7.15.2007

காதல் கவிதைப் போட்டி முடிவு


நானும் கவிதை எழுதுவதாக நம்பும் நண்பர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருவதாக (பிரமையாகவும் இருக்கலாம்) எனக்குத் தோன்றுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக நண்பர் சிந்தாநதி அவர்கள் 'காதல் கவிதைப் போட்டி'யில் வடிகட்டியெடுக்கப்பட்ட சில கவிதைகளை அனுப்பி அதிலொன்றைத் தேர்வு செய்து தரும்படி கேட்டுக்கொண்டார். நமது சகபதிவர்கள் எல்லோருக்குள்ளும் காதல் பொங்கிப் பிரவகித்துக்கொண்டிருந்ததை கவிதைகள் உணர்த்தின. காதல்வெள்ளம் எத்தனை காலமானாலும், வயதானாலும் வடிவதேயில்லை என்று நினைத்துக்கொண்டேன். நல்லவேளையாக எனக்கு அனுப்பப்பட்ட கவிதைகளை யார் எழுதியது என்ற விபரம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அதனால், கவிதையின் முகத்தை மட்டுமே பார்த்து ஒரு கவிதையைத் தேர்ந்தெடுத்தேன். அந்தக் கவிதையை எழுதியவர் குறைகுடம் பிரசன்னா என்ற நண்பர். ஏனைய நண்பர்கள் என்மீது சாபங்களை எறியாதிருப்பார்களாக.

தினமும் கடக்கும்
வழக்கமான சாலையில்
பழகிய பள்ளங்களைப் போன்றது
உன்னைப் பற்றிய நினைவுகள்
தவிர்க்க நினைக்கும்
கவனமான பயணங்களிலும்
நிலைகுலைந்து விழ நேர்கிறது
ஓரிரு முறையேனும்

என்ற கவிதை தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது. பிரசன்னாவுக்கு வாழ்த்துக்கள். 'இவளும் கவிதை எழுதுறாளாம்'என்றெண்ணி எனக்கு வாய்ப்பளித்த நண்பர் சிந்தாநதிக்கும் நன்றி.
இந்தப் பதிவின் நதிமூலம்:

8 comments:

✪சிந்தாநதி said...

நன்றி

பிரசன்னாவுக்கு வாழ்த்துக்களும்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நதி உங்க தன்னடக்கத்திற்கு ஒரு அளவில்லாமல் இருக்கு...

பிரசன்னாவுக்கு வாழ்த்துக்கள்.
அருமையான கவிதை அது.

வாசகன் said...

//பழகிய பள்ளங்களைப் போன்றது//

பழகிய பள்ளங்களைப் போன்றவை

சேதுக்கரசி said...

வாழ்த்துக்கள் பிரசன்னா! பங்கேற்றோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தமிழ்நதி said...

சிந்தாநதி! நண்பர்களுக்கிடையில் நன்றி தேவையில்லை. முத்துலட்சுமி! தன்னடக்கமா... அப்படின்னா என்ன?
வாசகன்!பிழை திருத்தியமைக்கு நன்றி. கவிதையை வாசிக்கும்போது பிழையைத் தவறவிட்டிருக்கிறோம். சேதுக்கரசி!என்ன கவிதைப் போட்டி என்றால் மட்டுந்தான் என் பக்கம் வருவீர்களா :)

ப்ரசன்னா (குறைகுடம்) said...

தமிழ்நதி, சிந்தாநதி, மற்றும் "விடை தேடும் வினா" குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றிகள். எழுதுவது கவிதையா என்று ஊர்ஜிதமாகாத நிலையில் (இதை
தமிழ்நதி அவர்கள் சொல்வது தன்னடக்க வகையறாவை சேர்ந்தது :-)), நான் மிகவும் மதிக்கும் தமிழ்நதி அவர்களிடமிருந்து இந்த முடிவு வந்தது ஒரு இன்ப
அதிர்ச்சி.
எழுத ஆரம்பித்த புதிதிலேயே என்னை ஊக்குவித்த முத்துலட்சுமி அவர்களுக்கும் எனது நன்றிகள். முதல் சுற்றில் தேர்ந்தெடுத்த சேதுக்கரசி அவர்களுக்கும்,
திருத்தியமைக்கு வாசகன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

சேதுக்கரசி said...

//என்ன கவிதைப் போட்டி என்றால் மட்டுந்தான் என் பக்கம் வருவீர்களா :)//

சிலசமயம் அப்படித்தான் கவிதைப் போட்டி பீவர் (அதாங்க காய்ச்சல்!) வரும்.. கண்டுக்காதீங்க :)

Unknown said...

பரிசு பெற்ற பிரசன்னாவுக்கும், பங்கெடுத்துக் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!!