1.21.2009

புலிகளின் பின்னகர்வு: விடை தெரியாத கேள்விகள்


நேற்றுக் காலையில் என்னோடு கதைத்த கவிஞர் ஒருவர் “பிரபாகரனைப் பிடித்துவிடப் போவதாகச் செய்திகளில் சொல்லிக்கொண்டிருக்கிறார்களே.... வேதனையாக இருக்கிறது”என்று சொன்னார். எனக்கும் வேதனையாகத்தான் இருக்கிறது… தலைவர் பிரபாகரனைப் பிடித்துவிடுவார்கள் என்பதனால் அல்ல; ‘பிடித்துவிடுவோம் விடுவோம்’ என்று முழக்கமிடும் பேரினவாதிகளையும், அவர்கள் வாய்மொழியும் செய்திகளின் உண்மையைச் சற்றும் உய்த்தறியாமல் பரப்பும் ஊடகவியலாளர்களையும் பார்த்துத்தான் வேதனையாக இருக்கிறது. அவரைப் பிடித்து இந்தியாவிடம் ஒப்படைப்பதா அல்லது இலங்கையே வைத்துக்கொள்வதா என்பதும் சர்ச்சைக்குரிய ஒன்றாகத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. குரங்கு அப்பம் பிரிக்கிற கதை காரணமில்லாமலே ஞாபகத்திற்கு வருகிறது. சடுதியான மறதியில் வீழ்ந்து மக்கள்தான் வாக்களித்துத் தொலைக்கிறார்கள் என்றால், அரசியல்வாதிகள் அவர்களுக்குமேல் வரலாற்று மறதி நோயால் பீடிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். ‘பிரபாகரனைப் பிடிப்பது’என்ற விடயத்தை ஏதோ பட்டாம்பூச்சியைப் பிடிப்பதுபோல மெத்தனமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

அமைதிப் படையாக இலங்கையில் காலடி வைத்த இந்திய இராணுவம் அழிவுப்படையாக மாறி பேரனர்த்தங்களை விளைவித்தபோது, பிரபாகரன் அவர்களும் ஏனைய போராளிகளும் காட்டில் தலைமறைவு வாழ்க்கை வாழ நேர்ந்தது நாமெல்லோரும் அறிந்ததே. போராளிகளை மரணம் நிழலெனத் தொடர்ந்த காலமது. அந்நாட்களில் பிரபாகரன் அவர்களது மெய்க்காவலர்களில் இருவர் கைகளில்‘பெற்றோல்’குடுவைகளுடன் எப்போதும் தயார்நிலையில் இருந்தார்கள். காரணம், “நான் குண்டடிபட்டோ வேறெவ்வகையிலோ இறந்துபோக நேர்ந்தால் எனது உடல்கூட அவர்களது கைகளில் சிக்கக்கூடாது. நீங்கள் தற்கொலை செய்துகொள்வதாயின் எனது உடலைக் கொழுத்திய பின்னரே செய்துகொள்ளவேண்டும்”என்று அந்த இரண்டு மெய்ப்பாதுகாவலர்களுக்கும் அவர் பணித்திருந்தார். உயிரற்ற தனது உடல்கூட கைப்பற்றப்படக்கூடாதென்பதில் மிகக்கவனமாக இருந்தவரா உயிரோடு பிடிபடுவார்? ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தினை நசுக்குவதில் காட்டும் மும்முரத்தை ஆக்கிரமிப்பாளர்கள் வரலாற்றை நினைவுகொள்வதிலும் காட்டினால் நன்று.

“எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் சமரசத்திற்குட்படாத, விலைபோகாத ஒருவரின் வழிநடத்தலில் இயங்கி, உலகத்திலுள்ள போராளி அமைப்புகளில் போர்த் தந்திரோபாயத்திலும் அர்ப்பணிப்பிலும் சுயகட்டுப்பாட்டிலும் தீரத்திலும் முதன்மையானது என்று எதிரிகளையே வியப்படைய வைத்தவர்களுமான விடுதலைப் புலிகள் தமிழர் தாயகப் பிரதேசங்களை ஒவ்வொன்றாக எதிரிகளின் கைகளுக்கு விட்டுக்கொடுத்துப் பின்னகர்ந்து செல்வது எதனால்?”என்பதுதான் இன்றைய மில்லியன் டொலர் கேள்வியாகும்.

உலகின் நான்காவது பலமான இராணுவம் என்று அறியப்பட்ட இந்திய இராணுவம் ‘இனி முடியாது’ என்று திரும்பிச் சென்றதை நாமறிவோம். 1,80,000 வரையிலான எண்ணிக்கையுடைய இராணுவ பலத்தை (இந்தியா போன்றவர்களின் படையுதவிகள் தவிர்த்து) தன்னகத்தே கொண்டதும், பாதுகாப்புச் செலவினமாக ஆண்டுதோறும் பத்தாயிரம் கோடி ரூபாவை வாரியிறைத்து வருவதுமான இலங்கை அரசுக்கு இருபத்தைந்தாண்டு காலமாக கண்மூடினால் புலிச்சொப்பனமாக (இது சிம்மசொப்பனமல்ல) விடுதலைப் புலிகள் இருந்துவருவதை நாமறிவோம். 1995ஆம் ஆண்டு ரிவிரச எனப் பெயர் சூட்டப்பட்ட பெருமெடுப்பிலான இராணுவ நடவடிக்கையின் விளைவாக இலட்சக் கணக்கான தமிழர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து இரவோடிரவாக பெயர்ந்து வன்னி நோக்கி நகர்ந்துபோன பேரவலம் நிகழ்ந்தது. அப்போது முல்லைத்தீவில், பூநகரியில், ஆனையிறவில் பலம்வாய்ந்த இராணுவ முகாம்கள் இருந்தன. ‘அசைக்க முடியாது’ (டி.சிவராம் அவர்களின் வார்த்தைகளில்)என்று அமெரிக்காக்காரனே வந்து பார்த்து தரச்சான்றிதழ் வழங்கிவிட்டுப் போன ஆனையிறவையே புலிகளால் அசைக்க முடிந்தது. முல்லைத்தீவு, பூநகரி இராணுவ முகாம்களும் புலிகளிடம் வீழ்ந்தன. இவ்வாறாக வெல்லுதற்கரியவர்கள் என்று பெயர்பெற்ற விடுதலைப் புலிகள் மாங்குளம், மல்லாவி, கிளிநொச்சி, முகமாலை என்று தொடர்ச்சியாக விட்டுக்கொடுத்தபடி பின்னகர்ந்து செல்லும் மாயந்தான் என்ன?

தொடர்ச்சியான போரினால் விடுதலைப் புலிகள் சோர்வடைந்து பலமிழந்து போனார்கள் என்பதை நம்பமுடியாதிருக்கிறது. ‘கிளிநொச்சி வீழ்ந்தது’ என்ற செய்தி சாதாரணர்களையே சாய்த்திருக்கிறது. அந்நகரை மையமாகக் கொண்டியங்கிய புலிப்போராளிகளுக்கு அது தாய்மடி போல. அதை விட்டுக்கொடுத்து நகரும்போது உலைக்களம் போல அவர்களது நெஞ்சம் கோபத்தில் கொதித்திருக்குமேயன்றி, ஓடித் தப்பினால் போதுமென ஒருபோதும் அவர்கள் கருதியிருக்கமாட்டார்கள். கரும்புலிகள் என்று தனியாக சிறப்புப் படையொன்று இருக்கின்றபோதிலும், விடுதலைப் புலிகள் இயக்கத்திலுள்ள அனைத்துப் போராளிகளும் எந்நேரமும் தம்முயிரைத் தற்கொடை செய்யத் தயாரான கரும்புலிகள்தாம். கழுத்தில் சயனைட் குப்பி வடிவில் சர்வசதாகாலமும் மரணத்தைச் சுமந்து திரிகின்றவர்கள்தாம். அசாத்திய மனோபலமுடைய அதிமானுடர்களாக அறிந்தவர்களால் வியக்கப்படுகிற அவர்களால் இம்முறை மட்டும் தாக்குப்பிடிக்க முடியாமற் போனதென்பது வியந்துமாளாத ஒன்றாக இருக்கிறது.

அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை வரலாறு தன் எழுதுகோலோடு கவனித்துக்கொண்டிருக்கிறது. இழப்பின் துயர் செறிந்த தூங்காத விழிகளோடு உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். வெற்றிக் களிப்பில் வெறியுமிழும் பேரினவாதத்தின் கண்கள் மட்டும் மூடியிருக்கின்றன.

பின்னகரப் பணித்த பிரபாகரன் அவர்களது மனதுள் என்னதான் இருக்கிறது? கடலுக்குள் குதிக்கப்போகிறார்; கைதாகப் போகிறார் இன்னபிற சிறுபிள்ளைத்தனமான பிதற்றல்களைக் கேட்டுக்கொண்டிருக்கும் அவரது வியூகத்தின் மையப்புள்ளிதான் என்ன?

போர் என்ற புதிர் இம்முறை அவிழ்க்கப்பட முடியாததாக இருக்கிறது. மௌனத்தின் அடர்த்தியானது கேள்விகளைத் தூண்டுகிறது. ஊகங்களை நோக்கி நம்மை உந்தித் தள்ளுகிறது.

எதிரியைத் தேடிப்போய் சண்டை பிடித்தது போதும்; அவனை நமது காலடியில் கொண்டுவந்து தலையில் மிதிப்பதுதான் தகும் என்ற தந்திரோபாயம்தான் உள்நகர்ந்து உள்நகர்ந்து சென்றதன் பின்னிருக்கும் காரணமா? குழலூதிச் செல்பவனைத் தொடர்ந்துபோய் தண்ணீருள் விழும் எலிகளாகிவிட்டனரா சிங்கள இராணுவத்தினர்? தென்னிலங்கையில் ஏதாவது தாக்குதல்கள் நடத்தவேண்டியிருந்தால் திசமகராம, கதிர்காமம் போன்ற காட்டுப்பகுதிகளுள் சென்று, பல நாட்கள் தங்கி, உளவு அறிந்து, அப்பகுதிகளில் வாழும் வேடுவர்களைத் துணைக்கழைத்து நீர்நிலைகள் அறிந்து, உணவு பெற்று…அரும்பாடுபடவேண்டும். தவிர, எவரேனும் காயப்பட்டால் தூக்கிவர இயலாது. முதலுதவி தவிர்த்து வேறெந்த சிகிச்சை வசதிகள் இரா. காடுகளில் வழி தடுமாறி அலையவும் நேரிடும். மாறாக போராளிகளுக்கு தமிழ்ப்பகுதிகளின் ஒவ்வொரு அங்குலமும் இங்கே கிணறு, இங்கே கடப்பு என்று கண்பாடம், கால்பாடம். இவ்வாறான நிலையில் ஏன் எதிரிகளின் கோட்டைக்குள் சென்று சென்று தாக்க வேண்டும்? போரைத் தமிழர்களின் எல்லைகளுள் நகர்த்திவிட்டால்…என்று நினைத்திருக்கலாம்.

இப்போது முன்னரங்க நிலைகளில் சண்டை போடுவது மட்டுந்தான் இலங்கை இராணுவத்தினரின் வேலையன்று; பிடித்த இடங்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் வேண்டும். முழுப்படையினரையும் முன்னரங்கத்தில் குவிப்பதாயின் முதுகிலும் கண் இருந்தால்தான் சாத்தியம். ஆக, தக்கவைத்துக்கொள்வது, சண்டை பிடிப்பது என்ற இருவேறு திசைகளில் படையினரின் கவனம் சிதறுகிறது. தமிழர்களை ஒரு குறிப்பிட்ட சதுர கிலோ மீற்றரினுள் தள்ளியதன் மூலம் உச்சபட்ச இனவழிப்பைச் சாத்தியமாக்கியிருப்பதாகச் சிங்களப் பேரினவாதம் கருதுகிறது. ஆனால், மறுவளமாக, புலிகளது கண்காணிப்பை வேண்டும் சமராடுகளத்தின் எல்லைகள் சுருங்கியிருக்கின்றன. ஆனால், இலங்கை இராணுவத்தின் சமராடுகளம் விரிந்திருக்கிறது. ஒவ்வொரு அங்குலத்திலும் படையினரை நிறுத்திவைக்க வேண்டிய பதட்டத்தினுள் அவர்களைத் தள்ளியிருக்கிறது. இது விடுதலைப் புலிகளுக்குச் சாதகமானதாகவே இருக்கும்.

விடுதலைப் போராட்டத்தை இனவெறி அரசிடம் காட்டிக்கொடுத்த கருணாவின் கைங்கரியத்தினால், அவர் சொல்லும் தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையிலேயே இராணுவத்தினரால் முன்னேற முடிகிறது என்றொரு கதையும் உண்டு. ஆனால், அது முற்றுமுழுதான உண்மையன்று. இயக்கத்தின் ஓர்மத்தை அறிந்த கருணாவுக்கே புலிகளின் பின்னகர்வு வியப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் ஐயமில்லை. நகர்வதுபோல் போக்குக் காட்டிக்கொண்டு ஒவ்வொரு தாக்குதலிலும் ஐம்பது அறுபது எனப் படையினரைப் பலிகொள்வதானது வெற்றிக் களிப்பில் மூழ்கியிருக்கும் பேரினவாதிகளின் கண்களில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

மேலும், பல ஆண்டுகளுக்கு முன்பு – விடுதலைப் புலிகள் படைபல ஆயுதபல ரீதியாக இத்தனை வளர்ச்சியுற்றிருக்காத ஒரு காலகட்டத்தில் பலாலி விமான நிலையத்தில் சென்று இறங்கிய இராணுவ விமானங்களைச் சுட்டுத் தரையிறக்கவும் தலைசுழலவும் வைக்க முடிந்திருந்தது. இப்போதோ ஒரு உலங்குவானூர்தியைக் கூட அவர்கள் சுட்டு வீழ்த்தியதாகத் தகவல் இல்லை. பத்துத் தடவைகளுக்கு மேல் தென்னிலங்கையில் உயிர்மையங்களில் தாக்குதலை நடத்திவிட்டு வெற்றிகரமாகத் திரும்பிவந்த விடுதலைப் புலிகளின் விமானங்களால், இந்த இக்கட்டான சூழலில் எதிரிப்படையின் மேல் சென்று இறங்கமுடியாதிருப்பது எதனால்? புலிகளின் ஆறு விமான ஓடுபாதைகளைப் பிடித்துவிட்டோம் என்று முழங்கும் அரச பீரங்கி, அந்த ஓடுபாதைகளில் ஓடிய விமானங்கள் எங்கு போயின என்பதைப் பற்றிக் கள்ளமௌனம் சாதிக்கிறது. (விமான ஓடுபாதைகளில் விடுதலைப் புலிகள் மோட்டார் வண்டிகளைத்தான் ஓட்டிக்கொண்டிருந்தார்கள் என்று கோத்தபாய ராஜபக்ஷ என்ற கோயபல்ஸ் சொன்னாலும் வியப்பதற்கில்லை.) அப்படியானால், விமானங்கள் எந்தவொரு கட்டளையை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன?
மீண்டும் அந்த மில்லியன் டொலர் கேள்விக்குத் திரும்புகிறோம். ‘எப்படிப் பின்னடைந்தார்கள்?’என்ற கேள்வி பிரபாகரன் அவர்களையும் விடுதலைப் புலிகளையும் அறிந்த பலருள்ளும் விடையற்று அலைந்துகொண்டிருக்கிறது. உலகெங்கிலும் பரவலாக வாழ்ந்துகொண்டிருக்கும்; தமிழர்கள் சந்தித்துக்கொள்ளும்போது இந்தக் கேள்வியை ஒருவர் கண்களில் மற்றவர் காண்கிறார்கள். விடுதலைப் போராட்டத்தின் முன்னணியில் போராளிகள் நின்றிருந்தார்கள் எனில், பொருளாதார மற்றும் பின்பலமாக இருந்தவர்கள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும், விடுதலையைத் தமது அரசியல் ஆதாயங்களுக்காக மலினப்படுத்தாத தமிழகத்தைச் சேர்ந்த விரல்விட்டு எண்ணத்தகுந்த சில அரசியல்வாதிகளும், இனப்பற்றாளர்களும், மத்திய அரசுக்குக் கட்டுண்டு இன்று கையறு நிலையில் கவலையோடிருக்கும் ஆறரைக் கோடி தமிழர்களுந்தான் இந்த வாழ்வுரிமைப் போராட்டத்தின் ஆதாரமாக பின்னணியில் இருந்தார்கள்; இருக்கிறார்கள்.

நேற்று கனடாவிலிருந்து தொலைபேசிய ஒரு நண்பர் சொன்னார் “நாங்கள் இடிந்துபோயிருக்கிறோம். சரியாக உறங்கி நீண்ட நாட்களாகின்றன. ஒரு மகத்தான, எதிர்பாராத திருப்பத்திற்காகக் காத்திருக்கிறோம்”

“எனது எண்பத்து நான்கு வயதான தாயார் சரியாகச் சாப்பிடுவதோ உறங்குவதோ இல்லை… எங்கள் பிள்ளைகள் தோற்றுப்போனார்களா? என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருக்கிறார்” என்றார் மற்றொருவர்.

“பிரபாகரன் திறமையான இராணுவத் திட்ட வகுப்பாளர் மட்டுமல்ல; அரசியல் நுணுக்கமும் அறிந்தவர். மாறுகின்ற உலக நடப்புகள் எப்படியெல்லாம் தமிழர்களின் போராட்டத்தைப் பாதிக்கும் என்பதில் தீர்க்கமான ஞானம் உள்ளவர். ஆட்சி மாற்றம் ஏற்படவுள்ள அமெரிக்கா, இந்தியா நிலைமைகள் தெரிந்தபின்பு, அடுத்த நகர்வை நோக்கிய முக்கியமான முடிவை பிரபாகரன் எடுப்பார்”என்று அண்மையில் இணையத்தளச் செவ்வியொன்றில் இந்தியப் பத்திரிகையாளரான அனிதா பிரதாப் சொல்வதற்கிணங்க தகுந்த தருணத்திற்காக பிரபாகரன் காத்திருக்கிறாரா? உலக வல்லரசுகளில் முதன்மையானதும், சகல நாடுகளையும் அதட்டி உருட்டி அவற்றின் தலைவிதியை நிர்ணயிப்பதுமான அமெரிக்காவில், அடக்கி ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒபாமா, இருபது இலட்சம் பேர் முன்னிலையில் அமெரிக்க அதிபராக அண்மையில் பதவியேற்றார். ‘அடிவாங்கியவனுக்கே வலி தெரியும்’என்ற கூற்றினை பிரபாகரன் அவர்கள் சிந்தித்திருக்கக்கூடும். ‘அடித்துப் பிடிக்க எங்களால் முடியும்; அங்கீகாரம் வேண்டும்’என்பது அவரது இன்றைய நிலைப்பாடாக இருக்கலாம்.

ஊகங்களும், கேள்விகளும், ஆதங்கமும், ஆற்றாமையும், துயரமும் சூழ்ந்திருக்கும் இக்கொடுங்காலத்தை ஒரு இமைத்திறப்பில் கடந்து மகிழ்ச்சிக்குள் நுழைந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

நிச்சயமாக அது நடக்கும் என்றே உள்ளுணர்வு கூறுகிறது. இறந்தகாலத்தின் அற்புதங்கள் ‘கலங்காதீர்’என்று கண்துடைக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான், சீனா, இஸ்ரேல், உக்ரேன் என இலங்கையின் இனவழிப்புப் போருக்கு முண்டுகொடுக்க, தாங்கிப்பிடிக்க, தட்டிக்கொடுக்க பல நாடுகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால், அதனைக் காட்டிலும் அதிகமான நாடுகளில் (ஜேர்மனி, கனடா, இலண்டன், இந்தியா, சுவிஸ், நோர்வே, அமெரிக்கா…) ‘டயஸ்போரா’க்களாய் நாங்கள் இருக்கிறோம். எங்களோடு சத்தியம் இருக்கிறது. ‘வேடிக்கை மனிதரைப் போல்’ நாங்கள் ஒருபோதும் வீழ்ந்துவிட மாட்டோம்.


33 comments:

பாண்டித்துரை said...

////அடித்துப் பிடிக்க எங்களால் முடியும்; அங்கீகாரம் வேண்டும்’என்பது அவரது இன்றைய நிலைப்பாடாக இருக்கலாம்.

///

அப்படியாகத்தான் இருக்கவேண்டும்.

RAGUNATHAN said...

//வேடிக்கை மனிதரைப் போல்’ நாங்கள் ஒருபோதும் வீழ்ந்துவிட மாட்டோம்.//
ஆம் வீழமாட்டோம். ஒரு பீனிக்ஸ் பறவை போல மீண்டெழுவோம். இது உறுதி.


//போராட்டத்தை கைவிட்டு வெளியேறும் மனோபாவம் பிரபாகரனுக்கு கிடையாது -என்கிறார் முன்னாள் ராணுவ உளவுத் தலைவர் ஹரிகரன்.
போதாக் குறைக்கு ஜூனியர் விகடனில் ஜனவரி 22 கண்டம் என்று போட்டு பீதியயை கிளப்பி விட்டுள்ளனர். இங்கே படிக்கலாம் http://thamilar.blogspot.com/2009/01/22-23.html
தூக்கமே போச்சு. இருந்தாலும் உங்கள் கட்டுரை படிக்கையில் ஒரு ஆறுதல் சகோதரி தமிழ்நதி.

//நான் பிரபாகரனை நன்கறிவேன். வீணாக பொழுதை கழிக்காமல் எதாவது முயற்சியில் ஈடுபடுவார். ஜனவரி இறுதிக்கு பின்பே தனது தாக்குதலை துவக்குவார். ஒரு சர்வதேச சூழ்நிலைக்காக புலிகள் காத்திருக்கின்றனர்." சொன்னவர் தலைவரை சந்தித்த பெண் பத்திரிகையாளர் அனிதா பிரதாப்.//

2 பெரிய கப்பல்களில் ஆயுதங்கள் வந்தன என்று கொழும்பு ஊடகங்கள் தெரிவித்தன. கிளிநோச்சியயை பிடித்த போது, (புலிகள் தாக்குபிடிக்க முடியாமல் ஓடி விட்டார்களா என்பது உண்மையானால்) பெருமளவிலான ஆயுதங்கள் படையினரால் கைப்பற்றப் படவில்ல. புலிகளும் இதுவரை பெரிய அளவிலான ஆயுத பிரயோகம் செய்யயவில்லை. பெரும் அளவிலான புலிகளும் கைதோ/கொல்லவோ படவில்லை.

அப்படியானால் அந்த ஆயுதங்களும் புலிகளும் எங்கே? முல்லைத்தீவில் இருக்கிறார்கள். சரி அவர்கள் ஏன் பின்வாங்கி விட்டு அமைதி காக்கிறார்கள்.? இம்முறை ஒட்டு மொத்தமாக சிங்கள படைகளுக்கு சமாதி கட்டத்தான் புலிகள் பின் வாங்கி இருக்கிறார்கள்.

அடிக்கும் அடியில் தமிழீழம் மலர்ந்து விட வேண்டும். அல்லது இன்னும் சில ஆண்டுகளுக்கு சிங்கள வெறியன்களும், அவனிடம் பிஸ்கட் சாப்பிடும் கெழட்டு நாய்களும், காட்டிக் கொடுத்த கருணை இல்லா கயவங்களும் தினமும் தமிழன் காசை தின்றுவிட்டு மலம் கழிக்கும் "தினமலம்", இலங்கைக்கான தமிழ்நாடு political pimp சிறிலங்க ரத்னா பத்திரிக்கை காரங்களும் மூடிக்கொண்டு இருக்க வேண்டும்.

அதைத்தான் உலகத் தமிழினம் கண்ணீரோடு எதிர்பார்க்கிறது.

எங்கே இருக்கிறீர்கள் தலைவரே?

கிருத்திகா ஸ்ரீதர் said...

கிட்டத்தட்ட அனைவர் மனதிலும் இருக்கும் கேள்விகளையும் அதற்கான பதில்களையும் கேள்விகளாகவும் வைத்துசெல்லும் இந்த பதிவு அதிமுக்கியமானது தோழி, இன்றொருநாள் கடந்து போனால் விடிவொன்று வருமென்று அனைவரும் காத்திருக்கும் வேளையில் காலையில் கண்டுள்ள தங்கள் பதிவு உற்சாகமாயிருக்கிறது. வீழ்வதற்கல்ல வாழ்வதற்கே இங்கு போராட்டங்கள்.

தமிழ் சசி | Tamil SASI said...

பொன்சேகா ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பாணியில் கொக்கரிக்கும் பொழுது சிரிப்பாக தான் இருக்கிறது. பிரபாகரனுக்கு என்னென்ன நோய்கள் இருக்கின்றன என்பதை எல்லாம் டெய்லி மிரர் பட்டியல் போட்டு கொண்டிருக்கிறது. படிக்க சிரிப்பாக தான் உள்ளது

இருந்தாலும் ஒவ்வொரு தமிழன் மனதிலும் அச்சம் இருக்கத்தான் செய்கிறது. எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்ற கவலையும், வேதனையும், இயலாமையும் தமிழனின் இன்றைய நிலையாக உள்ளதை மறுக்க முடியாது.

இந்த சமயத்தில் கொக்கரிக்கும் பொன்சேகா மற்றும் ஜெயலலிதா-தமிழக கதர் வேட்டிகளை விட மாற்று கருத்தினை முன்வைப்பதாக கூறிக்கொள்ளும் ஈழ இடதுசாரிகளின் கொண்டாட்டமும், ஈழத்தமிழர்களுக்காக உயிர் விட தயார் - பதவியை துறக்க தயார் என நாற்காலியை கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கும் திருக்குவளை முத்துவேல் கருணாநிதியும் தான் என்னை மிகவும் எரிச்சல் படுத்துகிறார்கள்.

நாம் வீழ்ந்து விட மாட்டோம் என்ற நம்பிக்கையுடன் நம்மால் முடிந்த பணிகளை தொடர்ந்து நாம் செய்து கொண்டிருக்க வேண்டும்.

Anonymous said...

அநேகமாக எல்லோர் மனதிலும் எழும் கேள்விகள் இவை.

நிச்சயமாய் , புலிகள் ஏதோ ஒரு பெரும் நிகழ்வுக்காக காத்திருக்கிறார்கள்.எனக்கு நம்பிக்கை இருக்கிறது.புலி என்றும் வீழாது.

ராஜ நடராஜன் said...

புதிர்களும்,புரியாத கேள்விகளும் இலங்கை அரசின் பரப்புரைக்கே உதவி செய்கின்றன.கிளிநொச்சி ஆக்கிரமிப்பிலிருந்து கள நிலைகள் இதமாயில்லை.

Unknown said...

மனதை பிசைந்து உணர்வுகளின் கொதிநிலைக்கு இட்டுச் சென்றுவிட்டது தமிழ் இப்பதிவு. கேள்விகள், கேள்விகள் விடை தெரியாத அத்துவானக் காட்டில் கைவிடப்பட்டது போல வெறும் கேள்விகளின் கூட்டணியில் சிக்கத் தவிக்கிறோம். அனுமானங்களும், யூகங்களுமாய் நகர்கிறது நாள்கள். உங்கள் பதிவை வாசித்ததும் சிறிது நம்பிக்கை பிறக்கிறது தமிழ்.
//அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை வரலாறு தன் எழுதுகோலோடு கவனித்துக்கொண்டிருக்கிறது. இழப்பின் துயர் செறிந்த தூங்காத விழிகளோடு உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். வெற்றிக் களிப்பில் வெறியுமிழும் பேரினவாதத்தின் கண்கள் மட்டும் மூடியிருக்கின்றன. // ஆம் தோழி, இப்போது கண்மூடி நிற்கும் அவை மண்மூடிப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை. //வேடிக்கை மனிதரைப் போல்’ நாங்கள் ஒருபோதும் வீழ்ந்துவிட மாட்டோம்.// ஓம். பொறுமையின் எல்லை கடந்துவிட்டது, எல்லா சூழ்ச்சிகளையும் முறியடிப்பார்கள் புலிகள், இனி வெற்றிக்கான நாள் வெகு அருகில் உள்ளது. நம் எல்லோரின் கனவும் மெய்ப்படும்.

ஸ்ரீ சரவணகுமார் said...

எங்களோடு சத்தியம் இருக்கிறது. ‘வேடிக்கை மனிதரைப் போல்’ நாங்கள் ஒருபோதும் வீழ்ந்துவிட மாட்டோம்.

நட்புடன் ஜமால் said...

\\வர்கள் வாய்மொழியும் செய்திகளின் உண்மையைச் சற்றும் உய்த்தறியாமல் பரப்பும் ஊடகவியலாளர்களையும் பார்த்துத்தான் வேதனையாக இருக்கிறது\\

சரியாக(ச்) சொன்னீர்கள் ...

நட்புடன் ஜமால் said...

\\‘வேடிக்கை மனிதரைப் போல்’ நாங்கள் ஒருபோதும் வீழ்ந்துவிட மாட்டோம்.\\

வாழ்த்துக்கள்.

Anonymous said...

எங்கள் விடுதலை பின்தங்கக் காரணங்கள்:
1)தலைவர் ஆண்டுக்கு ஒரு முறைதான் பேசுவேன். மற்றும்படி உலகத்திற்கு எங்கள் எழுச்சின் தேவை குறித்து மற்றவர்கள் எழுத்திலும் கவிதையிலும் சொல்லட்டும் என எண்ணுவது.

2) ச‌மாதான‌ கால‌த்தில் "பொதுக்க‌ட்ட‌மைப்பு", "வ‌ன்னிக்கு உண‌வு" என‌ அர‌சு திசை திருப்ப‌ எடுத்த‌ ந‌ட‌வ‌டிக்கைக்காக‌ வெளிநாடுக‌ளில் அலைந்த‌து.

3. திரு அன்ர‌ன் பால‌சிங்க‌ம் நோர்வேயின் த‌லையீட்டுக்காக‌ புலிக‌ளின் போராட்ட‌த்தை மாற்றி அமைத்தார்.
அவ‌ரே 2003/2004? ல‌ண்ட‌ன் மாவீரர் தின‌தில் இந்தியாவுக்காக‌ நோர்வே கேட்ட‌த‌ற்காக‌ போராட்ட‌த்தை நிறுத்தினேன் என‌ ப‌கிர‌ங்க‌மாக‌ கூறினார்.

4. க‌ருணாவின் பிள‌வை புலிக‌ள் ச‌ரியாக கையாளாம‌ல் கிழ‌க்கு மீது ப‌டையெடுத்து கிழ‌க்கின் ஒத்துழைப்பை
இழ‌ந்துவிட்ட‌து. க‌ருணா செய்த‌ துரோக‌த்திற்காக‌ திருகோணம‌லை ப‌டைய‌ணி த‌ள‌ப‌தி ப‌தும‌ன் உட்ப‌ட அனைவ‌ரையும் வ‌ன்னிக்கு அழைத்து.............. . அத‌ன் பின்னர் க‌ள் நிலை தெரியாத‌ சொர்ண‌த்தை திருகோண்ம‌லைக்கு நிய‌மித்து, சொர்ண‌ம் ஆழ‌ம் தெரியாம‌ல் போரைத் தொட‌ங்கி இன்று பெறும் அழிவில் இன்று நாம்.

அடுத்து என்ன‌ செய்ய‌லாம்?


புலியைப் ப‌ல‌ப்ப‌டுத்துவோம்.
உரிமைக்கு உர‌த்துக் குர‌ல் கொடுப்போம்.
புலிக‌ளும் த‌ங்க‌ள் த‌வ‌றுக‌ளை உட‌ன‌டியாக‌ திருத்த‌வேண்டும்.

tamil friend

Unknown said...

Here is the end of the new US president's inauguration speech:

In the year of America's birth, in the coldest of months, a small band of patriots huddled by dying campfires on the shores of an icy river. The capital was abandoned. The enemy was advancing. The snow was stained with blood. At a moment when the outcome of our revolution was most in doubt, the father of our nation ordered these words be read to the people:
"Let it be told to the future world ... that in the depth of winter, when nothing but hope and virtue could survive ... that the city and the country, alarmed at one common danger, came forth to meet (it)."
America. In the face of our common dangers, in this winter of our hardship, let us remember these timeless words. With hope and virtue, let us brave once more the icy currents, and endure what storms may come. Let it be said by our children's children that when we were tested we refused to let this journey end, that we did not turn back nor did we falter; and with eyes fixed on the horizon and God's grace upon us, we carried forth that great gift of freedom and delivered it safely to future generations.

Anonymous said...

திரிகோணமலை வீழ்ச்சி
--திரிகோணமலை சிங்களவரின் பூர்வீக சொத்தாகும் அங்கு பழைய புத்த விகாரைகள் காணபடுகின்றன இதை கூறியது சிங்கள பிக்கு

கிளினோச்சி வீழ்ச்சி
--கிளினோச்சியை பற்றி சிவந்த மண் என்று மகாவம்சத்தில் குறிப்புகள் காணபடுகின்றன
எனவே இது சிங்களவ்ரின் சொத்தாகும் இதை கூறியது ஜாதிக கேல உறுமைய கட்சி

திருத்தணிக்கு அருகில் சிங்கள புத்த விகாரை கட்டுறான் சிங்களன்
--இனி அது?

இந்திய சீன போர்
--இலங்கை சீனா பக்கம் சாய்ந்து விடாமல் இருக்க இந்திய அரசு தமிழர்களுக்கு செய்த நன்மை பண்டா-'சாஸ்திரி' ஒப்பந்தம் மூலம்10 லட்சம் மலையக தமிழரின் வாழ்வுரிமையை பறித்தது!

இந்திய பாகிஸ்தான் போர்
--இலங்கை பாகிஸ்தான் பக்கம் சாயாமல் இருக்க தமிழ் நாட்டினுடைய கச்ச தீவை அன்பளிப்பாக வழங்கியது

இனி அடுத்த போர் நடைபெற்றால்?
--கொடுக்க இருப்பது தனுஷ்கோடியா? ராமேஷ்வரமா?

சூடு சொரணை உள்ள தமிழர்களே சிந்திப்பீர் செயல்படுவீர்

Anonymous said...

//இனி அடுத்த போர் நடைபெற்றால்?
--கொடுக்க இருப்பது தனுஷ்கோடியா? ராமேஷ்வரமா?

சூடு சொரணை உள்ள தமிழர்களே சிந்திப்பீர் செயல்படுவீர்//

த் தோடா சூடு சொரணை உள்ள அக்மார்க் தமிழரே முதலில் உங்கள் பிரச்சனையை பாருங்க. என் வூடுதான் பணால் அடுத்தவன் வூடும் காலியாகனும்ன்னு நினைச்சு அட்வைஸ் பண்ணாம வேலையை பாருங்க

இது தான் இடத்தை கொடுத்த மடத்தை புடுங்கறது

தமிழநம்பி said...

தமி்ழீழத் தேசியத் தலைவர் -

உலகம் வியக்கும் போராளி!

தந்திரங்கள் அறிந்த புரட்சியாளர்!

தாயக விடுதலைக்கே வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் செலவிட்டு வரும் தன்னேரில்லாத் தன்னுணர்வாளர்!

எவனும் எதுவும் சொல்லட்டும்!

ஈழ விடுதலை ஈட்டல் எஃகுறுதி!

மற்றவர்கள், நம்மாலான நமக்கான கடமைகளைச் செய்ய வேண்டும்.

கவலைகள் அச்சங்களைத் துடைத்தெறிவோம்!

நம்மாலான பணிகளில் நம்மை ஈடுபடுத்திக் கொளவோம்!

வெற்றி உறுதி!

Anonymous said...

யாராவது புலிகள் பக்க தவறுகள் நேர்மையாக விமர்சியுங்கள். அது விடுதலையை முன்னெடுக்க உதவும்.

Jayakumar said...

We shall pay any price, bear any burden, meet any hardship, support any friend, oppose any foe for Eelam Tamils' survival and liberty.

kalyani said...

அருமையான ஒரு கருத்துப்பகிர்வு.எங்கள் தலைவர் சொல்லுவதை விட செய்வதினையே மிகவும் விரும்புபவர்.எமக்கு என்று ஒரு நாடு வேண்டும் என்றால் நாம் அவரது கரத்தைப் பலப்படுத்த வேண்டும்.

Anonymous said...

அய்யா அனானி பேம நி..

அரிமாத் தமிழன் செண்பகராமன், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், தமிழ்ப்பெரியார் திரு.வி.க.தில்லையாடி வள்ளியம்மை, திருப்பூர் குமரன், மாவீரன் சுந்தரலிங்கம், மானங்ககாத்த மருது பாண்டியர், நெற்கட்டான் செவ்வல் புலித்தேவன் போன்ற ஒப்புயர்வற்ற ஈகச் செம்மலகளைப் பெற்ற நாடுதான் நம் தமிழ்நாடு!

ஆனால் இன்றைய தமிழ் நாட்டு கட்சிகள் அனைத்தும் புதுடில்லி ஏகாதிபத்தியத்தின் கொத்தடிமைக் குக்கல்களின் கூடாரமாகிவிட்டது. தமிழ்நாட்டு கட்சிக்காரன் எவனுக்குமே தாய்மொழியாகிய தமிழ்மொழி மீதோ, தமிழ்நாட்டின் மீதோ, தமிழினத்தின் மீதோ பற்றுதலே இல்லை! இக்ககட்சிப் பேடித் தலைவர்களின் அறியாமையாலும் அடிமைத்தனத்தாலும் தான் நாம் நமது வளமான நிலங்கள் பலவற்றைத் தெலுங்கர்களிடமும், கன்னடர்களிடமும், மலையாளிகளிடமும் இழந்தோம்!உயர்தனிச் செம்மொழியாகிய தமிழ் மொழி கொலுவீற்றிருக்கவேண்டிய இடத்தில் சவமொழி கோலோச்சுவதற்குப் கட்சிகாரர்களே மூல முதல்வர்கள். இலங்கையின் மலையகத் தமிழர்கள் 15 இலக்கம் பேர் நாடற்றவர்களாக ஆக்கப் பட்டதற்கு நேரு முதல் இந்திரா வரையிலான பேராயக் கட்சிக்காரர்களே பொறுப்பாளிகள். தமிழினத்தை புது டெல்லி ஏகாதிபத்தியதிற்கு எம்.பி சீட்டுகளாக மாற்றி யார் அதிக விலைக்கு விற்கிறார்கள் என்பதில் இவர்களுக்குள்ளே அறிக்கை அக்கபோர் சண்டை ஆகியவை ஏற்படுகின்றன..

புது டெல்லி இந்திக்காரன் வீசி எறியும் எலும்பு துண்டுகளுக்காக பதவி பணம் என ஒரே கொள்கை உடையவர்களாக உள்ளார்கள்!இவர்களுக்கு தமிழனத்தை காப்பதெற்கேன்று தனிகொள்கை எதுவும் இல்லை..உலகின் முதலாவது கடலோடி இனமான சோழ தமிழினம் கச்சத் தீவின் கடற் பரப்பிலே சுட்டுக் கொல்லப்படுவதற்கும் புதுடெல்லி ஆட்சியாளர்களே பொறுப்பாளிகள்! பாலக்காட்டானான எம்.கே.நாராயணன், சிவசங்கர மேனன், ஏ.கே. அந்தோணி போன்றவர்களின் தவறான ஏவல்களால்தான். இந்தியாவிலிருந்து ஏராளமான ஆயுதங்கள் சிங்களவர்களுக்கு அனுப்பப்படுகின்றன.

தமிழர்களை இனப் படுகொலை செய்யப் பவுத்த சிங்கள வெறியர்களுக்குப் படைப்பயிற்சி தரப்படுவதற்கும் இவர்களே ஆலோசகர்கள். அரசியல் ஓர் இழவும் தெரியாத வானூர்திவலவனான ராசீவ் காந்திக்குத் தவறான வழிகளைக் காட்டி அமைதிப்படை என்னும் பெயரிலே அடாவடிப் பீடைகளை அனுப்பிவைத்த ஆரிய கும்பல்தான் இந்திய வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிக்கின்றது. அந்தக் கும்பலின் ஆலோசகர் சிங்களர்களால் லங்காரத்னா என்று போற்றப்படும் இந்துராம் என்பவர் ஆரிய ஜயங்காரே! இரவு பகல் வேற்றுமைகள் தெரியாது

இருபத்திநாலு மணி நேரமும் ஊரை கொள்ளையடிப்பதைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்த சீரங்கப் பட்டணத்து செயலலிதாவும், இந்து-ராமும்,துக்ளக்-சோவும்,சுப்பிரமணியம் சுவாமி என்கிற பன்னாட்டு அரசியல் தரகு மாமாவும் என்ன சொல்லுவார்களோ என்கிற அச்சத்தால் தாறுமாறான வெளியுறவு முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கும் பஞ்சத்து சிங்கும், பரம்பரைத் திரிவடுகனுமான கலைஞர் கருணாநிதியும் தமிழீழ மக்களின் இனப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தி விடுவார்கள் என்று அப்பாவித் தமிழர்கள் நம்பி நம்பி ஏமாந்துவிடக்கூடாது.

பாகிஸ்தானுக்கு எதிராக சீறும் ‘இந்தி’யத் தோட்டாக்கள், தமிழகத் மீனவனை சுட்டுக் கொல்லும் சிங்களவனை நோக்கி ஒரு முறையாவது பாய்ந்திருக்கிறதா? ஏன் தமிழாகளிடம் இந்த பாகுபாடு? சாகடிப்போர் இந்திய அரசுக்கு நண்பர்கள். சிங்களர்கள் நண்பர்கள் என்று சொல்வது கூட தவறு. இந்திய ஆளும் வர்க்கத்திற்கு அவர்கள் பங்காளிகள். சிங்களரும் இந்திய ஆளும் வர்க்கத்தினரும் ஆரியர்கள். வரலாற்றுக் காலந்தொட்டு அடுத்தடுத்த தலைமுறைக்குத் தமிழர்க்கெதிரான பகைநஞ்சை ஆரியம் கைமாற்றித் தந்துவருகிறது. ஈழத் தமிழர்கள்பால் இந்திய ஆளும் வர்க்கம் கடைபிடிக்கும் அணுகுமுறையும் பகைமை நஞ்சு சார்ந்ததுதான்.

இந்திராகாந்தி ஆட்சிக் காலமானாலும், அவர் தந்தையார் நேருவின் ஆட்சிக் காலமானாலும், இந்திராவின் மகன், மருமகள், பேரன் ஆட்சிக் காலமானாலும், வாஜ்பாயி ஆட்சிக் காலமானாலும் இந்திய ஆளும் வர்க்கத்தினர் தமிழகத் தமிழர்களை சந்தேகப் பட்டியலில் வைத்துக் கண்காணிப்பதிலும், தமிழர்களைப் பகைவர்களாகக் கருதுவதிலும் மாற்றமில்லை. ஈழத் தமிழர்களையும் அதே அளவுகோல் கொண்டுதான் பார்க்கிறார்கள்..இந்த பாகுபாட்டைத் தான் ‘இந்தி’ய தேசியம் என்கிறோம். தமிழகத் தமிழர்பால் பகைமை அணுகுமுறையையே இந்திய அரசு கொண்டிருக்கிறது.

காவிரி நீர்ச் சிக்கலில், கன்னடர் பக்கமும், முல்லைப் பெரியாறு அணைச்சிக்கலில் மலையாளிகள் பக்கமும் இந்திய அரசு இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் தமிழர்களுக்குப் பகைவர்களாக யார் யார் மாறுகிறார்களோ அவர்கள் எல்லாம் இந்திய அரசுக்கு நண்பர்களாகவும் வேண்டியவர்களாகவும் மாறிவிடுகிறார்கள். நடுவண் அரசாங்கத்தில் எக்கட்சி அல்லது எக்கூட்டணி ஆட்சி நடத்தினாலும் சாரத்தில் இக்கொள்கையே கடைபிடிக்கப்படுகிறது.தமிழன எதிர்ப்பு என்பது இந்திய அரசின் நிரந்தர கொள்கையாகும்!


சுருக்கமாக சொன்னால் தமிழர்களுக்கு பகைவர்களாக யார் யார் மாறுகிறார்களோ அவர்கள் பக்கம் இந்தி அரசு இருக்கிறது

'இந்தி'ய தேசியதிற்காக தரையில் விழுந்து உருண்டு புரண்டு நீலிக் கண்ணீர் வடிக்கும் போலிகளான 'இந்தி'ய தேசப் பதடிகளே!....

இந்த வினாக்களுக்கு விடை கூறுங்கள்...

1) தமிழ் மொழியின் வரலாறு 50,000 ஆண்டுகளுக்கு மேலனாதாக இருக்க வெறும் 1500 ஆக குறைத்தது எந்த மயி..ரான்?
2)கட்ச தீவை சிங்கள மாமாவுக்கு கொடுத்தவன் எவன்?
3)தனிநாடு என்று ஈழத்து இளைஞர்களை அழைத்து ராணுவபயிற்சிகொடுத்து மாநில அரசு தீர்வை வெறும் 24 பக்கங்களில் கொடுத்தவன் எவன்?
4)தமிழர் சார்பாக கையெழுத்திட நீங்கள் யார்?
5)மலையக தமிழர்கள் நாடற்றோர் ஆக காரணமான பண்டா- சாஸ்திரி ஓப்பந்தம் யார் போட்டது?
6)வளம் கொழிக்கும் நாடான 'இலங்கைக்கு' செல்ல தமிழ்நாட்டு தமிழர் முண்டியடிகிறார்களா?பிறகு ஏன் சென்னையில் மட்டும் 2வது துணை தூதரகம்?
7)கன்னடனுக்கும் தெலுங்கனுக்கும் மலையாளிக்கும் தமிழனை தாக்கும் போது வராத இந்திய தேசிய உணர்வு உனக்கு மட்டும் என்ன மயி..த்துகு பொங்கி பிளிறுகிறது?
8)காலங்காலமாக சோழ பாண்டியர் காலம் தொட்டு ஈழதமிழர்களுக்கு இன்னல் நேரும் போதெல்லாம் தமிழக தமிழர் இலங்கை சென்று சிங்களவனை சுளுக்கு எடுத்திருக்கிறார்கள்..அந்த வகையில் 1990 களில் 5,000 த்திற்கும் மேற்பட்டவரை திரட்டி ஈழ தமிழரை காக்க சென்ற நெடுமாறனை கைது செய்தது எந்த நாட்டு கடற்படை?
9)நீ சொல்லாவிட்டாலும் சிங்குடைய மயி..ரும் தமிழனுடைய உயிரும் ஒன்றா?

இந்தியா ஆயுதம் கொடுக்காவிட்டால் சீனா பாகிஸ்தான் கொடுக்குமாம்!இது இவர்களின் வாதம் அட கருமாந்திரமே!எங்கள் பிணத்தின் மீதா அதை செய்யவேண்டும் நீங்கள் என்ன கடவுளா உங்கள் ஆயுதத்தால் நாங்கள் சாக!

தமிழ் தேசிய உணர்வாளர்கள் ஓரணியில் திரளவேண்டும்!ஈழத் தமிழர்களின் விடியலுக்குத் தமிழீழ விடுதலை மட்டுமே தீர்வு! தமிழ் நாட்டில் மாணவர்களாலும், மீனவர்களாலும், பாட்டாளிகளாலும்,படைப்பாளிகளாலும் முன்னெடுக்கப்பட்டு விட்டிருக்கும் தமிழீழ விடுதலைக்கான ஆதரவுப் போராட்டம் வெல்லவேண்டும்! இருபத்தோராம் நூற்றாண்டு தமிழர்களின் நூற்றாண்டு!

RAGUNATHAN said...

பிரபாகரனுக்கு கண்டம் ஏதும் இல்லை!

நவாம்சத்தைப் பொறுத்தவரை தற்போதைய அதிபர் ராஜபக்சவை விட, இவருடையது சிறப்பாக இருப்பதால் ஜனவரி 27இல் இருந்து சிறப்பு பலன்களை எதிர்பார்க்கலாம். நல்ல மாற்றங்கள் உண்டாகும். பாதிப்புகள் இருக்காது.


to read more go here

http://tamil.webdunia.com/religion/astrology/quesionanswer/0901/22/1090122047_3.htm

Anonymous said...

பிரபாகரனுக்கு கண்டம் ஏதும் இல்லை!

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:

தமிழ் வார இதழ் ஒன்றில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு ஜனவரி 22ஆம் தேதி அவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய கண்டம் உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இது உலகத் தமிழர்களிடையே பதற்றத்தையும், பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளது.

ஜோதிடப்படி அவருக்கு உண்மையாகவே இன்று (ஜனவரி 22) கண்டம் உள்ளதா? என்ன அடிப்பையில் உள்ளது என்பதை விளக்கிக் கூறுங்களேன்?
http://tamil.webdunia.com/religion/astrology/quesionanswer/0901/22/1090122047_3.htm

அற்புதன் said...

தமிழ்நதி உங்கள் கேள்விகள், ஆதங்கம், விருப்பு நியாயமானது.
ஆனால் புலிகள்/தலைவர் என்ன செய்யப்போகிறார்கள் என்று ஆரூடம் பார்ப்பதிலும், இன்று நாம் எமது மக்களின் விடுதலைக்காக என்ன செய்தோம் என்று ஒவ்வொரு தமிழனும் கேட்பது அவசியம்.எங்களுக்கான பணிகள் எதனையும் செய்யாமால் புலிகள் அதிசயங்களை நிகழ்த்தி எங்களை மீட்பார்கள் என்னும் பார்வையாளர் மன நிலை தவறானது.சுமக்க முடியாத பாரத்தை அவர்கள் சுமந்து கொண்டிருகிறார்கள்.மேலும் பாரத்தை அவர்கள் மேல் ஏற்றாமால் எல்லோரும் கொஞ்சம் ,கொஞ்சம் சுமந்தால் விடுதலை என்பது விரைவாகும்.
இன்று நாங்கள் செய்ய வேண்டியது எமது எழுத்தால் எமது மக்களின் துயரை முழுத் தமிழகமும்,உலகமும் அறியும் வண்ணம் செய்வது.பல நாடுகளில் விடுதலை என்பதும் அங்கீகாராம் என்பதும் மக்களின் பெரும் துயரில் இருந்தே பிறந்தது.எமது மக்களின் துயரை இந்த உலகத்துக்குச் சொல்லக் கூடியவர்கள் நாங்கள் மட்டுமே.உலகம் எமது துயரை எவ்வளவு விரைவாக அறிகிறதோ அவ்வளவு விரைவாக எமக்கான அங்கீகாராமும் விடுதலையும் கிடைக்கும்.இது எங்கள் கையிலையே தங்கி உள்ளது,புலிகளின் கையில் அல்ல.

Anonymous said...

தமிழ் உணர்வாளர்கள் எல்லோர் மனதிலும் உள்ள கேள்விகள்...

பிரபாவை பிடித்தால் போராட்டம் ஓய்ந்து விடுமா?
மாவிரர்களின் தியாகம் ஆயிரமாயிரம் பிரபாக்களை உருவாக்கும்.

தமிழ்நதி said...

அன்பு நண்பர்களுக்கு,

உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இந்த இருண்ட காலத்தில் நாம் நம்பிக்கையோடு இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பதிவு.

தவிர,நமக்கு முன்னால் இப்போது இருக்கும் ஒரு பாரிய கடமை என்னவென்றால் நாம் எல்லோரும் தமிழர்களாக ஒன்றிணைவதுதான். கருத்து வேறுபாடுகளை மறந்து, அங்கே துடித்துக்கொண்டிருக்கும் அந்த மக்களைக் காப்பாற்ற நம்மாலானதைச் செய்யவேண்டும். இங்கே இணையத்தில் பார்க்கக் கிடைக்கிற வீடியோப் பதிவுகளைப் பார்க்கும்போது 'ஐயோ ஐயோ' என்று மனம் பதைக்கிறது. அந்தக் கண்ணீருக்கெல்லாம் பதில் என்ன? மெளனந்தானா? நாம் உரத்துப் பேசவேண்டிய காலம் இது. உலகமயமாக்கல் நம்மைச் சுயநலமிகளாக நுகர்வுக் கலாச்சாரத்தை நோக்கித் தள்ளியிருக்கிறது. இத்தனை உயிர்கள் துடித்துக்கொண்டிருக்கும்போதாவது நமது சுயநலத்தை மூட்டை கட்டிவைத்துவிட்டு 'நாமும் ஏதாவது செய்தாக வேண்டும்'என்ற மனோநிலைக்கு நாமெல்லோரும் வரவேண்டும். அநீதி வெல்ல நாம் அனுமதித்தால் மனிதர்கள் என்ற பெயரில் வாழ்ந்துதான் என்ன...? ஒரு கூட்டத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். மிகுதி வந்து பேசுகிறேன்.

ஸ்வாதி said...

////அடித்துப் பிடிக்க எங்களால் முடியும்;

அதை வரலாறு நிறையத் தடவை பார்த்துவிட்டது.

அங்கீகாரம் வேண்டும்’என்பது அவரது இன்றைய நிலைப்பாடாக இருக்கலாம். //

நிச்சயமாக.

போர் நடக்கிற வரைக்கும் நாம் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிலும் நம்மாலும் ஏதாவது செய்ய முடியுமா , எமது அடுத்த முயற்சி என்னவாக இருந்தால் எமது மக்களை இன்னல்களிலிருந்து காப்பாற்றலாம் என்ற வழியைக் கண்டறிய வேண்டியதும் எமது கடமை!!

King... said...

இயல்பாய் இருக்க முடியவில்லை:(

ஏதாவது செய்தே ஆகவேண்டும்...!

RAGUNATHAN said...

புதினம்.காம்: இலங்கை மற்றும் அனைத்துலக நிலைமை குறித்த விடுதலைப் புலிகளின் சிந்தனை, பார்வை தற்போது என்ன என்று நீங்கள் கருதுகின்றீர்கள்?

பத்திரிகையாளர் அனிதா பிரதாப் ஜூலை 2008- ல் அளித்த பதில்

//உங்களுக்கே தெரியும் விடுதலைப் புலிகளின் சிந்தனை என்று ஒன்றும் இல்லை. பிரபாகரனின் சிந்தனை மட்டும் தான். அதுவே விடுதலைப் புலிகளின் சிந்தனை.

இன்றைய உலகில் முழுமையான ஒழுக்கத்துடனும் தனது தலைமைக்கு விசுவாசமாகவும் ஒரு விடுதலை அமைப்பு உள்ளதென்றால் அது விடுதலைப் புலிகள் இயக்கம் ஒன்றேதான்.

பிரபாகரன் திறமையான இராணுவ திட்டவகுப்பாளர் மட்டுமல்ல. அவர் அரசியலிலும் நுணுக்கமாக ஆராய்ந்து முடிவெடுக்க வல்லவர். அனைத்துலக அரசியல் பற்றிய ஆழமான அறிவு உடையவர். முக்கியமாக, மாறுகின்ற அனைத்துலகத்தின் போக்கு தமிழர்களின் போராட்டத்தை எவ்வாறு நேரடியாக பாதிக்கும் என்பதை புரிந்துகொள்வது தொடர்பில் பிரபாகரனுக்கு தீர்க்கமான ஞானம் உண்டு.

இதனை நாம் முன்னரும் கூறியுள்ளேன். எண்பதுகளில் விடுதலைப் புலிகளும் ஏனைய அமைப்புக்களும் இந்தியாவின் உயர் உதவிகளைப் பெற்றுவந்தன.

"இப்போது நாம் இந்தியாவின் உதவியைப் பெற்றுவந்தாலும் இதே இந்தியாவை எதிர்த்துப் போராடவேண்டிய ஒரு காலம் எமக்கு வரும்" - என்று பிரபாகரன் என்னிடம் கூறியிருந்தார்.

இந்தப் பதிலால் திகைத்துப்போன நான் "ஏன்" என்று அவரிடம் கேட்டபோது -

"சுதந்திர தமிழீழம் அமைவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது. அப்படி அமைந்தால், அது இந்தியாவில் உள்ள தமிழ்மக்கள் பிரிந்து செல்வதை ஊக்குவிக்கும் காரணியாக அமைந்துவிடும் என்ற அச்சம் இந்திய அரசுக்கு உண்டு." என்றார்.

அமெரிக்காவின் மனநிலை குறித்தும் பிரபாகரனுக்கு நன்கு தெரியும்.

பல நாடுகளை அனுபவித்துக்கொண்டிருக்கும் அமெரிக்கா, இலங்கையிலும் அதனைத்தான் செய்கின்றது.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் பெரும் அழிவுடன் கூடிய பாரிய போரை உலகளாவிய ரீதியில் புஷ் அரசு ஆரம்பித்திருந்தது. புஷ்ஷினது இந்தப் போர் உள்ளவரை தனது இலக்கை நோக்கிய பாதையில் எதையும் அடையமுடியாது என்று பிரபாகரன் உணர்ந்துகொண்டார்.

புஷ்ஷினது ஆட்சி முடியும்வரை விடுதலைப் புலிகள் அமைதியாக காத்திருப்பார்கள் என்று 2001 இலேயே நான் எதிர்வு கூறியிருந்தேன். எனது கூற்றுப் பலித்திருக்கின்றது. 2009 ஜனவரியுடன் புஷ் ஆட்சி இழக்கின்றார். அடுத்து, ஒபாமா ஆட்சிக்கு வந்தால், வித்தியாசமான அமெரிக்காவையே நாம் பார்ககமுடியும்.

உலகளாவிய ரீதியில்- கடந்த எட்டு வருடங்களில்- அமெரிக்கா பலமிழந்துள்ளதையும் அதன் பிரபலம் அற்றுப்போயுள்ள நிலைமையையும் நாம் தெளிவாக பார்க்கின்றோம். ஆதிக்க நிலையிலிருந்த அமெரிக்க வல்லரசின் போக்கு இனிவரும் ஆண்டுகளில் பலமிழந்து காணப்படும்.

வர்த்தக நெருக்கடிகள், ஆப்கானிலும் ஈராக்கிலும் மேற்கொண்ட குழப்பான போர் நடவடிக்கை, மனதளவில் சோர்ந்துபோயுள்ள நாட்டுமக்கள் போன்ற விடயங்களினால் அமெரிக்கா பெரிய சிக்கலை எதிர்நோக்கியிருக்கின்றது. அத்துடன், மீண்டும் எழுச்சி கொள்ளும் ரஷ்யா, புத்தெழுச்சி கொள்ளும் சீனா, இந்தியா, பிறேசில் ஆகியவையும் அமெரிக்காவுக்குப் பெரும் சவால்களாக அமைந்துள்ளன.

21 ஆம் நூற்றாண்டில் வித்தியாசமான உலகத்தை பார்க்கப்போகின்றோம் என்பதையே இவை கோடி காட்டுகின்றன.

இந்த உலக அரசியல் மாற்றங்களை மதிப்பீடு செய்து, அடுத்த ஆண்டுதான் பிரபாகரன் தனது நகர்வினை மேற்கொள்வார் என்று நான் நினைக்கிறேன்.//

http://www.puthinam.com/full.php?2b1Voqe0decYo0ecAA4o3b4A6DB4d3f1e3cc2AmI3d434OO3a030Mt3e

Anonymous said...

தமிழ் தேசியன் சொல்லிய பல கருத்துக்கள் உண்மைதான்.அவருடைய சில வார்த்தைப் பிரயோகங்களையும் சொல்லும்பாணியையும் நான் முழுவதும் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் பல விவாதங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவையே .
ஆனால் நாங்கள் அதாவது தமிழ் உணர்வாளர்கள் மிகைப்படித்திக் கருத்து சொல்லக்கூடாது.
தமிழ் அம்பது ஆயிரம் பழமை உள்ளது என்று சொல்வது மொழியியல் ரீதியில் ஏற்றுக் கொள்ளக்கூடியதா..இந்தியாவின் மற்ற மொழிகளோடு ஒப்பிட்டுக் கொள்ளும்போது தமிழ் பழமை மிக்கதுதான்.மூவாயிரம் ஆண்டுக்குமேல் பழமை உள்ளது என்பதை விஞ்ஞான மொழியியல் ரீதியில் ஒப்புக்கொள்வார்கள்.
சில சமயங்களில் நாங்கள் மிகைப்படித்தி சில கருத்துக்களை சொல்வதால் எமது சரியான கருத்துக்களையும் பலர் கவனத்தில் எடுப்பதில்லை .
அற்புதன் சொல்வது சரிதான்.விடுதலை தனியே புலிகளின் இராணுவ வெற்றியின் மீது மட்டும் தங்கி உள்ளதல்ல .தமிழ் மக்கள், அவர்கள் தமிழ் நாட்டுத் தமிழர்கள் என்றாலும் சரி,புலம்பெயன்றுந்து வாழும் ஈழத்தமிழர்கள் என்றாலும் சரி நாங்களும் பல கடமைகளைச் செய்ய வேண்டும்
சிங்கள அரசு செய்யும் கொடுமைகளை தகுந்த ஆதாரங்களோடு உலக மக்களுக்கு கொண்டு சென்று அவர்கள் ஆதரவை ஈழத்தமிழர் பக்கம் கொண்டு வர நாங்கள் முயல வேண்டும். அத்துடன் இலங்கையின் அரசியல் வரலாறு பற்றியும் தமிழர்களின் போராட்டம் ஏன் நியாயம் ஆனது என்பதையும் நாங்கள் அவர்கள்ளுக்கு விளக்க வேண்டும்.
உலக அமைப்புகளான ஐக்கிய நாடுகள் சபை ,மனித உரிமை சபைகள் போன்றவற்றுக்கும் நாம் கடிதங்கள் எழுத வேண்டும்.
ஈமெயில் அனுப்புவது அவ்வளவு பலனைத் தராது. தாளில் கடிதங்கள் எழுதி அனுப்ப வேண்டும்.
விடுதலைப் போராட்டம் என்பது கிரிக்கெட் மேட்ச் அல்ல..
விடுதலை சும்மா கிடைத்து விடாது.
அதற்கு ரத்தம்,உயிர்,உழைப்பு விடாமுயற்சி,,கொள்கைப்பற்று,தியாகம் மனஉறுதி என்று பல தேவை. .

Anonymous said...

hello thamizhthesian.. hatz off.. superbly written..:)

Anonymous said...

தமிழ் தேசியனின் பல கருத்துக்கள் மிகவும் உண்மை அய்நூறு ஆண்டு அடிமை வாழ்வு தமிழனை அடிமை மனப்பான்மையில் ஊற வைத்து விட்டது.டெல்லிக்கு காவடி தூக்குவதில்தான் அவர்கள் தங்கள் சக்தியைச் செலவழிக்கிறார்கள் .
பதினாலு மில்லியன் சிங்களவர்கள் எழுபத்தி ஐந்து மில்லியன் தமிழர்களை தூசியிலும் கேவலமாக நடத்துகிறார்கள். ஈழத்தமிழர்களை மட்டுமல்ல இந்தியத்தமிழர்கள் பற்றியும் அவர்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள் . .அதற்கு காரணம் எமது ஒற்றுமை இன்மையும் அடிமை மனப்பான்மையும் தான்.
இன்னொரு விடயம்.,சிங்களவர்கள் ஆரிய இனம் என்பது பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கிய ஒரு புனைகதைதான்.அவர்கள் மொழியில் புத்த சமயத்தின் தொடர்பு காரணமாக நிறைய பாளி மொழியின் ஆதிக்கம் உண்டு என்பது உண்மைதான்.அது மத சம்பந்தமாக வந்த தொடர்பு. மகாவம்ச நூலும் பாளி மொழியில் எழுதப்பட்டதுதான்.ஆனால் சாதாரண சிங்கள மக்கள் ஆரம்பத்தில் திராவிட இனமாகத்தான் இருந்தார்கள்.சிங்கள எழுத்து மொழியில் பாளி சமஸ்கிரிதம் ஆகிய மொழிகளின் ஆதிக்கம் இருந்தாலும் சிங்களப் பேச்சு மொழியில் தமிழின் ஆதிக்கம் நிறைய உள்ளது.பல தமிழ் சொற்கள் சிங்களப் பேச்சு மொழியில் பாவிக்கப் படுகின்றன.
அத்துடன் அரசாட்சி காலத்தில் பாண்டிய சேர நாடுகளில் இருந்து பலர் சிங்களப் பகுதிகளுக்குச் சென்று பின்பு சிங்களவர்களாகவே மாறி விட்டார்கள். பண்டாரநாயக்கவின் மூதாதையர் நல்லபெருமாள் என்ற தமிழர்தான்..
நான் சமீபத்தில் நீர்கொழும்பைச் சேர்ந்த ஒரு சிங்கள இளைஞரை சந்தித்தேன்.தன்னை முழுச் சிங்களவராக அவர் காட்டிக் கொண்டாலும் தனது பாட்டிக்கு தமிழ் நாக்கு தெரியும் என்றும் எனது அம்மா அவரைச் சந்தித்தால் தமிழில் பேசலாம் என்றும் சொன்னார்.அது மட்டுமில்லை தனது பாட்டி இப்போதும் விகடன் பத்திரிக்கை வாசிப்பாதாகவும் சிவாஜியின் படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும் என்றும் சொன்னார்.
நீர்கொலும்பில் பலர் இப்படி இனம் மாறிய தமிழர்கள் தான். எதிர் காலத்தில் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு திரு கோணமலை வன்னி மன்னார் போன்ற பகுதிகளில் உள்ள தமிழர்களையும் இனம் மாற்றத்தான் சிங்கள அரசு திட்டம் இடுகிறது.அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால் அவர்களை பயங்கரவாதிகள் என்று கொன்றுவிடுவது அல்லது நாட்டை விட்டே துரத்துவது என்பதுதான் சிங்கள அரசின் சதித்திட்டம்..
என்ன கொடுமை என்றால் இந்த முன்னாள் திராவிடர்களும் முன்னாள் தமிழர்களும்தான் மிக மோசமான சிங்கள இனத் துவேஷிகளாக மாறி உள்ளார்கள்.

சுகுணாதிவாகர் said...

((-

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஒரு மகத்தான, எதிர்பாராத திருப்பத்திற்காகக் காத்திருக்கிறோம்”

நாங்களும்தான், ப்ரார்த்தனைகளின் துணைகொண்டு.

Anonymous said...

மிழ் மொழியின் வரலாறு 50,000 ஆண்டுகளுக்கு மேலனாதாக இருக்க வெறும் 1500 ஆக குறைத்தது எந்த மயி..ரான்?

தமிழ் மொழிக்கு 50,000 வய்தா? ஏதாச்சும் கழண்டு போசா? சரி 50,000 வருசம் சரி ஆதாரம் கொடுப்பா!

உடனே குமரி கண்டம்ன்னு பொய் வேண்டாம்.. குமரி கண்டத்துக்கும் ஆதார்ம இல்லை..

2)கட்ச தீவை சிங்கள மாமாவுக்கு கொடுத்தவன் எவன்?

எங்க நாடு நாங்க என்ன வேண்டுமானலும் செய்வோம்..பொத்திகிட்டு போடா பொறம்போக்கு.

3)தனிநாடு என்று ஈழத்து இளைஞர்களை அழைத்து ராணுவபயிற்சிகொடுத்து மாநில அரசு தீர்வை வெறும் 24 பக்கங்களில் கொடுத்தவன் எவன்?

உங்களை எவண்டா ராணுவ பயிற்ச்சிக்கு வர சொன்னான். இந்தியா ஆதரவு கொடுன்னு கேட்க்க தெரியுதுல்ல அப்ப வாய் கிழிய கத்திட்டு இப்ப என்ன சவுடால்?

4)தமிழர் சார்பாக கையெழுத்திட நீங்கள் யார்?

ஆமா நீர் தான் அக்மோர் தமிழன் .. அடிபட்ட ஆள கேளுங்கண்ணேஎ

5)மலையக தமிழர்கள் நாடற்றோர் ஆக காரணமான பண்டா- சாஸ்திரி ஓப்பந்தம் யார் போட்டது?
வெள்ளாள யாழ்பான தமிழர்களை கேள் சொல்வார்கள்

6)வளம் கொழிக்கும் நாடான 'இலங்கைக்கு' செல்ல தமிழ்நாட்டு தமிழர் முண்டியடிகிறார்களா?பிறகு ஏன் சென்னையில் மட்டும் 2வது துணை தூதரகம்?

உங்களாளுங்கதாண்டா இங்க வராங்க. இதோ இந்த தமிழ்நதி அக்கா எல்லாம் போய் வர வேண்டாமா?

7)கன்னடனுக்கும் தெலுங்கனுக்கும் மலையாளிக்கும் தமிழனை தாக்கும் போது வராத இந்திய தேசிய உணர்வு உனக்கு மட்டும் என்ன மயி..த்துகு பொங்கி பிளிறுகிறது?

உனக்கு கன்னடம் தெலுங்கு எல்லாம் தெரியுமாடா..தெரின்சா பேசு இல்லாட்டி பொத்திகிட்டு போ

8)காலங்காலமாக சோழ பாண்டியர் காலம் தொட்டு ஈழதமிழர்களுக்கு இன்னல் நேரும் போதெல்லாம் தமிழக தமிழர் இலங்கை சென்று சிங்களவனை சுளுக்கு எடுத்திருக்கிறார்கள்..அந்த வகையில் 1990 களில் 5,000 த்திற்கும் மேற்பட்டவரை திரட்டி ஈழ தமிழரை காக்க சென்ற நெடுமாறனை கைது செய்தது எந்த நாட்டு கடற்படை?

நெடுமாறன் -- 5000 பேர் அயோ அயோ வெளியே சொல்லாதா எவனாவது உன்னை பைத்தியம்ம்னு சொல்ல போறான்

9)நீ சொல்லாவிட்டாலும் சிங்குடைய மயி..ரும் தமிழனுடைய உயிரும் ஒன்றா?

ஆமாண்டா வெண்ணை