4.27.2007

அவர்கள் போனபின்…


கழிப்பறைப் பீங்கான்
இன்று அருவருப்பூட்டவில்லை

திறந்த யன்னல் வழி புகும் காற்று
எடுத்துச் செல்கிறது
மது மற்றும் புகை நாற்றம்

சீப்பில் இனிச் சுருண்டிராது
எவர் மயிரும்

ஆடை மாற்றுகையில்
மெய்பொத்தி உள்ளாடை கைவழுகும்
கரணங்களும் இல்லை

ஆட்களற்ற அறை
எழுத
இசை கேட்க
தலையணை மேல் கால்போட
குளித்த கையோடு வெளியில் வர
இனிதெனும் அனுகூலப் பட்டியலை
எட்டிப் பார்த்து
தன்பாட்டில் சிரிக்கிறது தனிமை.

13 comments:

லக்ஷ்மி said...

கவிதை அருமையாக இருக்கிறது தமிழ்நதி. தனிமை பல சமயங்களில் வரமாய்த்தான் தெரிகிறது.

கலை said...

சில நேரங்களில் தனிமையும் இனிமைதான். :)

Ayyanar Viswanath said...

/எட்டிப் பார்த்து
தன்பாட்டில் சிரிக்கிறது தனிமை./


ரொம்ப அழகான விஷயம் இந்த தனிமை..உங்களோட தனிமை பார்வை யுகங்களாக தொடரும் துயரின் விடுபடலாகவும் உள்ளது ..:)

நாமக்கல் சிபி said...

கவிதை அருமையாயிருக்கிறது தமிழ்நதி!

தமிழ்நதி said...

நன்றி லஷ்மி,கலை,அய்யனார்,நாமக்கல் சிபி! தனிமை இனிமையாகவும் இருக்கிறது. அதே சமயம் வாழ்வின் மீது பயங்கொள்ளவும் வைக்கிறது. முரண்களின் தொகுப்புத்தானே மனித மனம்.

Anonymous said...

உங்கள் எழுத்துக்களின் தாக்கத்திலிருந்து மீளுவதற்கு வெகு நேரம் ஆகின்றது!! ஆழ்ந்த சிந்தனைகள் எளிய உடை உடுத்தி அழகாக நடை போடுகின்றன... மனம் நெகிழ்ந்து ரசிக்கின்றேன்- உங்கள் அனுமதியுடன்! :)

அன்புடன்,
பூங்குழலி.

நந்தியா said...

கவிதை ரொம்ப அழகாக இருக்கின்றது. ஆனாலும் பல வேளைகளில் இந்த தனிமையைத் தானே தேடுகின்றோம்.

நந்தா said...

//சீப்பில் இனிச் சுருண்டிராது
எவர் மயிரும் //

//ஆடை மாற்றுகையில்
மெய்பொத்தி உள்ளாடை கைவழுகும்
கரணங்களும் இல்லை//

//தலையணை மேல் கால்போட
குளித்த கையோடு வெளியில் வர//

அருமையான கவிதை....

எனக்கென்னமோ இக்கவிதை தனிமையின் அனுகூலங்களைச் சொல்லும் அதே வேளையில் ஒரு மெல்லிய சோகத்தையும் சொல்வது போல தெரிகிறது...

அந்த சோகம் தான் என்னைக் கட்டிப் போட்டு விட்டது...

அப்படித்தானே?

தமிழ்நதி said...

நன்றி பூங்குழலி,நந்தா,நந்தியா... என்ன இப்போதெல்லாம் எனது பக்கத்திற்கு தோழிகளின் வரவே அதிகமாக இருக்கிறது :)

\\மனம் நெகிழ்ந்து ரசிக்கின்றேன்- உங்கள் அனுமதியுடன்!\\-பூங்குழலி

அனுமதியெல்லாம் தேவையில்லை. இது பொதுப்பக்கம். யார் வேண்டுமானாலும் வாசிக்கலாம் :)

\\பல வேளைகளில் இந்த தனிமையைத் தானே தேடுகின்றோம்.\\-நந்தியா

ஆம். தனிமை சில சமயங்களில் கொடுமையாகவும் பல சமயங்களில் இனிமையாகவும் இருக்கிறது.

\\எனக்கென்னமோ இக்கவிதை தனிமையின் அனுகூலங்களைச் சொல்லும் அதே வேளையில் ஒரு மெல்லிய சோகத்தையும் சொல்வது போல தெரிகிறது...\\-நந்தா

உண்மை நந்தா. தனிமை வேண்டுமென்று அடம்பிடிக்கும் மனசுதான் தனித்துப்போகும்போது அதன் கால்களைக் கட்டிக்கொண்டு அழவும் செய்கிறது.

செல்வநாயகி said...

good one. The pictures you select are really good. Thanks.

மிதக்கும்வெளி said...

நன் ரூம்முக்கு வராத்தற்கு முன்பே எழுதிட்டீங்களா? எனது 'other is hell' என்கிற ஒரு கவிதையும் இப்படித்தானிருக்கும்.

LakshmanaRaja said...

மிக அழகான ஆழமான கவிதை

நளாயினி said...

தனிமை அது தனியான இன்பம். தனிமையை நான் நன்கு ரசித்து உணர்பவள். வீட்டில் அல்ல. தனிமையை நாடிச்சென்று காடு மலை என சுற்றுவேன்.