5.18.2009

இது கவிதையல்ல; கோபம்!


எல்லாம் இனிதே நடக்கிறது.

இன்னும் சில மணிகளில்

முற்றிலும் மயானமாகிவிடும்

புகை மண்டலத்தினுள்ளிருந்து

சிங்கக் கொடி உயரும்

நிலத்தில் வீழ்ந்து

இறந்துகொண்டிருப்பவர்கள்

ஏலவே இறந்துபோனவர்களைப்

பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

ஒளி அவியும் விழிகளால்.


பாதுகாப்பு வலயங்கள்

கொலைக்களங்களாவதைப் பற்றி

சர்வதேசம் யாதொன்றும் செய்வதற்கில்லை.

அறிக்கை விடுவதில்

உள்ளுர்க்காரர்களுக்கு சளைத்ததாயில்லை

ஐ.நா. சபை.


எப்போதோ தயாரான கப்பல்களின் நங்கூரங்கள்

சிக்கிக்கொண்டிருக்கின்றன

தயக்கத்தின் வேர்களில்.


சர்வதேசத்தின் செவிட்டுச் செவிகள்

காத்துக்கொண்டிருக்கின்றன

எப்போதும் வரமாட்டாத ஒரு செய்திக்காக.


ஒரு மரணம் = சமாதானம் என்ற சமன்பாட்டை

மூன்று முட்டாள்களுடன்

சில சுயமோகிகளும் நம்பிப் பரப்புகிறார்கள்.


புதிய சண்டியனோடு பொருதமுடியாமல்

வெள்ளை மாளிகை கனவானாகி

அறிக்கை விடுகிறது.


இந்துசமுத்திரத்தின் செல்லப்பிள்ளை

துள்ளிக்கொண்டிருக்கிறது மமதையில்

சாதாரண காலத்திலேயே கையில் பிடிக்கமுடியாது

சங்கார வெறியில்

அகங்காரம் உரத்து அறிவிக்கும் உளறல்களுக்கு

‘ஜெயவேவா’பின்னணி இசைக்கிறது.


தலைநகர வீதிகளில்

பொங்கி வழிகிறது

தமிழர்களின் குருதிகலந்த

‘கட்ட’ சம்பலும் பாற்சோறும்.

வெட்டப்படப்போகும் ஆடுகள் பாவம்

மஞ்சளில் குளிக்கின்றன.


இங்கும் (தமிழகத்தில்) யாவரும் நலம்!

தங்களை விற்றுக்கொண்டவர்களும்

விலைகொடுத்துப் பெற்றுக்கொண்டவர்களும்

உதடுகளை அகலவிரித்துக் களிக்கின்றனர்.

பிரியாணிகளும் பியர் போத்தல்களும் இணைந்து

சுட்டுவிரல் அழுத்த

கொட்டி அள்ளியது கூட்டுக்களவு.

தமுக்கடித்து ஆடுகின்றனர் துதிபாடிகள்

தொண்டரடிப் பொடிகளின் தோள்முனைகளில்

சிறகுகள் முளைத்ததாகவும் தகவல்.

பொய்மையாளரைப் பாட

கவிக்குயில்களும் பேரரசுகளும்

கனத்த தொண்டைகளை

மேலும் கனைத்துக்கொள்கின்றனர்.

இனி கைதட்டத் தோதான வரிகளைத்தேடவேண்டியதில்லை.

‘வீழ்க’என்றாலும் விசுக்கென்றெழுந்து

கையொலி எழுப்ப அனைவரும் தயார்!


சில தொலைக்காட்சிகளும் பத்திரிகைளும்

பரப்புரைகளில்

கோயபல்சின் ‘குளோனிங்’ஆக போட்டியிடுகின்றன.


புரட்சியின் நெருப்பு

மண்ணிற்குள் மறைந்து கனிகிறது

வைரமாய்.


‘எங்களைப் பொறுத்தளவில் இனி விடுதலைப்புலிகள் இல்லை’என்ற கோத்தபாயவுக்கு நன்றி!

இல்லாதவர்களால் குண்டுகளாக முடியாது

இல்லாதவர்களால்

உங்கள் வேட்டிகள் நனைவது சாத்தியமில்லை

இல்லாதவர்களால்

உங்கள் கனவுகளுள் புகுந்து இனிஅச்சுறுத்த முடியாது.

உங்கள் கண்ணெதிரில் கட்டிடங்கள்

யாருமற்றவர்களால் தகர்ந்துசரிவது எத்தனை அழகு!


மரணமற்றவனின் மரணத்தை

எதிர்பார்த்துக் காத்திருக்கிறவர்களே!

எதிர்வு கூறுவோரே!

தேம்ஸ் நதிக்கரையோரத்தில் அவனே நடந்து செல்கிறான்

பாரிஸின் வீதிகளில் அவன்தான் பாடிக்கொண்டிருக்கிறான்

ரொறன்ரோவில்

அவனொரு தொழிற்சாலையில் இயங்கிக்கொண்டிருக்கிறான்

பேர்ளினில் நெருப்பொளிர்வது யாருடைய விழிகளில்?

சூரிச்சில்

டென்மார்க்கில்

நோர்வேயில்

ஈரோட்டில்

நீங்கள் யாரென்று நினைக்கிறீர்கள்?


நினைவிருக்கட்டும்

இல்லாதவர்கள் என்று உங்களால் சொல்லப்படுபவர்கள்

வரலாற்றில்

எப்போதும் இருந்துகொண்டுதானிருக்கிறார்கள்

பகத்சிங்காக

நேதாஜியாக

பிரபாகரனாக!

பிற்குறிப்பு: இதி்ல் கவித்துவத்தைத் தேடவேண்டாம். இது கவிதையன்று. என் கோபம்.

28 comments:

மு. மயூரன் said...

//புதிய சண்டியனோடு பொருதமுடியாமல்

வெள்ளை மாளிகை கனவானாகி

அறிக்கை விடுகிறது.//

//பாதுகாப்பு வலயங்கள்

கொலைக்களங்களாவதைப் பற்றி

சர்வதேசம் யாதொன்றும் செய்வதற்கில்லை.//


வெள்ளை மாளிகையும் இதே சர்வதேசமும்தான் துணைக்கண்டச்சண்டியனோடு சேர்ந்துகொண்டு யுத்தத்தையே நடத்துவதாக இருந்தால்?

எம்மைக்கொல்பவர்களே எமக்காக குரல்கொடுப்பார்களா என்ன?

எம்மைக்கொல்பவர்களை கெஞ்சி எமக்கான தீர்வினைப்பெறலாமா என்ன?

அமிர்தவர்ஷினி அம்மா said...

:(

அமிர்தவர்ஷினி அம்மா said...

இதே கோபம் எனக்கும் வரப்பெற்றேன் ராஜபக்‌ஷே மண்டியிட்டு ப்ரார்த்தனை(அடப்பாவி) செய்யும் படத்தினை தமிழ்(!?)நாட்டு பத்திரிகைகளில் பார்க்க நேரிடும்போது.......

selventhiran said...

பவுடர் பூசிய வார்த்தைகளோடு உணர்ச்சியை வடிக்க நாமென்ன கோபாலபுரத்துக் கோமானா? அல்லது வடுகப்பட்டி வைரமா?

அவலமே வாழ்வென்றாகிவிட்ட பின் அழகுணர்ச்சி குறித்தென்ன கவலை?!

நட்புடன் ஜமால் said...

\\இங்கும் (தமிழகத்தில்) யாவரும் நலம்!

தங்களை விற்றுக்கொண்டவர்களும்

விலைகொடுத்துப் பெற்றுக்கொண்டவர்களும்\\


சாட்டை விலாசல் ...

பதி said...

:(

ஸ்டாலின் குரு said...

வேறு வழியே இல்லாத நிலைகளில் தேசத்தின் பாதுகாப்பை முன்னிட்டு ஜெர்மனியோடு உடன்படிக்கை செய்துகொள்ள முன் வந்த லெனினையும்,பாசிஸ்ட் ஹிட்லரோடு உடன்பாடு செய்துகொள்ள முன் வந்த ஸ்டாலினையும் கூட, இந்த மார்க்சியத்தின் பெயரால் இந்திய அரசுக்கும் முதலாளித்துவ உலக ஏகாதிபத்தியங்களுக்கும் மாமா வேலை பார்த்து பிழைக்கும் ம க இக வினரும்,அவர்களின் இரயாகரன் போன்ற அடிவருடிகளும் துரோகிகள் என்று சொன்னாலும் சொல்வார்கள் , இந்த கும்பலிடம் மார்க்சியம் மார்க்சியம் கற்றுகொள்ள முயலும் உங்களை பார்க்க வேடிக்கையாக இருக்கிறது நிலை மயூரன்

வரவனையான் said...

கொலைக்களத்துக்கு போகும் யூதர்களின் உதடுகள் முணுமுணுத்த யூஜின் பாட்டினிய்யாரின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

அக்கா இது கவிதையல்ல அடுத்த தலைமுறைக்கும் நாம் எடுத்துப்போகும் கொள்ளி,

ஈழ நெருப்பு என்றென்றைக்கும் அணையாது

ஸ்டாலின் குரு said...

மனிதனை மனிதனாக உணர வைப்பதற்கு, சக மனித உயிர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை குறைந்தபட்சம் மனதளவிலாவது வெறுக்க வைப்பதற்கு உஙகள் கவிதையில் ஒலிக்கும் கோபம் உதவும் என்றே நம்புகிறேன்.

சென்ஷி said...

:(

DHANS said...

solvatharkku ethuvum illai mouname anaithumaagum....

Unknown said...

//மரணமற்றவனின் மரணத்தை
எதிர்பார்த்துக் காத்திருக்கிறவர்களே! //

உண்மை தமிழ்..மரணத்தை ஒவ்வொரு கணமும் கடந்து கொண்டு வாழும் உன்னத மனிதர் அவர்.

கலங்க வேண்டாம். எல்லா வதந்திகளும் முடிவிற்கு வரும். அரசியல் சூழ்ச்சிகளையும் வீழ்த்தி நம் தமிழ் ஈழம் மலரும். Truth always triumphs..the last moment has arrived. Gather yourself and we stand on our cause till our end.

ஜனகன் ஞானேந்திரன் said...

தங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்கிறேன்.

வெற்றிக்களிப்பை நேரடியாக தூக்கிச்சுமப்பவர்களின் குரல்:

புலி சாகும் அலுவலக நாளொன்றில் News alert கள் வருகின்றன

யட்சன்... said...

மரணம் என்பது ஒரு வகையான நினைவூட்டல்....

முந்தைய எதோவொரு பதிவில் உங்களின் வரிதான் இது....

வருத்தங்களை பகிர்ந்து கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை...

உங்களின் வலிகளை பகிர்ந்து கொள்கிறேன்....

தமிழ்நதி said...

நண்பர்களே,

www.athirvu.com போய்ப் பாருங்கள். பொய்யான பரப்புரையை நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன சிறிலங்கா அரசும் அதன் அடிவருடி இணையத்தளங்களும்.

Ayyanar Viswanath said...

/இதி்ல் கவித்துவத்தைத் தேடவேண்டாம்./

தமிழ்,

’இங்கு’ன் மீது உங்களைப் போன்றவர்கள் காறித்துப்பினாலும் அது மிகச் சிறந்த கவிதையாகத்தான் இருக்கும்..

soorya said...

என் தோழிக்கு ஒரு பின்னூட்டம்.
நின் கோபம் கண்டேன்.

இன்னும் இன்னுமெழுக.
வாழ்வின் விலங்கொடிக்க
முயல்வோரின் மூச்சற வெழுக.

நின் கரங்கள் தாங்கும்
பேனா
கொல்லட்டும் கொடியோரை.

என் நெஞ்சு நெகிழ்ந்து
நான் பாடிய நிலத்தையும்
என் தளபதிகளையும் இழந்தேன் காண்.
என் தளபதிகளின் மழலைகள்

அலைமகளுக்கும்,கனிமொழிக்கும், சிந்திசைக்கும், முகிலினிக்கும்...
எங்கிருந்து..எந்தத் தொண்டைவழி வரும் என் சொற்கள்..?

நீ பாடு தாயே.
எக் காரணங் கொண்டும் எழுதுவதை நிறுத்தாதே..!

எனைப்போல
எழுத்துலகில் ஒரு சோம்பேறியென்ற பேர் நன்றற வுனக்கு.

பதிவு செய்..!
ப்ளீஸ்.
எழுது.
ஏதாவது எழுதித் தொலை.
பார்க்கவும் ரசிக்கவும் நானிருக்கிறேன்.
கவித்துவமா..?
அதைப் பார்க்க நேரமிருக்கும்
கொடியோர் உலகில் போய்ச்சொல்.
நல்ல காலம், பின்னவீனத்துவம்
என்று சொல்லவில்லை.
நன்றி.

Anonymous said...

kavithai nalla ruku.muthal muraiyaka unkal kavithai yai padikkire.unkal vethanaiyum thuyaramum neruppaak kavithaiya ka velippattullathu.

supersubra said...

//இல்லாதவர்கள் என்று உங்களால் சொல்லப்படுபவர்கள்

வரலாற்றில்

எப்போதும் இருந்துகொண்டுதானிருக்கிறார்கள்

பகத்சிங்காக

நேதாஜியாக

பிரபாகரனாக!//

உங்கள் கோபத்தில் உளமார பங்குகொள்ளும் கையறு நிலையில் இருக்கும் என் போன்ற உண்மை தமிழர்களும் - கவிதையை படிக்க முடியவில்லை கண்ணீர் மல்குகிறது

prasanna said...

ungal eluthin theevira rasigan naan. intha kavithai.. mannikkavum koptthai padikkum phothu.. satthiyamai solkiren naan aluthu vitten. unkali pontravarkal irukkum mattum em eelam aliyathu..

RBGR said...

பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு திறந்து சிறுத்தை வெளியே வந்துவிட்டதா?

நாமமது தமிழர் எனக் கொண்டிங்கு வாழ்ந்து,

'வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?

இங்குன் நாட்டுக்கு இழிகழுதை ஆட்சியா? '

சிவராமன் said...

எப்போது இருந்து நீங்கள் கவிதை எழுதிறியல்
இப்போது தான் எனக்கு கொஞ்சம் புரிகிறது.

மிக்க நன்றாகவும் உணர்வாகவும் உள்ளது.

இளங்கவி said...

தமிழ் நாட்டிலும் சரி தமிழ் ஈழத்திலும் சரி உங்கள் கோபம் இன்றைய உண்மையின் நிதர்சனம்..

உங்கள் வரிகளும் அருமை அத்துடன் உங்கள் வருத்தமும் உண்மை....


இளங்கவி

nochchi said...

கவியை இளைத்தவருக்குப் பாராட்டு. இணைத்தவருக்கு நன்றிகள். என்னைக் மிகவும் கவர்ந்த வரிகள்...........


புரட்சியின் நெருப்பு

மண்ணிற்குள் மறைந்து கனிகிறது

வைரமாய்................

மரணமற்றவனின் மரணத்தை

எதிர்பார்த்துக் காத்திருக்கிறவர்களே!

எதிர்வு கூறுவோரே!

தேம்ஸ் நதிக்கரையோரத்தில் அவனே நடந்து செல்கிறான்

பாரிஸின் வீதிகளில் அவன்தான் பாடிக்கொண்டிருக்கிறான்

ரொறன்ரோவில்

அவனொரு தொழிற்சாலையில் இயங்கிக்கொண்டிருக்கிறான்

பேர்ளினில் நெருப்பொளிர்வது யாருடைய விழிகளில்?

சூரிச்சில்

டென்மார்க்கில்

நோர்வேயில்

ஈரோட்டில்

நீங்கள் யாரென்று நினைக்கிறீர்கள்?


நினைவிருக்கட்டும்

இல்லாதவர்கள் என்று உங்களால் சொல்லப்படுபவர்கள்

வரலாற்றில்

எப்போதும் இருந்துகொண்டுதானிருக்கிறார�
�கள்


பகத்சிங்காக

நேதாஜியாக

பிரபாகரனாக!

உண்மை!

உண்மை சுடும். கோபிக்கவும் செய்யும்.

" பிரபாகரன் " உண்மை, சுயம், நேர்மை, அதனால்தான் இந்த உலகு அச்சப்பட்டது. ஆனால் சில தமிழ்த் தலைவர்கள் ஏன் அஞ்சினார்கள் தாங்கள் பொய்யர்களென்பதாலா?

poet said...

எங்கள் காலத்தை இதைவிட உயிர்ப்புடன் பதிவு செய்யமுடியாது என்று நினைக்கிறேன். என்னுடைய மதிப்புக்குரிய தோழி தமிழ்நதி முன்னணிக்கவிஞராக மேம்படுகிற கவிதைகளில் இதுவும் ஒன்று. எதிர்காலம் அவரது. கவிஞருக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்
வ.ஐ.ச.ஜெயபாலன்

மு. மயூரன் said...

ஸ்டாலின் குரு,

எனது கருத்துக்கும் நீங்கள் என்னைக்குறித்து சொன்ன கருத்துக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.

எனது பெயரைப்பார்த்தவுடனேயே நீங்கள் வேறு ஆட்களின் பெயர்களைப்போட்டு என்னை அடையாளப்படுத்த முனைவது சிறுபிள்ளைத்தனமானது. நேர்மையற்றது.

நான் சொன்ன கருத்தோடு மறுப்பிருந்தால் அதனை விவாதிக்கலாம். இரயாகரனை இதுக்குள் ஏன் இழுக்கிறீர்கள்? அவரோடு உள்ள முரண்பாடுகளை அவரோடு விவாதிக்க வேண்டியதுதானே?

டவுசர் கிழித்ததாக வேறொரு தளத்தில் பீத்திக்கொண்டு நீங்கள் டவுசர் கிழிந்து நின்றதையும் நான் அசுரனின் தளத்தில் அழகாகப்பார்த்தேன்.

இங்கே சமப்ந்தமில்லாது ரயாகரனை இழுத்த குறுகிய மனநிலையின் தத்துவ நீட்சியாக நீங்கள் வலம்வருவது உங்களுக்கே புரிந்தால் சரி.

நாதாரி said...

ஸ்டாலினும் மயூரனும் இந்த தளத்தை தனது விவாதங்களுக்கான மேடையாக மாற்றாது கவிதைகுறித்து இன்னும் தன்விடயங்களை கதைத்தார்களெனில் நலம்

Karthik Sambuvarayar said...

thamizha

Tamilnattil DMKvirkku against vote potta nalla tamizhargalum irukirom nanba...

Nichayam Eelam amaiyum athu ungalai pondra eela thamizharin kanavu mattum alla ulagil ulla athanai unmai thamizharin kanavum kooda....

tamizhan evanukkum adimai illai....thamizhan endru sollada..thalainimirndu nilladaa....