8.05.2008

சத்தியமாய் கவிதையில்லை

காதல்:
நரம்புமேடையில்
ஹோர்மோன்கள்
நடத்தும் நாடகம்

அரசியல்:
அவரவர் புண்களிலிருந்து
வழியும் சீழ்

எழுத்து:
முன்னால் நிற்பவனின்
கண்ணறிந்து கடைவிரிக்கும்
புனித வியாபாரம்

தாம்பத்யம்:
இரண்டுபேர் ஆடுகிற
கண்ணாமூச்சியாட்டம்

எல்லா மயிரும் தெரிந்தபிறகும்
மூடுபல்லக்கில் அசைந்தசைந்து
எத்தனை நளினமாய்
முகமினுக்கிப் போகிறது வாழ்க்கை.

11 comments:

sukan said...

//காதல்:
நரம்புமேடையில்
ஹோர்மோன்கள்
நடத்தும் நாடகம்//

//தாம்பத்யம்:
இரண்டுபேர் ஆடுகிற
கண்ணாமூச்சியாட்டம்//

இந்த நாடகம் கண்ணமூச்சியாட்டத்தின் விழைவுகள் மனுசர்கள்???

Ken said...

எல்லா மயிரும் தெரிந்தபிறகும்
மூடுபல்லக்கில் அசைந்தசைந்து
எத்தனை

நளினமாய் ( POOVATHAAI ):)
முகமினுக்கிப் போகிறது வாழ்க்கை

:) :)

கிருத்திகா ஸ்ரீதர் said...

சில சமயம் வாழ்க்கையின் மூடு மந்திரங்களை புரிந்தும் புரியாதவர்கள் போன்றதான நிலைப்பாடே நம் சுவடுகளில் ஈரத்தை மிச்சம் வைக்கிறதோ எனத்தோன்றுவதுண்டு.

Anonymous said...

அருமையான நறுக்குகள்
"அரசியல் அவரவர் புண்களில் வழியும் சீழ்"

காலத்திற்கேற்ற நறுக்கு.
நன்றி தமிழ்நதி.

வல்வை சகாறா said...

தமிழ்நதி உங்களைச் சந்திக்க விரும்புகிறேன்.

தமிழ்நதி said...

நர்மதா,கென்,கிருத்திகா,அனானி,சகாறா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஆம் நர்மதா மனிதர்கள்தான் எச்சம். எனினும் எஞ்சியிருப்பது எதிலும் மனிதமில்லை. அதுதான் வருத்தம்.

கென்!சும்மா ஏதோ கோபத்தில் கிறுக்கியது. அதற்கு இத்தனை நகைப்பா:)

கிருத்திகா!நீங்கள் சொன்னதுபோலதான். தெரிந்தும் தெரியாததுபோல கடந்துசெல்வதால்தான் வாழ்க்கை உயிர்ப்புடனிருக்கிறது. அல்லது அப்படி இருப்பதான பிரமை.

அனானி நண்பருக்கு!காலம் என்பதைவிட அண்மைய எனது கோபம் என்பதே பொருந்தும். என்ன கோபமென்பது அடுத்த பதிவில் தெரிந்துவிடும்.

சகாறா!நானும் உங்களைச் சந்திக்க விரும்பினேன். எனக்கு உங்கள் தொலைபேசி இலக்கத்தைத் தனிமடலிடுங்கள். தொடர்புகொள்கிறேன்.

M.Rishan Shareef said...

//எல்லா மயிரும் தெரிந்தபிறகும்
மூடுபல்லக்கில் அசைந்தசைந்து
எத்தனை நளினமாய்
முகமினுக்கிப் போகிறது வாழ்க்கை.//

அருமை சகோதரி..!

சித்தாந்தன் said...

"எல்லா மயிரும் தெரிந்தபிறகும்
மூடுபல்லக்கில் அசைந்தசைந்து
எத்தனை நளினமாய்
முகமினுக்கிப் போகிறது வாழ்க்கை"

வாழ்க்கையின் இயல்பையும்இபோலித்தனங்களையும வெளிப்படுத்தும் வரிகள்

சித்தாந்தன் said...

"எல்லா மயிரும் தெரிந்தபிறகும்
மூடுபல்லக்கில் அசைந்தசைந்து
எத்தனை நளினமாய்
முகமினுக்கிப் போகிறது வாழ்க்கை"

வாழ்க்கையின் இயல்பையும்,போலித்தனங்களையும் வெளிப்படுத்தும் வரிகள்

கோகுலன் said...

சாட்டையடியாக இருக்கிறது தமிழ்நதி!

அகதி said...

வாழ்க்கை என்பது நாடகமேடை. நாமெல்லாம் நடிகர்களே. நேரத்திற்கேற்ற வேடம்