12.24.2009

உயிர்மையின் புத்தக வெளியீட்டு விழாக்கள்


இன்று டிசம்பர் 25ஆம் திகதி மாலை ஐந்தரை மணிக்கு சென்னை அண்ணாசாலையிலுள்ள தேவநேயப் பாவாணர் அரங்கில் (எல். எல்.ஏ. நூலகம்), 12 புத்தகங்கள் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்படுகின்றன.அவற்றுள் எனது குறுநாவலான 'கானல் வரி்'யும் ஒன்றாகும்.தனித்தனியாக அழைப்பு அனுப்பமுடியவில்லை।நண்பர்கள் அனைவரும் வந்து கலந்துகொள்ளும்படி அன்போடு கேட்டுககொள்கிறேன்।
சனிக்கிழமை २६ 12. 2009 மாலை ரவிக்குமாரின் நான்கு புத்தகங்களையும் உயிர்மை வெளியிடுகிறது.
ஞாயிற்றுகிழமை மாலை (27டிசம்பர்) கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனின் கவிதை நூலானது குமாரராஜா முத்தையா அரங்கம் ((செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி) எம்.ஆர்।சி.நகர் ராஜா அண்ணாமலைபுரத்தில் உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப்படுகிறது.
8 comments:

அகநாழிகை said...

வாழ்த்துகள் தமிழ்நதி. தோழி உமாஷக்தி, நண்பர்கள் வாமுகோமு, விஜய் மகேந்திரன், லஷ்மி சரவணக்குமார் ஆகியோரின் புத்தகங்கள் வெளிவருவதில் கூடுதல் மகிழ்ச்சி.
மாலை விழாவில் சந்திப்போம்.

பொன்.வாசுதேவன்

பாலராஜன்கீதா said...

புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடக்க வாழ்த்துகள்.

உண்மைத்தமிழன் said...

வாழ்த்துக்கள் மேடம்..!

விஷ்ணுபுரம் சரவணன் said...

வாழ்த்துக்கள் தமிழ்நதி.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள் தமிழ்நதி.. :)

Ram Shankar said...

manam niraindha vaazhthukkal :)

வந்தியத்தேவன் said...

வாழ்த்துக்கள் தமிழ்நதி அக்கா

உங்கள் குறுநாவலை வெளிநாட்டில் வசிப்பவர்கள் எப்படிப் பெற்றுக்கொள்ளலாம்?

தமிழ்நதி said...

வாழ்த்திய அகநாழிகை, பாலராஜன் கீதா,உண்மைத்தமிழன், விஷ்ணுபுரம் சரவணன், முத்துலெட்சுமி (பெயர்க்குழப்பம் தீர்ந்ததா)செல்வநாயகி, ராம் சங்கர்,வந்தியதேவன்.

வந்தியதேவன்,

"உங்கள் குறுநாவலை வெளிநாட்டில் வசிப்பவர்கள் எப்படிப் பெற்றுக்கொள்ளலாம்?"

உயிர்மையைத் தொடர்புகொண்டால் அனுப்பிவைப்பார்கள். அவ்வ்வ்ளோ ஆவலாக இருந்தால்...:) எனக்கு முகவரியை மின்னஞ்சலிடுங்கள். நானே அனுப்பிவைக்கிறேன். பணம் ஒன்றும் வேண்டாம். (அதனால் கதை நன்றாக இல்லை என்று பொருளில்லை. நிறையப் பேர் நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்கள்- முகத்துக்காகச் சொன்னார்களா தெரியவில்லை)