந்தக் கவிதையை எழுதும்போது கொழும்பு - வவுனியா பயணம் எனக்கும் நினைவில் வந்தது. அவ்வளவு செழுமையாக இருக்கும் அந்த வயல்வெளிகளும் தென்னை மரங்களும்... மலைமுகடுகளும்... நினைவில் தங்கிவிட்ட தூரத்துப் பச்சைகள் அவை.

சீனா!பாராட்டுக்கு நன்றி. ஆனால், ஒன்று சொன்னால் கோபித்துக்கொள்ளக் கூடாது. அதாவது,விமர்சிக்கப்படாத படைப்பும் படைப்பாளியும் வீரியமுடையவர்களாக மாட்டார்கள். அந்த வகையில் வியாபகன் சொல்வதை நான் கருத்திலெடுத்தே ஆகவேண்டும். அவர் நல்ல எழுத்தாளுமை உடையவர். ஆனால்... என்ன செய்வது.....உண்மையைச் சொல்லப்போனால்... நம்முடைய 'ஈகோ'அதை ஏற்றுக்கொள்ளவிடாமற் தடுத்துவிடும். ஆனால் உள்மனசுக்கு யாவும் தெரியும். உங்களைப் புண்படுத்துவதாக நினைக்காதீர்கள். நாமெல்லோரும் எழுதிப் பயின்றுகொண்டிருக்கிறோம்... என்றைக்காவது ஒரு நாள் கவிதை எழுதுவேன் என்ற நம்பிக்கையில் இயங்கிக்கொண்டிருக்கிறேன். அவ்வளவே. அன்பிற்கு நன்றி சீனா.

தவ சஜிதரன் (முன்னம் வியாபகன்) said...

அச்சச்சோ... நான் குசும்புக்காகச் சொன்ன சில்லறைக் கொமென்ற்றுகள எல்லாம் 'விமர்சனம்' எண்டு சொல்லி வதந்தி கிளப்பாதீங்கப்பா... ;)

ஞாபகத்துக்கு வந்த சுராவின் கவிதை வரிகளைச் சும்மா சொல்லுங்கள் தமிழ்நதி... கோபம் வந்து டூ பிடிச்சாலும் பிறகு சமாதானம் ஆகிக்கொள்ளலாம்... அதோட 'நல்ல எழுத்தாளுமை உடையவர்' எண்டெல்லாம் நல்ல விதமாச் சொல்லுறீங்க... உங்களோட போய்க் கோவிச்சுக் கொள்ள முடியுமா? :))

அச்சச்சோ... நான் குசும்புக்காகச் சொன்ன சில்லறைக் கொமென்ற்றுகள எல்லாம் 'விமர்சனம்' எண்டு சொல்லி வதந்தி கிளப்பாதீங்கப்பா... ;)

ஞாபகத்துக்கு வந்த சுராவின் கவிதை வரிகளைச் சும்மா சொல்லுங்கள் தமிழ்நதி... கோபம் வந்து டூ பிடிச்சாலும் பிறகு சமாதானம் ஆகிக்கொள்ளலாம்... அதோட 'நல்ல எழுத்தாளுமை உடையவர்' எண்டெல்லாம் நல்ல விதமாச் சொல்லுறீங்க... உங்களோட போய்க் கோவிச்சுக் கொள்ள முடியுமா? :))

மரபின் கற்பிதங்களை (ஒருவனுக்கு ஒருத்தி, கற்பு, கத்தரிக்காய் மற்றும் 'காதல்' பற்றிய புனைவுகள்) அநாயசமாக நிராகரிப்பது; மீறுவது -‍ எந்த இரு மனிதர்களுக்குமிடையிலும் உண்டாகக்கூடிய இயல்பான ஈர்ப்பைச் சொல்வது என்பதால் இந்தக் கவிதைக்கிருக்கும் முக்கியத்துவம் பற்றி இதுவரை பின்னூட்டமிட்டவர்கள் சொல்லவில்லை...

தமிழ்நதி said...

வியாபகன்! இவவுக்கெல்லாம் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை சொன்னாத்தான் உறைக்கும் எண்டு நினைச்சிட்டீங்களோ என்னவோ...(பார்க்க தங்களது பின்னூட்டம்) ரெண்டு தரம் சொல்லியிருக்கிறீங்கள். சரி நீங்கள் கேட்ட வரிகள் இவைதான்:

"உனது கவிதையை நீ எழுது
எனது கவிதையை ஏன் எழுதவில்லையென்று
என்னிடம் கேட்காதே"

என்பதுதான் சு.ரா.வின் அந்த வரிகள். ஞாபகத்திலிருந்தபடி எழுதினேன். பொருள் சரி... வார்த்தைகள் இவைதானா என்பதை ஒருமுறை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். புரிதலுக்கும் தொடர்ந்த வருகைக்கும் நன்றி வியாபகன்.

மு. மயூரன் said...

புகைவண்டி என்றாலே ஒரு கிக் தான்.

//மரபின் கற்பிதங்களை (ஒருவனுக்கு ஒருத்தி, கற்பு, கத்தரிக்காய் மற்றும் 'காதல்' பற்றிய புனைவுகள்) அநாயசமாக நிராகரிப்பது; மீறுவது -‍ எந்த இரு மனிதர்களுக்குமிடையிலும் உண்டாகக்கூடிய இயல்பான ஈர்ப்பைச் சொல்வது என்பதால் இந்தக் கவிதைக்கிருக்கும் முக்கியத்துவம் பற்றி இதுவரை பின்னூட்டமிட்டவர்கள் சொல்லவில்லை...//

வியாபகன், நீங்கள் இதில் நக்கல் பண்ணுவது சிவத்தம்பி சேரையா இல்லாட்டி வேற யாரையுமா? ;-)அல்லதுபோனால் தமிழ்நதியையேதானா?

cheena (சீனா) said...

கருத்துக்கு நன்றி தமிழ் நதி. விமர்சனக்களைத் தாங்கும் வலிமை உடையவனே எழுத்தில் முன்னேற முடியும். அதில் மாற்றுக் கருத்தில்லை. நம் தன்மானம் இடம் கொடுக்கவில்லை. அவ்வளவு தான்.

சுந்தர ராமசாமியின் வரிகள் பொன்னெழுத்துகளால் பொறிக்கப் பட வேண்டும்.

சோமி said...

கடைசி நான்கு வரிகளும் ஒரு நினைவுச் சுகானுபவத்தைத் தந்தது.

நிரையளைக்குப் பிறகு உங்கள் பக்கதில் கவிதை வாசிக்க வந்தேன். நல்ல அனுபவத்தைத் தந்தீர்கள்.

ரசிகன் said...

தமிழ் நதி., மன்னிச்சிருங்க..வரதுக்கு எனக்கு ரயில் கொஞ்சம் லேட்டாயிருச்சு...

//நொடிக்கொருதடவை
மினுக்கிட்டுப் பின்தங்கும் மின்கம்பங்கள்...
பச்சை விழுத்தும் மரக்காடுகள்…
குளக்கரையோரத்தில் குளிக்கும்
குறுக்குக்கட்டுத் தேவதைகள்… //

கவிதைய படிச்சிட்டு கண்ண மூடி அசை போட்டாக்கா...அப்படியே எனக்கு ரயிலில் இருப்பத போல உணர்வு.அருமை..எனக்கு ரொம்ப புடிச்சியிருக்கு...

// வெறிக்கூச்சலிட்டு விரைகிற ரயிலில்
நான் அவனோடும்
நீ அவளோடும்
பயணித்துக்கொண்டிருக்கிறோம் //

ஏங்க நல்லா எழுதர ,எல்லாருமே கடைசியில ..கொஞ்சம் சோகத்த கலந்து என்னிய ஃபீல் பண்ண வைக்கறிங்க..
காதலர்கள் ஒன்னு சேரர மாதிரியெல்லாம் இந்த கலைப்படைபாளிகளுக்கு கற்பனையே வராதா..?.
காதலர்கள பிரிச்சாத்தான் ,அது காவியமுன்னு யாரோ ஒங்களுக்கு தப்பு தப்பா சொல்லிக் கொடுத்திருக்காங்க..
எனக்கு "Manaosai" சந்திரவதனா...அக்காவின் " காதலினால் அல்ல"நினைவுக்கு வரத தவிர்க்க முடியலிங்க...

சந்திரவதனா... " காதலினால் அல்ல" -- http://rasigan111.blogspot.com/

எழுதுங்க.. எழுதுங்க.. எழுதிக்கிட்டே இருங்க...ரசிக்க நாங்கதா இருக்கோமில்ல....

அன்புடன் ரசிகன்.

Vasanthan said...

கீழ்க்கண்ட மாதிரி எழுதியிருந்தா இன்னும் அந்த மாதிரியிருந்திருக்கும்.
;-)

ஏப்பமிட்டு விரைகிறது புகைவண்டி
தண்டவாளத்தை விழுங்கி விழுங்கி...
நொடிக்கொருதடவை மினுக்கிட்டுப் பின்தங்கும் மின்கம்பங்கள்
எதிரெதிர் இருக்கையில் இருக்குமெம் கண்களில் ...
குறுக்குக்கட்டுத் தேவதைகள்…
குளக்கரையோரத்தில் குளிக்கும்
பச்சை விழுத்தும் மரக்காடுகள்…
பிசிறிய குரலால்
குருட்டுப்பிச்சைக்காரன்
அவரவர் பிரியங்களை
தட்டியெழுப்புகிறான்
நான் அவனோடும்
நீ அவளோடும்
வெறிக்கூச்சலிட்டு விரைகிற ரயிலில்
பயணித்துக்கொண்டிருக்கிறோம்
~~~~~~~~~~~~~~~~~
நாங்கள் மட்டுமென்ன புத்திமதி சொன்ன லாயக்கில்லாத ஆக்களோ?

பின்னவீனத்துவக் கட்டுரை எழுதிறதுக்கு ஒஸ்ரேலிய மொனாஷ் பல்கலைக்கழகப் பெடியள் சொவ்வறை(software) தயாரிச்சு வெளியிட்ட மாதிரி நானும் ஒண்டு எழுத இருக்கிறன். அதுக்குப்பிறகு நீங்கள் எழுதிற எல்லாக் கவிதைக்கும் வரிகளைக் குழப்பிப் போட்டு இப்பிடியான புத்திமதிப் பின்னூட்டங்கள் ஓட்டமட்டிக்கா வந்துகொண்டிருக்கும்.
என்ன சரிதானே?

ஒரு சிரிப்பான் போட்டு வைக்கிறன் (இது தமிழ்நதிக்கு இல்லை.;-))

Vasanthan said...

அதுசரி, ஒவ்வொருத்தருக்கு ஒரு துணை கிடைச்சாச்சுத்தானே?
பிறகெதுக்கு உந்தப் புலம்பல்?

நளாயினி said...

இந்த கவிதை தரவேற்றியதும் நான் தான் முதன் முதல் பார்த்த ஆளாக இருக்க வேணும். அத்தனை அதிர்வலைகளை எனக்குள் ஏற்படுத்தியதால் எதுவுமே எழுதாமல் சென்றுவிட்டேன். இன்று பார்க்கிறபோது இத்தனை பின்னூட்டமா ஆச்சரியம் தான். வாழ்த்துக்கள் நதி. சரி வியாபகன் கிட்டை கொஞ்சம் பேசனும். வியாபகன் இது கொஞ்சம் ஓவரா தெரியேலை உங்களுக்கே. சொன்னா புரியிறது தான் நல்லது. ரயில் ஓடிச்சா ஓடேலையா இதெல்லாம் தேவையே இல்லை. உணர்வுகளை புரிஞ்சுக்க முயற்சியுங்க.இல்லை எண்டா நான் சொல்லிறது அல்லது சொல்வாறதுபுரியுமா புரியாதா யான் அறியேன் அனேகமா புரியும் என நினைக்கிறன். மற்றவர்களின் உணர்வுகளை சிதைக்க கதிரை போட்டு உக்காந்து யோசிப்பீங்களோ? உங்களை நீங்களே குறைச்சு மதிப்பிட வைக்காதீங்க. உங்களுக்கு அந்த வரம் வாய்க்கலை எண்டதுக்காக எதுவும் எழுதிடலாமா? உணர்வு தானே எழுத்து. காய்டா . இதெல்லாம் சொல்லிட்டனே எண்டதுக்காக கோபித்துக்கொள்ள வேண்டாம்: சிலதை சிலருக்கு இப்படித்தான் புரியவைக்கவேண்டியிருக்கு. புரிந்தால் எனது எனேஐp வீணாகலை என எடுத்துக்கொள்கிறேன்.இல்லையோ பத்தோடை பதினொண்டா.... மார்தட்டி போய்க்கிட்டே இருப்பேன். மீண்டும் என்மீது கோபமில்லைத்தானே. வியாபகன் உங்களைத்தான்.!!

தமிழ்நதி said...

மக்களே!இங்கு என்ன நடக்கிறது என்று கொஞ்சம் விளக்கிச்(உழக்கி அல்ல)சொன்னால் நல்லது. தமிழ்த்திரைப்படம் போல ஆகிவிட்டது இணைய எழுத்தும். நன்றாக இருக்கிறது என்று நான் போடும் பதிவு ஊத்திக்கொள்ளும். ஊத்திக்கொள்ளும் என்று தெரிந்தே போடும் 'கவிதை(?) பற்றிக்கொள்ளும்.

'வாராது வந்த மாமணி'மு.மயூரன் யாரைக் 'கடி'த்திருக்கிறார் என்பது எனக்குப் புரியமாட்டேனென்கிறது. சிவத்தம்பி சேருக்கும் இந்த 'ஒண்ணுமில்லாத'கவிதைக்கும் என்ன தொடர்பு என்பது தெரியவில்லை. ஒருவேளை வியாபகனைக் கேட்டால் தெரியும். 'நக்கல் பண்ணுவது தமிழ்நதியையேதானா?' - தமிழ்நதி என்ன நக்கலுக்கு அப்பாற்பட்ட ஆளா :) அவவுக்கும் இப்ப கற்பு, கத்தரிக்காய், தக்காளிப்பழம் எல்லாம் கிரந்திதான்.

சோமி!
"நிரையளைக்குப் பிறகு உங்கள் பக்கதில் கவிதை வாசிக்க வந்தேன்"

இதில் 'நிரையளை'என்றால் என்ன? 'நிறைய நாளை'இப்படிச் சுருக்கி விட்டீர்களா... அது சரி! இப்படித் தமிழைச் சுருக்கி(கருக்கி) பிசியான ஆள் என்று காட்டிக்கொள்கிறீர்கள் போல:)

"ஏங்க நல்லா எழுதர ,எல்லாருமே கடைசியில ..கொஞ்சம் சோகத்த கலந்து என்னிய ஃபீல் பண்ண வைக்கறிங்க.."

ரசிகன்!கொஞ்ச நாட்களுக்கு முன்னர் நீங்கள் பேசுவதே போன்ற தொனியில் பங்காளி என்றொரு நண்பர் வந்து பின்னூட்டம் போட்டுக்கொண்டிருப்பார். இப்போதெல்லாம் அவரைக் காணோம். என்ன பண்றது... நாங்க மட்டும் தனியா அழுதாப் போதுமா..? அதான் ஆள் சேத்து வைச்சுக்கிட்டு அழுறோம்.... ஒப்பாரின்னு சொல்வாங்கல்ல அப்டி...:)
ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க. நீங்கள் குறிப்பிட்ட பதிவைச் சென்று பார்க்கிறேன். கருத்துக்கு நன்றி.

வசந்தன்!
"நாங்கள் மட்டுமென்ன புத்திமதி சொன்ன லாயக்கில்லாத ஆக்களோ?"
என்று கேட்டிருந்தீர்கள். உங்களது 'பின்'நவீனத்துவக் கவிதை அமைப்பு நன்றாக இருந்தது. அய்யனார்,சுகுணா திவாகருக்குப் பிறகு மூன்றாவதாக ஒருவர் உருவாவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. வரிகளைக் குழப்பிக் குழப்பிப் போட்டு எழுதுறதுதான் பின்னவீனத்துவம் எண்டால்.... நானொரு கவிதை சொல்லுறன் கேளுங்கோ...

நாற்காலிக்கு கால் நான்கு
பெரும்பான்மை தேவைதான்
மனிதருக்கு காலிரண்டு
எழுகிறது அவலக்குரல்
அமானுஷ்யத்திலிருந்து

இது எப்படி இருக்கு? :)

நளாயினி! நீங்கள் வியாபகனோட 'கா'விட்டுட்டீங்களோ என்னெண்டு தெரியேல்லை. நான் இந்த ஆட்டத்துக்கு வரேல்லை. அவரே பதில் சொல்லுவார்.

பின்னூட்டங்களைப் பார்க்க கொஞ்சம் தலைசுற்றுகிறது. என்னென்னமோ நடக்குது.... எனக்குப் பின்னால் ஒளிந்திருந்து யாரையோ பார்த்து யாரோ'கூ'சொல்லிட்டு ஓடுவது மாதிரியிருக்கிறது. நடுவில் நின்று நான் பேய்முழி முழித்துக்கொண்டிருக்கிறேன். நடக்கட்டும் நடக்கட்டும்.

லக்ஷ்மி said...

கவிதை அருமையாய் இருக்கிறது தமிழ்நதி.

மு. மயூரன் said...

//
அமானுஷ்யத்திலிருந்து//

இந்தச் சொல்லைப்போட்டதன் மூலம் உங்கள் நான்குவரிக் கவிதை பின்னவீநத்துவக் கவிதையாகி முத்தியடைகிறது.

--

வசந்தன் சொன்ன மென்பொருள் யோசனை மனதைத்தொட்டது.

நானும் தமிழில் ஒரு பின்னவீனத்துவ மென்பொருள் எழுதலாமா என்று யோசிக்கிறேன்.

பெரும்பாலும் பின்னவீனத்துவப் பிரதிகளில் ஒரு சில சொற்களே புதியவையாக இருப்பதால் அவர்கள் எழுதும்போது பின்நவீனத்துவ வார்த்தைகள் autocomplete ஆகக்கூடிய விதத்தில் சிறு உரைச்செயலி எழுதலாம். (அந்த வார்த்தைகளும் சொற்பம்தான் சிறிய தரவுத்தளம் போதுமானது) ;-)

--

அந்த உள்குத்து வியாபகனுக்கு விளங்கிச்சுதா?

மு. மயூரன் said...

வியாபகன் தனக்கு எனக்கு ஏதாவது தகறரா என்றெல்லாம் கேட்டு வீடுவரை தன் அடியாட்களுடன் வந்து மிரட்டுகிறார் ;-)

தகாறாறு இருந்தால் கட்டாயம் நேரில் சொல்வேன். பயப்படாதீங்க!

மற்றது,

எதிர்வரும் 24 ம் திகதி தனது பிறந்தநாளை வீட்டில் வெகு விமரிசையாகக்கொண்டாடவிருக்கும் வியாபகனை வலைப்பதிவுலக நண்பர்கள், எதிரிகள், ஜல்லிகள், திம்மிகள், புரட்சியாளர்கள், எதிர்ப்புரட்சியாளர்கள் அனைவரும் பல்லாண்டுகாலம் நீடூழி வாழ்கவென வாழ்த்துகிறார்கள்.

தவ சஜிதரன் (முன்னம் வியாபகன்) said...

ஒரு பொல்லாப்புமில்லை

லக்கிலுக் said...

தமிழ்நதியக்கா, கீழ்க்கண்டவாறு உங்கள் கவிதை வரிகளை அமைத்திருக்கலாமே?

தண்டவாள்த்த தாண்டிக்கினு
டகுலு உட்டுக்கினு ஓடுது ரயிலு
இப்பாலிக்கா நானு
அப்பாலுக்கா அது
டாவு உட்டுக்கினு கீறோம்
மினுக் மினுக்குனு
எரியுது லைட் போஸ்ட்டு
க்ரீன் கலரு மரங்கோ
கொளத்தாங்கரையிலே
குளிக்கிற பிகருங்கோ

பேமானி ஒருத்தன்
சவுண்டு கொடுத்து
டிஸ்டர்ப் பண்ணுறான்
ட்ரீம்ஸை

டபுக்கு டபான்னு
ஓடிக்கினுகீற ரயில்லே
நான் என் டாவோடயும்
நீ உன் டாவோடயும்
செம்ம மஜாவா
ட்ராவல் பண்ணிக்கினுகீரோம்.


பி.கு. : என் பாட்டனுக்கு பாட்டன் நக்கீரன் அல்ல :)

லக்கிலுக் said...

நான் மொழிமாற்றம் செய்த கவிதையில் சின்ன எழுத்துப் பிழை

//இப்பாலிக்கா நானு
அப்பாலுக்கா அது//

அப்பாலுக்கா என்பதற்கு பதிலாக "அப்பாலிக்கா" என்று வாசிக்கவும்.

தமிழ்நதி said...

நன்றி லஷ்மி!

மயூரனுக்கும் வியாபகனுக்கும் இடையில் ஏதோவொன்று ஓடுகிறது. அது எந்த உடரட்ட மெனிக்கேயாக இருந்தாலும் எனக்குப் பிரச்சனையில்லை. அவர்களே பார்த்துக்கொள்வர் :)

லக்கிலுக்கு!நீயி இம்மாம் பெர்ய கவுஞ்ஞன்னு இத்தினி நாளா எனிக்குத் தெர்யாமப் பூடுச்சு பாரு... பட்ச்சு முட்ச்சதும் கண்ணுலேர்ந்து தண்ணீயாக் கொட்துப்பா! எவ்ளோ பெர்ய ஆளு நீயி... நாங்கல்லாம் என்ன கஸ்மாலத்த எள்திக் கீய்க்கிறோம்னு நெசமாலுமே எனிக்கு ஒரு ஷந்தேகம் வந்து மன்ஸ் ஒருமாதிரியா ஆயிப்போயிடிச்சு... இதான் கவுதை... நாங்க எழ்துறதெல்லாம் கய்தைப்பா!நா இனிம கவுதை கிவுதைன்னு எதுனா எழ்தினா கொஞ்சூண்டு ஒட்டிக்கீனு இருக்க மானம் மருவாதை அல்லாம் போய்டும் போல்ருக்கு. நல்லா இரு... அது செர்ரி! நக்கீரர்னா ஆரு லக்கீ! நீ ரெண்டாவதா கல்யாணம் பண்ணிக்கினியே அந்தப் பொண்ணோட நைனாவா...?

ரசிகன் said...

லக்கிலுக்கு எங்க தமிழ்நதி அக்காவோட சென்னை தமில கேட்டதுக்கப்பால ,இன்னும் உங்களுக்கு "மொலி பெயர்ப்பு" ஆசை எதாவது மிச்ச மீதி ஒட்டிகின்னு இருக்கா? (ஆமா .உங்களுக்கு எதோ குளிர் ஜொரமின்னு கேள்விப்பட்டேன்.அதுவும் பின்னூட்ட பதில படிச்சிட்டுன்னு.. சொன்னாங்க...).
பதில்ல. கலக்கிட்டிங்க..தமிழ்நதி அக்கா..

Raaji said...

சுவாரஸ்யம் பதிவுகளில் மட்டுமா, பின்னூட்டங்களிலும். வாழ்த்துக்கள். விரையட்டும் புகைரதம் மேன்மேலும் பதிவுகளை உமிழ்ந்தபடி.

மு. மயூரன் said...

பாத்தீங்களா நான் இவளவு நேரத்துக்கு அறிவித்தல் குடுத்திருந்தும் வியாபகன்ட பிறந்தநாள் பெருவிழாவுக்கு நீங்கள் யாரும் வர இல்லை. வந்தியத்தேவன் தான் தலைமை தாங்கி நடத்த வேண்டியதாயிற்று.

சரி சரி, எல்லோரும் அவரை வாழ்த்துவோம் என்ன?

;-)

(ம்ம்.. இப்போதைக்கு வியாபகனுக்கு இந்த பின்னூட்டத்தை எல்லாம் படிக்க நேரமிருக்காது. எப்படி இருக்கும்?

LakshmanaRaja said...

எல்லோரும வந்து சொல்லிபோன பிறகு நான் எதை சொல்ல.

சற்றே மென்மையான கவிதை.
விடுமுறை நாட்களின் பின் மதிய பொழுதில் யன்னல் பக்கம் அமர்ந்து வெயில் நோக்கும் கணத்தை நினைவுகூறுகிறது அந்த மெண்மை.. (நிழல் அமர்ந்து வெயில் ரசிப்பது!!).

//இருக்கையில்இருக்குமெம் கண்களில்நொடிக்கொருதடவை
மினுக்கிட்டுப் பின்தங்கும் மின்கம்பங்கள்.//

//நான்அவனோடும்
நீ அவளோடும்
பயணித்துக்கொண்டிருக்கிறோம்//

இதுதான் உவமை,உருவகம்,உண்மை இவற்றின் கலவையாக எழுதுவதா..மிக அழகு தமிழ்நதி..

ரூபன் தேவேந்திரன் said...

கவிதை நல்லாய் இருக்கு. ஆனா லக்கிலுக்க எழுதின கவிதையையும் அதற்கு நீங்கள் எழுதிய பதிலும் தான் யாரையாவது தேடவைக்குது சொல்லிச்சிரிக்க.... :)

அத்தோட சோமி "நிரையளை" என்று தொடங்கி இருக்கும் கவிதையையும் சென்னை போன்ற இடங்களில் பேசப்படும் சொற்களில் ஒன்றா?

Anonymous said...

அன்பின் தமிழ்நதி

((வெறிக்கூச்சலிட்டு விரைகிற ரயிலில்நான் அவனோடும்நீ அவளோடும்பயணித்துக்கொண்டிருக்கிறோம்))

இந்த வரிகள் கவிதையை அழகுபடுத்தியிருக்கின்றன.

யார் எதைச் சொன்ன பொழுதும் மேலுள்ள வரிகள் தான் அனைவரையும் ஈர்த்திருப்பதாகத் தெரிகிறது.

தமிழ்நதி said...

'கூட வராதவன்'அதிக நாட்களாக உங்களோடு வந்துகொண்டிருக்கிறார் போலிருக்கிறது. விரைவில் அவர் இரயிலிலிருந்து இறங்கிவிடுவார்.

வலைப்பூவிற்குப் புதிதாக வந்து கருத்துச் சொன்ன ராஜிக்கு நன்றி.

மயூரன்! வியாபகனின் பிறந்தநாள் எனக்கும் மறந்துபோய்விட்டது. சில சமயம் எனதே மறந்துபோய்விடும்... நாமெல்லாம் நினைவில் வைத்துக்கொண்டிருக்க வேண்டிய 'பிறப்புகள்' இல்லை என்பதால் பரவாயில்லை.

லஷ்மணராஜா!கவிதையைப் போன்ற ஒன்றிற்கு கவிதா மனோநிலையில் பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள். பாராட்டுகளை கொஞ்சம் சேமித்துவைத்துக்கொள்ளுங்கள்... எப்போதாவது நான் கவிதை எழுதும்போது அவசியப்படும்.

கோசலன்!வருகைக்கு நன்றி. உங்களையெல்லாம் சிரிக்க வைக்கிற பணியை வேறு நான் செய்துகொண்டிருக்கிறேனா.. அட! என் நண்பர்களில் ஒருவர் நான் 'அழுவாச்சி'யாகவே எழுதுவதாக எப்போது பார்த்தாலும் முறைப்பாடு செய்துகொண்டிருப்பார். அவரிடம் நீங்கள் சொன்னதைச் சொல்கிறேன் சரியா...? மற்றது 'நிரையளை'என்றொரு சொல் தமிழ்கூறும் நல்லுலகெங்குமே பேசப்படுவதாகத் தெரியவில்லை. எதற்கும் சோமியிடம் கேட்டுச்சொல்கிறேன். அவர் கேரளாப் பக்கம் அடிக்கடி போய்வருகிறவர். சில சமயம் அங்கிருந்து எடுத்துக்கொண்டு வந்தாரோ தெரியவில்லை.

பஹீமாஜகான்!இப்பதிவின் முடிவில் ஒரு உண்மையைச் சொல்கிறேன். இதைக் கவிதை என்று நான் சொல்ல மாட்டேன். பொழுதுபோகாத ஒரு தருணத்தில் சும்மா தோன்றியது. கொஞ்ச நாட்களைப் பம்பலாகக் கழிக்க உதவியது. கவிதைகளை கொஞ்ச நாளைக்கு நிம்மதியாக இருக்கவிட்டுவிட்டு கதைப்பக்கம் நகரலாமென்றிருக்கிறேன். சிறுகதை எழுதி நீண்டநாட்களாகிவிட்டது. ஒரு கதை உள்ளுக்குள் உருவாகி உலவிக்கொண்டிருக்கிறது. பெரிய பயமுறுத்தல் போலிருக்கிறது இல்லையா:)

cheena (சீனா) said...

பதிவை விட மறுமொழிகள் சுவாரசியமாக இருக்கிறது. அவற்றுக்கு விமர்சனம் எழுதத் தோன்றுகிறது.
தமிழ்நதி - அழகுத்தமிழில் யாப்புக் கவி எழுதுபவர்களுக்குச் சுட்டுப் போட்டாலும் சென்னைத் தமிழ் வராது.
தங்களுக்கு வரப்பிரசாதம்.

லக்கியோட பாட்டெ வுட - நீ கலக்கிட்டேமே - சும்மா ராவா ஒரு நைண்டீ அட்ச மாரி இருக்குமே

தவறாய் எண்ன வேண்டாம்

Anonymous said...

MIHA NANTRAAKA IRUNTHATHU
Raams

மஞ்சூர் ராசா said...

உன் கவிதையை நீ எழுது

உன் கவிதையை நீ எழுது
எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி
எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி
நீ அர்ப்பணித்துக்கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது
உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது
சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது
நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது
எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது
எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும்
தத்தளிப்பைப் பற்றி எழுது
எழுது உன் கவிதையை நீ எழுது
அதற்கு உனக்கு வக்கில்லை என்றால்
ஒன்று செய்
உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று
என்னைக் கேட்காமலேனும் இரு.

-சுந்தர ராமசாமி