3.04.2007

நட்சத்திரம்: அறிமுகம்

கலைவாணி: உங்களைப் பற்றி…

தமிழ்நதி:என்னுடைய வலைப்பக்கம் சொல்வதை விட என்னைப்பற்றி அதிகமாக நான் ஒன்றும் சொல்லிவிடப் போவதில்லை. அதில் எழுதுவதும் பெரும்பாலும் எழுதப்படுவதும் நானே.(சகலமும் நானாக்கும்…ம்!!!)

கலைவாணி: நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள்?

தமிழ்நதி:இப்படி நிறையப் பேர் கோபத்தோடு(?) கேட்டுவிட்டார்கள். நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைப்பது, இமைப்பொழுதும் சோராதிருத்தல் என்றெல்லாம் கதையளக்க ஆசைதான். ஆனால், உண்மையைச் சொன்னால், நான் ‘வேடிக்கை மனிதரைப் போல வீழ’விரும்பாதிருந்தேன். அத்துடன் எழுத்து என்ற அற்புதம் எனக்குக் காட்டிய மாய உலகத்தில் ஒரு பக்கத்தையேனும் மற்றவர்களுக்கு என்னால் காட்ட இயலுமா என்பதை முயற்சித்துப் பார்க்க எண்ணினேன். எழுதுகிறேன்.

கலைவாணி: எழுதுவதன் மூலம் பெரியளவில் எதையாவது சாதிக்க முடியுமென்று நம்புகிறீர்களா…?

தமிழ்நதி: நான் அறிந்தளவில் நிச்சயமாக இல்லை.

கலைவாணி: அவ்வாறெனில் ஏன் எழுதுகிறீர்கள்…?

தமிழ்நதி:எழுதுவது இதமான அனுபவம். அதை இழக்க விரும்பாமல் எழுதுகிறேன்.

கலைவாணி: தமிழ்மணத்திற்கு எப்படி வந்து சேர்ந்தீர்கள்?

தமிழ்நதி:கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்ததைப் போல தற்செயலானது அல்ல. உங்களுக்கெல்லாம் அறிமுகமான பொடிச்சி என்றொரு தோழி வலைப்பதிவுலகைப் பற்றிச் சொன்னதோடு, எனது பக்கத்தை வடிவமைக்கவும் உதவி செய்தா. அன்று தொட்டது உங்களுக்குச் சனி. வாழ்த்தும் வசையும் பொடிச்சிக்கே!

கலைவாணி: தமிழ்மணத்தில் பிடித்தது, பிடிக்காதது?

தமிழ்நதி: பிடித்தது: முகமறியாத பலரை நண்பர்களாக்கியது பிடித்திருக்கிறது. எழுதவேண்டும் என்ற ஆசை இருக்கிற எல்லோருக்கும் பாரபட்சமற்ற அற்புதமான களம். தேர்ந்து வாசித்தால் நிறைய அறிந்துகொள்ள முடிகிறது. பல்வகைப்பட்ட நுட்பமான உணர்வுகளைத் தெரிந்து புரிந்துகொள்ள முடிகிறது.

பிடிக்காதது: சண்டைகள்! ‘பாப்பாரப் பன்னாடை’ என்பதுவும், ‘திராவிடப் புண்ணாக்கு’என்பதுவும், ‘நல்லைநகர் வழிவந்த நான் வேளாளன்’ என்பதுவும், ‘இழிசாதிப் பயலுக்கு என்னடா பேச்சு’என்பதுவும், ‘ஈழத்தமிழர்கள் ஈழைத்தமிழர்கள்’என்பதுவும், ‘இந்தியத்தமிழருக்கு எமைக் குறித்து என்ன தெரியும்’என்பதுவும் கேட்கச் சகிக்கவில்லை. எழுதுபவர்களிடையிலே இத்தனை காழ்ப்புணர்ச்சி என்றால் மற்றவர்களைச் சொல்லக் கேட்பானேன்…? திட்டித் தீர்ப்பதிலே சக்தியை விரயமாக்கிக்கொண்டிருந்தால் இலக்கியம் பிறக்காது. இழிநிலைக்கே கொண்டுவிடும்.

கலைவாணி: நட்சத்திர வாரம் குறித்து?

தமிழ்நதி:நாம் கவனிக்கப்படுகிறோம் என்பது சராசரி உணர்வுகளைக் கொண்ட எல்லோருக்குமே மகிழ்வளிக்கும் ஒன்று. ஆனால்,கால நிபந்தனைகள் வழங்கப்படும்போது படைப்பாற்றல் தொட்டாற்சுருங்கியாகிவிடுகிறது. மேலும், ‘அதிக எதிர்பார்ப்பை வளர்க்கும்போது எழுத்தின் காத்திரமும் வீரியமும் சிதிலமாகி நீர்த்துப் போய்ச் சரிந்துவிடும்’ என்று அண்மையில் ஒருவர் சொன்னார். அதனால் எதிர்பார்ப்பைத் தூண்டவில்லை. சமாளித்திருக்கிறேன்.
இந்த வார நட்சத்திரமாக என்னைத் தேர்ந்தெடுத்த தமிழ்மண நிர்வாகிகளுக்கும், எனது ஆக்கங்களை (ஆய்க்கினையை) வாசித்துவிட்டு ஒன்றும் பேசாமல்(சொல்ல என்ன இருக்கெண்டிறியள்) போகவிருக்கும் நண்பர்களுக்கும், ‘நல்லாய் இரு’ அல்லது ‘நாசமாய்ப் போக’எனப் பின்னூட்டமிடவிருக்கும் நண்பர்களுக்கும் நன்றி!

அப்பாடா! என்னை நானே செவ்வி கண்டு ஒருவழியாக (பேசாமப் போவியா… ஒன்னய வேற யாரு பேட்டி எடுப்பாய்ங்க - மி.வெ.) பெரிய ஆளென்று நிரூபித்துவிட்டேன்.

42 comments:

சென்ஷி said...

//தமிழ்நதி:என்னுடைய வலைப்பக்கம் சொல்வதை விட என்னைப்பற்றி அதிகமாக நான் ஒன்றும் சொல்லிவிடப் போவதில்லை. அதில் எழுதுவதும் பெரும்பாலும் எழுதப்படுவதும் நானே.(சகலமும் நானாக்கும்…ம்!!!)//

அப்ப இன்னைக்கு மொதோ பின்னூட்டம் நான் போட்டுடறேன்.. மிச்சம் நீங்க பாத்துக்குங்க...

//கலைவாணி: நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள்?

தமிழ்நதி:இப்படி நிறையப் பேர் கோபத்தோடு(?) கேட்டுவிட்டார்கள்.//

நான் இன்னும் கேட்கல. கேக்குறாமாதிரி வச்சிடாதீங்க :)))


நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்..

சென்ஷி

மலைநாடான் said...

தமிழ்நதி!

ம்..பொருத்தமான வாரம்தான் தரப்பட்டிருக்கிறது.:) நட்சத்திரவாரம்
இனிதே அமைய வாழ்த்துக்கள்.

சினேகிதி said...

தொடங்கியாச்சா.....அப்ப இந்தவாரமும் புயல்தான் இங்க.

ஒரு பொடிச்சி said...

//வலைப்பதிவுலகைப் பற்றிச் சொன்னதோடு, எனது பக்கத்தை வடிவமைக்கவும் உதவி செய்தா.//
;-)
இவ்வாறாக எனது வடிவமைப்புத் திறன் +/வலைநுட்ப அறிவையும் :-) வலையோருக்கு எடுத்துக் கூறிய உங்களை (உங்களை!!!) வருக வருக என்று..... வரவேற்கிறேன்.. அப்படியே (பாராட்டில்) நல்லதை இவ்விடமும் அல்லதை உங்களிடமும் தந்துவிடுமாறும் கேட்டுக்கொள்கிறேன்!!!!!!
expecting more...

- யெஸ்.பாலபாரதி said...

அடிச்சு ஆடுங்க! வாழ்த்துக்கள்!! ;)

பொன்ஸ்~~Poorna said...

வாழ்த்துக்கள் தமிழ்நதி & கலைவாணி :))))

செல்வநாயகி said...

வாழ்த்துக்கள்! expecting more.

வரவனையான் said...

நதியில் நட்சத்திரங்கள் பார்க்கலாம். இங்கு ஒரு நதியே நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்.

( ஹோலிப்பண்டிகை முடிந்தால் கோடை துவங்கிவிட்டது என்று வடநாட்டில் நம்பிக்கை. அதனால் இந்த ஐஸ்... ஹிஹிஹி )






அதென்னா கனடா ஆட்கள் வரிசையாய் வந்து வாழ்த்திருக்காங்கள்.... ஊர்ப்பாசமா :P

தமிழ்நதி said...

'வாங்க வாங்க' என்று சொன்ன சென்ஷி,மலைநாடான்,சிநேகிதி,ஒரு பொடிச்சி,யெஸ்.பாலபாரதி,பொன்ஸ்,செல்வநாயகி,வரவணையான் அனைவருக்கும் நன்றி.

ஏதோ இந்த வாரம் உங்களுடைய தலைவிதி இப்படியாகிவிட்டது என்று நொந்துகொள்வதைத் தவிர எனக்கும் வேறு வழியில்லை.

வி. ஜெ. சந்திரன் said...

தமிழ் நதி வாழ்த்துக்கள். நிறைய நல்லதா எழுதுங்க....

வாசிப்போம், ரசிப்போம், ....

RBGR said...

//எழுதுவது இதமான அனுபவம். அதை இழக்க விரும்பாமல் எழுதுகிறேன்.//

உண்மையான வார்த்தைகள்.

உங்களுக்கு அவ்விதம் எவ்விதத்திலும் குறையாமிலிருக்க வாழ்த்துகள்.

சோமி said...

வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் அம்மா.
வடபழனி சரவணபவனில் நடந்த முதல் சந்திப்பில் கனடாவின் முக்கிய பெண்கவிஞர் என்னும் வ.ஐ.ச.செயபாலனின் அறிமுகம் தமிழ்நதி குறித்து கிடைத்தது.(நம்ம வாசிப்பு பரப்பு
குறைவென்பதால் வாசிக்கவில்லையென நினைத்தேன்)
பின்னர் தமிழ்மணத்தில் நதியக்காவின் எழுத்துகளை வாசித்தேன்.

இப்போது தமிழ்நதி நல்ல தோழி அடிகடி பேசவிட்டாலும் பேசும் அக்கா.

அக்கோவ்....சென்னையில நீங்க சமைச்சு
தந்த பிட்டும் மீன்குழம்பும் அற்புதம்
(ம்......சென்னைச் சாப்பாடு சாப்பிடும் எங்களுக்கு நம்ம ஊரு பிட்டு தரும் தமிழ்நதியை அம்மா என்று சொல்வதில் தப்பில்லையே.)

நிறைய எழுதுங்கள்.அதைவிட நிறைய வாசியுங்கள்.
நன்றி

துளசி கோபால் said...

அட! தமிழ்நதி.......... நீங்களா இவ்வார நட்சத்திரம்.?

ச்சும்மா தூள் கிளப்புங்கப்பா.

பெண்கள் தினம்வேற வந்துக்கிட்டு இருக்கு.

ஜாமாய் ராணி ஜமாய்:-))))

மாசிலா said...

வாங்க வாங்க வணக்கம் தமிழ்நதி.

தமிழ்நதி: //பிடித்தது: முகமறியாத பலரை நண்பர்களாக்கியது பிடித்திருக்கிறது.// தெரிந்து இருந்தால் என் படத்தை போடாமலே இருந்திருப்பேன்.:-)

//திட்டித் தீர்ப்பதிலே சக்தியை விரயமாக்கிக்கொண்டிருந்தால் இலக்கியம் பிறக்காது// இது மட்டுமல்ல வேறு எத்துறையும் பிறக்காது. நன்று.

ஒரு வார பரீட்சை ஆரம்பமாகிவிட்டது.

வாழ்த்துக்கள்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நதி ...உங்கபேரில் வாணி வேறு இருக்கிறாளா?

எல்லோரும் சொன்னது போல மிக பொருத்தமான தேர்வு இவ்வாரத்திற்கு.

\\‘அதிக எதிர்பார்ப்பை வளர்க்கும்போது எழுத்தின் காத்திரமும் வீரியமும் சிதிலமாகி நீர்த்துப் போய்ச் சரிந்துவிடும்’ //

நாங்கள் ஒன்றும் அதிகம் எதிர்பார்க்கவில்லை. இருப்பது கிடைத்தாலே நாங்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள். இதில் கொஞ்சம் மெனக்கெட்டு எதுவும் எழுதினீர்கள் என்றால் அதிர்ஷ்ட மழைதான்.

கோவி.கண்ணன் said...

தமிழ்நதி,

அறிமுகமே அசத்தலாக இருக்கிறது.
பாராட்டுக்கள்.

தமிழ்நதி said...

நன்றி வி.ஜே.சந்திரன்,தமிழி,சோமி,துளசி கோபால்,மாசிலா,முத்துலட்சுமி,கோவி கண்ணன். நீங்கள் எல்லோரும் இப்பிடி வரவேற்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. முத்துலட்சுமி,அதிகமாகப் புகழ்கிறீர்கள். இந்த வெயிலுக்கு நன்றாகத்தானிருக்கிறது.

சிலபேர் வந்து வந்து போகிறார்கள். ஆனால் வாயைத் திறந்து ஒன்றும் சொல்லமாட்டார்களாம். நான்தான் 'வெப்ஸ்ரற்'இல் பார்க்கிறேனல்லவா...ம்... கொடுத்து வைச்சது அவ்வளவுதான்:)))

விழிப்பு said...

நட்சத்திரமானதுக்கு வாழ்த்துக்கள்.

-விழிப்பு

Anonymous said...

இவ்வார நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள். பல துறைகளிலும் ஆக்கங்களைத் தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

ஈழபாரதி said...

நட்சத்திர வார வாழ்த்துக்கள்.

சின்னக்குட்டி said...

வணக்கம் தமிழ்நதி ..இந்த சின்னக்குட்டியின் நட்சத்திர வாழ்த்துக்கள.. ஆரம்பத்திலே இரட்டை வேடத்தில் வந்து கலக்கிறீங்கள்.... கலக்குங்க இந்த வாரத்தை...

thiru said...

வாழ்த்துக்கள் தமிழ்நதி! சர்வதேச மகளிர் தினம் வருகிற வாரத்தில் நட்சத்திரமாக மின்னுவது சிறப்பு. நிறைய எதிர்பார்க்கிறேன்...

தருமி said...

நட்சத்திர வார வாழ்த்துக்கள்.

Pot"tea" kadai said...

வாழ்த்துரோம் வாழ்த்துரோம்...

வற்றாத நதியாய் இவ்வாரத்தில் எங்களில் சங்கமிக்க...

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

உங்கள் தனிநடையில் தாருங்கள்!
வாழ்த்துக்கள்!

பங்காளி... said...

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப லேட்டோ?

சிங்கம் கொஞ்சம் சாஞ்சிருச்சி...அதான்

இப்பத்தான் முளிச்சிட்டம்ல...இனி கொண்ட்டாடீர வேண்டிய்யதுதான்...ஹி..ஹி...

Unknown said...

நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள்!!!

Vasanthan said...

வாழ்த்து.
இந்தக்கிழமையில் உங்களோடு சொறிய மாட்டேன். ;-)
முடித்துவிட்டு வாருங்கள்.

கலை said...

நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள் தமிழ்நதி.

அது என்னது மி.வெ.?

Yogi said...

ஆரம்பமே கலக்கல்.

நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள். :)

சிவபாலன் said...

நட்சத்திர பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்!

இளங்கோ-டிசே said...

வாழ்த்துக்கள் நதி.

பாரதி தம்பி said...

தாமதமாய் வாழ்த்து சொல்லலாம்தானே..?

நட்சத்திர வாழ்த்துக்கள்.

மணிகண்டன் said...

நட்சத்திர வார வாழ்த்துக்கள் தமிழ்நதி!

தமிழ்நதி said...

இரண்டு நண்பர்கள் வீட்டிற்கு வந்திருந்தமையால் நான்கு மணித்தியாலங்கள் இணையப்பக்கம் வரவில்லை. பிறகு வந்து பார்க்க நெகிழ்ச்சியாக இருந்தது. அட...!என்னில் பிரியமானவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள் போலத்தான் இருக்கிறது.
கனக்ஸ்,ஈழபாரதி,சின்னக்குட்டி,திரு,தருமி,பொட் டீ கடை, யோகன் பாரிஸ்,பங்காளி,அருட்பெருங்கோ, வசந்தன்,கலை,பொன்வண்டு,சிவபாலன்,டி.சே.தமிழன்,ஆழியூரான்.... பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றிகள்.

"சர்வதேச மகளிர் தினம் வருகிற வாரத்தில் நட்சத்திரமாக மின்னுவது சிறப்பு"-திரு
ஏதோ நம்பிக்கையில் போட்டிருக்கிறார்கள். அல்லது தற்செயல் நிகழ்வு:)காப்பாற்ற வேண்டுமே என்று கவலையாக இருக்கிறது.

"இந்தக் கிழமை உங்களோடு சொறியமாட்டேன்"-வசந்தன்
"எனக்கு இந்தப் 'புனித'வாரமெல்லாம் கிடையாது. நக்கல் அடித்தால் பதிலடிதான். நானும் உங்கடை ஊரெல்லே:)))

"அது என்னது மி.வெ."-கலை
மி.வெ. என்றால் மிதக்கும் வெளி(மிதிவெடி என்று நினைத்தீர்களா என்ன)

"பிந்தி வந்துவிட்டேன் போல"-பங்காளி

இந்த அடிக்கடி சொல்வார்களே ஒன்று 'லேட்டா வந்தாலும்...'அதைச் சொல்லிக்கொள்ளுங்கள்.

வைசா said...

நட்சத்திர வார வாழ்த்துகள்.

வைசா

படியாதவன் said...

ஓகோ நச்சத்திரமோ??
உளம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா...

இப்ப நேரம் விடிய 2 மணி, ஆனா இப்பதான் இங்காலப்பக்கம் வந்தன்,,
இன்ப அதிர்ச்சி..
நான் வந்து பின்னூட்டம் போடாட்டிக்கு அழுதிருவீங்கதானே, :)
அதால வாழ்த்தை மட்டும் போட்டுட்டு போறன்..
மற்றப் பதிவுகளை வாசிக்க பிறகு வாறன்,...
இப்ப கண்ணைக் கட்டுது...

படியாதவன் said...

ஓகோ நச்சத்திரமோ??
உளம் நிறைந்த வாழ்த்துக்கள் அக்கா...=D>=D>=D>=D>=D>=D>

இப்ப நேரம் விடிய 2.30 மணி, ஆனா இப்பதான் இங்காலப்பக்கம் வந்தன்,,
இன்ப அதிர்ச்சி..
நான் வந்து பின்னூட்டம் போடாட்டிக்கு அழுதிருவீங்கதானே, :(( :D
அதால வாழ்த்தை மட்டும் போட்டுட்டு போறன்..
மற்றப் பதிவுகளை வாசிக்க பிறகு வாறன்,...
இப்ப கண்ணைக் கட்டுது...I-)I-)I-)

நந்தா said...

/பிடிக்காதது: சண்டைகள்! ‘பாப்பாரப் பன்னாடை’ என்பதுவும், ‘திராவிடப் புண்ணாக்கு’என்பதுவும், ‘நல்லைநகர் வழிவந்த நான் வேளாளன்’ என்பதுவும், ‘இழிசாதிப் பயலுக்கு என்னடா பேச்சு’என்பதுவும், ‘ஈழத்தமிழர்கள் ஈழைத்தமிழர்கள்’என்பதுவும், ‘இந்தியத்தமிழருக்கு எமைக் குறித்து என்ன தெரியும்’என்பதுவும் கேட்கச் சகிக்கவில்லை. எழுதுபவர்களிடையிலே இத்தனை காழ்ப்புணர்ச்சி என்றால் மற்றவர்களைச் சொல்லக் கேட்பானேன்…? திட்டித் தீர்ப்பதிலே சக்தியை விரயமாக்கிக்கொண்டிருந்தால் இலக்கியம் பிறக்காது. இழிநிலைக்கே கொண்டுவிடும்./

முகத்திலறையும் வார்த்தைகள். சம்பந்தப்பட்டவர்கள் இதற்கெல்லாம் திருந்துவார்களா என்ன?

அற்புதன் said...

நட்சத்திர வார வாழ்த்துக்கள்,

பிந்தி வந்ததற்கு மன்னிக்கவும்,
இப்போது தான் பார்த்தேன்.எல்லாரும் அக்கா எண்டு றாங்கள் , நானும் வாழ்த்துக்கள் அக்கா எண்டு சொல்லலாம் தானே?;-)

ஜெயஸ்ரீ said...

நட்சத்திர வாரத்துக்கு வாழ்த்துக்கள் தமிழ்நதி.

தென்றல் said...

வாழ்த்துக்கள், தமிழ்நதி!

//முகமறியாத பலரை நண்பர்களாக்கியது பிடித்திருக்கிறது. எழுதவேண்டும் என்ற ஆசை இருக்கிற எல்லோருக்கும் பாரபட்சமற்ற அற்புதமான களம். தேர்ந்து வாசித்தால் நிறைய அறிந்துகொள்ள முடிகிறது. பல்வகைப்பட்ட நுட்பமான உணர்வுகளைத் தெரிந்து புரிந்துகொள்ள முடிகிறது.
//

உண்மையான அனுபவ வார்த்தைகள்.