5.01.2009

எல்லாவற்றுக்கும் பணம்! அரசியலில் பிணம்!-இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதத்தில் கலைஞர் பற்றி ஆவேச உரை


உண்ணாவிரதம் என்றாலே நினைவுக்கு வருவது சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையே. புலம்பெயர்ந்து தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களால் நேற்று (30.04.2009) சேப்பாக்கத்தில் ஒரு உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் பல பிரபலங்களும் பிரமுகர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர். சென்னையின் வாகன நெரிசலை நீந்திக் கடந்து விருந்தினர் மாளிகையருகில் சென்று சேர்ந்தபோது, நடராஜன் (சசிகலாவின் கணவரே) பேசிக்கொண்டிருந்தார். வெளிநாடுவாழ் ஈழத்தமிழர்கள் இந்நிகழ்வு குறித்து அறிய ஆவலோடிருப்பார்கள் என்பதனால் அதனைப் பதிவாகத் தருகிறேன்.


பகுதி - 01
நடராஜன்:

முத்துக்குமார் தன்னை நெருப்புக்குத் தின்னக் கொடுத்தபோது, இவர் (கலைஞர்) எங்கே இருந்தார்? 13 இளைஞர்கள் ஈழப்பிரச்சனைக்காகத் தங்களை எரித்துக்கொண்டபோது வராத உணர்ச்சி இவருக்குத் திடீரென எங்கிருந்து பீறிட்டுக் கிளம்பியது? ஷேக்ஸ்பியரின் நாடகத்தைக் காட்டிலும் பெரிய நடிப்புடன் கூடிய இந்நாடகம் மிகக் கேவலமானது. அந்த நாடகத்தில் வரும் டயபாலிக் வில்லனைப் போல நடந்துகொண்டிருக்கிறார்.
ஒரு முதலமைச்சருக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தத்தவறி, கையாலாகாத்தனமாக, ஏதோ காற்றுவாங்கப் போவதுபோல அண்ணா சமாதிக்குப் போய் உண்ணாவிரதம் இருக்கிறார். இவர் உண்ணாவிரதம் இருந்து போர்நிறுத்தம் ஏற்பட்டதாம்! ‘போர்நிறுத்தம் செய்யப்படவில்லை’என்று ராஜபக்சே சி.என்.என்.க்குப் பேட்டி கொடுத்துவிட்டான். இப்போது முகத்தை எங்கே கொண்டுபோய் வைத்துக்கொள்வது. இப்போதும் நூற்றுக்கணக்கில் அங்கே மக்கள் செத்துக்கொண்டுதானிருக்கிறார்கள். இந்த இலட்சணத்தில் “எங்களைப் பொறுத்தவரை இது போர்நிறுத்தந்தான்”என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் ப.சிதம்பரம்.

‘13ஆம் திகதிவரை (தேர்தல் வரை) கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்’என்று ராஜபக்சேவுடன் இரகசிய ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ராஜபக்சே செய்வது சரியானால், அந்தப் பிரதேசத்தினுள் பத்திரிகையாளர்கள் செல்வதைத் தடுப்பது ஏன்? முதலமைச்சரே! 80 வயதுக்குப் பிறகு மூளை மங்கும் என்று சொல்லப்படுகிறது. உங்களுக்கு 85ஆகிறது. அரசியலிலிருந்து சற்றே விலகியிருங்கள்.

பதினொரு மணியளவில் பழ.நெடுமாறன் ஐயா அவ்விடத்திற்கு வந்தார். கூட்டம் மொத்தமும் எழுந்து நின்று மரியாதை கொடுத்தது. அது உண்மைக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு போல தோன்றியது.

நடராஜன் தொடர்கிறார்:

ஈழத்தமிழர் படும் இன்னல்களை விபரித்து ஒரு குறுந்தட்டு (சி.டி) வெளிவந்திருக்கிறதாம். அதைத் தேடி எங்கள் வீட்டிற்கு காவற்துறையினர் வந்திருந்தனர். ஒரு மாநில அரசாங்கத்திற்கு அதனால் என்ன தொந்தரவு? உண்மையைத்தானே அந்தக் குறுந்தட்டில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்? ஆட்சியிலே இருக்கிறவர்களிடம்தான் கள்ளப்பணம், கறுப்புப்பணம் இருக்கிறது. எங்கள் வீடுகளில் வந்து என்ன தேடுகிறார்கள்?
‘வடக்கே காங்கிரஸ் இனி ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை’ என்று அவர்களே ஒத்துக்கொண்டுவிட்டார்கள். இங்கே இருக்கும் கபோதிகளுக்குத்தான் அது இன்னமும் புரியவில்லை. காவற்துறையினரே! வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். சீமான் மீது குற்றமில்லை என்று நீதிமன்றத்தில் சொல்லி அவரை விடுதலை செய்துவிட்டார்கள்.

மத்திய அரசுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். இலங்கையில் நடைபெறும் இனவழிப்புக்குத் துணைபோன குற்றத்திற்காக நீங்கள் ஒருநாள் சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்தப்படுவீர்கள்.

அடுத்து பழ.நெடுமாறன் ஐயா பேசினார்.

ஒட்டுமொத்த தமிழ்நாடும் உங்களுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நீங்கள் உண்ணாவிரதம் இருக்க முன்வந்திருக்கிறீர்கள். நாங்கள் உங்களுக்காகப் போராட வேண்டுமே தவிர, இங்கே இருக்கிற நீங்கள் உங்களை வருத்திக்கொள்ளக் கூடாது. மத்திய அரசு உங்களைக் காப்பாற்றத் தவறிவிட்ட நிலையில் நீங்களாகக் களத்தில் இறங்கியிருக்கிறீர்கள். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் உங்களுக்காகத் தொடர்ந்து போராடும்.
அங்கே ஈழத்தில் போர்நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது போன்ற மாயையைத் தோற்றுவிக்க கருணாநிதியும், ப.சிதம்பரமும் முயற்சி செய்கிறார்கள். இந்தப் பிரச்சனையைத் திசைதிருப்புவதே அவர்களது நோக்கம்.
கலைஞர் அரசியல் நாடகங்களில் நடித்துப் பழக்கப்பட்டவர். இப்போது முதலமைச்சராக வந்தபின்னும், அரசியலிலும் நடிக்கிறார். நீங்கள் நினைத்திருந்தால் இந்தப் போரை எப்போதோ நிறுத்தியிருக்க முடியும்? அதற்கான அதிகாரம் கையிலிருந்தும் அதை நீங்கள் செய்யத் தவறிவிட்டீர்கள். ஆளுங்கட்சியில் இருக்கும் நீங்கள் மக்களை ஏமாற்றுவதற்காக உண்ணாவிரதம் என்றொரு நாடகத்தை ஆடுகிறீர்கள். உங்கள் நாடகங்களை இனங்கண்டுகொள்ளுமளவுக்கு மக்கள் தேறிவிட்டார்கள்.

ஜனநாயக ரீதியில் நான் பேசுவதனால் சட்டம், ஒழுங்கு கெடும் என்று பல இடங்களில் எனக்குத் தடைவிதிக்கிறீர்களே… நீங்கள் உண்ணாவிரதம் இருந்தபோது, உங்கள் தொண்டர்கள் கலவரம் செய்தார்களே… அப்போது சட்டம், ஒழுங்கு சீர்குலையவில்லையா? சட்டத்தை மீறும் செயலில்லையா? ஜனநாய விரோதப் போக்கில்லையா?

சிவாஜிலிங்கம் மீது பொய்வழக்குப் போடப்பட்டிருக்கிறது. எங்கிருந்தோ வந்த சோனியா காந்திக்காக நீங்கள் பிரச்சாரம் செய்யலாமென்றால், எங்கள் சகோதரர் சிவாஜிலிங்கம் இலங்கையில் நடப்பதை அம்பலப்படுத்தினால் அது தவறா? அவர்மீது கைவைத்தால் ஒட்டுமொத்தத் தமிழகமும் கொதித்தெழும் என்பதை நான் உங்களுக்குச் சொல்லிவைக்கிறேன்.

மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருமானால், அவர்கள் நேரடியாக இந்திய இராணுவத்தை இலங்கையில் இறக்குவார்கள். அதன்பிறகு நேரும் அனர்த்தம் பெரிதாக இருக்கும்.

இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றில் பிரபாகரனைப் போலொரு வீரன் தோன்றியதில்லை. அவருடைய வழிகாட்டலில், அவருடைய காலத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஒரு மீட்சி கிடைக்கும். சிங்கள இராணுவம் தோற்கப்போவது உறுதி. விடுதலைப் புலிகள் வெல்லப்போவதும் உறுதி.

இதனிடையில் கூட்டத்தை ஒழுங்கமைத்துக்கொண்டிருந்தவர் (அவர் பெயர் தெரியவில்லை) ஒரு செய்தியைக் கூறினார். அதாவது, கும்மிடிப்பூண்டி முகாமிலிருக்கும் அகதிகளுக்கு (இப்படி எழுதுவது வருத்தமாக இருக்கிறது) இந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு முதலில் வட்டாட்சியர் அனுமதி வழங்கியதாகவும், கூட்டம் நடப்பதற்கு முன்தினம் இரவு அந்த அனுமதியை மீளப்பெற்றுவிட்டதாகவும் சொல்லி வருத்தப்பட்டார்.

இதனிடையில் பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களைச் சேர்ந்தவர்கள், அங்கே வந்திருந்த மக்களில் சிலரை கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள். சிலர் பதில்சொல்ல மறுத்தார்கள். ‘கியூ பிரான்ச்’ பிரச்சனை பண்ணினால் பிறகென்ன செய்கிறது?’என்று கதைத்துக் கொண்டார்கள். வாயைத் திறக்க அஞ்சும் சூழலை அங்கு காணமுடிந்தது.


அடுத்து வின் தொலைக்காட்சி இயக்குநர்(அப்படித்தான் காதில் விழுந்தது)

இந்தியா உண்மையில் அடிமைப்பட்டுக்கிடக்கிறது. இந்தியாவை எங்கிருந்தோ வந்த சோனியா காந்தி ஆண்டுகொண்டிருக்கிறார். ஏன் இந்தியாவை ஆளத்தக்க தகைமையுடைய ஒரு இந்தியன் கூட இந்த நாட்டில் இல்லையா? பாகிஸ்தானிடம் துயர்ப்பட்டுக்கொண்டிருந்த பங்களாதேசுக்கு ‘இந்தியாவின் மகள்’இந்திரா காந்தி விடுதலை பெற்றுக்கொடுத்தார். ஆனால், சோனியா காந்தியிடம் அந்த இரக்கம் இல்லை.

சிவாஜிலிங்கத்தின் மீது சட்டம் பாய்ந்திருக்கிறது. அவரை நாடுகடத்தும் வேலைகள் நடக்கின்றன. சிவாஜிலிங்கம் எங்களுக்கு உறவு. இத்தாலி ராணி சோனியா உங்களுக்கு என்ன உறவு?
விடுதலைப் போராளிகள் இறந்துபடக்கூடும். ஆனால், விடுதலைப் போராட்டங்கள் தோற்றதாக வரலாறு கிடையாது. நிச்சயம் ஈழம் மலர்ந்தே தீரும்.


நாங்கள் இருந்த இடத்தில் இருக்கைகள் போதாமற் போய்விட்ட காரணத்தால், சாலையின் எதிர்ப்புறத்தில் நாற்காலிகள் போடப்பட்டு அங்கும் மக்கள் அமர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.


அம்பேத்கர் புரட்சிப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணப் பறையனார் அடுத்து உரையாற்றினார்.


‘என்னுடைய உண்ணாவிரதத்தினால் போர்நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது பார்’ என்று காட்டுவதற்காக கலைஞர் நாடகமாடினார். அது ஒரு திசைதிருப்பல் நாடகம். தனது ஆட்சியை, மாட்சியைத் தக்கவைத்துக்கொள்ள கலைஞர் ஆடிய நாடகம். நெடுமாறன் ஐயா வந்தபோது எல்லோரும் எழுந்து நின்றதைப் பார்த்தோம். அவர் உண்மையே பேசுகிறவர். அவருக்குண்டான மரியாதை எப்போதும் இருக்கிறது.

எங்களிடம் அதிகாரம் இல்லை. நாங்கள் உண்ணாவிரதம் இருக்கலாம். ஆனால், கருணாநிதி இருக்கலாமா? இப்படி பொய்மையின் உருவமாக இருக்கிறாரே… என்று நினைத்து எனக்குக் கண்கள் கலங்கிவிட்டன. “அவரிடம் எல்லாத் திறமைகளும் இருக்கின்றன. ஆனால், அவர் நல்லவர் இல்லை”என்று எம்.ஜி.ஆர். அன்று சொன்னார். அது எவ்வளவு உண்மை! ஈழத்தமிழர் பிரச்சனையில் அவரது நடிப்பு தெரிந்துபோயிற்று.
ஈழத்தமிழர்கள் படுகின்ற இன்னல்களைக் குறித்து கருணாநிதி மகிழ்ச்சி அடைகிறார்போலும். மத்தியில் ஆள்பவர்களின் சொல்லைக் கேட்டால்தான் அவர் ஆட்சியில் நீடித்திருக்கமுடியும்.

எதைச்சொன்னாலும் பொய்! ஆள்பவன் பொய் சொல்லலாமா?
இலவசங்களை அள்ளிக்கொடுக்கிறார்களாம். தொலைக்காட்சிகளில், பத்திரிகைகளில் விளம்பரத்துக்காக என்னவெல்லாம் செய்கிறார் இவர். கேவலம் எல்லாவற்றுக்கும் பணம்! அரசியலுக்குப் பிணம்! அத்தனை கோடி பணமும் உங்கள் குடும்பத்தில்தானே கொட்டிக்கிடக்கிறது. அறிஞர் அண்ணாவுக்கு அருகில் நிற்கத் தகுதியற்றவர் கருணாநிதி. இனி உங்கள் பொய் வாழாது. இனி எம்மை ஆளாது.

திருமாவளவனை எங்கள் தலைவன் என்று தூக்கிவைத்துக் கொண்டாடினோம். ஒரு எம்.பி. சீட்டுக்காக ஒட்டிக்கொண்டிருக்கிறார்.

சோனியா என்பவர், தன்னுடைய கணவர் ராஜீவ் காந்தியின் உயிருக்கு ஈடாக எத்தனை உயிர்களைப் பலியெடுக்கப்போகிறாரோ தெரியவில்லை.
இலவசம் இலவசம் என்று கொடுப்பதனால் மாநிலம் அழிவின் விளிம்பை நோக்கிச் செல்கிறது. இலவசம் என்ற வார்த்தை சோம்பேறிகளை உருவாக்குகிறது. எல்லாம் இலவசமாகக் கிடைத்து பிறகொருநாள் கிடைக்காமல் போகிறபோது, குற்றச்செயல்கள் அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது. இலவசங்களுக்கப் பதிலாக வேலை வாய்ப்புகளை வழங்கு என்றுதான் நாம் கேட்கிறோம்.
அவருடைய கட்சிக்காரர்களே அவரைத் திட்டுகிறார்கள். காசு கொடுக்கவில்லையென்றால் ஒரு பயலும் நிற்கமாட்டான்.

இயக்குநர் மனோஜ்குமார் அடுத்து பேசினார்.

நான் புலிகளை நேசிக்கிறேன். நான் புலிகளை ஆதரிக்கிறேன். நான் அவர்களைப் பாதுகாப்பேன். ஏனென்றால், என் தேசத்தினுடைய மிருகம் புலிதானே….
இலங்கையில் போர்நிறுத்தம் என்பது வெறும் கண்துடைப்பு நாடகம். ‘போர்நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது’என்று, இலங்கையில் போடப்பட்ட குண்டைவிடப் பெரிதாகத் தூக்கி தமிழகத்தாரின் தலைகளில் போட்டார்கள். இந்த மாநிலத்தை ஆளும் ஒரு முதலமைச்சர் இப்படி ஒரு பொய்யைச் சொல்லலாமா?

அடுத்து, அவர் தன்னுடைய உறவுகள் இலங்கையில் இருந்து புலம்பியழுவதை அப்படியே அழுதுகாட்டினார்.
“சிங்களவன் குண்டுபோட்டுக் கொல்வது உங்க காதுல கேட்கிறதாய்யா? இலவச அரிசி குடுக்கிறீங்களாமேய்யா… அதுல கொஞ்சம் இங்க அனுப்பிவைச்சு எங்களுக்கு வாய்க்கரிசி போட்டுடுங்கய்யா” என்று ஆரம்பித்து சிறிது நேரத்திற்கு ஒரே அழுகைக் குரலில் நிறையப் பேசினார். கூட்டத்திலிருந்த பெண்களில் சிலர் விம்மியழுதார்கள்.

அறிவொளி இயக்க மாநிலச் செயலாளர் இன்சுவை பேசுகையில்,

இங்கிருந்து வேலைக்காகக் கொண்டுசெல்லப்பட்டவர்களே அங்கு வாழும், தற்போது இன்னல்படும் தமிழர்கள் என்ற தொனிப்படப் பேசினார். (என் புரிதல் தவறாக இருக்கலாம்) கலைஞர் ஆடியது ஒரு நாடகம். தமிழகம் எழுச்சியுறப் போராடுவோம்.


(இன்னமும் இருக்கிறது)
பதிவு நீளமாக இருப்பதால் இரண்டு பகுதிகளாகப் பிரித்துப் போடுகிறேன்.





19 comments:

Anonymous said...

இலங்கையிலிருந்து இந்த தேவடியாள்களும், தேவடியா மகன்களும் வந்ததற்கு பிறகு தான் இங்கே தீவிரவாதம் தலைதூக்கியது. கிழபாடு கருணாநிதியும் இவனுகளை பயன்படுத்தி தமிழ்நாட்டை கொள்ளை அடித்தான். இந்தியா உருப்பட இந்த தேவடியாள்களையும் தேவடியா பையன்களையும் துரத்தி அடிக்க வேண்டும். ராஜபக்‌ஷே நல்ல வேலை தான் செய்து கொண்டிருக்கிறார்.

தமிழ்நதி said...

அனானி,

நீர் உடனே ஓடோடிவந்து இதற்குப் பின்னூட்டமிடுவீர் என்று நான் எதிர்பார்த்தேன். ஏனென்றால், நீர்த்துப்போய்க்கொண்டிருக்கிற ஒன்றைத் தூக்கிப் பிடித்துக்கொண்டிருப்பவர்கள் உங்களைப் போன்ற ஒரு சிலரே. அதைப் பதிவுலகம் மொத்தமும் அறியும். உமக்காக உமது சீற்றத்தைக் கிளப்பவே இப்படியொரு தலைப்பு. ஏன் உம்முடைய பெயரில் ஒரு பின்னூட்டமிட உமக்குத் துப்பில்லையா? நான் 'பணம், பிணம்'என்று சொல்லியிருப்பவர் கிருஷ்ணப் பறையனார் என்ற தமிழ்நாட்டுக்காரர்தான். ஈழத்திலிருந்து ஓடிவந்த நீர் குறிப்பிடும் எந்தத் தேவடியாளுமில்லை. ராஜபக்சேயின் வேலையைப் பாராட்டுமளவுக்கு நீர் வளர்ந்திருக்கிறீர். உமது காழ்ப்புணர்வை என்னவென்பது? திரை இறக்கியாச்சு. கூத்து முடிஞ்சுபோச்சு. போய் வேலையைப் பாரும்.

Anonymous said...

காங்கிரஸ் கிழட்டு நரிகள் மீது செருப்பு வீசும் புனித சேவையை செய்ய விரும்பும் இனமான சிங்கங்கள் கவனத்திற்கு. தனி ஒரு ஆளாக செருப்பு வீசாதீர்கள். அரசு எந்திரத்தின் கைத்தடி காவலர்களும், முட்டாள் அல்லக்கைகளும் உங்களை தாக்கக் கூடும். கைது, வழக்கு என்று போராட்டம் திசை திரும்பி விடும். எனவே செருப்பு வீச முடிவு செய்திருப்போர் 100 பேர், 50 பேர் என்று எண்ணிக்கையில் அதிகம் பேர்கள் செருப்பு வீசினால் அவர்களுக்கு சிக்கல். மொத்தமாக அத்தனை பேரையும் கைது செய்ய மாட்டார்கள். அபஅபடஇ கஐது செய்தாலும் விடுவித்து விடுவார்கள். நாமும் போராட்டத்தை தொடரலாம்.

ரவி said...

அனானி ஆப்ஷன் எடுத்திருங்களேன். கிட்டத்தட்ட இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்துடலாம்...

தமிழ்நதி said...

அனானி நண்பரே,

நீங்கள் சொன்னதை எடுத்துக்கொள்ள வேண்டியவர்கள் எடுத்திருப்பார்கள். ஒரு வார்த்தை ஆங்கிலத்தில் போட்டிருக்கிறீர்கள். அது தமிழில் மாறிக் கிடக்கிறது.என்னவென்று தெரியவில்லை.

செந்தழல் ரவி,

அனானி option ஐ எடுத்துவிடலாம். ஆனால், வலைப்பூ வைத்திருக்காத நண்பர்கள் சிலரும் வந்து பின்னூட்டமிடுகிறார்கள். சொல்லவேண்டியதைச் சொல்லமுடியாமல் போவது பாவமல்லவா? ஏற்கெனவே அதைத்தானே நாங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்:) அத்தகையோருக்காக அதை விட்டுவைத்திருக்க வேண்டியிருக்கிறது. இல்லையெனில் அதையும் மூடிவிடலாம். பார்க்கலாம் இன்னும் சிலநாட்கள்.

வெண்காட்டான் said...

nice. anony ippadithan. vidungo. kevalamanavngal. ondu pattirukkum eela thamilariyum tamillga thaalivarikalaiyum pirika ippadithan saivarkal.

பொன்னர் said...

இந்த உண்ணாவிரதம் பற்றி எந்த ஊடகமும் செய்திவெளியிடவில்லை. கருணாநிதி தயாநிதியிடம் ஈழத்தமிழர் ஆதரவை எதிர்ப்பார்ப்பது முட்டாள் தனம். ஜெயலலிதாவோ தனிஈழம் என்ற தேர்தல் கால ஜூரத்தில் பாதிக்கப்பட்டிருக்கின்றார். ஆகவே இவரும் இதனை ஒளிபரப்பமாட்டார். தகவல்களுக்கு நன்றிகள்.

முந்திரிக்கொட்டை அனானி யார் என்பது புரிகின்றது.

soorya said...

அச்சா..அச்சா..
அநானிக்கு..என் வாழ்த்துகள்.
நீ மவனே தமிழ்நதியிடம் முறையா வாங்கிக்கட்டாம போகவே மாட்டியா..?
சரியப்பா..
வாங்கிக் கட்டு. உன் தலைவிதியை நீயே நிர்ணயித்தாய். வாழ்க நீ.
தமிழ்நதியின் எழுத்து உன்னைப் பொசுக்கும்.
நீ வெட்கித் தலை குனிந்து..கூனிக்குறுகிக் குற்றவுணர்வால் சீரழிவாய்.
அதைப் பார்க்க நானும் இருக்க மாட்டேன், நீயும் இருக்க மாட்டாய்.
காலத்தின் கோலங்களைப் புரியாத மானிட மிருகமே...
உனக்கு எழுத்து, இயக்கம், விடுதலை, தியாகம் என்பவற்றுக்கு அர்த்தமே தெரியாது.
உனைப் பற்றி எழுத விளைந்த என் கைகளில் இப்பொழுதே ரோகம் தொற்றுகிறது.
போ புழுத்துச் சா...!

ரவி said...

you can have open ID too. check my blog.

பிரம்மபுத்திரன் said...

பாவமஇ.. திமுக காங்கிரஸ் தொண்டர்கள். இப்பிடி இறுதி நேரத்தில் தமது கழுத்துக்கு ஈழம் ஒரு கத்தியாக இறங்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அவர்களின் பார்வையில்.. நாசமாப்போன ஈழத்தமிழர்களால்தான் நம்ம தலைவருக்கு இந்த இக்கட்டு என்ற எரிச்சல்.. அதுதான் அப்படி பேசுகிறார்கள்.

ஆண்டவரே.. அவர்கள் அறியாமல் பேசுகிறார்கள். அவர்களை மன்னியும்.

பதி said...

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்த்து விவாதிக்க இயலவில்லை/முடியவில்லை எனில் தனிமனித தாக்குதலில் இறங்குவது தான் ஈனத் தலைவனின் அரசியலில் இவர்கள் கற்ற பாடம்.. அது வலையுலகிலும் தொடர்கிறது...

அவ்வளவே...


இந்த அனானிகள் விசயத்தில் நான் செந்தழல் ரவியினை வழிமொழிகிறேன்... அல்லது இது போன்ற குப்பகளை அனுமதிக்காதீர்கள்...

சுந்தரவடிவேல் said...

For the Snapjudge, Boston Bala, who has linked this page below:

This is ridiculous! Where does that post say that it is an LTTE support meet? One does not have to be an LTTE supporter to have some humanity and to fight human right abuses or war crimes. I dont understand what you gain by stamping like this. Shame on you Boston Balaji!

Anonymous said...

தோழர் சுந்தரவடிவேல் நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல். அந்த ஆளை விட்டு தள்ளுங்கவே. இன்னிக்கு நேத்திக்கா இந்த மாதிரில்லாம் எணைப்பு கொடுக்கிறாரு. இன்னிய காலகட்டத்துல இதுமாதிரியான குடைசலுகள போடான்னு விட்டு தள்ளிடனும்

தமிழ்நதி said...

வெண்காட்டான்,

நீங்கள் சொன்னதையே நானும் நினைத்தேன். ஈழத்தமிழர்களையும் தமிழகத் தமிழர்களையும் பதிவுலகிலாவது பிரித்துப்போடலாமே என்ற நல்லெண்ணத்தினால்(!) இப்படியான பின்னூட்டங்களை அனுப்புகிறார்கள். அதைப் பிரசுரிக்காமல் விடலாம்தான். ஆனால், இவ்வளவு காழ்ப்புணர்ச்சியைக் கொட்டுபவர்களும் நம்மிடையில் இருக்கிறார்கள் என்று காட்டவே அதை அனுமதித்தேன். இதைவிட அட்டகாசமான பின்னூட்டங்கள் எல்லாம் வந்திருக்கின்றன. அவையெல்லாம் பிரசுரிக்கத் தகாத வார்த்தைகளைக் கொண்டவை. (அப்படியெல்லாம் வார்த்தைகள் இருக்கின்றனவா என்று சில புத்திசாலிகள் கேட்கக்கூடும்.என்ன செய்வது.. நடப்பதற்கு இன்னமும் கால்களையே பயன்படுத்துகிறோம்)

நாவேந்தன்,

நானும் அடுத்தநாள் காலையில் பத்திரிகைகளில் தேடினேன். செய்தி அகப்படவில்லை. நீங்கள் குறிப்பிட்ட ஊடகங்கள் ஊதுகுழல்களாகிவிட்டன. ஊடக தர்மம் அரசியலில் சீரழிகிறது. பார்த்திருக்கவே விதிக்கப்பட்டோம்.


முந்திரிக்கொட்டை அனானி யார் என்பது உங்களுக்கும் தெரிந்துவிட்டதா? எனக்கு வந்த பல அனானிப் பின்னூட்டங்களை அதுதான் அனுப்பியிருந்தது என்பதை என்னால் சான்றுகளோடு நிறுவமுடியும். எதற்கு வீண்பிரச்சனை என்று பார்க்கிறேன்.
'எஸ்.ரா.வை வால்பிடிக்கிறாய்' என்று அது சொல்லும்போதே பளிச்சிட்டது. இப்போது தெளிவாகத் தெரிந்துவிட்டது.

சூரியா, ஆதரவுக்கு நன்றி. கடைசி ஆட்டம் நடக்கிறது. இனித் திரையை இழுத்து மூடிவிடுவார்கள். மெல்லத் தளர்ந்து வீதியில் இறங்கி நடந்துபோகும் அவர்களை நாம் பார்க்கத்தான் போகிறோம்.

செந்தழல் ரவி,

உங்கள் வலைப்பூ சென்று பார்த்தேன். ம்.. open IDயை நண்பர்கள் பயன்படுத்தலாம்தான். இதற்குள் word verification என்று ஒன்று. நமது மக்களின் சுறுசுறுப்பு நீங்கள் அறியாததல்ல:) எதற்கும் சிலநாள் விட்டுப்பார்க்கலாம். அனானி சொல்லும் விமர்சனங்களில் சில என்னை நான் மாற்றிக்கொள்ளவும் உதவியிருக்கின்றன. ஆனால், இந்தக் கெட்டவார்த்தைகளைத்தான் தாங்கமுடியவில்லை. பெண்களாக இருந்தால் எப்படியான வார்த்தைகளைப் பிரயோகிப்பார்கள் நமது மரியாதைக்குரிய சகோதரர்கள் என்று உங்களுக்குத் தெரியும் அல்லவா? என் கணவர் சொல்வார் 'மரத்தைக் கண்டால் நாய்கள் காலைத் தூக்கவே செய்யும்'என்று. அப்படித்தான் இப்போது நினைத்துப் பேசாதிருக்கிறேன்.


பிரம்மபுத்திரன், நீங்கள் நல்லவரா? கெட்டவரா? ஆனால், நீங்கள் அவரில்லை. இந்தப் பெயரை வைத்துக்கொண்டு எத்தனை பேர் அலைகிறார்கள் என்று சிரிப்பாக இருக்கிறது. வேறு பெயர்களே கிடைக்கவில்லையா? ஒருவேளை, பிரம்மனின் படைப்பில் வந்த எமக்கெல்லாம் ஒரு பெயர்தானோ என்னவோ:)

எது எவ்வாறு இருப்பினும் நீங்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருப்பது போல, "நாசமாப்போன ஈழத்தமிழர்களால்தான் நம்ம தலைவருக்கு இந்த இக்கட்டு" என்ற எரிச்சல்தான் காரணம். ஈழத்தமிழர்கள்-இந்தியத்தமிழர்கள் என்பதைத் தாண்டி ஒரு பொதுவான நியாயம் இருக்கிறதல்லவா... மனிதநேயம். அதைக் குறித்தேனும் இவர்கள் சிந்திக்கலாம்.

நன்றி பதி,

ஆற்றாமையினால் தூற்றுகிறவர்களை என்ன செய்ய? அடிபட்டுத் துள்ளுவதை வேடிக்கை பார்க்கலாம்.

சுந்தரவடிவேல்,
நானும் அதைப் பார்த்துவிட்டுத் துணுக்குற்றேன். 'என்ன இப்படிப் போட்டிருக்கிறாரே'என்று. ஏனென்றால், இங்கே இருக்கிற ஈழத்தமிழர்கள் ஏற்கெனவே பெரிய சிக்கலில், வாயே திறக்க முடியாத சிக்கலில், ஏறத்தாழ அடிமைகள்போலத்தானிருக்கிறார்கள். இப்படியொரு தலையங்கம் நிச்சயம் பாதிக்கும். ஆனால், அவரிடம் சொல்வதெப்படி என்று தயங்கினேன். நீங்கள் வந்து சொல்லியிருக்கிறீர்கள் நன்றி.

அனானி நண்பரே,

உங்களுக்கு நிச்சயமாக வலைப்பூ இருக்கும். 'இன்னிக்கு நேத்திக்கா'என்பதிலிருந்து அதைத் தெரிந்துகொண்டேன். உங்கள் வலைப்பூ வழியாக வாருங்களேன். அடையாளம் இருப்பவர்கள் முடிந்தவரை அனானிகளாகாமல் இருக்கலாம். ஏற்கெனவே பல அடையாளங்களை நாம் தொலைத்திருக்கிறோம்:)

Anonymous said...

Mr.Sundara Vadivel,

It seems that you having 'vadivel' in your name is not an accident. You are more comical than the real McCoy.

If it's not an LTTE supporters meet, why did the speakers speak the following?

Nedumaran

இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றில் பிரபாகரனைப் போலொரு வீரன் தோன்றியதில்லை. அவருடைய வழிகாட்டலில், அவருடைய காலத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஒரு மீட்சி கிடைக்கும். சிங்கள இராணுவம் தோற்கப்போவது உறுதி. விடுதலைப் புலிகள் வெல்லப்போவதும் உறுதி.

இயக்குநர் மனோஜ்குமார்

நான் புலிகளை நேசிக்கிறேன். நான் புலிகளை ஆதரிக்கிறேன். நான் அவர்களைப் பாதுகாப்பேன். ஏனென்றால், என் தேசத்தினுடைய மிருகம் புலிதானே….(Don't joke by saying that he actually meant the animal and not LTTE)

தமிழ்நதி said...

நண்பர்களே,

இந்தப் பதிவில் (கவனிக்கவும் இந்தக் குறிப்பிட்ட பதிவில்) இனி இடப்படும் அனானி பின்னூட்டங்களை அனுமதிக்கப்போவதில்லை. தயவுசெய்து வலைப்பூ வழியாக வந்து உங்கள் கருத்தை நேர்மையோடு பதிவுசெய்யுங்கள்.

பிரம்மபுத்திரன் said...

இந்தப் பதிவில் (கவனிக்கவும் இந்தக் குறிப்பிட்ட பதிவில்) இனி இடப்படும் அனானி பின்னூட்டங்களை அனுமதிக்கப்போவதில்லை. தயவுசெய்து வலைப்பூ வழியாக வந்து உங்கள் கருத்தை நேர்மையோடு பதிவுசெய்யுங்கள்.//

அவ்..
நான் ஆரம்பித்த வலைப்பதிவின் கடவுச்சொல் மறந்துவிட்டது. ஆதலால் எனக்கு சிறப்பு அனுமதி தரவும்

தமிழ்நதி said...

பிரம்மனின் நாபிக்கமலத்தினின்று உதித்தவர்கள் அனைவரும் பிரம்மபுத்திரர்களே:) என்று சொல்கிறார்கள்.

திரைப்படமொன்றில் ஒரு காட்சி வரும். சைக்கிள் கடையொன்றில் செந்தில் வந்து வாடகைக்கு சைக்கிள் கேட்பார். 'உனக்கு என்ன பெயர்?'என்று கவுண்டமணி கேட்பார். 'சுப்பிரமணி'என்பார் செந்தில். 'சுப்பிரமணி என்ற பேர்வழிக்கெல்லாம் சைக்கிள் வாடகைக்குக் குடுக்கிறதில்லை'என்பார் கவுண்டமணி. எனக்கு ஏனோ அந்த ஞாபகம் வந்தது.

சிறப்பு அனுமதி பெற்று அப்படி என்னதான் எழுதப்போகிறீர்கள்? உங்கள் கடவுச்சொல் உங்களுக்கு உண்மையிலேயே மறந்துவிட்டது என்று ஒரு பேச்சுக்காக வைத்துக்கொள்வோம்.

Voice on Wings said...

நன்றி, தமிழ்நதி, இந்தப் பதிவை முன்பு பார்க்கத் தவறி விட்டேன்.

//அறிவொளி இயக்க மாநிலச் செயலாளர் இன்சுவை பேசுகையில், இங்கிருந்து வேலைக்காகக் கொண்டுசெல்லப்பட்டவர்களே அங்கு வாழும், தற்போது இன்னல்படும் தமிழர்கள் என்ற தொனிப்படப் பேசினார். (என் புரிதல் தவறாக இருக்கலாம்)//

இது உண்மை என்றால் இது போன்ற புரிதல் பிழைகள் முதலில் திருத்தப்பட வேண்டியவை. அறிவொளி இயக்கத்தின் ஒரு முக்கியப் பொறுப்பில் இருப்பவர் இத்தகைய அறியாமையிலிருப்பது வியப்பைத் தருகிறது. தன் மீதும் கொஞ்சம் அறிவொளியைப் பாய்ச்சிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திலிருக்கிறார் என்று நினைக்கிறேன் :)