3.19.2008

சூடான இடுகை


எனது பக்கத்தை மாற்றி எழுத நேரமில்லை. இல்லையெனில் எழுதாமலிருப்பதற்காக எனக்கு நானே சாக்குப் போக்குச் சொல்லிக்கொண்டிருந்தேன். நீண்டநாட்களாக மொக்கைப் பதிவு போடவேண்டுமென்றொரு ஆசை. ‘இவ்வளவு நாட்களும் போட்டதெல்லாம் வேறென்னவாம்’என்ற உங்கள் முணுமுணுப்பு எனக்குக் கேட்கவில்லை. ‘சூடான இடுகை நிறுத்தப்பட்டது’என்பதை வாசித்ததும், இந்தப் பக்கத்தை மாற்ற எனக்கொரு வழி தோன்றியது. ‘கவுதை’மாதுரி ஒண்ணு எழுதிப்பார்த்தேன்.

சூடான இடுகை சுட்டதேன்
கை விட்டதேன்?
தமிழ் மணத்தை
பாடாய் படுத்தி
பழிசுமக்க வைத்து
புதரடரும் காடாக்கி
ஆடாத ஆட்டமெல்லாம்
ஆடுகிற அரங்காங்கி
தேடிக் குவித்த புகழ்
கண் மூடிக் கிடக்கையிலே
கண்டதொரு கனவாச்சு…!
ஆனாலும் என்ன...
அடடாவோ
தப்பிப் பிழைத்தது தமிழ்!

இது கவிதையில்லை. பக்கம் மாற்றுவதற்காகப் போட்ட ‘கவுதை’. எவராவது நக்கீரனாய் வந்து ‘உன் தமிழிலே தவறிருக்கிறது’என்றால், ‘எவ்வளவு பிழை இருக்கிறதோ அதற்குத் தகுந்தாற்போல கழித்துக்கொண்டு கொடுங்கள்’என்று தருமியைப்போல் கேட்கமாட்டேன். கேட்டாலும் யாராவது தரப்போறீங்களா என்ன…?

7 comments:

உண்மைத்தமிழன் said...

மேடம்,

தொலைந்து போனதற்கு கவிதை எழுதி நல்லது என்றது நீங்கள் ஒருவர்தான்.. வரும்போது வாழ்த்து தெரிவித்து பந்தி விரித்துச் சாப்பிட்டவர்கள்தான் அதிகம் பேர்..

அவர்களெல்லாம் இன்னும் தங்களது கருமாதி செய்தியைச் சொல்லவில்லை. சொல்லும்போது உங்களுக்கு இருக்கிறது பாராட்டு.. காத்திருங்கள்..

கிருத்திகா ஸ்ரீதர் said...

இந்த பதிவுலக அரசியலைவிட்டு விலகி இருப்பதே நாம் நமக்கும் நாம் நேசிக்கும் தமிழுக்கும் செய்யும் பெறும்பணி. தாங்கள் தங்கள் பாதையிலேயே பயனியுங்கள். என்ன நான் சொல்வது சரிதானே.....

சுகுணாதிவாகர் said...

((-

உண்மைத்தமிழன் said...

//கிருத்திகா said...
இந்த பதிவுலக அரசியலைவிட்டு விலகி இருப்பதே நாம் நமக்கும் நாம் நேசிக்கும் தமிழுக்கும் செய்யும் பெறும்பணி. தாங்கள் தங்கள் பாதையிலேயே பயனியுங்கள். என்ன நான் சொல்வது சரிதானே...//

நான் சொல்ல மறந்த விஷயம் இது.. ஆகவே ரிப்பீட்டு போட்டுக் கொள்கிறேன்.

தங்களைப் போன்ற தமிழாய்ந்த உண்மைத் தமிழர்களுக்கு இப்பதிவுலக அரசியல் தேவையில்லாதது..

நீங்கள் உங்கள் கையில் விளையாடும் தமிழை கொண்டு செல்ல வேண்டிய தூரம் நிறைய..

தங்கள் பாதையிலேயே திரும்பிப் பாராமல் செல்லுங்கள்..

தமிழ்நதி said...

"இந்த பதிவுலக அரசியலைவிட்டு விலகி இருப்பதே நாம் நமக்கும் நாம் நேசிக்கும் தமிழுக்கும் செய்யும் பெரும் பணி"
என்று சொன்ன கிருத்திகாவிற்கும் அதை வழிமொழிந்த உண்மைத் தமிழனுக்கும் நன்றி. எப்போது பார்த்தாலும் பிரிவு,கண்ணீர்,எழுத்து என்றெழுதியதில் கொஞ்சம் சலிப்புத்தட்டியது. 'சும்மா'பதிவு ஒன்றாவது போடலாமே என்று நினைத்துக்கொண்டிருந்தபோது 'சூடான இடுகை'சிக்கியது. அதை நீக்கியதில் எனக்கு மகிழ்ச்சியே.(எனது பதிவுகள் இடம்பெறவில்லையே என்ற ஆதங்கத்தில் இப்படி மகிழ்ந்தேன் என்று புரளியைக் கிளப்பிவிடாதீர்கள் மக்களே!) எழுத்து என்பது ஓட்டப் பந்தயமல்ல. உணர்வு சார்ந்த விசயம்.

ஏதோ கொஞ்சம் மரியாதை இருக்கிறது. தக்கவைத்துக்கொள்ளலே தகும்.:) அதற்காக,"தங்களைப் போன்ற தமிழாய்ந்த உண்மைத் தமிழர்களுக்கு"என்பதெல்லாம் கொஞ்சம் அதிகந்தான். சுட்டிக் காட்டியதற்கு நன்றி கிருத்திகா, உண்மைத்தமிழன். பழகிய தடத்திற்கே திரும்புகிறேன்.

நகைப்பான் மட்டும் போட்டுச் சென்றிருக்கிறார் சுகுணா திவாகர். அதற்கென்ன அர்த்தம்?எல்லோர் பிழைப்பும் இப்படித்தான் இருக்கிறது.:)

Athisha said...

தமிழ்மணத்தின் காலம் தாழ்த்திய முடிவு என்றாலும் வரவேற்க வேண்டிய ஒரு முடிவு , தங்கள் கவிதை அந்நிலையை நன்கு எடுத்துக்காட்டியது. இனியாவது இந்த அரசியல் கொஞ்சம் குறையும் என எதிர்பார்ப்போம் . அருமையான பதிவு டைமிங் சூப்பர்.

Anonymous said...

யக்கோவ்...சூப்பர்... ;)