6.26.2009

‘பிரபாகரன்’ என்ற பெயர் காலச்சரிவில் புதையுறும் ஞாபகமா?



“ஒருவகையில் போராளியின் வாழ்வே ஒரு அழகிய கனவைப் போன்றது எனக் கூறலாம். கனவிலிருந்து விழித்தெழுதல் என்பது விடுதலை அடைவதுதான்”- மஹ்மூத் தார்வீஷ்

கண்கள் இரு நதிகளாய் பெருக்கெடுத்த பிரிவுகளை, இந்தக் கணமே பூமி பிளந்து நம்மை விழுங்கிவிடலாகாதா என்று உயிரை வெறுத்த கணங்களை, ‘இது பொய்… இது பொய்’என்;று நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டு பதறிக்கடந்த மரணங்களை காலம்தான் மறக்கடித்தது. அவ்வகையில் காலத்தை வணங்குதல் செய்வோம். ஆனால், காலத்தைச் செழுமைசெய்த மாமனிதர்களையும் அவர்தம் மகோன்னதக் கனவுகளையும் அந்தக் காலமே மறக்கடிக்குமெனில், காலத்தை வணங்கிய கைகளைக் கீழிறக்குவோம்.

‘பிரபாகரன்’என்ற பெயரில் ஒரு வசீகரம் இருந்தது. அந்த மந்திரச்சொல் உலகெங்கிலும் வாழ்ந்த கோடிக்கணக்கானவர்களை இயக்கியது. அவரைக் கண்ணால் காண்பதொன்றே இப்பிறப்பின் பெரும்பேறு என்று கருதிய மனிதர்களும் இருந்தார்கள். அவரை நினைக்குந்தோறும் பெருமிதமும் வீரமும் நன்றியுணர்ச்சியும் நெகிழ்வும் பரிவும் பரவசமும் புளகாங்கிதமும் புத்துணர்வும் பொங்கிவழியத் தூண்டும் அபரிமித ஆற்றல் பொருந்தியவராக அவர் விளங்கினார். பல்கலைக்கழகத்தில் எனக்கு வரலாற்றுப் பாடம் எடுத்த ஒரு பேராசிரியர் சொல்வார்: “நான் எவ்வளவோ கதைக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டு அவரைச் சந்திக்கச் செல்வேன். ஆனால், அவரது கண்களைப் பார்த்ததும் எனக்கு எல்லாம் மறந்துபோய்விடும். பிரபாகரன் சொல்வதற்கு மேலும் கீழுமாகத் தலையை ஆட்டிக்கொண்டு அவர் முன் அமர்ந்திருப்பேன். அந்தக் கண்களின் ஈர்ப்பின் முன்னால், வார்த்தைகளிலுள்ள சத்தியத்தின் முன்னால், பேரறிவோடு கூடிய ஆளுமைக்கு முன்னால் என்னை மறந்து நான் கட்டுண்டு இருப்பேன்”. இப்படிச் சொன்னவர் சாதாரண மனிதரல்ல. உலக அரசியலைக் கரைத்துக் குடித்தவர். பின்னாளில் தமிழீழத்தின் அறிவுஜீவிகளில், விரல்விட்டு எண்ணத்தகுந்தவர்களில் ஒருவராகவும் சிறந்த அரசியல் ஆய்வாளராகவும் அறியப்பட்டார். சில காரணங்களால் அவரது பெயரை இங்கு குறிப்பிட முடியவில்லை. ஆளுமையின் மறுபெயர்தான் பிரபாகரன். மற்றுமொரு நண்பர் சொல்வார்: “சக மனிதர்களின் கால்களில் விழும் கேடுகெட்ட இழிசெயலை நான் ஒருபோதும் செய்யமாட்டேன். ஒருவர் மட்டுமே அதற்கு விதிவிலக்கு; அவர் எங்கள் ஒப்பற்ற தலைவர் பிரபாகரன்.”

1987ஆம் ஆண்டு இலங்கை அதிபராக இருந்த ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியும் இலங்கை-இந்திய உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதையடுத்து, புலிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைக்க ஒப்புக்காக முன்வந்தனர். அப்போது சுதுமலையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளுக்குள் ஆற்றாமைபொங்க உரையொன்றை ஆற்றினார். அதைக் கேட்கவும் அவரைப் பார்க்கவுமென குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் நான்கு இலட்சம் மக்கள் திரண்டுவந்தனர். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. லொறிகளிலும் பேருந்துகளிலும் கார்களிலும் கால்நடையுமாக சாரிசாரியாக எங்கெங்கோவிருந்தெல்லாம் மக்கள் வந்து சேர்ந்தனர். கூட்டம் நடைபெறுவதற்கு சற்று தள்ளியே வாகனங்கள் நிறுத்தப்பட நாங்கள் நெருக்கியடித்துக்கொண்டு நடந்துபோனோம். ஒருவர் மீது மற்றவர் படாமல் நடக்கவே முடியாது. மரங்கள் மீதும் வீட்டின் கூரைகள் மீதும் பல்லாயிரக்கணக்கான ஆண்கள் அமர்ந்திருந்தனர். அன்றைக்கு அந்தக் கூட்டத்தை அங்கு இழுத்துவந்தது ‘பிரபாகரன்’என்ற பெயர்தான். அவர் என்னதான் பேசப்போகிறார் என்பதைக் கேட்கும் ஆவல்தான்.

குரல் தளுதளுக்க கண்கள் பளபளக்க அவர் பெயரை நெஞ்சுகொள்ளாத பரிவோடு உச்சரித்த இலட்சக்கணக்கான மக்கள் இன்றைக்கு மனமிடிந்து கிடக்கிறார்கள். எவருடைய வாழ்வும் வரலாறும் தன்னைப் போராட்டத்தை நோக்கிச் செலுத்தியதென்றும், தூண்டியதென்றும் பிரபாகரன் சொன்னாரோ- அந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸைப் போலவே அவருடைய ‘மறைவும்’அமைந்துபோன அதிசயத்தை என்னவென்பது?

‘பிரபாகரன் இருக்கிறாரா? இல்லையா?’என்பதுதான் தமிழர்களைப் பொறுத்தவரை இன்றைய மில்லியன் டொலர் கேள்வியாக இருக்கிறது. இருக்கிறார் என்றால் எப்போது தன்னை வெளிப்படுத்திக்கொள்வார்? இல்லையென்றால், இனி நம் கதி என்ன? சிங்கள பௌத்த மேலாதிக்க அரசின் கால்களை நக்கிப் பிழைக்கும் அடிமை நாய்களாக வாழ்ந்திருப்பது (அன்றேல் செத்துக்கிடப்பது) எத்தனை காலம்? ‘தமிழர்களுக்கான தீர்வுகள்’ என்ற பெயரில் ராஜபக்ஷே அரசால் அவிழ்க்கப்படவிருக்கும் ஊசிப்போய் முடைநாற்றமெடுக்கும் பொதிகளில் அணைந்துவிடுமா தாயகத்திற்கான தாகமும் பசியும்?

இப்போது சில இணையத்தளங்களின் தொனியே மாறிவிட்டது. ‘கடைசியில் போர் முடிந்துபோய்விட்டது. செத்தவர்கள் பட்டியலில் எங்களவர் பெயர் இல்லை. அந்தளவில் தப்பிவிட்டோம்’என்ற நிம்மதி அற்பத்தனமாக இருக்கிறது. அத்தோடு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் குறைபாடுகளைப் பட்டியலிட்டுத் தம்மை நடுநிலையாளராகத் தோற்றம் காட்டும் புதிய கலாச்சாரம் ஆரம்பித்திருக்கிறது. இதே குரலில், இதைவிடக் காட்டத்தோடும் காழ்ப்புணர்ச்சியோடும் முன்னரும் பல இணையத்தளங்கள் கட்டுரைகளை வெளியிட்டு வந்தன என்பது உண்மைதான். அவர்களுக்கு ஒரு திட்டமிட்ட பிரச்சாரத் தேவை, நோக்கம், பின்னணி இருந்தது. ஆனால், இதுநாள்வரை போராட்டத்தின் பக்கம் நின்று பேசியவர்களிற் சிலர், விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியை அடுத்து தங்கள் தொனியை மாற்றிக்கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது. ‘கண்டால் கட்டாடி… காணாட்டில் வண்ணான்’என்று ஊர்களில் சொல்வது ஏனோ நினைவுக்கு வந்துதொலைக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் விமர்சனங்களை சகிப்புத்தன்மையோடு ஏற்றுக்கொண்டு அதற்கிணங்க செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டில் உண்மை இருக்கவே செய்கிறது. ஆயுதப்போராட்டத்தில் அவர்களுக்கு இருந்த கவனம் அரசியல் சிந்தனைகளைக் கட்டியெழுப்புவதில் இருக்கவில்லை என்பதையும் ஏற்றுக்கொள்ளவே வேண்டும். ஆனாலும் அவர்கள் அர்ப்பணிப்போடு போராடினார்கள். களமாடிக் கல்லறைகளுள் விழிமூடி உறைந்தார்கள். விடுதலைப் புலிகளின் அணுகுமுறைகள் ஒருபுறமிருக்க, போர்விதிகளைச் சற்றும் கவனத்திற்கெடுக்காத வல்லாதிக்கக் கரங்களின் கூட்டிணைவையே போராட்டத்தின் தோல்விக்கான முதன்மைக் காரணியாகக் கொள்ளவேண்டும்.

இப்போது விடுதலைப் புலிகள் இயக்கம் சிங்கள இராணுவத்தை பிடரியில் பின்னங்கால் பட விரட்டியடித்திருந்தால் நாம் எப்படிப் பெருமிதத்தோடு பேசிக்கொண்டிருந்திருப்போம்! யாழ் குடாநாட்டின் நுழைவாயிலில் தொண்டை முள்ளாகக் கிடந்த ஆனையிறவு இராணுவத்தளம் விடுதலைப்புலிகளால் வெற்றிகொள்ளப்பட்டபோது களிகூர்ந்து கொண்டாடிய அந்நாள் நினைவில் வருகிறதா? தோற்றவர்களைக் கைவிட்டுவிடுவதை எந்தத் தார்மீகத்திலும் சேர்க்க முடியாது. நமது மனந்தான் எத்தனை கசடுகளோடிருக்கிறது? அன்றாட வாழ்வில் அணுவளவு திசைமாற்றத்தை ஏற்படுத்தும் எதையும் நம்மால் சகிக்கமுடியாதிருக்கிறது. அது உன்னதங்களாயிருந்தாலும் அவற்றை உதறிவிட்டு சுயநலச் சேற்றுள் உழலும் பன்றிகளாயிருக்கவே பிரியப்படுகிறோம்.

நாங்கள் சாதாரணர்களிலும் சாதாரணர்களாயிருந்தோம். அதிமானுடர்களை குறித்து புராணங்களிலும் இதிகாசங்களிலும் படித்து, அவர்களை உதாரணங் காட்டிப் பேசுகிறவர்களாகத்தான் வாழ்ந்திருந்தோம் அந்நாளில். ‘அல்பேனியன்’என்ற வார்த்தை நமக்கு எவ்வளவு அந்நியமாய் ஒலிக்கிறதோ, அவ்வளவுக்கு ‘தமிழன்’என்ற வார்த்தைக்கு உலகப் பரப்பில் ஒரு சலனமும் இல்லாதிருந்தது. பெருங்காயம் வைத்த பாண்டமாக அல்லாது, பழம்பெருமையாக அல்லாது, ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய…’என்ற உப்புச்சப்பில்லாத- பொய்ப்பெருமிதமாக அல்லாது, உண்மையிலும் உண்மையாக தமிழன் என்ற இனத்தை உலகறியச் செய்தவர்கள் விடுதலைப் புலிகளும் தலைவர் பிரபாகரனுந்தான்!

தியாகம், அர்ப்பணிப்பு, தற்கொடை, மனிதநேயம் இன்னோரன்ன அகராதியிலுள்ள சொற்கள் உயிர்பெற்று உலவுவதை நாம் அனைத்துப் போராளிகளிலும் கண்டிருந்தோம். தமிழகத்தில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் அடிக்கடி சொல்வார்: “ஈழத்தமிழர்களாகிய உங்களுக்குள் ஒரு உண்மை இருக்கிறது. நெருப்பு இருக்கிறது. அதற்குக் காரணம் உங்கள் வாழ்க்கையே அநீதிக்கெதிரான போராட்டமாக இருந்ததுதான். தொடர்ச்சியான போராட்டத்தின் விளைவாக மனம் பண்பட்டிருக்கிறது. இழப்புகள் உங்களை ஆத்மார்த்தமாக செழுமைப்படுத்தியிருக்கிறது. நாங்கள் எங்கள் வாழ்நாளில் எந்தப் போராட்டங்களையும் சந்தித்ததில்லை. திரைப்படங்களில் வரும் அட்டைக் கத்தி வீரர்களைப் போன்றவர்கள் நாங்கள். அதனால்தான் இத்தனை ஊழலையும் இலஞ்சத்தையும் அரசியல் பொய்மைகளையும் எங்களால் சகித்துக்கொண்டு அசிரத்தையாக வாழமுடிகிறது.”

அவருடைய வார்த்தைகள் எந்தளவிற்கு உண்மை என்பது எனக்குத் தெரியாது. அவர் விதந்தோதும் தன்மைக்கு விதிவிலக்காக எங்கள் மண்ணில்தான் காக்கைவன்னியனும் கருணாவும் டக்ளஸ் தேவானந்தாவும் பிள்ளையானும் பிறந்திருக்கிறார்கள். ஆனால், நாங்கள் ஓரளவிற்கேனும் இந்த உலகில் மனிதர்களாகத் தலைநிமிர்ந்து வாழ்ந்திருந்தோம்.

எங்கள் தலைநிமிர்வுக்கும் பெருமிதத்திற்கும் நம்பிக்கைக்கும் காரணமான எங்கள் தலைவர் இன்று ‘மறைந்து’விட்டார். மழையில் கரைந்த ஓவியமாக… பனியில் மறைந்த தொலைவிலக்காக… பிரிவினைக் குறித்தொரு சொல்லும் பகிராமல் போய்விட்டார்.

மகத்தான அந்த மனிதனை, மகோன்னதமான ஆளுமையை, கிறுக்கல்கள் மத்தியில் ‘காலப்பதிவாக’வாழ்ந்தவரை நாங்கள் மறந்துகொண்டிருக்கிறோமா நண்பர்களே? அவ்விதம் காலம் அவரது ஞாபகங்களை நம்மிலிருந்து கழித்துவிடுமானால் நாம் சக்கையாகத்தான் எஞ்சுவோம் என்பதில் சந்தேகமேயில்லை.

39 comments:

ஈரோடு கதிர் said...

ஒரு வெட்க கரமான தலைமுறையாக‌த் தான் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மறதியென்பது மிக மிக எளிதாக வந்துகொண்டேயிருக்கிறது. எதையும் மறக்கிறோம், எளிதாக மறக்கிறோம்.

பிரபாகரனின் மரணம் என்ற செய்திக்குப் பின் ஈழத்தில் நடந்தேறிய, நடந்துகொண்டிருக்கும் மிகப்பெரிய அவலம், வலுக்கட்டாயமாக மறக்கடிக்கப்பட்டு கொண்டேயிருக்கிறது....

முத்துக்குமாரின் ம‌ர‌ண‌மும், ல‌ச‌ந்த‌ விக்ர‌ம‌துங்காவின் ம‌ர‌ண‌மும் ஏற்ப‌டுத்திய வ‌லியும், வெற்றிட‌மும் குறித்த‌ என் ப‌திவு
http://maaruthal.blogspot.com/2009/02/blog-post.html
என்ன‌ ப‌ய‌ந்தேனோ அது ந‌ட‌ந்தேவிட்ட‌து.

//நாங்கள் எங்கள் வாழ்நாளில் எந்தப் போராட்டங்களையும் சந்தித்ததில்லை. திரைப்படங்களில் வரும் அட்டைக் கத்தி வீரர்களைப் போன்றவர்கள் நாங்கள். அதனால்தான் இத்தனை ஊழலையும் இலஞ்சத்தையும் அரசியல் பொய்மைகளையும் எங்களால் சகித்துக்கொண்டு அசிரத்தையாக வாழமுடிகிறது.”//

உண்மைக்காக‌ ம‌ன‌து வெட்க‌ப்ப‌டுகிறது.

// பிரிவினைக் குறித்தொரு சொல்லும் பகிராமல் போய்விட்டார்.//

இதுதான் வ‌லியின் மிகப்பெரிய உச்ச‌ம், வாழ்நாள் முழுதும் வ‌லித்துக் கொண்டேதானிருக்கும்....


//பதறிக்கடந்த மரணங்களை காலம்தான் மறக்கடித்தது. அவ்வகையில் காலத்தை வணங்குதல் செய்வோம். ஆனால், காலத்தைச் செழுமைசெய்த மாமனிதர்களையும் அவர்தம் மகோன்னதக் கனவுகளையும் அந்தக் காலமே மறக்கடிக்குமெனில், காலத்தை வணங்கிய கைகளைக் கீழிறக்குவோம்.//

காலம் சில விசயங்களில் மிக நல்ல நண்பன், சில விசயங்களில் மிக மோசமான எதிரி....

காலம் ஒருவேளை பிரபாகரனின் மரணத்தை (உண்மையாக இருந்தால்) நம் மனதிலிருந்து கரைத்துவிட்டால் அது தமிழ் இனத்திற்கே எதிரியாகிவிடும்.

Anonymous said...

Tamilnathi,

tears in my eyes

:((((((((((((((

முகமது பாருக் said...

தமிழ் (திராவிட) இனத்தின் அடையாளம் பிரபாகரன் என்பதில் எந்த மாற்றமும் இல்லை..அவர்கள் மேல் சில விமர்சனங்கள் பலப் பேர் முன்வைத்தாலும் அதில் உண்மை இருந்தாலும் அவர்களின் தன் தாய்நாட்டிற்கான அர்பணிப்புக்கு முன்னால் எல்லாம் தவிடு பொடியாகிவிடும்...நமது வரலாறுகளில் வரும் போர் பற்றியும் பெண்களின் வீரம் பற்றியும் வந்த நிகழ்ச்சிகளை கடந்த முப்பதாண்டு காலத்தில் களத்தில் நடத்திக் காட்டி உள்ளார்கள்.. தமிழன் மற்றும் மொழிக்குறித்து சிந்தனையை தந்தை பெரியாருக்கு பின் மீண்டும் தமிழ் உலகத்தில் துளிர் விடச்செய்த பெருமை புலிகளையே சேரும்..இதையும் நாம் தவற விட்டால் வரலாறு மன்னிக்காது...


எனக்கு மிகவும் பிடித்த மாவீரர் நேதாஜி தான், அவரின் காலத்தில் நான் வாழவில்லை ஆனால் நம் தேசிய தலைவர் என் காலத்தில் அதை வாழ்ந்தே காட்டிவிட்டார்..கடந்த பதினைந்தாண்டுகளில் (தமிழகத்தில்) இவர்களை பற்றி செய்திகளை இரட்டிப்பு செய்து விட்டனர் நாட்டை ஆண்ட ஈனப்பிறவி ஜெயா மாமியும், கருணா' நிதியும்..இன்று முத்தக்குமார் என்ற ஒளியால் மீண்டும் எழுந்த எழுச்சியை என்ன செய்தார்கள் என்று உங்களுக்கு தெரியும் ஆனால் தமிழ் தேசியம் குறித்து எல்லாரும் இப்போது வெளிப்படையாக பேசத் தொடங்கி விட்டார்கள்..இதற்கு முக்கிய காரணம் கற்பனைக்கு எட்டாத காரியத்தை கண்ணுக்கு முன்னால் நடத்தி காட்டிச் சென்ற மாவீர்களையே சாரும்..எமது வரலாற்றில் என்றுமே அழியாத சரித்திரத்தை படைத்த தேசிய தலைவர் பிரபாகரனை பற்றி அடுத்த ஐந்தாயிரம் ஆண்டுகளில் அடுத்த தலைமுறை படிக்கும்..சேர, சோழ, பாண்டியர்களைபோல

நாம் தொடர்ந்து போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என ஒவ்வொரு நாளும் நினைவில் கொள்ளவேண்டும், ஏனெனில் தமிழர்களின் எண்ண ஓட்டங்களை திசை திருப்புவது மிகவும் சுலபம்..அதை இந்த பார்பீனிய ஊடங்கள் செய்யும் என்பதில் எச்சரிகையாக இருக்க வேண்டிய கட்டாயமும் நமக்கு உண்டு..


// ‘அல்பேனியன்’என்ற வார்த்தை நமக்கு எவ்வளவு அந்நியமாய் ஒலிக்கிறதோ, அவ்வளவுக்கு ‘தமிழன்’என்ற வார்த்தைக்கு உலகப் பரப்பில் ஒரு சலனமும் இல்லாதிருந்தது. பெருங்காயம் வைத்த பாண்டமாக அல்லாது, பழம்பெருமையாக அல்லாது, ‘கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய…’என்ற உப்புச்சப்பில்லாத- பொய்ப்பெருமிதமாக அல்லாது, உண்மையிலும் உண்மையாக தமிழன் என்ற இனத்தை உலகறியச் செய்தவர்கள் விடுதலைப் புலிகளும் தலைவர் பிரபாகரனுந்தான்!//

மாற்றுக்கருத்தே இல்லை சகோதரி..

தோழமையுடன்

முகமது பாருக்

soorya said...

என்ன எழுதுவதென்றே புரியவில்லைத் தோழி...

..தண்ணீர் விட்டா வளர்த்தோம் இப் பயிரை சர்வேசா(சர்வதேசமே) கண்ணீரால் காத்தோமே.......!

Anonymous said...

தமிழ்நதி
சொல்வதற்கு ஏதுமில்லை. ஆட்களை அடையாளம் காண்பதற்கு இதுவொரு வாய்ப்பென்று எண்ணிக்கொண்டு மேற்கொண்டு செயற்படவேண்டியதுதான். ஹிந்தியாவின் உடான்ஸ்பிறப்புகளுக்கு எவ்விதத்திலும் குறைந்தவர்களல்ல, இந்த இலங்கை உடன்பிழைப்புகள். தம்மை வாழவைக்க உதவுமென்றால், எவருக்கும் அடியாராக - கணம் - எண்ணமாட்டார்கள்.

விடுதலைப்புலிகள் விமர்சனத்துக்குரியவர்களே; ஆனால், அதற்காக இவர்கள் தேர்ந்தெடுத்துக்கொண்ட தருணம் எதேச்சையானதல்ல; இலக்கியச்சந்திப்பு மாட்டுக்கருத்தாளர்கள், தமிழக நீராவி என்ஜின் இலக்கியவியாதிகள் இவர்களின் இணைகளே இந்தக்கூத்தாடிகள். என்ன இன்னோர் எதிரிவரிசை என்றபடி எச்சரிக்கையோடு நடக்கவேண்டியதுதான். 20000 மக்கள் அரையாண்டிலே இறந்தும் 300000 மாக்களாக அடைக்கப்பட்டிருமிருக்கையிலே புலிகளை விமர்சிப்பவர்களை விமர்சித்து வியாக்கியானம் செய்துகொண்டிருக்கமுடியாது. அவத்தொழில் அது. மைக்கல் ஜக்ஸனும் ஈரானும் பாஉக்களின் ஆடம்பரச்செலவுகளும் அரசியலின் அலட்சியமும் மறைத்துப்போகும் அவமாந்தர்களாக இத்தமிழர்கள். கொஞ்சமேனும் அவர்களின் குரல் கேட்க, கௌரவமாகக் கதவுகளைத் தட்டுவதும் முட்டுவதும் நமக்கான தொழிலாகின்றன. இந்நிலையிலே "இருந்தால் ஹீரோ; இறந்தால் ஸீரோ" என்று துட்டுக்கும் துணிக்கும் தடம் மாறும் அடியாள் சுவடுகளை அளந்துகொண்டிருக்கவேண்டுமா?

RAVANA said...

பிரபாகரன். மற்றுமொரு நண்பர் சொல்வார்: “சக மனிதர்களின் கால்களில் விழும் கேடுகெட்ட இழிசெயலை நான் ஒருபோதும் செய்யமாட்டேன். ஒருவர் மட்டுமே அதற்கு விதிவிலக்கு; அவர் எங்கள் ஒப்பற்ற தலைவர் பிரபாகரன்.”
it`s wonderful article.thalaivar
wouldn`t let any body to do that.
if everybody respect him that because he respect everybody.it`s verry intresting the press meeting time one jurnalist (from vangathesam) he came their
sat in the front line didn`t ask any question.at theend somebody went and asked him "have no question?"he shaked his head & replied I felt one history passed by me when he walked infront of me.
If anybody love Thamil they shall love thalaivar.he dedicated for his beloved.We are fighting last 500years(in Ceylon)& we will.
one day "MANDAVEERAR kanavu palikkum". I think you are doing your part,don`t giveup.
MAVEERARTHUNAI.

Anonymous said...

prasanna.....

THALAIVAR illai entral ini thamil eelam illai endre thontrukirathu. ean entral avaral mudiyathathu ini yaral mudiyum..?:(
ninaikum pothe nenchu patharukirathu..

செல்வநாயகி said...

///ஆனால், இதுநாள்வரை போராட்டத்தின் பக்கம் நின்று பேசியவர்களிற் சிலர், விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியை அடுத்து தங்கள் தொனியை மாற்றிக்கொண்டிருப்பது வருத்தமளிக்கிறது////

இங்கே இதுவரை அப்படிப் பேசியறியாத நண்பர்கள்கூட இப்போது மாற்றிக்கொண்டிருக்கும் குரல் அவர்கள் எழுத்து மீதான மரியாதையைக்கூடத் தளர்த்தச் செய்கிறது.


////எங்கள் தலைநிமிர்வுக்கும் பெருமிதத்திற்கும் நம்பிக்கைக்கும் காரணமான எங்கள் தலைவர் இன்று ‘மறைந்து’விட்டார். மழையில் கரைந்த ஓவியமாக… பனியில் மறைந்த தொலைவிலக்காக… பிரிவினைக் குறித்தொரு சொல்லும் பகிராமல் போய்விட்டார்////

இந்த வரிகள் தரும் துக்கத்தை எழுத முடியவில்லை:((

Anonymous said...

Ennatha solla...
Meendu varuvom acca.

- Kiri

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உண்மை சுடும்,
தோல்வியை கண்டு, எனக்கு அப்பவே தெரியும், இவர்களின் நோக்கம், முடிவெடுத்தல்,ஆளுமை எல்லாம் இந்த முடிவுக்கு இட்டுச் சென்றிருக்கிறது என்று சொல்லும் அல்லது தூற்றும் உலகம், வெற்றி பெற்றிருந்தால் அதில் பங்குபோட, அதை அனுபவிக்க தவறுவதில்லை என்பது இதுவரை கண்டு வந்த உலக நியதி. அது நமக்கும் பொருந்தி வருகிறது.
வேறொன்றும் சொல்வதற்கில்லை சகோதரி!

கல்யாண்குமார் said...

மிகத் தெளிவான, திடமான ஒரு எழுத்து வடிவம்! அதே நேரம் பல இடங்களில் நெகிழ வைக்கிறது, உங்களின் வார்த்தைத் தொகுப்பு! தொடரட்டும் உங்கள் பணி...
அன்புடன்
கல்யாண்குமார்

நேசமித்ரன் said...

தமிழ்நதி,
இங்கு நைஜீரியாவில் பெருமழை காரணமாக
இணையத் தொடர்பு அறுந்து போயிருந்தது...
மன்னிக்கவும் ...!
நீங்கள் நட்சத்திர பதிவர் ஆனதற்கு தாமதித்த வாழ்த்துக்கள்..

விட்டு போயிருந்த அனைத்து இடுகைகளையும் வாசித்துக்கொண்டிருக்கிறேன்
//பனியில் மறைந்த தொலைவிலக்காக… பிரிவினைக் குறித்தொரு சொல்லும் பகிராமல் //
மனதைப் பிசைவதாய் இருக்கின்றன இவ்வரிகள்
// ‘எனக்கு வைன் பிடிக்கும்’என்று சொல்லமுடியாமல் செய்த ‘ஒழுங்கான பெண்ணை’நான் ஒருநாளைக்குக் கொல்வேன் //
//ஒழுங்கின் அரசியல் குரூரமானது. அது கையில் சாட்டையோடு வீடு முழுவதும் //
//இறுகிய பனிப்பாளங்களின் கீழ் உயிரை வெட்டும் குளிர்நீர் இருக்கிறதென்பது பொறிந்து விழும் காலம் வந்தால்தான் //
//வலசைப் பறவைகள் தூரத்த//
சொற்கள் தார் சாலையில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒற்றை உலோக குளம்பை போல் நகர மறுக்கின்றன .

உவர்க்கும் உதடுகளை உணரும்போதுதான் கனவினிடை அழுதது

புலனாகிறது...

வெற்றிடத்தை எதை இட்டு நிரப்பினாலும் மணல் கடிகாரம் மாதிரி தலை கவிழ்த்து கொள்கிறது மனது..

மீண்டும் நட்சத்திரம் ஆனதற்கு வாழ்த்துக்கள் தோழி..!

Unknown said...

அன்புள்ள தமிழ்நதி,
சிறப்பான பதிவுக்கு வாழ்த்து.
தம்பி என்று அன்போடு அழைக்கப்பெறும் பிரபாகரன் மக்களைக் காக்கவும் மண்ணை மீட்கவும் தொடர்ந்த முயற்சி உயர்ந்த செயல். தோல்வி மிக வருத்தம் தருகிறது. மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு. வாஷிங்டன் வெற்றி பெற்றதால் நாடு அமைத்தார்.
உங்களைப்போலவே, என் பார்வையிலும் போராளிகளும் தலைவரும் போற்றத்தகுந்தவர்களே.
தமிழ் மொழியையும் மக்களையும் மனித நேயத்தையும் மதிப்பவர்கள் யாவரும் இதனை மறவார். உண்டு அம்ம, இவ்வுலகம் உண்மையானே.
அன்புடன்
ராதாகிருஷ்ணன்
ஜுன் 26, 2009

sathiri said...

விடுதலைப்புலிகளின் போராட்ட வடிவங்களினை விமர்சித்தாலும் பிரபாகரன் என்கிற மனிதனை எந்தத் தராசிலும் வைத்துப்பார்க்க யாரிற்கும் அருகதையில்லை..வைக்கவும் முடியாத மனிதன் அவர்..

Nathanjagk said...

புதையுறாது. புதையுண்டாலும் பதை பதைக்கத் தேவையில்லை. அது ஒரு விதையே ஆகும்.

Anonymous said...

//எங்கள் தலைநிமிர்வுக்கும் பெருமிதத்திற்கும் நம்பிக்கைக்கும் காரணமான எங்கள் தலைவர் இன்று ‘மறைந்து’விட்டார். மழையில் கரைந்த ஓவியமாக… பனியில் மறைந்த தொலைவிலக்காக… பிரிவினைக் குறித்தொரு சொல்லும் பகிராமல் போய்விட்டார்.//

??!!
I am sorry?!

Dr.Sintok said...

உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்....

Anonymous said...

கடைசியில் தலைவர் சாத்தித்தது என்ன?
30 வருட போராட்டம் பலம் பூஜ்ஜியம். அகதி முகாம் நாசம் சர்வ நாசம்
தலைவர் ஏன் தன் மதி நுட்பத்தால் தடுக்க முடியவில்லை. சூரிய தேவனுக்கு கூட புரியாத சூத்திரமா?

thiagu1973 said...

பிரபாகரன் குறித்த தங்கள் கருத்துக்களை
அப்படியே ஏற்று கொள்கிறேன்

போராளிகளுக்கு மரணமில்லை

மரண என்னவிலை என்று கேட்பவந்தான் போராளி

குட்டிமணி ஜெகனுக்கு பிறகு பிரபாகரன்
என்றால் மீண்டும் அத்தகைய வீரியமிகு

போராளிகள் வருவார்கள்

சமூகம் கொடுக்கும்

சமூகம்தான் தலைவனை படைக்கிறது

பாரதி said...

உண்மைதான் சகோதரி.
‘பிரபாகரன்’என்ற பெயரில் ஒரு வசீகரம் இருந்தது என்பதைவிடவும் பயம் இருந்தது. அந்தப் பயம்தான் அத்தனை மானிட மீறல்களையும் தாங்கிக் கொண்டு அவர் புகழைப் பாடக் காரணிகளாகிற்று.நீர் போன சுதுமலைக்கு நானும் போனேன். அவரைப் பார்த்துவிட வேண்டுமெனும் ஆதங்கத்திலல்ல.தமிழரைபற்றிய பீடைகள் விட்டுத்தொலையாதா என்று நம்பி.படிப்பித்த விரிவுரையாளரின் பெயரைச் சொல்லக்கூட பயம் அல்லது பந்தா பண்ணிக்கொண்டிருக்கின்ற உங்களைப் போன்றவர்கள்தான் தமிழர்களின் சீரழிவிற்கு முதல் காரணம்.
இத்தனை தமிழர்கள் வாழ்விழந்து வக்கற்று நிர்க்கதியாகி நிற்கிறார்கள்.உங்களின் கேள்வி//‘பிரபாகரன் இருக்கிறாரா? இல்லையா?’என்பதுதான் தமிழர்களைப் பொறுத்தவரை இன்றைய மில்லியன் டொலர் கேள்வியாக இருக்கிறதா.//அவர் இருந்து என்ன புடுங்கினார்.
‘கண்டால் கட்டாடி… காணாட்டில் வண்ணான்’என்று சாதிய திமிர்பேசுகிற உங்கள்தொனி உண்மையில் புலிகளுக்குத்தான் வெகுவாகப் பொருந்தும்.
//எங்கள் தலைநிமிர்வுக்கும் பெருமிதத்திற்கும் நம்பிக்கைக்கும் காரணமான எங்கள் தலைவர்//என்றும் //உண்மையிலும் உண்மையாக தமிழன் என்ற இனத்தை உலகறியச் செய்தது தலைவர் பிரபாகரன்தான்!//என்றும் பேசுகிற நீங்கள்
திட்டமில்லா அரசியல் வாதத்தால் தமிழரைப் பாராமுகமாக்கி ந்கைப்பிற்கிடமாக்கி
உலகத்துநாடுகளெல்லாம் காறிஉமிழச் செய்து அகதியாக்கிவிட்டுபோனது தான் உங்கள் தலைவர் என்பதை ஏன் புரிய மறுக்கிறீர்கள்..உமக்கும் எல்லாம் புரியும். ஆனாலும் அவரை புகழ்ந்து எழுதிப் பிழைக்க வேண்டிய தேவைஇருப்பதால் அவர்களைபோலவே ஊரை ஏமாற்றிப் பிழைத்துப் போங்கள்.
பாரதி

vanathy said...

வரலாற்று நாயகர்கள் இறந்தாலும் மக்கள் மனங்களில் இருந்து அழிய மாட்டார்கள்.

ராணுவ ரீதியில் தோல்வியைக் கண்டிருந்தாலும் ,ஈழத்தமிழரின் உரிமை பற்றிய விழிப்புணர்ச்சியை உலகத்தமிழர் மத்தியிலும் ஈழத்தில் தமிழர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடிக்கொண்டு இருக்கிறார்கள் என்ற செய்தியை உலக மக்கள் மத்தியில் பரவச் செய்ததிலும் தலைவர் பிரபாகரனும் அவரது போராளிகளும் வெற்றி கண்டு உள்ளார்கள்.

ஈழத்தமிழரின் பின் காலனித்துவ வரலாற்றில் அவர்கள் மிகப் பெரிய இடத்தைப் பெற்றுக் கொண்டுவிட்டார்கள். அந்த உண்மையை ஒருவராலும் அழிக்க முடியாது.

முப்பது வருட காலங்களில் அவர்கள் எதிர்கொண்டது இலங்கை அரசையும் அதன் ராணுவத்தையும் மட்டுமல்ல ,ஆரம்பத்தில் பிராந்திய வல்லரசான இந்தியாவையும் அதன் பின்பு இந்தியா உட்பட பல அணுகுண்டு வல்லரசுகளுக்கு எதிராகாவும் போராடினார்கள்.
இன்றைய உலக ஒழுங்கில் வல்லரசுகளின் பூகோள அரசியல் பொருளாதார ராணுவ போட்டியில் புலிகளும் ஈழத்தமிழ் மக்களும் சிக்குண்டு ராணுவரீதியாக முழு உலக அரசுகளின் பலத்தாலும் தோற்கடிக்கப் பட்டுளார்கள்.இதுதான் உண்மை .
ஆனால் தலைவர் பிரபாகரனின் துணிவும் ,தான் தேர்ந்தெடுத்த பாதையில் கடைசி வரை கொண்டிருந்த ஈடுபாடும் ,அவரும் அவரது போராளிகள் செய்த தியாகங்களும் , அவரின் இலட்சிய நோக்கும் பெரும்பாலானஈழத்தமிழர் மனங்களில் நீங்காத நினைவுகளாக வாழும் .அதில் சந்தேகமே இல்லை.

இப்போது தலைவர் இருக்கிறாரா இல்லையா என்று குழப்பமான தகவல்கள் வந்து கொண்டு இருப்பதால் பலரும் ஒரு விதமான மனச் சோர்வு நிலையில் உள்ளார்கள் என்பது உண்மைதான்.
இந்த நேரத்தில் சில ஊடகங்களும் இணையத் தளங்களும் யார் யாரோ சொல்லும் கருத்துக்களை போட்டு குழப்பிக் கொண்டு இருக்கிறார்கள் .
ஈழத்தமிழரின் உரிமைப் போராட்டம் இன்று வேறு ஒரு வடிவத்தை அடைந்துள்ளது.

இனிமேல் ராஜதந்திர அரசியல் ரீதியில் இந்தப்போராட்டம் நடக்க வேண்டும் .

ஈழத்தில் உள்ள மக்களுக்கு , அங்கு முகாம்களில் தவிக்கும் மக்களை தமது சொந்த நிலங்களுக்கு சென்று தமது வாழ்க்கையை சீரமைப்பதற்கு உதவுதற்கும் ,தூரநோக்கில் ஈழத்தமிழரின் உரிமையை வென்று எடுப்பதற்கும் தமிழர்கள் இனிமேல் முயற்சிகளில் ஈடுபட்டு செயல் திட்டங்களை உருவாக்குவதில் தமது சக்தியை செலவழிக்க வேண்டும்
இதுதான் தலைவர் பிரபாகரனுக்கும் தமிழ் ஈழக் கனவுக்காக தங்கள் உயிர்களை இழந்த நாற்பதாயிரம் போராளிகளுக்கும் முப்பது ஆண்டுப் போரில் தமது உயிர்களை இழந்த ஒன்றரை லட்சம் தமிழ் மக்களுக்கும் நாம் செய்யும் அஞ்சலி.
இதுதான் நமது கடமை

--வானதி


.

விஷ்ணுபுரம் சரவணன் said...

தோழமைமிக்க தமிழ்நதி..

சமிபமாக உங்கள் பதிவுகளை தொடர்ந்து வாசித்துவருகிறேன். நீங்கள் எழுதும் மொழிநடை மிக வசிகரமானது அதற்கு நீங்கள் எடுத்தாளும் செய்திகளும் ஒரு காரணம்.

தலைவர் பிரபாகரன் பற்றிய உங்கள் பதிவு மிகையன்றி இயல்பில் இருப்பது முதலில் முக்கியமானது. தமிழ்கத்தில் போராடும் எண்ணமே முதலில் மக்கள் மனதிலிருந்து வெளியேறிவிட்டது. அதனால்தான் அந்த மாபெறும் போராட்டத்தின் வீச்சு இங்கு சரியாக பிரதிபலிக்கவில்லை. அந்த போராளியின் மரணம் பற்றிய செய்தி தமிழகத்தின் சில இடங்களில் வெடிதெழச்செய்தது எனினும் அதன் நம்பத்தன்மை குறித்த தலைவர்களின் அறிக்கைகள் அவர்களை இன்றளவும் குழம்பசெய்துகொண்டேயுள்ளன.
பதிவின் இறுதியில் பிரபாகரன் இறந்தவிட்டார் என்பதை போன்ற வரி ஆச்சரியமாக இருக்கிறது. அவர் இன்னமும் உயிரோடிக்கிறார் எனும் நம்பிக்கையில் பலர் இயங்கிகொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. பல இயக்கங்களும் இந்த செய்தியையே முன்னெடுத்து செல்கின்றனர். அவர் இருந்தே ஆகவேண்டும் எனும் தோற்றவழிபாடு என்பதான விசயமல்ல அது. அது ஒரு மாரல் சப்போர்ட் என்பதாக இருக்கிறது என நான் உணர்கிறேன். புலிகள் மீதான விமர்சனம் செய்பவர்களில் பலருக்கு அவ்வியக்கத்தை சீர்செய்வது எனும் நோக்கம் கிடையாது என்பதே அவர்களின் பதிவிலிருந்து நமக்கு கிடைக்கும் செய்தி.

பிரபாகரன் பற்றிய தகவல்கள் தெளிவாகும் வரை நாம் நம்புவோம் அவர் நம்முடன்[உயிரோடு] இருக்கிறார் என்பதையே.

விஷ்ணுபுரம் சரவணன்

Anonymous said...

நேதாஜி வழியிலே நடந்த தலைவர் நேதாஜி போல இன்றைக்கு மறைந்திருக்க வேண்டிய கட்டாயம். அவ்வளவே.நேதாஜி இறந்ததாக சொல்லப்பட்ட பின் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் நேதாஜியுடன் சீனாவில் தங்கி இருந்தார். அப்படியே தலைவரும் எங்கோ மறைந்திருக்க வேண்டிய கட்டாயம்.

இவ்வளவு நாட்கள் அவரை நாம் சந்தித்ததில்லை. ஆனால் அவர் வன்னியில் இருந்தார். இன்றைக்கும் நாம் சந்திக்கவில்லை. வன்னியிலே எங்கோ இருக்கிறார். நிச்சயம் தோன்றுவார். அவர் இல்லை எனில் அடிமை வாழ்விற்கு விடிவு கிடைப்பது கடினம்.

நம்பிக்கையே வாழ்க்கை! நம்பிக்கை வையுங்கள். தலைவர் இருக்கிறார். கலங்காதீர்கள்!

Anonymous said...

"பிரிவினை குறித்தொரு சொல்லும் பகிராமல் போய்விட்டார்"

"அன்றாட வாழ்வில்......பன்றிகளாயிருக்கவே பிரியப்படுகிறோம்"

மனதில் தோன்றும் ஆழமான எண்ணங்களை, பாதிப்புகளை இத்தனை எளிதாக, நெற்றிலடித்தாற் போல் பதிவு செய்ய முடிவதை உங்களில்தான் காண்கிறேன்.உங்களின் புதிய வாசகி நான். பிரபாகரன் மரணித்தாகச் சொல்லப்படும் நாளிலிருந்து உங்களின் இடுகைகளை நோக்கி வருகிறேன். மிகவும் புதிதான சொல்லாடல்கள், கட்டுரைக்கு பலம் சேர்க்கின்றன. ஆழ் மனப்பிறழ்வுகளும், துயரங்களும் கட்டுரைகளில் மேலோங்கியிருக்கின்றன.அதை விடுத்து சமூக அவலங்களும், வேண்டப்படும் மாற்றங்களும், உங்கள் தொனியில் வருவதைக் காண ஆவல்.
..புதிய வாசகி....

ராஜ நடராஜன் said...

//இப்போது சில இணையத்தளங்களின் தொனியே மாறிவிட்டது. //

தொனி மாறிவிட்டது என்றபோதிலும் பலரது மனதிலும் உணர்வுகள் நீறுபூத்த நெருப்பாக இருக்கிறது என்பதும் உண்மை.உரிமைகளை மீட்டெடுக்க, சரியான பாதையில் கொண்டு செல்ல, சவால்கள் நிறைந்த பயணத்தில் உலக அளவு தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவன் யாரும் இல்லாதது மாதிரி தோற்றமும் ஒரு காரணமாகக் கொள்ளலாம்.

suvanappiriyan said...

தமிழ் நதி!

பிரபாகரன் மேல் அளவு கடந்த மதிப்பு வைத்திருக்கிறீர்கள். அது உங்கள் தனிப்பட்ட கருத்து. ஆனால் அவரால் தமிழ் சமுதாயம் அடைந்த நன்மைகளை விட தீமைகளே அதிகம். இவை அனைத்தும் தான் என்ற இறுமாப்பும், தனக்கு நிகராக யாரும் வந்து விடக் கூடாது என்ற எண்ணத்தினாலும் விளைந்தவைகள்.

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனிமேலாவது ஈழத் தமிழர்களின் வாழ்வில் வசந்தம் வீச எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

கட்டபொம்மன் said...

சிறப்பான பதிவு

என்னை பொறுத்தவரை போராளிகள் பீனிக்ஸ் பறவைகள் போன்றவர்கள்
மீண்டும் உயி்ர்த்தெழுவார்கள்

கட்டபொம்மன்

http://kattapomman.blogspot.com

தமிழநம்பி said...

"பிரிவினை குறித்தொரு சொல்லும் பகிராமல் போய்விட்டார்"

நிறையவே சொல்லியிருக்கிறார் என்று கருதுகிறேன்.

செயற்படுத்தவும் செய்வார்!

Anonymous said...

எங்கள் தலைவர் இன்று ‘மறைந்து’விட்டார். – தமிழ்நதி

தலைவர் இருக்கிறார். கலங்காதீர்கள்!- Anonymous

தமிழர்க்கு ஓர் நற்செய்தி.- http://sezhiyas.blogspot.com/2009/06/blog-post_28.html

நீங்கள் எல்லாம் என்ன தான் சொல்கிறீர்கள்?

தமிழ்நதி said...

checking something

ஸ்டாலின் குரு said...

http://trovkin.blogspot.com/2009/06/blog-post_28.html

தமிழ்நதி said...

கதிர்,

விரிவான பின்னூட்டமொன்றை இட்டிருந்தீர்கள். உடனடியாகப் பேசமுடியாதபடி சூழல் இங்கு அமைந்துவிட்டிருந்தது. இன்னும் பழைய நிலைக்குத் திரும்பவில்லை. இந்தத் திரும்பி அமர முடியாத இணைய நிலவறைகளுள் அமர்ந்து பதில் எழுதவேண்டியதாக இருக்கிறது. பதிவேற்றுவது சுலபம். ஏனெனில் அதை அறையிலேயே வைத்து எழுதி எடுத்துவந்து இங்கே போட்டுவிடலாம்.

நீங்கள் சொல்லியிருப்பதுபோல மறதி என்பது நண்பனாகவும் எதிரியாகவும் சமயங்களுக்கேற்றபடி இயங்குகிறது. அரசியலில் பெரும்பாலும் அது மக்களை முட்டாளாக நீடித்திருக்கச் செய்கிறது. தனிப்பட்ட வாழ்வில் பெரும்பாலும் நன்மையே செய்கிறது. நான் உட்பட எல்லோரும் அன்றாட வாழ்வின் பின் ஓட வேண்டியவர்களாகவே இருக்கிறோம். அந்த ஓட்டம் உன்னதங்களை மனங்களிலிருந்து கரைத்துவிடுகிறது. என்னை நானே சுயவிசாரணை செய்துகொள்வதற்கான பதிவாகவும் இதை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். நன்றி.

அனானி நண்பரே,

நீங்கள் நகைப்புக் குறி போடவில்லைத்தானே...

உண்மை சில சமயங்களில் கண்ணீரை வரவழைக்கும்.

முகம்மது பாரூக்,

"நாம் தொடர்ந்து போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என ஒவ்வொரு நாளும் நினைவில் கொள்ளவேண்டும், ஏனெனில் தமிழர்களின் எண்ண ஓட்டங்களை திசை திருப்புவது மிகவும் சுலபம்.."

என்பதே என் கருத்தும். இலங்கை அரசாங்கத்தின் பிரச்சாரப் பீரங்கிகள், புலியெதிர்ப்பாளர்கள் (இருவரும் ஒன்றுதான்), உலகளாவிய, பிராந்திய, மாநில அளவில் தொழிற்படும் சகல அதிகாரத் தரப்புகளிலிருந்தும் கட்டவிழ்த்துவிடும் நச்சுப் பிரச்சாரங்கள் மக்கள் மனங்களில் புகுந்து என்ன சித்துவிளையாட்டுக் காட்டும் என்பதை நாம் அறிவோம் அல்லவா? எப்போதும் நியாயத்திற்கும் அநியாயத்திற்குமிடையிலான போர் ஏதோவொரு வடிவில் நிகழ்ந்துகொண்டுதானிருக்கிறது.

சூரியா,

கண்ணீரும் குருதியும் இறைக்கப்பட்டதற்கான நியாயத்தை ஏதோவொரு வகையில், அதிசயங்கள் நிகழ்ந்து நமது மக்கள் (எங்களைப் போன்றவர்கள் அல்ல) பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதே எனது பிரார்த்தனையும்.

மதிப்பிற்குரிய அனானி,

"விடுதலைப்புலிகள் விமர்சனத்துக்குரியவர்களே; ஆனால், அதற்காக இவர்கள் தேர்ந்தெடுத்துக்கொண்ட தருணம் எதேச்சையானதல்ல; இலக்கியச்சந்திப்பு மாட்டுக்கருத்தாளர்கள், தமிழக நீராவி என்ஜின் இலக்கியவியாதிகள் இவர்களின் இணைகளே இந்தக்கூத்தாடிகள்."

என்ன வாய்முகூர்த்தமோ மைக்கல் ஜாக்ஸன் போய்ச்சேர்ந்துவிட்டார்:)

சொரணையற்ற சமூகம்தான் நம்முடையது. அடியாள் சுவடுகளை அளந்துகொண்டிருப்பது ஒருவகையில் வியர்த்தம்தான் நண்பரே. ஆனாலும், அதை நாம் செய்தாக வேண்டியிருக்கிறது. ஏனென்றால், உண்மை எதுவோ அதற்கெதிரான கருத்துக்களை அவர்கள் கட்டமைக்கவும் அதையே நிலைநிறுத்தவும் பாடுபடுகிறார்கள். மனங்கள்... இந்த மனங்கள்... வாழ்வின் ஓட்டத்தில் எதையும் சீர்தூக்கிப் பார்த்துப் போட்டுக்கொள்வதில்லை. மாறாக, அப்படியே அவித்த முட்டையை விழுங்குவதுபோல எடுத்துக்கொள்கின்றன. கடைசியில் இது எங்கு வந்து நிற்குமென்றால், "இலங்கை அரசு இனப்படுகொலையிலிருந்து ஈழத்தமிழர்களைக் காப்பாற்றியது. இந்தியா அதற்குத் துணைநின்றது." என்று அபத்தாபத்தமான நிறுவுதலை வந்தடையும். அந்தப் பயத்தினால்தான் இதையெல்லாம் எழுதவேண்டியதாக இருக்கிறது. 'எழுதுவதனால் என்ன பயன்' என்று சிலசமயம் அயர்ச்சி தோன்றாமலுமில்லை.

--
.

தமிழ்நதி said...

நன்றி ராவணா (நீங்கள் நந்தனா?)

உங்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்தச் சம்பவத்தை நானும் வாசித்திருக்கிறேன். அந்தப் பத்திரிகையாளர் சொன்னதே "பிரபாகரன் என்னைக் கடந்துசென்றபோது ஒரு வரலாறு என் முன் நடந்துபோனதாக உணர்ந்தேன். கேட்பதற்கு என்னிடம் கேள்விகள் இல்லை."

அதை வாசித்தபோது நெகிழ்ந்துபோனேன். (ஓமோம்! நீ நெகிழத்தானே செய்வாய்... என்று தலையாட்டுபவர்களை மனக்கண்ணில் காண்கிறேன்) வரலாறு என்று ஒரு மனிதரைக் குறிப்பிடுவதாயின் அவர் மீது அந்தப் பத்திரிகையாளர் கொண்டிருந்த மதிப்பு... என்ன சொல்ல? 'மாண்டவீரர் கனவு பலிக்கும்.. மகிழ்ச்சிக் கடலில் தமிழ்மண் குளிக்கும்' என்பது இப்போது, இன்றைய நிலையில் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்ட வெற்றுக்குரல் போல தோன்றினும், நெடுங்கனவு அது... தொடுவானம் அது... நனவாகும். தொடுவோம்.

பிரசன்னா,

தலைவர் இல்லை என்றால் எதுவும் இல்லை என்று நான்கூடத்தான் நினைக்கிறேன். பேசுகிறேன். ஆனால், அது அவர் மீது நாம் கொண்ட அபிமானம். ஆனால், அப்படி நினைப்பது நமது கடமைகளிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ளும் சுயநலமாகாதா? தலைவர் இருக்கிறார் அல்லது இல்லை. ஆனால், அவர் வளர்த்த கனவு இருக்கிறது. நாம் ஏன் அதற்காக உழைக்கக்கூடாது? நம்மை நேசித்தவரின் - நாம் நேசித்தவரின் பிரசன்னம் முக்கியமில்லை. அவரது சுவடுகளே முக்கியம். நம்பிக்கையோடு இருங்கள்.

செல்வநாயகி

"இங்கே இதுவரை அப்படிப் பேசியறியாத நண்பர்கள்கூட இப்போது மாற்றிக்கொண்டிருக்கும் குரல் அவர்கள் எழுத்து மீதான மரியாதையைக்கூடத் தளர்த்தச் செய்கிறது."

உங்களுக்கு எழுந்த வருத்தமே எனக்கும் எழுந்தது. அதன் விளைவே இந்தக் கட்டுரை. நீங்கள் ஏன் இப்போது அதிகம் எழுதுவதில்லை? நாம் மிக விரும்பிப் படிக்கும் எழுத்தாக உங்களுடையதும் ஒருகாலத்தில் இருந்தது. என்னைப் போன்றவர்கள் உங்களை 'மிஸ்' பண்ணுகிறோம்.

கிரி,

மீண்டு வந்தால் மீண்டும் வருவோம். இப்படியும் சொல்லலாம் மீண்டும் வந்தால் மீண்டு விடுவோம்

vinavu said...

//விடுதலைப் புலிகள் இயக்கத்தின் குறைபாடுகளைப் பட்டியலிட்டுத் தம்மை நடுநிலையாளராகத் தோற்றம் காட்டும் புதிய கலாச்சாரம் ஆரம்பித்திருக்கிறது.//

தமிழ்ந்தி,

புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் சஞ்சிகைகள் 1984 முதல் கொண்டே புலிகளின் தவறான கொள்கைகள் செயல்பாடுகள் பற்றி விமர்சனம் செய்து வருகின்றன. அப்போது புலிகள் உள்ளிட்ட எல்லாக் குழுக்களும் ராவின் அணைப்பில் ராணுவ பயிற்சி பெற்ற போதே இதன் ஆபத்து எடுத்துரைக்கப்பட்டது. எம்.ஜீ.யார் உள்ளிட்ட பெரிய ஊழல் கட்சிகளை சந்தித்து உதவிகள் பெற்ற போதே இதன் அபத்தத்தை அந்தப் பத்திரிகைகள் விமரிசனம் செய்திருக்கின்றன. அப்போது எங்களைப் போன்ற மார்க்சிய லெனினியக் குழுக்களை சந்திக்க கூடாது என்று இந்திய உளவுத் துறை போட்டிருந்த உத்திரவை புலிகள் உள்ளிட்டு எல்லாக் குழுக்களும் பின்பற்றினர்.

அடுத்து ராஜிவ் படுகொலையின் போது தமிழகத்தில் எல்லாப் புலி ஆதரவளார்களும் முடங்கியபோது இந்த சஞ்சிகைகள்தான் ராஜீவுக்காக யாரும் கண்ணீர் விடவேண்டியதில்லை என மக்களிடம் பிரச்சாரம் செய்தன. ஆனால் புலிகளின் தளபதி கிட்டு இலண்டனில் இருந்து பேட்டி அளித்தபோது , புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் சஞ்சிகைகளின் நிருபர்கள் ராஜீவைக் கொலை செய்திருக்கலாம் எனப் பேட்டி அளித்தார். அந்த அளவு புலிகள் இந்த பத்திரிகைகள் மீது வெறுப்பு கொண்டிருந்தனர். ஆனால் இதே கிட்டு இந்திய அரசின் வஞ்சகத்தால் கொலை செய்யப்பட்டபோது அதை எதிர்த்து இதே பத்திரிகைகள்தான் எழுதின.

மற்றபடி இந்த ஆண்டில் நடந்த ஈழ இனப்படுகொலையை இந்தியாவில் இருக்கும் நாங்கள் முக்கியமாக இந்திய அரசின் மறைமுகப்போரை அம்பலப்படுத்திதான் இயக்கம் கண்டோம். எதிரிகள் இறுதி தாக்குதல் நடத்தும்போது புலிகள் பற்றிய விமரிசனம் இரண்டாம் பட்சமாகத்தான் இருக்கும்.

உங்கள் பதிவில் புலிகள் ராணுவத்தில் கவனம் கொடுத்த அளவிற்கு அரசில் சிந்தனைகளை கட்டியமைப்பதில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என போகிற போக்கில் எழுதியிருக்கிறீர்கள். உண்மையில் அதன் பொருளை நீங்கள் கற்றுக்கொண்டால்தான் அது ஈழப்போராட்டத்திற்கு எத்தகைய பின்னடைவை கொண்டுவந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ளமுடியும்.

தற்போதைய போரில் எதிரிகள் வெல்லுமளவு அவர்களுக்கு தோதான சர்வதேச சூழல் நிலவியது உண்மை என்றாலும் நம் தரப்பில் நமது விடுதலைப் போராட்டத்தில் என்ன தவறு கண்டோம் என்பதை பரிசீலிப்பதுதான் சரியானது. ஏனெனில் இது பல இலட்சம் மக்களின் உயிராதாரம், வாழ்க்கை ப்ற்றியது.அதைத்தான் எமது பத்திரிகைகள் எப்போதும் செய்து வருகின்றன.

இலக்கியமோ, அரசியலோ,வரலாறோ அதை நன்கு கற்றுக் கொண்டு உங்களது மேலான அபிப்ராயங்களை முன்வைத்தால் அது வரவேற்கத்தகுந்ததாக இருக்கும். நன்றி.

நட்புடன்
வினவு

சோமி said...

அவர் தன் ஆதர்சமாக்கி கொண்ட நேதாஜி போலவே மறைந்து போனார் என்ற வரிகளின் கனதியை தாங்கிக் கொள்வது கடினம்தான். எப்போதும் சில விசயங்கள் கனவு போலவே நடந்து போகும்....இன்னமும் விடுதலைப் புலிகளை மையப் படுத்தி தமது போலித்தனமான அரசியல் இருப்பை நிலைநிறுத்தும் கபட பாசிஸ்டுகளை அவர் மொழியிலேயே கேள்விக்குட்படுத்த வேண்டும் எனத் தோன்றுகிறது...ஆனால் நமது மக்களை காப்பதைவிட்டு இவர்களையிட்டு எதற்க்கு எமது நேரத்தைக் கொல்லவேண்டும்..

பதி said...

தமிழ் உணர்வாளர்கள் பலருடைய மற்றும் தமிழ் மக்களின் நலனின் அக்கறை கொண்ட பலரின் எண்ணத்தை இந்தப் பதிவில் காண்கின்றேன்.

இது போன்ற ஒரு கட்டுரைக்கு என்னவிதமாய் எதிர்வினையாற்றுகின்றனர் என்று பார்ப்பதற்காகவே இப்பதிவினை பின்னூட்டத்துடன் சேர்த்து ஒரே மூச்சில் இப்பொழுது தான் படித்து முடித்தேன்...

நீங்களும் மற்ற சிலரும் குறிப்பிட்டுள்ளதைப் போல தோல்வியடைந்தவுடன் காரணகாரியங்களை அலசப் புறப்பட்டவர்கள் கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்துகின்றனர். அவ்வளவே... இவர்களை விட மாற்று சிந்தனையாளர்கள் அனைவரையும் "துரோகச்" சொல் கொண்டு தாக்குபவர்கள் மிக ஆபத்தானவர்கள்... முடிந்தால் இவர்களைப் பற்றியும் ஒரு பதிவிடுங்கள்...

பலருடைய பின்னூட்டங்களும் அருமை...

இன்னமும், புலிப்பாசிசம் பேசுபவர்கள், கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலான சிறுபாணன்மை தமிழ் மக்களின் அவலத்தை, அதற்கு காரணமான சிங்களப் பேரினவாதத்தை ஒற்றை வரியில், அவர்கள் எதிர்க்கப்பட வேண்டியவர்களே என முடிக்கும் வாதத் திறமை மெய்சிலிர்க்க வைக்கின்றது !!

இவர்களின் வாதப்படி, இன்றைய தமிழர் அவலத்திற்கு காரணம் புலிகள்..தமிழர்களின் மேல் பலாத்கார தாக்குதல் LTTE போன்ற இயக்கங்களின் தோற்றத்திற்கு பிறகு வரவில்லை. தமிழர்களின் மீதான அடகுமுறையின் வெளிப்பாடே, அகிம்சை வழிப் போராட்டங்களின் தோல்வியே, ஆயுதப் போரட்டம் என்பதை இவர்கள் வசதியாக மறந்துவிடுகின்றனர்...

மக்களாட்சி, சுதந்திர நாடு, ஜன நாயகம் என்று புளுகிக் கொண்டுள்ள "இந்தி"யா, இலங்கை, அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற பயங்கிரவாத/தீவிரவாத/ரவுடி நாடுகளை நோண்ட முடியாதவர்கள், புலிகள் போன்ற போரட்ட இயக்கங்களை பலவீனப்படுத்தவும் தங்களுடைய தனிப்பட்ட மத வெறுப்புகளைக் கொட்டவுமே இது போன்ற பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர்.

இன்றைய சூழ்நிலையில், வானதி குறிப்பிட்டுள்ளதையே நானும் இங்கு கூற விரும்புகின்றேன்,

//ஈழத்தில் உள்ள மக்களுக்கு, அங்கு முகாம்களில் தவிக்கும் மக்களை தமது சொந்த நிலங்களுக்கு சென்று தமது வாழ்க்கையை சீரமைப்பதற்கு உதவுதற்கும் ,தூரநோக்கில் ஈழத்தமிழரின் உரிமையை வென்று எடுப்பதற்கும் தமிழர்கள் இனிமேல் முயற்சிகளில் ஈடுபட்டு செயல் திட்டங்களை உருவாக்குவதில் தமது சக்தியை செலவழிக்க வேண்டும்
இதுதான் தலைவர் பிரபாகரனுக்கும் தமிழ் ஈழக் கனவுக்காக தங்கள் உயிர்களை இழந்த நாற்பதாயிரம் போராளிகளுக்கும் முப்பது ஆண்டுப் போரில் தமது உயிர்களை இழந்த ஒன்றரை லட்சம் தமிழ் மக்களுக்கும் நாம் செய்யும் அஞ்சலி.

இதுதான் நமது கடமை//

ஸ்டாலின் குரு said...

http://trovkin.blogspot.com/2009/06/blog-post.html


துணிச்சலும் நேர்மையும் இருந்தால் வினவு இங்கே வந்து பதில் சொல்லட்டும்

காலம் said...

இன்னும் விடயங்களை கடைகோடிவரை கொண்டுசெல்ல தவறியிருக்கிறோம்
வெறும் வலைத்தளங்கள் பத்திரிக்கைகள் வெளியீடுகள் மாத்திரம் போதுமானவையாக இருக்குமெண்டு நம்புகிறோமா?

மாபெரும் அவலங்களின்று எழுகின்ற ஓலம் கடல்தாண்டி அடித்தபின்பும் சக இனம் என்றுகூட அல்லாமல் குறைந்தபட்சமனிதாபிமானம்கூட காட்டாது மெளனித்திருந்த பெருங்கூட்டத்தின் ஆழ்மன உளவியலை கட்டுடைக்கமுடியாமல் மூச்சுதிணறிக்கொண்டிருக்கிறோம்

ஆனல் ஒன்று சமூகவிதிமிகவலியது உரிமைப்போர் வெல்லாமல் ஓயாது

பிரம்மபுத்ரன் said...

புதிய கலாசாரம்.. அதாவது புதிதாக உருவாகிற ஒரு நடைமுறை என்ற ரீதியில் தமிழ்நதி சொல்லப்போக - வினவுக்காரர் தங்களைத்தான் சொல்லுறாவோ என நினைச்சிட்டினம்போல.. அருமையான புரிதல்..

பதிலுக்கு ஸ்டாலின்குருவானவர்கள்.. எங்கடா தங்கட குடுமிச் சண்டைக்கு இடங்கிடைக்குமென அலையினம்.. ஒத்தைக்கு ஒத்தை வாறியா என்கினம்.

இவை தரவளியளுக்கு.. தங்கட கருத்து எதிர்க்கருத்து அதில உரையாடல்.. உரையாடல்வழி சுயஇன்பம் இதுகளிலதான் ஆர்வமே தவிர..

மற்றும்படி ஒரு மண்ணும் கிடையாது.