
Showing posts with label அகதிமுகாம்கள். Show all posts
Showing posts with label அகதிமுகாம்கள். Show all posts
8.15.2009
Tweet | |||||
இலங்கையில் நிலவுவது ஜனநாயகமா? புழுநாயகமா?
வன்னியில் விடுதலைப் புலிகளின் பாசிச, ஹிட்லரிச, நாசிச, மோசிச ஆட்சியின் கீழ் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்துக்கொண்டிருந்த மக்களை கருணையுள்ளத்தோடு ‘மீட்ட’இலங்கை அரசாங்கம், அவர்களை எத்தகைய வசதிகளோடு வாழ்வாங்கு வாழவைத்துக்கொண்டிருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் புகைப்படங்கள் இலங்கையிலிருந்து ஒரு நண்பரால் மின்னஞ்சலில் அனுப்பப்பட்டிருக்கின்றன. என்னைப்போலவே வேறு சில நண்பர்களுக்கும் அவை அனுப்பப்பட்டிருப்பதால், அவர்களும் தங்களது இணையத்தளங்களில் அப்புகைப்படங்களை வெளியிட்டிருப்பார்கள். சற்றுமுன்னர்தான் tamilcircle.net இல் அவற்றைப் பார்த்தேன். அந்தக் குறிப்பிட்ட நண்பரால் தனது இணையத்தளத்தில் இப்படங்களைப் பிரசுரிக்கமுடியாது. அவரைத் தேடிப்பிடித்து சங்காரம் செய்துவிடுவார்கள். வவுனியாவிலுள்ள முகாம்களில் மக்கள் புழங்கும் இடங்களில் நெளியும் புழுக்களுக்கு இணையானதே இலங்கை அரசாங்கத்தின் ஜனநாயகமும் என்பது உலகறிந்தது. மழைநாட்களில் வசதிகள் ஏதுமற்ற அந்த முகாம்களில் மக்கள் படும் துயரங்களை இந்தப் படங்கள் விளக்குகின்றன. இதுதானையா இலங்கையின் புழுநரகம்!


Subscribe to:
Posts (Atom)