4.28.2009

கேக்கிறவன் கேனையன்னா எருதுகூட ஏரோப்ளேன் ஓட்டும்கிறது இதுதானா?


தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க அரசியல்வாதிகள் காட்டும் செப்படிவித்தைகள் தாங்கமுடியவில்லை. கரணம் அடிக்கிறார்கள். கயிற்றில் நடக்கிறார்கள். நெருப்பு வளையத்துக்குள் பாய்கிறார்கள். சித்திரக்குள்ளர்களாகி சிரிப்பு மூட்டுகிறார்கள். காற்றில் கைவீசி பூ வரவழைத்துக் கொடுக்கிறார்கள். கட்டப்பொம்மனாகி மீசை துடிக்கப் பேசுகிறார்கள். ஜான்சிராணியாகி வாளை வீசுகிறார்கள். பவிலியனில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் வளர்ந்த குழந்தைகள் கைதட்டிக் குலுங்கிக் குலுங்கிச் சிரிப்பதறியாமல் நாடகங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

பார்வையாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த உச்சக்கட்ட நிகழ்ச்சி நேற்று அரங்கேறி முடிந்தது. ‘உலகத் தமிழர்களின் உன்னதத் தலைவர்’கலைஞர் கருணாநிதி அவர்கள், இலங்கைத் தமிழருக்காக ‘உண்ணாவிரதம்’ இருந்ததுதான் கலையிரவிற்கே மகுடம் வைத்த நிகழ்ச்சி. ‘ஓட்டுக்காக உடம்பிலிருக்கும் கடைசித் துணிவரை கழற்றிப்போடுவதென்று சங்கற்பம் செய்துவிட்டார்களா என்ன!’ என்று வியக்கத் தோன்றுகிறது.

ஈழத்தில் எத்தனை எத்தனை குழந்தைகள் சிதறு தேங்காய்போல தலைசிதறிச் செத்தார்கள். கர்ப்பத்தினுள்ளிருந்த குழந்தைகூட காயப்பட்டது. பசியில் சிறிது சிறிதாக மாண்டுமடிந்தவர்கள் எத்தனை பேர். எலும்பும் தசையும் குருதியுமாய் பிரிந்து கூழாகித் தரையோடு தரையாக வழிந்தோடிய உடல்கள் எத்தனை. ‘ஐயோ ஐயோ’வென்று உயிர்பதறி காடுகளில் அலைந்து பித்தாகிப் பிதற்றியழுதன எமது சொந்தங்கள். கட்டிடங்களின் இடிபாடுகளுள் கிடந்து ‘காப்பாற்றுங்கள்’என்று கத்தி கடைசிநம்பிக்கையும் வற்றி வான்பார்த்து உறைந்த கண்கள் எத்தனை.. சொல்லொணா, எழுதவொண்ணாக் கொடுமைகளை எங்கள் சகோதரர்கள் அனுபவித்தபோதெல்லாம், கண்ணப்ப நாயனார் சிவபெருமானைக் கட்டிக்கொண்டிருந்ததைப் போல இரவும் பகலும் நாற்காலியைக் இறுக்கிக் கட்டிப்பிடித்துக்கொண்டிருந்தவர்கள் இன்றைக்கு உண்ணாவிரதம் இருக்கிறார்களாம்! கொன்று பாடையேற்றிவிட்டு ஊர்வலத்தில் மலர்தூவுவதுபோலிருக்கிறது இந்தப் படுபாதகச் செயல்!

இன்று தினந்தந்தியில் வெளியாகியிருக்கும் தலைப்புச் செய்தி இதுதான்: “மத்திய அரசின் கோரிக்கையை ராஜபக்சே ஏற்றார் . கருணாநிதி உண்ணாவிரதம் வெற்றி போரை நிறுத்திவிட்டதாக இலங்கை அறிவிப்பு”

போதாக்குறைக்கு, ‘இலங்கையைப் பணியவைத்த உண்ணாவிரதம்’என்ற தலைப்புடன் கலைஞர் களைத்துப்போய் படுத்திருப்பதான ‘பரிதாபகரமான’புகைப்படங்கள் ஒரு முழுப்பக்கத்தில் வெளியாகியிருந்தன.

இந்த நூற்றாண்டின் தலைசிறந்த நாடகமாக இது அறிவிக்கப்படவேண்டும். இலங்கை அரசு - இந்திய மத்திய அரசு – தமிழக மாநில அரசு என்ற மூன்று அரசுகள் இணைந்து நடத்திய நாடகம் நன்றாகத்தானிருக்கிறது. ‘நான் அடிக்கிறது போல அடிக்கிறேன்.. நீ ங்கா ங்கா என்று சத்தமிட்டு அழு’என்று சொல்லிவைத்து எல்லாம் நடப்பதை அறிந்தவர் அறிவர். இந்திய அரசு ஆயுதமும் ஆட்படையும் கொடுத்து இலங்கையில் போரை நடத்துகிறது. அதே இந்திய அரசு போரை நிறுத்தச் சொல்லி ராஜபக்சேயைக் கேட்பதற்காக கொழும்புக்குத் தன் பிரதிநிதிகளை அனுப்புகிறது. ‘நான் ஒரு விசயம் தீர்மானிச்சுட்டா அப்புறம் என் பேச்சையே நான் கேக்க மாட்டேன்’என்று போக்கிரியில் விஜய் வசனம் பேசியது நினைவில் வந்து தொலைத்தது. தானே நடத்தும் போரை நிறுத்த, தானே கொழும்புக்குப் போகும் வேடிக்கை வேறெங்கும் நடப்பதற்குச் சாத்தியமில்லை. இதைத்தான் ‘கேக்கிறவன் கேனையனாக இருந்தால் எருது ஏரோப்ளேன் ஓட்டுமாம்’என்று சொல்வார்கள். மக்களெல்லாம் முட்டாள்கள், வடிகட்டிய அசடுகள், மகா மறதிக்காரர்கள் என்ற நம்பிக்கையில்லாமலா இதுவெல்லாம் நடக்கிறது?

தேர்தல் குறிகாட்டி அ.தி.மு.க.பக்கம் திரும்பவாரம்பித்துவிட்டது என்ற பயத்தின் விளைவே உண்ணாவிரதம் என்ற உச்சக்கட்டக் காட்சிக்குக் கலைஞரை உந்தித்தள்ளியது. கடைசி ஆட்டத்தையும் ஆடிப்பார்த்தாகிவிட்டது. (இவர்களைச் சொல்லமுடியாது. இதற்கு மேல்கூட நகைச்சுவைக் காட்சிகள் இருக்கக்கூடும்.) மாநில அரசாங்கத்தின் முண்டுகொடுப்பு இல்லாமல் போனால் மத்திய அரசு கவலைக்கிடமாகிவிடும் என்பது யாவரும் அறிந்ததே. இவர் அவர்களைக் கிண்டினார். ‘அன்னை’சோனியாவும், மதிப்பிற்குரிய மன்மோகன்சிங்கும் ராஜபக்சேவைக் கூப்பிட்டு ‘நிறுத்துகிற மாதிரி நடி. தேர்தலுக்குப் பிறகு அடி’என்றார்கள். ‘அப்படியே ஆகட்டும். கனரக ஆயுதங்களால் அடிக்கவில்லை. சுட்டே கொன்றுவிடுகிறேன்’என்றிருக்கிறார் ராஜபக்சே. அதாவது, ‘கத்தியால் குத்தினால்தானே காயம் வரும்; நஞ்சுவைத்துக் கொல்கிறேன்’ என்று ஒப்புதல் அளித்திருக்கிறார் இலங்கையின் அதிமேன்மை பொருந்திய ஜனாதிபதி அவர்கள். (துப்பினால் எச்சில் வீணாகிவிடும்)

நேற்று ‘கலைஞர்’செய்தியில் அருமையான காட்சிகளைக் காணமுடிந்தது. பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்துவைக்கிறார் அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, கவிஞர் கனிமொழியும், தளபதி ஸ்டாலினும் கவலையோடு தந்தையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ராஜாத்தி அம்மாளும் தயாளு அம்மாளும் அருகிலிருக்கிறார்கள். கலாநிதி, தயாநிதி மாறன்கள் ‘இந்த மட்டில் பிழைத்தீர்களே’என்று ஆற்றாமை பொங்க அருகில் நிற்கிறார்கள். இயக்குநர் பாலச்சந்தர், கவிஞர் வாலி கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள். ‘எங்க குல சாமி நீங்க’என்று வழக்கம்போல வைரமுத்து வந்து நிற்கிறார். சுப.வீரபாண்டியன் (நீங்களுமா…?) ‘சாதித்துவிட்டீர்கள் ஐயா’என்பதான புன்னகையோடு ஓரத்தில் நிற்கிறார். ‘எங்களையெல்லாம் பார்த்தால் அவ்வளவு கேனையன்களாகவா தெரிகிறது?’என்று கேட்கவேண்டிய மக்களில் ஒரு பகுதி கலைஞரைப் பார்க்க அலைமோதுகிறது.

ஆக, கலைஞரின் உண்ணாவிரதத்தினால் இலங்கையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றொரு பிம்பத்தை மக்கள் மனதில் ஓரளவிற்கேனும் கட்டமைப்பதில் வெற்றிபெற்றிருக்கிறார்கள். ஆட்சியிலிருப்பவரின் அரைநாள் பட்டினிக்கே இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படுத்துமளவிற்கு வலிமை இருக்கிறதென்றால் அதை ஏன் முன்னமே செய்யவில்லை? ஆயிரக்கணக்கான மக்கள் செத்துமடிந்தபின், இலட்சக்கணக்கானவர்கள் கண்ணீர் சிந்திச் சாபமிட்டதன் பின் உண்ணாவிரதம் இருக்கவேண்டியதன் அவசியந்தான் என்ன? அப்படியென்றால் ஈழத்தமிழர்களின் இனவழிப்பில் கலைஞருக்கும் பங்கிருக்கிறது. கொலைகளைத் தடுக்கும் அதிகாரம் பெற்றிருந்தும், கைகட்டி, கால்பிடித்துப் பார்த்திருப்பதும் கொலைசெய்தலுக்கு ஈடான குற்றந்தான்.

அமெரிக்கா மறைமுகமாக அச்சுறுத்திவிட்டது. ஐரோப்பிய நாடுகள் இனவழிப்பைக் கண்டித்து தமது பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பவாரம்பித்திருக்கின்றன. மத்தியில் அரசு சரிந்துவிடும் என்பதோடு, இலங்கைப் பிரச்சனையில் அமெரிக்கா மூக்கை நுழைத்தால் இந்தியாவின் இறைமை என்னாவது? என்ற கிலி இந்தியாவைச் சூழவாரம்பித்திருக்கிறது. ‘இந்த அடி அடிக்கிறான் என்னய்யா பாத்துக்கிட்டிருக்கே’என்று அமெரிக்கா புருவம் தூக்குவது இந்தியாவின் இந்துசமுத்திரப் பொலிஸ்காரன் சீருடைக்கு ஏற்புடையதன்று.

‘கறையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்ததாம்’, ‘குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதை’போன்ற பழமொழிகளை இங்கே நினைவுகூர்தல் நன்று.
பழ.நெடுமாறன் ஐயா அவர்களின் தலைமையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் பல்வேறு வகையான போராட்டங்களை ஈழத்தில் போரை நிறுத்தும்படியாகக் கேட்டு நடத்திவருகிறது. சூழ்ச்சிக்கு அஞ்சி கட்சிமாறிய வைக்கோ அன்றிலிருந்து இன்றுவரை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக, ஈழத்திற்கு ஆதரவாகவே பேசிவருகிறார். மத்தியும் மாநிலமும் ஆட்டம் காணும் என்றறிந்ததும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்ட மருத்துவர் ராமதாஸ் சுயநலத்துடன்கூடிய பொதுநலவாதியாக மாறியிருப்பதும் மகிழ்ச்சியே. ஓட்டுக்காக என்றாலும், ‘சாமியா பேசுவது’என்று யாவரும் வியந்து பார்க்கும்படியாக ஈழ ஆதரவுக் கருத்துக்களை நாளாந்தம் உதிர்த்துக்கொண்டிருக்கும் ஜெயலலிதா அவர்களின் குரலுக்கு இன்றைய சூழலில் மரியாதை இருக்கவே இருக்கிறது. தன்னுடலில் மூட்டிய தீயால் இலட்சக்கணக்கான தமிழகத்தாரின் இதயங்களில் விழிப்பு என்ற சுடரை ஏற்றிவைத்துப்போன முத்துக்குமார், அவன் வழியில் தம்முயிரை ஈகம் செய்த ஏனையோர், ‘எங்கள் இரத்தமய்யா… எங்கள் இரத்தம்…’ என்று ஊர்வலங்களையும் போராட்டங்களையும் உண்ணாவிரதங்களையும் நடத்திக்கொண்டிருக்கும் தமிழக சகோதரர்கள், உண்ணாவிரதம் இருக்க அரசு இடமளிக்காதபோது அலைந்து திரிந்து, ‘தாயகத்தில்’பதினொரு நாட்கள் பசித்துக் கிடந்த பேராசிரியர் சரஸ்வதி உள்ளிட்ட மனிதாபிமானமுள்ள பெண்கள், எப்போதும் ஈழத்தமிழர்களுக்காகக் குரல்கொடுக்கும் கவிஞர்கள் தாமரை, அறிவுமதி, சிறைசென்ற சீமான், அமீர், கொளத்தூர் மணி, சம்பத், விருதைத் திருப்பியளித்த பாரதிராஜா, திரைத்துறையினர், பிரான்ஸ், கனடா, இலண்டன் எனத் தமிழர்கள் வாழும் நாடுகளிலெல்லாம் ‘எங்கள் சொந்தங்களைக் காப்பாற்றுங்கள்’என்று அவ்வந் நாடுகளின் ஆட்சியலுவலகங்களின் முன் தொடர்போராட்டங்களை நடத்திவந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் எல்லோருடைய உணர்வுகளின் மீதும், தியாகங்களின் மீதும் மலத்தில் தோய்த்தெடுத்த செருப்பால் அடித்தது போலிருக்கிறது ‘கலைஞரின் உண்ணாவிரதத்தால் இலங்கையில் போர்நிறுத்தம் அறிவிப்பு’என்ற செய்தி.

மேலே பட்டியலிடப்பட்டிருப்பவர்கள் ஒன்றுமே செய்யவில்லை; கலைஞரின் அரைநாள் பட்டினிதான் அவ்வளவு பெரிய விடயத்தைச் சாதித்திருக்கிறது என்பது எத்தனை பெரிய கயமைத்தனமானது. இப்படியெல்லாம் நடக்கக்கூடுமெனில், எருது ஏரோப்ளேன் ஓட்டுவதொன்றும் ஆச்சரியமில்லை.

வெயிலைவிடக் கொடுமையாக எரிக்கிறது பிணங்களின் மீது அரசியல் செய்பவர்களின் வார்த்தைகள். ‘மக்கள் இனியும் முட்டாள்கள் இல்லை’என்பதைத் தேர்தல்முடிவுகள்தான் தெளிவுபடுத்தவேண்டும். எல்லா அற்பத்தனங்களையும், கயமைகளையும், தகிடுதத்தங்களையும் பார்த்துக்கொண்டிருக்கும் வரலாறு பாடம் கற்பிக்கிறதோ இல்லையோ, மத்திய, மாநில அரசுகளுக்கு ராஜபக்சே பாடம் கற்பிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.


16 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தன்னை நம்பியவர்களை வைத்து ஆடும் சூதாட்டம்...

Anonymous said...

கனிமொழி பங்கு பெறும் நிகழ்ச்சிகளுக்கு வலிந்துபோய் பக்கத்தில் நின்று உரிமையுடன் பேசுவதாக பாவ்லா காட்டும் நீங்கள் இதனை ஏன் கனிமொழியிடம் ஏன் இப்படியெல்லாம் மக்களை ஏமாற்றுகிறீர்கள் என்று கேட்பதுதானே?

KarthigaVasudevan said...

//எல்லோருடைய உணர்வுகளின் மீதும், தியாகங்களின் மீதும் மலத்தில் தோய்த்தெடுத்த செருப்பால் அடித்தது போலிருக்கிறது ‘கலைஞரின் உண்ணாவிரதத்தால் இலங்கையில் போர்நிறுத்தம் அறிவிப்பு’என்ற செய்தி. //

//மேலே பட்டியலிடப்பட்டிருப்பவர்கள் ஒன்றுமே செய்யவில்லை; கலைஞரின் அரைநாள் பட்டினிதான் அவ்வளவு பெரிய விடயத்தைச் சாதித்திருக்கிறது என்பது எத்தனை பெரிய கயமைத்தனமானது. //

எஜமான் படத்தில் வில்லன் நெப்போலியன் பேசும் வசனம் .

கல்யாண வீட்ல நான் தான் மாப்பிள்ளையா இருக்கணும் ,சாவு வீட்ல நான் தான் பிணமா இருக்கணும் ,எங்க யாருக்கு முதல் மரியாதை கிடைக்குமோ அங்க அந்த ஆள் நானாத்தான் இருக்கணும் எனும் வீம்பு தெறிக்கும் வசனம் .
நேற்றைய சம்பவத்தை இதனோடு ஒப்பிட்டால் தவறா என்ன? இவர்களுக்கு ஓட்டுப் போட்டு தூக்கி வைத்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட பெருமைக்குரிய திருவாளர் .பொதுஜனங்களுக்கு இப்படி ஆதங்கத்தை வெளிப்படுத்த கொஞ்சம் உரிமை உண்டு தானே?!

தமிழ்நதி said...

முத்துலெட்சுமி,

அரசியல் என்பது சூதாட்டம்தான். சூதாட்டத்திலும் சில விதிமுறைகள் இருக்கும். அதையும் மீறிச்செல்கிறது அரசியல்.

அனானி அறிவுக் கொழுந்தே,

கனிமொழிக்குப் பக்கத்தில் நான் என்றைக்கும் போய் நின்றதில்லை. அதிகாரங்களின் மீது உமக்கு வேண்டுமானால் மயக்கம் இருக்கலாம். எனக்கில்லை. தவிர, கனிமொழியிடம் எனக்கு என்ன காரியம் ஆகவேண்டியிருக்கிறது? தன் கருத்தைத் துணிவாகச் சொல்லமுடியாமல் அனானியாக வந்து பேசும் முதுகெலும்பற்ற உங்களைப் போன்றவர்களுக்குத்தான் அடிமைப்புத்தி அபரிமிதமாக இருக்கும்.

வருகைக்கு நன்றி மிஸஸ் தேவ்,

மக்கள் சொந்தச் செலவில் சூனியம் வைக்கிறார்களா என்ன என்பதை தேர்தல் வெண்திரையில் காண்போம். அப்படிச் செய்யமாட்டார்கள் என்றே நம்புகிறேன்.

soorya said...

தோழி.
உங்கள் சாட்டையைத் தொடர்ந்து சொடுக்குங்கள். கயவர்களின் தோல்கள் உரியட்டும்.
நன்றி.

vanathy said...

என் போன்ற பலரின் உணர்வுகளை எழுத்தில் வடித்ததற்கு நன்றி.
கடந்த இரு நாட்களாக இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு கோபமும் வேதனையுமாக இருக்கிறது.
தனது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு இனத்தின் இன்றைய இக்கட்டான சந்தர்ப்பத்தில் இப்படி ஒரு குரூரமான செயலை அரங்கேற்றுகிறார்களே
'சோனியா ,ராஜபக்சாக்கள் இப்படி நடந்தது எதிர் பார்க்கக் கூடியதுதான்
ஆனால் தமிழ் நாட்டின் முதல்வர்,முதிர்ச்சி வாய்ந்த தலைவர் ,தமிழினத்தலைவர் என்று ஒரு காலத்தில் உலகத் தமிழர்களால் நம்பப்பட்ட ஒருவர் இப்படி நடந்து கொண்டுள்ளார்.
இத்தனைக்கும் முன்பு மாதிரியே இலங்கை ராணுவம் தாக்குதலைத் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தொடர்ந்து தாக்குதலை இன்றும் நடத்திக் கொண்டிருக்கிறது தொடர்ந்தும் பல தமிழர்கள் இறந்து கொண்டு இருக்கிறார்கள்.
இப்படி இருக்கும் போது தமிழ்நாட்டின் வர்த்தக ஊடகங்கள் பிழையான தகவல்களைக் கூறி தமிழ் நாட்டு மக்களை திசை திருப்பிக் கொண்டுள்ளார்கள்.
இந்தியாவின் பங்கு இருப்பதனாலும் தங்கள் பூகோள அரசியல் பொருளாதார நலனுக்காகவும் இலங்கை அரசு செய்யும் அட்டூழியங்களைப் பார்த்து மவுனமாக இருந்த உலக நாடுகள் இப்போது மறை முகமாகவும் வெளிப்படையாகவும் தமது எதிர்ப்பைக் காட்டத் தொடங்கி விட்டன.
காங்கிரஸ் ஆட்சி தேர்தலுக்கு பின்பு இல்லை என்றால் இலங்கை அரசுக்கு இப்போது கிடைக்கும் மிக நெருக்கமான ஆதரவு இந்தியாவிடம் இருந்து கிடைக்காமல் போய் விடும்
திமுக காங்கிரஸ் படு தோல்வி அடையாமல் தடுப்பதற்குத்தான் இந்த நாடகமே ஒழிய ,ஈழத்தமிழரைக் காப்பாற்றுவதற்கு இல்லை.
-வானதி

தமிழ்நதி said...

நன்றி சூரியா, என்னத்தைச் சொடுக்கி என்ன... சும்மா இருக்க முடியாத கொதிப்பில், ஆற்றாமையில் எழுதுவதுதான்.

வானதி,

உங்களுக்கு நிலைமை நன்கு புரிந்தே இருக்கிறது. ஆம் திமுக - காங்கிரஸ் கூட்டணியைக் காப்பாற்றவே இத்தனை நாடகம். குறிப்பிட்ட சில தொலைக்காட்சிகள், பத்திரிகைகள் எவ்வித தர்மமும் இல்லாமல் ஒலி,ஒளிபரப்புகின்றன. செய்யும் தொழிலுக்கு இப்படிக்கூடத் துரோகம் இழைக்கமுடியுமா என்று யோசிப்பதுண்டு. செய்திகள் எல்லாமே உண்மைத்தன்மையோடு இல்லாமல் தாம் சார்ந்தவர்களைத் தூக்கிப்பிடிக்கும் பிரச்சாரத் தொனியிலேயே தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. உண்மை, நடுநிலைமை எல்லாம் சும்மா.

பதி said...

உங்கள் ஆற்றாமையில் நானும் பங்கு கொள்கிறேன்.... ஒரு இனம் அழிந்து கோண்டுள்ளது அதவும் மிக கொடூரமான முறையில்.. அந்த பிணத்தை தின்று செரிக்கும் இவர்களின் ஈன அரசியல் மேல் துப்பினால் அது எச்சிலுக்கும் அவமானம்... இழிபிறவிகள்...

அந்த இழிபிறவிகளுக்காவது வெற்றி பெற்றால் ஏதெனும் ஆதாயம் உள்ளது.. ஆனால், அவர்களின் அல்லக்கைகள் போடும் ஆட்டம் தான் தாங்க முடியவில்லை.. இந்த லட்சனத்தில் இந்த அம்மாவாசையின் மறுநாளை திட்டினால் அப்படி திட்டுபவர்கள் எதிர்காலத்தில் தமிழ், தமிழினம் பற்றி பேசவே கூடாதாம்.. இனத்தை குத்தகைக்கு எடுத்துள்ள ஈனத் தலைமையின் தொண்டரடிப் பொடிகள் பதிவுலகத்தில் கூவுகின்றன...

இந்த ஈனத்தலமையை குறை சொன்னால், உடனே அவர்கள் அம்மாவாசையின் (வார்த்தை உபயம் கவிஞர் தாமரை) ஆதரவாளர்களாம். :(
இந்த கொடுமையை எங்கு போய் சொல்லி அழுவதென்றே தெரியவில்லை...

நான் போஸ்டர் ஒட்டினேன், சுவரில் கட்சி சின்னம் வரைந்தேன், ஓட்டு சிலிப் எழுதிக் கொடுத்தேன், என் தாத்தா காலத்தில் இருந்தே இந்த கட்சிக் கொடி தான் என் குடும்பக் கோவணம் போன்ற விஜயகாந்த் பாணி கட்சிப் பணியாற்றியவர்கள் எல்லாம் தங்களது கட்சிவிசுவாச நிலையை தூக்கிக் கொண்டு ஆடும் ஆட்டத்தின் முன் சங்கராச்சாரி பக்தர்கள் தோற்றார்கள் போங்கள்...

யாருடை பதிவு அல்லது எந்த நிகழ்சிக்கும் எதிர்பதிவு போடக் கூடாதென முடிவைக் கொண்டுள்ள பின்னூட்ட பதிவரான நானே நேற்று இவர்களின் மேல் கடுப்பாகி ஒரு பதிவை போட்டு விட்டு 3 முறை மாற்றினேன்...

முடியலை...

//வரலாறு பாடம் கற்பிக்கிறதோ இல்லையோ, மத்திய, மாநில அரசுகளுக்கு ராஜபக்சே பாடம் கற்பிக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை.//

அந்த நன்னாளுக்காக காத்திருக்கின்றேன்...

Anonymous said...

எங்கள் மக்களின்
அனைத்து இழப்புகளுக்கும
இந்தியஅரசியல்வாதிகள்(கோமாளிகள்) பொறுப்பு .
பலனை மிகமிக விரைவில்
அறுவடை செய்வார்கள்

Anonymous said...

பதி
'யாருடைய பதிவுக்கு பின்னூட்டம் போடக்கூடாது 'என்று நீங்கள் சொல்லி இருக்கறீர்கள்.
நான் இந்த விஷயத்தில் கொஞ்சம் அப்பாவிதான்.
எனக்குத் தோன்றினால் யாருக்கேன்றாலும் பின்னூட்டம் போடுவேன்.
ஆனால் இப்போது சில விஷயங்கள் எனக்கு புரிய ஆரம்பித்திருக்கிறது.
சிலருக்கு பின்னூட்டம் போடுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற உண்மை இப்போதுதான் எனது மரமண்டைக்குபுரிந்து உள்ளது.
சமீபத்தில் கலைஞரின் உண்ணாவிரதத்துக்கு எதிர்க் கருத்து எழுதிய பின்னூட்டத்துக்கு அந்தப் பதிவர்' பிரச்சாரம் செய்கிறீர்களா அப்படி என்றால் நீங்களே ஒரு பதிவைப் போடுங்கள் 'என்று காட்டமாக கூறியிருந்தார்.அதன் பின்பு தான் எனக்கு தெளிவு வந்தது.நான் சும்மா எனது மனதுக்கு தோன்றுவதை நேர்மையாகப் பின்னூட்டம் போடுவது இனிமேல் தவிர்த்துக் கொள்வேன்.
பதிவுலகில் old boy network மாதிரியான விஷயங்களும் உள்ளன
I scratch your back ,you scratch my back மாதிரி

அமிர்தவர்ஷினி அம்மா said...

ennatha solla

asingam

neenga sonnaa maadhiri ivanga meela kaari thuppina kooda echil veena poidum.

பதி said...

//பதி
'யாருடைய பதிவுக்கு பின்னூட்டம் போடக்கூடாது 'என்று நீங்கள் சொல்லி இருக்கறீர்கள்.//

அனானி நண்பரே.. நான் பின்னூட்டமிட வேண்டாமென சொல்லவில்லை..
இன்றைய தேதியில் கொலைஞரின் நாடகங்களை விமர்சிப்பவர்கள் இனிவரும் காலங்களில் தலிழ், தமிழினம் பற்றி பேச தகுதியற்றவர்கள் என பொருள் படக் கூடிய பதிவுகள் நேற்று முதல் உலா வருகின்றன... அதனைத் தான் நான் குறிப்பிட்டேன்..

//எனக்குத் தோன்றினால் யாருக்கேன்றாலும் பின்னூட்டம் போடுவேன்.//

நானும் அப்படியே... என்ன, ஆரம்ப நாட்களில் இருந்து google readerன் உதவியுடன் படிக்கும் சில பதிவுகளுக்கு மட்டும் தவறாது செல்வேன்.. தோன்றினால் பின்னூட்டமிடுவேன்..

நான் குறிப்பிட்டது எதிர்பதிவு போடுதல் பற்றி !!!!!

//உண்ணாவிரதத்துக்கு எதிர்க் கருத்து எழுதிய பின்னூட்டத்துக்கு அந்தப் பதிவர்' பிரச்சாரம் செய்கிறீர்களா அப்படி என்றால் நீங்களே ஒரு பதிவைப் போடுங்கள் 'என்று காட்டமாக கூறியிருந்தார்.அதன் பின்பு தான் எனக்கு தெளிவு வந்தது.//

கடந்து சென்று கொண்டே இருங்கள்... அதைவிடுத்து இவர்களின் பக்தி தெளியுமென எதிர்பார்க்காதீர்கள் !!!

தமிழ்நதி said...

பதி,

அப்படியானவர்களைப் பற்றி அலட்டிக்கொள்ளாதீர்கள். எல்லாம் வெட்டவெளிச்சமாக, பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. இன்னும் 'தெரியவில்லையே தெரியவில்லையே'என்று கண்களைச் சுருக்கிக்கொண்டு பேசுபவர்களைக் கணக்கிலெடுக்காதீர்கள். ஆண்டாண்டு காலமாக ஆதரித்த பழக்கதோசம். மனச்சாட்சியின் முணுமுணுப்பையும் மறுதலித்துப் பேசவைக்கிறது. இத்தனை அறிவுள்ளவர்களுக்குத் தெரியாதா எது பொய் எது உண்மை என்பது.

அப்படியானவர்களைத் திட்டினால் எதிர்காலத்தில் தமிழ், தமிழினம் பற்றிப் பேசக்கூடாதாமா? நல்ல கேலிக்கூத்தாக இருக்கிறது. தமிழினத்துக்கு எதிராகச் செயற்படுபவர்களுக்கெதிராகக் குரல் கொடுப்பவர்களுக்கு அப்படிப் பேசும் முழுத்தகுதியும் இருக்கிறது. சொன்னேனே... பழக்கதோசம் என்று. இவர்களே 'ஐயா நீங்கள் இப்படிச் செய்யலாமா'என்று ஒருகாலத்தில் ஈழத்தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடித்தவர்கள்தாம்.

வித்தி,

இலங்கைத் தீவு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடத்திலோ, இந்தியா போன்ற பெரிய நாட்டுக்கு அண்மையிலோ அமையாமல் இருந்திருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து ஏங்கியதுண்டு.

அனானி நண்பரே,

பதிவுலகில் Old boy network என்பது இருக்கத்தான் இருக்கிறது. எழுத்து என்பது அதிகாரங்களுக்கெதிராகப் பேசக்கூடிய ஒரு கருவி என்று இன்னமும் நம்புகிறவர்களுக்கு,அதிலும் அதிகாரத்தைப் பிரயோகிப்பவர்கள் எரிச்சலூட்டவே செய்கிறார்கள்.

அமிர்தவர்ஷினி அம்மா,

என்ன ஊரில் இல்லைப்போலிருக்கிறது. இல்லையெனில் தமிங்கிலிசில் தட்டச்ச மாட்டீர்களே...

அசிங்கம்தான். அதை அம்பலப்படுத்தினால் சிலருக்குக் கோபம் வருகிறது. என்ன செய்ய..?

பதி,

"கடந்து சென்று கொண்டே இருங்கள்... அதைவிடுத்து இவர்களின் பக்தி தெளியுமென எதிர்பார்க்காதீர்கள் !!!"

என்று நீங்கள் அனானிக்குச் சொன்ன பதிலை வழிமொழிகிறேன். எல்லோருக்கும் புரிந்தது சிலருக்குப் புரியவில்லை என்றால் அதை அவர்கள் புரிந்துகொள்ள விரும்பவில்லை என்றுதான் பொருள்.

வால்பையன் said...

//கடைசி ஆட்டத்தையும் ஆடிப்பார்த்தாகிவிட்டது. (இவர்களைச் சொல்லமுடியாது. இதற்கு மேல்கூட நகைச்சுவைக் காட்சிகள் இருக்கக்கூடும்.)//

அப்படிவாங்க வழிக்கு!

கடைசி நேரத்தில் மக்களின் அனுதாபத்தை பெற பல கழக உறுப்பினர்களின் தலையை காவு கொடுக்கலாம்!

படுகொலைகள் அவர்களுக்கு சாதாரண விசயம் தானே!

பதி said...

//கடைசி நேரத்தில் மக்களின் அனுதாபத்தை பெற பல கழக உறுப்பினர்களின் தலையை காவு கொடுக்கலாம்!

படுகொலைகள் அவர்களுக்கு சாதாரண விசயம் தானே!//

ம்ம்ம்ம்ம்ம்..

நான் வேறு சில விளையாட்டுக்களை எதிர்பார்கின்றேன்..

பாண்டியன் said...

அண்ணன் பிரபாகரனுக்கு இப்போது தெரிந்து இருக்கும் தந்தையர் தேசத்தின் அருமை பாட்டன் பூட்டன் தேசத்தின் அருமை!1 இந்த பிராந்தியத்தில் 'இந்தி'யாவின் எதிர்சக்திகளிடம் அண்ணன் உறவாடி இருந்தால் இந்நேரம் தமிழீழம் உள்ளங்கையில்! இந்த இந்தி ஒம்போது களுக்கு பாகிஸ்தானொடு சண்ன்டை போட தெரியாது இளிச்சவாயன் ஈழ தமிழன், மலைதீவுகள் இவைகளை மிரட்டுவதுதான் வேலை!!! மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தானோடு படை எடுக்க தெரியாத 9 தின் வாக்கு மூலம்:http://www.youtube.com/watch?v=zDnkSaDpPlw&e