2.10.2008

நதியின் ஆழத்தில்… -2



இடையமர்ந்த குடத்தினின்று
புதுப்பெண்ணின் வெட்கமென
தெருவெல்லாம் தளும்பும்.
சேலைநுனிவிரல்
செல்லும் வழியெழுத நீர்க்கோலமாகும்.
பொசிந்து வேரிறங்கி
கரைமரத்தின் பசுந்துளிருள் புகுந்தோடி
வெயில்மினுக்கில் பகட்டும்..
பறித்துவைத்த பள்ளங்களில்
காலிடறி விழுந்து வெயில் நக்க
கானலெனும் பழிசுமந்து
வீதிகளில் விளையாடித் திரியும்.
ஊர்ந்துசெல்லும் ஊர்களின்மேல்
சொட்டுமதன் பசுங்கருணை..
எவரெவரோ இறக்கிவைத்த
அழுக்கைச் சுமந்துகொண்டு
துவைப்பார் எவருமின்றித் தொலைவேகும்..
அதன் ஈரமனசுள்ளும் இருக்குமோ
எந்நீரோ எந்நாளோ
நடந்து மணல் சலித்த
ஆழம் தாண்டி
கரையேறித் திசைமாறவியலாத
கவலை?

17 comments:

Anonymous said...

.......கரைமரத்தின் பசுந்துளிருள் புகுந்தோடி
வெயில்மினுக்கில் பகட்டும்..
பறித்துவைத்த பள்ளங்களில்
காலிடறி விழுந்து வெயில் நக்க
கானலெனும் பழிசுமந்து
வீதிகளில் விளையாடித் திரியும்.
ஊர்ந்துசெல்லும் ஊர்களின்மேல்
சொட்டுமதன பசுங்கருணை..........

ச்சான்சே இல்லை....எங்கேயோ போய்ட்டீங்க...இத்தனை அடர்த்தியான வார்த்தைசெறிவுகளை சமீபத்தில் நான் படிக்கவில்லை....திரும்ப திரும்ப சொல்லி பார்க்கும்போதுதான் அர்த்தம் விரிய சந்தோஷமாயிருக்கிறது...

வாழ்த்துக்கள் தமிழ்நதி....

பதிவெழுதறதை மறந்துடாதீங்க...ம்ம்ம்ம்

மஞ்சூர் ராசா said...

இந்த கவிதையை படிக்கும் போது ஒரு திரைப்படப்பாடல் நினைவுக்கு வருவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு
ஹோ மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே
அது நங்கையின் குணமே
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)

தினம் மோதும் கரை தோரும் அட ஆறும் இசை பாடும்
...
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
...

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே
தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே
பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்
நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போகக் கூடும்

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

தமிழ்நதி said...

நன்றி இரண்டாம் சொக்கன்.

"இத்தனை அடர்த்தியான வார்த்தைசெறிவுகளை சமீபத்தில் நான் படிக்கவில்லை."
இதெல்லாம் கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு:) புத்தகக் கண்காட்சியில் வாங்கிய சில புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தேன். தமிழ் எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது. பதிவு எழுதுவதை எப்படி மறப்பது? ஆனால், கொஞ்சம் 'சரக்கு'ஏற்றிக்கொண்டு வந்து எழுதலாமென்றிருக்கிறேன். 'சரக்கடித்து'விட்டு அல்ல.

வரவுக்கு நன்றி நண்பர் மஞ்சூர் ராசா!நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடலை நானும் கேட்டு வியந்திருக்கிறேன். நல்ல வரிகளைக் கொண்டமைந்த பாடல். இவ்வளவு நீளமான பாடலை மினக்கெட்டு தேடி எடுத்து தட்டச்சி... ம்... இசையில் ஆர்வம் அதிகமோ... எனது கவிதை(?) இந்தப் பாடலை நினைவுபடுத்தியிருக்கிறதா... பல இடங்களில் பொருத்திப் பார்க்க முடிகிறது. நதி ஒன்றுதானே...:)

முபாரக் said...

//கொஞ்சம் 'சரக்கு'ஏற்றிக்கொண்டு வந்து எழுதலாமென்றிருக்கிறேன். 'சரக்கடித்து'விட்டு அல்ல.//

:-)

வல்லிசிம்ஹன் said...

நதி வாழ்க!


//இடையமர்ந்த குடத்தினின்று
புதுப்பெண்ணின் வெட்கமென
தெருவெல்லாம் தளும்பும்.
சேலைநுனிவிரல்
செல்லும் வழியெழுத நீர்க்கோலமாகும்//

அது தானி கீதமல்லவா தமிழ்?
சளக் பளக் என்று
சந்தம் பாடும் தனி நதி.

வெகு நேர்த்தியான நதி தமிழ்நதி.

Anonymous said...

ஓடினால்தான் நதி; தேங்கி நின்றால் குட்டை.

நீங்கள் குட்டையாயிட்டியளோ எண்டு நினைச்சன்; கனகாலத்துக்குப்பிறகு எழுதியிருக்கிற மாதிரிக் கிடக்கு.

தவ சஜிதரன் (முன்னம் வியாபகன்) said...

//இவ்வளவு நீளமான பாடலை மினக்கெட்டு தேடி எடுத்து தட்டச்சி...//

he hee hee ;) go to this site: http://www.arrahman.net/index.php/arrahman/category/lyrics/

u'll find more lyrics of some of the nicest songs composed by ar rahman....

the lyrics of the "nathiye" song are essentially phallocentric.... it depicts women as mere sexual objects of men...

விமலா said...

Very good one!
Impressive!

Anonymous said...

really very good....
am really interested in reading ur book....
how can i get it?

sriram pons....

ரசிகன் said...

//எந்நீரோ எந்நாளோ
நடந்து மணல் சலித்த
ஆழம் தாண்டி
கரையேறித் திசைமாறவியலாத
கவலை?//

இது டாப்பு.,.. கலக்கலா இருக்கு..தமிழ்நதி:)

தமிழ்நதி said...

என்ன வியாபகன்!இணையப்பக்கம் காண்பதே இல்லை. இருந்திருந்து வந்து இப்படித் தகவல் தந்துவிட்டுப் போவதோடு சரி. க.மு.-க.பி.யில் இப்படி நிகழ்வதுண்டு. சரிதான்:)

நன்றி விமலா. யாரோ வாசித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது சந்தோசம் தருகிறது.

சிறீராம் பொன்ஸ்!வலைப்பூ இன்னும் தொடங்கவில்லையா...?எங்கள் தோழியொருவரின் பெயரும் பொன்ஸ்தான். புத்தகம் என்றால் கவிதையா? சிறுகதையா? கவிதைப் புத்தகம் நியூ புக் லான்ட்ஸ் மற்றும் பாரதி புத்தகாலயத்தில்(சென்னை) கிடைக்கிறது. சிறுகதைத் தொகுதி எனது கைக்கு வந்துவிட்டது. கடைகளுக்குப் போக இன்னும் ஓரிரண்டு நாட்களாகும். விற்பனைக்கு வந்ததும் நிச்சயமாக நியூ புக் லான்ட்ஸ் இல் கிடைக்கும். அப்படித் தேடிப் படிக்குமளவிற்கு... ம்... யாரோ தப்பாச் சொல்லியிருக்காங்க:)

இது டாப்பு.,.. கலக்கலா இருக்கு..தமிழ்நதி:)

ரசிகன்!நீங்க 'டாப்பு'ங்கிறீங்க. நான் என் எழுத்து 'பாட்டம்'கிறேன்:) வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

தென்றல் said...

அந்த கடைசி சில வரிகள்தான் 'தமிழ்நதி' யோட பன்ச்..சா?

ம்ம்... அருமை...!!

//ரசிகன்!நீங்க 'டாப்பு'ங்கிறீங்க. நான் என் எழுத்து 'பாட்டம்'கிறேன்:) வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
//

அட... ;)

Anonymous said...

hi,,
yaarum edhuvum sollala..blogspot la irukura kavidhaigal romba nalla irundhadhala kaetaen...kandippa new book lands la poyi vaangikkuraen...naanum kavidhaigal ezhudhuvaen...en poems 'vadakku vaasal' , 'pudhiya paarvai' , 'yuga maayini' , 'keetru.com' magazines la vandirukku...january issue of yuga maayini & pudhiya paarvai la u can read my poems(if interested)....

sriram pons.

Anonymous said...

i am searching for a good name for my blog spot...plz suggest some good interesting tamil name..

sriram pons

தமிழ்நதி said...

என்னவோ நடக்கிறது. எனக்கு சிலது புரிவதில்லை. இன்று தற்செயலாக comments need to be moderated க்குள் போய்ப் பார்த்தால் நிறைய பின்னூட்டங்கள் பிரசுரிக்கப்படாமலிருந்தன. அதெப்படி மின்னஞ்சலுக்குத் தப்பி அங்கு போய்ச் சேர்ந்தன என்பது எனக்கு வெளிச்சமாகவில்லை. அவ்வாறு தவறவிடப்பட்டவைகளிற் சில பழைய பதிவுகளுக்கும் வந்திருந்தன. நண்பர்களே!அது தவறேயன்றி தப்பல்ல (யார் சொன்னது) என்று நீங்கள் உணர்வீர்களல்லவா?

வந்து பேசிப் போன முபாரக்,வல்லி சிம்ஹன்,நான் தேங்கிப் போனேனோ என்று வருத்தப்பட்ட (அன்றேல் 'தப்பினோம் சாமீ'என்று சந்தோசப்பட்ட)அனானி நண்பர், நீண்ட நாட்களின் பின் வீசிய தென்றல், சிறீராம் பொன்ஸ் அனைவருக்கும் நன்றி.

சிறீராம்!உங்கள் கவிதைகள் பார்க்கிறேன். வலைப்பூவிற்கான பெயர்... ம்... யோசித்துச் சொல்கிறேன். எதுவானாலும் பொருள் பொதிந்ததாக வையுங்கள். நீங்கள் சொன்னபடி ஏதோவொரு வகையில் தமிழ் சார்ந்ததாக இருப்பது நன்று.

Muruganandan M.K. said...

மிகவும் இதமான சொல்லடுக்குகள். அழகான வர்ணனை.
சேலைநுனிவிரல்
'செல்லும் வழியெழுத நீர்க்கோலமாகும்'
'கரைமரத்தின் பசுந்துளிருள் புகுந்தோடி'
இவ்வாறு பலவரிகளை ரசித்தேதன். அறிதமுகப்படுத்திய பதிவுகள்ளுக்கு நன்றி

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

வலைச்சரம் மூலமாக தங்களின் வலைப்பூவினைப் பற்றி அறிந்தேன். பாராட்டுகள்.